விகடன், குமுதம், குங்குமம், கண்மணி போன்ற இதழ்களுக்கு அட்டைப்படமும், கதை – கவிதைகளுக்கு ஏற்ற ஓவியங்களும் வரைந்து மக்கள் மத்தியில் பிரபலமானவர். இவரின் ஓவியத்தைப் பாராட்டி தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி இருக்கிறது. ஓவியம் மட்டுமின்றி ‘உளியின் ஓசை’, ‘பெண் சிங்கம்’ ஆகிய திரைப்படங்களில் ஆடை வடிவமைப்பாளராகவும் பணி செய்திருக்கிறார்.

வெ. இரங்கநாதன் என்ற இயற்பெயர் கொண்ட மாருதி , தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓவியர் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஆவார்.[கண்மணி, பொன்மணி, விகடன், குமுதம், குங்குமம் போன்ற இதழ்களுக்கு அட்டைப்படமும், கதை கவிதைகளுக்கு ஏற்ற ஓவியங்களும் வரைந்துள்ளார். தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருது தந்துள்ளது‌.

இரங்கநாதன் புதுக்கோட்டையில் 1938, ஆகஸ்டு 28 அன்று டி.வெங்கோப ராவ், பத்மாவதி பாய் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவர்கள் மராத்திய குடும்பத்தை சேர்ந்தவர்கள். வெங்கோப ராவ் ஆசிரியராக பணி செய்தார். அதனால் வீட்டில் கிடைக்கும் சாக்பீஸைக் கொண்டு இரங்கநாதன் ஓவியம் வரையக் கற்றுக்கொண்டார்.

இவர் கே. மாதவன் என்ற ஓவியரை மானசீக குருவாக எண்ணி கற்றார்.[1] திரைப்படங்களுக்கு பேனர் வரையும் ஆசையில் 1959 மார்ச் 11 இல் சென்னைக்குச் சென்றார். மைலாப்பூரில் திரைப்படங்களுக்கு பேனர் வரையும் நிறுவனத்தில் ஓவியம், பெயர் எழுதும் பணி செய்தார். 

மாருதி என்ற பெயரில் இவரது முதல் ஓவியம் 20 ஏப்ரல் 1959 அன்று குமுதம் வார இதழில் வெளியானது. .

மாருதி, உளியின் ஓசை (2008), பெண் சிங்கம் (2010) ஆகிய திரைப்படங்களுக்கும், வீர மங்கை வேலு நாச்சியார் என்ற ஓரங்க நாடகத்திற்கும் ஆடை வடிமைத்துள்ளார்.

 

ஓவியர் மாருதி என்பவர் யார்? - Quoraபுகழ்பெற்ற ஓவியர் திரு.மாருதி|அவர்களின் ஓவியங்கள்| part-2 - YouTubeஓவியர் மாருதி என்பவர் யார்? - Quora

ஓவியர் மாருதி அவர்கள் , 13-5-2022 அன்று வரைந்த மக்கள் திலகத்தின் படம்வண்ணங்களில் வாழ்வார் ஓவியர் ...