சும்மா: திருமயம் கோட்டை,மை க்ளிக்ஸ். THIRUMAYAM FORT, MY CLICKS. 

ஒரு அழகிய ஆங்கில கவிதையின், “விக்கட் கேட்” { Wicked (Wicket) Gate } or The Castle எழுதியவர் எட்வார்ட் முயூர் (Edward Muir),தமிழாக்கம் :

மிகப் பெரிய, பிரும்மாண்டமான அரண்மனை, அதில் கோலோச்சும் ஒரு நல்ல வீரம் செறிந்த அரசர். அரசருக்குத் திறமையான மந்திரி பிரதானிகள்.  செழிப்பான நாடு, நீர் வளமும் நில வளமும் அந்த நாட்டின் செழுமையைப் பறைசாற்றும். இயற்கை எழில் கொஞ்சும் சூழல் . .

இத்தனை சிறப்பு வாய்ந்த அரசரின் மேற்பார்வையில்  கோட்டைதனை பாதுகாக்கும் வீரம் செறிந்த மாபெரும் படை.  அரண்மனையைச்  சுற்றி மிகவும் வலுவான கோட்டை, அதற்கு வெளியே அகழி.

இரும்பு மற்றும்  மரத்தாலான பெரிய கதவு இருக்கும். இந்தக் கதவை வாகனங்கள் அல்லது நிறைய ஆட்கள் செல்லும்போது மட்டும் திறந்து விடுவார்கள். மற்ற நேரங்களில் அந்தக் கதவிலேயே ஓர் ஆள் மட்டும் உள்ள சென்று வருவது போல் வழி .( அதைத்தான் திட்டிவாசல் என்கிறார்கள்.).

பல காத தூரத்திலிருந்து திடீரென  ஒரு நாள்  எதிரி மன்னனின்  ஒரு பெரும் படையெடுப்பு,  எப்படியும் இந்த நாட்டை அபகரித்து விடவேண்டும் என்ற நோக்கமே பிரதானம்.  கோட்டையை மெள்ள மெள்ள சுற்றி வளைத்து விட்டார்கள். இந்த படையெடுப்பு இந்த படையெடுப்பு  செய்தி அரசருக்குத் தூதுவன் மூலம் தெரிவிக்கப் பட்டது. உடனடியாக அரசரும் மந்திரி பிரதானிகளைக் கூட்டி அவசர ஆலோசனை நடத்தினார் .

படைவீரர்கள் தயார் நிலையில் நிறுத்தப் பட்டனர். வாசலின் பிரதான கதவு  பாதுகாப்பாக மூடப்பட்டது.  நாட்டு மக்களுக்கு டமாரம் மூலம் செய்தி சொல்லப் பட்டது. “மகா ஜனங்களே அச்சமடைய வேண்டாம், நம்மிடம் போதுமான அளவு நீர், உணவு, மற்றும் சிறப்பான பாதுகாப்பு உள்ளது. படைவீரர்கள் தயார் நிலையில் நம்மைப் பாதுகாத்து வருகிறார்கள்”. மக்களும் வெற்றி முழக்கமிட்டனர்.

இதே சமயம் எதிரிப் படை வெகு வேகமாக, கோபமாக, ஆக்ரோஷமாகச் சண்டையிடத் தொடங்கினர் . இந்த நாட்டு மன்னனும் படை வீரர்களுக்கு ஊக்கம் கொடுத்து எதிரிப் படையினை தாக்கக் கட்டளையிட்டான். எதிரி ஓரிரு நாளில் புறங்காட்டி ஓட வேண்டும், என்றார். அரசரின் கட்டளைப்படி படைவீரர்கள், நாங்கள் யாருக்கும் சளைத்தவரில்லை, என்று போரிட்டனர்  கோட்டை மதில் மேல் நின்று போரிட்டனர்.  உயிர்ச்சேதம் இரண்டு பக்கமும் அதிகமாக இருந்தது.

மறு நாள் காலை எதிரிகள் படை கோட்டை திட்டி வாசல் வழியாக பெரும் படையென  உள்ளே நுழைந்தனர்.

 எல்லோருக்கும் பெரும் வியப்பு, அதிர்ச்சி, நடுக்கம்.  உள்ளே வந்த படை அரசரை முதலில் கைது செய்தனர் மற்ற மந்திரிகளையும் பிறகு கைது செய்தனர்.

எதிரி ராணுவ தளபதி நாட்டு மக்களிடம் “நீங்கள் அச்சம் பெற வேண்டாம், உங்கள் அரசை நாங்கள் பிடித்துவிட்டோம், நீங்கள் எங்கள் நாட்டுப் பிரஜை , அச்சப்பட வேண்டாம், இதில் உடன்பாடு இல்லாதவர்களை நாங்கள் சிறை பிடித்துச் செல்கிறோம்.” ஒரு சில எதிர்ப்புக்குப் பின்னர் நாடே அடிமையானது.

எதிரிகள் வசமான உடன் அந்த நாட்டு மக்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்து விடுகின்றனர் .  அரசர் நிலை என்ன , அவர் நாட்டை மீண்டும் மீட்பாரா ? மற்ற மந்திரிகள் நிலை என்ன  என்ற கலக்கம் மிகுந்தது .

இந்த நாட்டு மக்களில் சிலர் ஏற்பது போல ஏற்று எப்படி நாட்டை   மீட்பது எப்படி நமது படை   தோற்றது, அதுவுமின்றி (கோட்டை) திட்டி  வாசல், எப்படி உடைக்கப்பட்டது என்று செய்தி சேகரித்தனர். அரசர் எங்கு இருக்கிறார் இல்லை  உயிரோடு இருக்கிறாரா என்பதற்கு விடை கிடைக்கவில்லை .

ஆனால் திட்டி வாசல் உடைக்கப்  பட்டதற்குப் பிரதான வாயில் காப்போன் எதிரிப் படையினரிடம் பணித்து பின்னர் ஏமாந்து உயிர் விட்டதுதான் மிச்சம் .

வென்றது எதிரியின் படை பலமோ,ஆயுத பலமோ அல்ல, வாயிற்காப்போனின்  கேவலமான பேராசை!

கதவு திறக்கப் பட்டவுடன் அவனைப் பழிவாங்கி விட்டது எதிரிப் படை.

தங்கக்காசுக்குப் பணித்து விட்டனரே , வெட்கம் கெட்ட வாயிற்காப்போன் குழுவினர். அவர்கள்  சதியில் ஒரு அரசே நிர்மூலம் ஆகிவிட்டதே,  இதை எப்படி வெளியே சொல்வேன், அப்படியே என்னோடு, என் உயிரோடு, என் மூச்சோடு  ரகசியம் போகட்டும்.