Fiat cars could make comeback to indian market along stellantis and alfa  romeo: பியட் ப்ராண்ட் கார்களை மீண்டும் இந்தியாவில் பார்க்க வாய்ப்புகள்  உள்ளன!

ஏர் கண்டிஷன் அறை. காற்றலைகள் குளுமைப் போர்வை போர்த்துகின்றன. மேனேஜிங் டைரக்டர் சேகர் சுழல் நாற்காலியில் உட்கார்ந்து தீவிரமாக கோப்புகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். சிவந்த நிறம், நல்ல உயரம், முடிக்கழல்கள் நெற்றியில் அழகாக வந்து வீழ்கின்றன. அப்போது கதவைத் தட்டி விட்டு வாழைப்பூவைப் போல தலையைக் கவிழ்த்தவாறே நுழைந்த செயலாளர் கனகராஜ் ஒரு ஃபைலை நீட்டியவாறே ‘குட் மார்னிங் சார்’ என்றார். ‘சேம் டூ யூ. என்ன கனகராஜ், முகம் வாடிப் போயிருக்கு. ஆபீஸில் ஒன்றும் பிரச்சனை இல்லையே?’ என்று பேசியவாறு மெதுவே தலை நிமிர்ந்தார் சேகர்.

‘சார் எப்படி சொல்வதென்று தெரியவில்லை. நேற்று நம் கம்பெனி காஷியர் சந்திரன் இரும்புப் பெட்டியை பூட்ட மறந்து மேஜையின் கீழே ஏதோ ஃபைலை தேடிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது

ம் ம் ..’ ‘சொல்லுங்க கனகராஜ் என்னாச்சு சந்தரனுக்கு? கீழே விழுந்து விட்டாரா அல்லது பணம் ஏதாவது காணாமல் போயிடுத்தா? சொல்லுங்க’

‘இல்லை எப்படி சொல்லுவது என்று தெரியவில்லை. அந்தப் பக்கம் வந்த டைபிஸ்ட் சுமதி திடீரென்று இரும்புப் பெட்டியின் பிடியில் கையை வைத்து திறக்க முயலும் போது….’

‘என்ன கை நிறைய சம்பளம் அளிக்கும் நம் கம்பெனியில் இப்படியொரு நிகழ்ச்சியா! அதுவும் போன மாதம் வேலையில் சேர்ந்த சுமதியா இப்படி! அவளை உடனே வரச் சொல்லுங்கள். நான் விசாரிக்கிறேன்.’ ‘எஸ் சார்’. மெதுவாக கதவை மூடியவாறு செகரெட்டரி செல்கிறார்.

கைகளைக் குவித்தவாறு சுமதி உள்ளே நுழைகிறாள். சுட்டு விரலால் எதிரே இருந்த நாற்காலியைக் காட்டுகிறார் சேகர். நன்றியைப் புன்முறுவலால் தெரிவிக்கிறாள். சேகர் அவளை உற்று நோக்குகிறார். குழந்தையின் வெகுளித்தனமும் குமரியின் வனப்பும் கலந்த களையான முகம். படிய வாரிய கூந்தலை மீறி நெற்றியில் நெளியும் வணங்காமுடிச் சுருள்கள். ஒற்றை ரோஜா. மொத்தத்தில் அடக்கமும் அழகும் கலந்த கலவையின் மனித வார்ப்பு. இவளா! அப்படி! சந்தேகத்தோடு புருவத்தை நெளித்து கேள்வியைத் தொடுக்கிறார்.

‘மிஸ் சுமதி, இந்தக் கம்பெனியில் எப்படி வேலை செய்கிறார்கள் என்பதை விட எப்படிப்பட்டவர்கள் வேலை செய்கிறார்கள் என்பதுதான் முக்கியம். உழைப்பை விட ஒழுக்கம் மேலானது..’ என்று பாதி சொல்லும்போதே அவள் கண்களில் நீர் முத்துக்கள் பிறக்கின்றன. வினாவும் வியப்பும் பாவமுமான ஓர் இழை அவள் முகத்தில் தோன்றி அமிழ்கிறது.

‘சார் சார் நேற்று நடந்த அந்த நிகழ்ச்சி’ வார்த்தைகளை மென்று முழுகுகிறாள். அளவிற்கு அதிகமாக அவள் இதயம் துடிப்பதை உதடுகள் உலர்வதன் மூலம் உணர்த்துகிறாள்.

சேகர் பலமாக ‘மிஸ் சுமதி, திருட்டுக் குற்றத்திற்கு, திருட முயன்ற குற்றத்திற்கு மன்னிப்பு கிடையாது’ என்றதும் ஒன்றிரண்டு முத்துக்கள் கீழே விழ அவள் தீர்க்கமாக ‘நோ நோ நான் திருடி அல்ல, நெவர் நெவர்’ என்று சிறிது விம்முகிறாள்.

கிளியின் மெல்லிய குரல் அலறலாக மாறுகிறது. ஏர் கண்டிஷன் அறையானதால் அலறல் வெளியே கேட்க வாய்ப்பில்லை.

‘அமைதியாக இருங்கள் மிஸ் சுமதி. அலறுவதால் உண்மையை மறைக்க முடியாது..’என்று சேகரும் கத்திப் பேசுகிறார்.

திடுமென்று அவள் விழிகள் மிரள்கின்றன. சுழன்று சுழன்று வந்த நீலக் கருமணிகள் புருவமேடுகளில் புதைந்து கொள்ளத் தொடங்குகின்றன. வலைக்குள் சிக்கிய புறாவாக நாற்காலியில் உடம்பை நெளிக்கிறாள். அடக்கமாக நெஞ்சோடு மடிக்கப்பட்டிருந்த அவள் கைகள் மேஜைப் பரப்பின் மீது அங்கும் இங்கும் பரவுகின்றன. அந்த மெல்லிய விரல்கள் துடிப்புடன் எதை நாடுகின்றன! என்ன டிராமா பண்ணுகிறாள் என்று வியப்போடு பார்த்த சேகரிடம் ‘சாவிக்(கொத்து)’ என்று சொல்லிக்கொண்டே ஊடும்புப் பிடியாக அவள் விரல்களால் சேகரின் மேஜை மேலிருந்த  சாவிக் கொத்தைப் பற்றுகிறாள். இரும்பைப் பிழிந்து சாறு  எடுப்பது போன்ற அழுத்தமான ஒரு பிடிப்பு. ஒரு வினாடி ஒரே ஒரு வினாடி தங்கப் பாளத்தின் மீது பாதரசத்தைக் கொட்டியது போன்று அவள் முகத்தில் வியர்வை அரும்புகள்.

ஒரு சமயம் அதிர்ச்சி, ஒரு சமயம் ஆனந்தம் சேகருக்கு. எழுந்து சென்று கண்ணாடிக் குவளையில் நீரை சரித்து நீட்டுகிறார். மெதுவாக மிக மெதுவாக பயம், மிரட்சியுடன் நீரை மடக்கு மடக்கு என்று விழுங்குகிறாள். அழகான ஓவியத்தில் தூசி படர்ந்தாற் போன்று அவள் முகத்தில் சோகப் படலம். பிறகு சுதாரித்துக் கொண்டு மெதுவாக ஆனால் தீர்க்கமாக ‘சார் இது போல சில வேளைகளில் எனக்கு வலிப்பு வருவதுண்டு. நேற்று கூட காஷியர் சந்திரன் இடத்தைத் தாண்டிச் செல்லும்போது வந்ததும் இந்த வலிப்புதான். தயவு செய்து என்னை நம்புங்கள். நான் இந்த வேதனையை வெளியில் எப்படி சொல்லுவேன்?’ என்று தழுதழுக்கிறாள். .

‘சரி நீங்கள் போகலாம். இன்று வேலை செய்யத் தேவையில்லை. ஆபீஸ் காரை அனுப்புகிறேன். வீட்டிற்குச் சென்று ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று பரிவாகச் சொன்னார் சேகர். அவர் அவளைப் புரிந்து கொண்டது தெரிந்து சுமதியின் கரங்கள் சேகரை நோக்கிக் குவிகின்றன. புன்னகையை முகத்தில் நெளிய விட்டு புத்துணர்ச்சியைக் காட்ட முயல்கிறாள். முடியவில்லை. திரும்பி நடக்கிறாள். மெல்லிய பாதங்கள் தரையில் பட்டும் படாமலும் நடந்து செல்கிறாள். சேகரின் உள்ளத்தில் பலவித எண்ணங்கள் வந்து போகின்றன. ஒரு முடிவிற்கு வந்த மாதிரி நிம்மதி அடைகிறார். இண்டர்காமில் செகரெட்டரியை அழைத்து ‘மிஸ் சுமதியை இன்று முதல் வேலை நீக்கம் செய்வதாக ஒரு கடிதம் டைப் செய்து கொண்டு வாருங்கள். அத்தோடு அவள் முகவரியும் என்னிடம் குறித்துக் கொடுங்கள்’.

மாலை ஆறு மணி. கம்பெனியை விட்டுக் கிளம்புகிறார் சேகர். ஓர்  ஆனந்தம், படபடப்பு, இனந்தெரியாத சந்தோஷம், நிம்மதி, ஆச்சரியம் எல்லாம் அவர் உள்ளத்தில் சுழல்கின்றன. சுமதியின் வேலை நீக்க உத்தரவைப் பையில் பத்திரப் படுத்தும் முன்பு அவள் முகவரியை மீண்டும் நினைவு கூர்கிறார். டிரைவர் கேசவன் காரின் கதவைத் திறந்து வைத்துக் கொண்டு நிற்கிறான். ‘இல்லை நானே காரை ஓட்டிச் செல்கிறேன்’ என்று கூற கேசவன் தயங்குகிறான். ‘என்ன கேசவா தயங்குகிறாய் பயப்படாதே. வழக்கமாக எனக்கு வரும் வலிப்பு இன்றைக்கு கார் ஓட்டும்போது வந்து விடுமோ என்று பயப்படுகிறாய் அல்லவா! கவலையை வீடு. இன்றைக்கு நான் சந்தோஷமாக இருக்கிறேன். எனக்கு அந்த வலிப்பு வராது’. கேசவன் மௌனமாகத் தலை அசைக்கிறான். பியட்டை மெல்ல ஒட்ட ஆரம்பித்தார்.

மவுண்ட் ரோடில் வாகனப் பேய்களின் தாறுமாறு ஓட்டத்தில் சேகருடைய பியட்டும் இணைந்து கொள்கிறது. இன்னும் பத்தே நிமிடத்தில் சுமதியின் வீட்டை அடைந்து விடலாம். சேகர் உள்ளத்தில் எண்ண ஓட்டம் ‘சுமதி.. பிறவியிலேயே என்னுடன் தொற்றிக்கொண்ட வலிப்பு நோய்க்குப் பயந்து மனித வர்க்கத்தின் திருப்பு மையமான திருமணத்தை இது வரை தட்டிக் கழித்து வந்த எனக்கு நீ தலையை நீட்டுவாயா? இன்று முதல் உனக்கு இரும்பாக நான் இருக்க எனக்கு இரும்பாக நீ இருப்பாயா?’

எண்ணச் சுழல்கள் வீதியோர சிவப்பு விளக்கினை மங்கலாக்கிக் காட்டுகின்றன. எதிர்சாரியிலுள்ள வாகனங்கள் பாய்வதற்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றன. கால்களில் பலம் முழுவதையும் ஒன்று திரட்டி பிரேக்கை அழுத்த முயலும்போது சேகர் கால்கள் ஏன் ஒத்துழைக்க மறுக்கின்றன? கைகள் ஸ்டீரியங்கை விட்டு நழுவுவது ஏன்? மூளையைச் சுற்றி வரும் உத்திரம் உறைவது போன்ற உணர்ச்சி எப்படி திடீரென்று! கார் நிற்கவில்லை. அங்கும் இங்கும் தான்தோன்றித்தனமாகச் செல்கிறது. ஓ அந்த எதிர்ப் புயத்தில் சீறிக் கொண்டு வரும் லாரி இந்தப்புறம் பாய்ந்து வரும் பல்லவன் பஸ் நடுவில் இந்த பியட் பி ……ய …… ட்..ட்.

ஓ கடவுளே!