இலக்கியச் சிந்தனை அமைப்பு கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக தமிழில் பத்திரிகைகளில் வெளியான சிறந்த சிறுகதைகளில் சிறந்த கதை ஒன்றை ஒவ்வொரு மாதமும் தேர்ந்தெடுத்து வந்தது. பின்னர் வருட இறுதியில், தேர்ந்தெடுக்கப்பட்ட மாதச் சிறுகதைகளில் மிகச் சிறந்த கதை ஒன்றை அந்த ஆண்டில் சிறந்த கதையாக முத்திரை குத்தி அதற்குத் தனி பரிசு வழங்கி கௌரவித்தது. அந்த ஆண்டில் 12 சிறுகதைகளையும் வானதி பதிப்பகம் தொகுத்துப் புத்தகமாகவும் வெளியிட்டுவந்தது.
இலக்கியச் சிந்தனை இந்தத் திட்டத்தை சென்ற ஆண்டு நிறுத்திவிடத் தீர்மானித்தது. குவிகம் அதனைத் தொடர்ந்து நடத்த முடிவு செய்து அதன்படி ஜூலை 2022 முதல் ஒவ்வொரு மாதமும் சிறந்த கதையை நடுவர் மூலம் தேர்ந்தெடுத்தது. அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 கதைகளில் மிகச் சிறந்த மூன்று கதைகளுக்கு ரூபாய் 10000 , 8000, 4000 பரிசுகளும், மற்ற 9 கதைகளுக்கு ரூபாய் 2000 பரிசு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது.
இதற்கான மொத்தப் பரிசுத் தொகை 40000 ரூபாயையும் தருவதற்குத் தமிழகத்தின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான திருமதி சிவசங்கரி அவர்கள் முன்வந்தது தமிழ் இலக்கிய உலகத்திற்குக் கிடைத்த மாபெரும் கொடை என்று தான் சொல்லவேண்டும்! இதனை இந்த ஆண்டு மட்டுமல்லாமல் வரும் ஆண்டுகளிலும் தொடர்ந்து செய்யமுன் வந்துள்ள சிவசங்கரி அவர்களுக்கு சிரம் தாழ்த்தி வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
சிவசங்கரி குவிகம் சிறுகதைத் தேர்வின் பரிசளிப்பு விழா ஜூலை 27 ஆம் தேதி சென்னை தமிழ் இணையப் பல்கலைக்கழக வளாக அரங்கில் மாலை 6 மணி அளவில் நடைபெற இருக்கிறது.
மதிப்பிற்குரிய சிவசங்கரி அம்மையார் இதற்குப் புரவலராக இருப்பதுடன் முதல் மூன்று பரிசுக்காக கதைகளையும் தேர்ந்தெடுக்கிறார். அத்துடன் 27 ஆம் தேதி நடைபெறும் விழாவில் கலந்துகொண்டு பரிசு வழங்கி சிறப்புரை வழங்கவும் இருக்கிறார். அதே நாளில் அதே மேடையில் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் அடங்கிய புத்தகமும் குவிகம் பதிப்பத்தின் மூலமாக வெளிவருகிறது.
குவிகம் நண்பர்களும் மற்ற இலக்கிய ஆர்வலர்களும் விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்கும்படி வேண்டிக்கொள்கிறோம்.
இந்தா ஆண்டின் சிறந்த கதைகள் பற்றி நடுவர்கள் கருத்தினை குவிகம் மின்னிதழில் ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதியன்று வெளியிட்டோம்! அதன் தொகுப்பு இதோ!
ஜுலை 22 முதல் ஜுன் 23 வரை
1. ஜூலை 22 – பாலியல் அத்துமீறல் இல்லாத பிரதேசத்திலிருந்து ஒரு வெளியேற்றம்.. சுப்ரபாரதிமணியன் – உயிர்மை – நடுவர் ம சுவாமிநாதன்
2. ஆகஸ்ட் 22 – ஊமைச்சாமி – சியாமளா கோபு – புதுத் திண்ணை நடுவர் குவிகம் சுந்தரராஜன்
3. செப்டம்பர் 22 – ஒத்திகைக்கான இடம் – ஜிஃப்ரி ஹாசன் – சொல்வனம் 11-09 22 – நடுவர் லதா ரகுநாதன்
4. அக்டோபர் 22 – அனாதை மரங்கள் – கிறிஸ்டி நல்லரெத்தினம் -கல்கி 7 அக்டோபர் – நடுவர் ராஜாமணி
5. நவம்பர் 22 – தாயகக் கனவுடன்… குரு அரவிந்தன் – திண்ணை 27 நவம்பர் 2022 – நடுவர் சுரேஷ் ராஜகோபால்
6. டிசம்பர் 22 – சாமி போட்ட பணம் – ஆர்னிகா நாசர் – தினமலர் வாரமலர் 4 டிசம்பர் 2022 – நடுவர் (சாந்தி ராசவாதி)
7. ஜனவரி 23 – பிரம்ம சாமுண்டீஸ்வரி – இரா. சசிகலாதேவி – சொல்வனம் – ஜனவரி 8, 2023
நடுவர் – ஆன்சிலா ஃபர்னான்டோ) –
8. – பிப்ரவரி 23 – பாட்டுவெயில் – சாந்தன் – காலச்சுவடு – நடுவர் அழகிய சிங்கர்
9. மார்ச் 23 – தாவரங்களுடன் உரையாடுபவள் – சோ சுப்புராஜ் – உயிர் எழுத்து மார்ச் 2023 – நடுவர் கிரிஜா பாஸ்கர்
10. ஏப்ரல் 23 – மங்க்கி கேட்ச் – ஜார்ஜ் ஜோசப் -உயிரெழுத்து – ஏப்ரல் 2023 – நடுவர் ஈஸ்வர்
11. மே 23 ஒரு துளி நெருப்புக்குக் காத்திருக்கும் யாக குண்டங்கள்- மா காமுத்துரை – ஆனந்த விகடன் 23-05-2023 – நடுவர் மதுவந்தி
12. ஜூன் 23 – விருது – அரவிந்தன் – அம்ருதா – நடுவர் மந்திரமூர்த்தி அழகு

தாவரங்களுடன் உரையாடுபவள் சோ.சுப்புராஜ் எழுதிய கதை. வேறொருவர் எழுதியதாக தவறான தகவல் வெளியாகி இருக்கிறது. தவறைத் திருத்தவும். நன்றிங்க….!
LikeLike
திருத்திவிட்டேன்; நன்றி ;நிகழ்ச்சிக்கு வரவும். கிருபானந்தன் அவர்களை 97910 69435 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
LikeLike
Thanks. Certainly I would attend the function.
LikeLike