புத்தகம் : மீண்டும் மனோதிடம் பெற்றவர்கள் ( சிலரின் மனநலப் பயணங்கள் ) தொகுப்பு – 1
எழுதியவர் : மாலதி சுவாமிநாதன்
குவிகம் பதிப்பகம் வெளியீடு ( முதல் பதிப்பு : அக்டோபர் 2023 )
பக்கம் : 202 விலை : ₹180
என்னைப் பற்றி நானே அறிந்து கொள்ள தீவிரமாக முயன்ற என் கல்லூரி நாட்களிலும் அதைத் தொடர்ந்த நாட்களிலும் நான் அதிகமாக விரும்பிப் படித்தவை அபுனைவு ( Non – Fiction ) நூல்கள்தான். புரிந்ததோ, புரியவில்லையோ குண்டு குண்டான உளவியல் ( Psychology ), சமூகவியல் ( Sociology ), மானுடவியல் ( Anthropology ) போன்ற பல துறைகளில் உள்ள மலைக்க வைக்கும் புத்தகங்களைப் படிப்பது என்னுடைய அப்போதைய தேடலுக்குத் தீனி போட்டது. உண்மையைச் சொல்லப்போனால் நான் படித்த புனைவு ( Fiction ) நூல்கள் வெகு சொற்பமே.
ஆனால், இப்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு அருமையான அபுனைவு நூலைக் கையில் எடுத்து முழுமையாகப் படிக்கும் வாய்ப்பு குவிகத்தினால் வாய்த்தது.
மாலதி சுவாமிநாதன் தன்னுடைய துறையில் ஆழமாக கற்றலும் அனுபவமும் மிகுந்த சென்னையின் தலை சிறந்த “சைக்கியாட்ரிக் சோஷியல் வொர்க்கர்களில்” ஒருவர். குவிகம் சுந்தரராஜனை ஆசிரியராகக் கொண்ட குவிகம் மின்னிதழில் ஏப்ரல் 2017 லிருந்து மாதந்தோறும் மாலதி சுவாமிநாதன் எழுதிய மனநல விழிப்புணர்வுக் கட்டுரைகளின் முதல் தொகுப்பு இந்த நூல். இந்நூலையும் குவிகம் பதிப்பகமே வெளியிட்டுள்ளது.
இந்நூலின் உள்ளடக்கம் அதிமுக்கியமானது. நூலின் பின்னட்டையில் குறிப்பிட்டுள்ளது போல திருமண வாழ்வில், குழந்தைகள் வளர்ப்பில், வேலை அழுத்தம், திடீர் மாற்றங்கள், இழப்புகள், கொடுமைப்படுத்தல், குடிப்பழக்கம் – இப்படி வாழ்க்கையில் பல இன்னல்களை எதிர்கொள்ளும் போது தடுமாறும் மனநிலையிலிருந்து வெளி வருவதற்கான வாசலைத் திறந்து விடுபவர்கள் மாலதி சுவாமிநாதனைப் போன்ற சைக்கியாட்ரிக் சோஷியல் வொர்க்கர்கள். அப்படிப்பட்ட ஒருவர் தன்னுடைய பல வருட அனுபவங்களிலிருந்து அதிமுக்கியமான விஷயங்களை இந்நூலில் வாசகர்களாகிய நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். முப்பது வருடங்களாக மனநல ஆலோசகராக பணிபுரிந்து வரும் அவரிடம் சிகிச்சை பெற்று பலன் அடைந்தவர்களின் (அவரது) அனுபவங்களை Case Study வடிவத்தில், சிறுகதைகளாக இத்தொகுப்பில் வழங்கி இருக்கிறார் இந்நூலின் ஆசிரியர்.
மருத்துவர் ஜெ.பாஸ்கரன் அவர்களின் முன்னுரையில் இந்நூலை வெகுவாகப் பாராட்டி வாசகர்கள் அனைவருக்கும் பரிந்துரையும் செய்திருக்கிறார்.
– உங்கள் சூழலில் யாருக்காவது மனதிடம் தளர்கிறதா ? எப்படி அடையாளம் கண்டு கொள்வது ?
– மனதிடத்தை மேம்படுத்த வழி தேடுவோர் யாரை அணுகுவது ?
– சோஷியல் வொர்க்கர் – ஆசிரியர்கள், மாணவர்கள்
– உளவியல் – மாணவர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள்
– சுய நம்பிக்கை பயிற்சி தருவோர்
– பள்ளி ஆசிரியர் பயிற்சி பெறுவோர்
– மனநலம், மனநலக் கோளாறு பற்றி தெளிவு பெற விரும்புவோர் இப்படி பலவிதப்பட்ட
வாசகர்களுக்கு பயன் தரும் நூல் இது.
மனச்சுமைகள் கூடிவரும் இந்தக்காலத்திற்கு அவசியத் தேவை இந்நூல் என்றால் ,மறுக்க முடியாத உண்மைதானே !
சமீபத்தில் நான் படித்த இந்த நூல் என் மனதில் பல புதிய ஜன்னல்களைத் திறந்து விட்டது.
நீங்களும் படித்து பயன் பெறலாமே !
(மற்ற நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பரிசாக வழங்கவும் உகந்தது இந்நூல் )
ஜி பி சதுர்புஜனின் “இந்தப் புத்தகத்தை படித்து விட்டீர்களா ?” வரிசையில் குவிகம் மின்னிதழில் இதுவரை இடம்பெற்றுள்ள நூல்கள் :
1. The Wisdom Bridge (By Daaji Kamlesh D.Patel) June 2023
2. BITS of Social Impact” ( English)
எழுதியவர்கள் : Harsh Bhargava and Sai Prameela Konduru July 2023
3. Adventures Of A Countryside Doctor
( By Dr.Thomas T. Thomas ) August 2023
தமிழில்: ஒரு சிற்றூர் மருத்துவரின் சாகசங்கள்
( தமிழாக்கம் : துரை தனபாலன் )
4. பாரதி கண்ட தெய்வ தரிசனம் September 2023
எழுதியவர் : நஜன்
5. அம்மா அம்மா ( சிறுகதைத் தொகுப்பு )
எழுதியவர் : பூர்ணம் விஸ்வநாதன் October 2023
6. கந்தர்வர்களின் உலகம் ( கவிதைகள்)
எழுதியவர் : லாவண்யா சத்யநாதன் November 2023
7. ந பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்ரா வரை December 2023
எழுதியவர் : ஜீவி


நமஸ்காரம்ஸ் ஸார், மிக்க மகிழ்ச்சி
புத்தகத்தைப் பற்றிய அறிமுகமும், விமர்சனமும் எனக்கு,
மிகச் சிறப்பான பொங்கல் பரிசாக அமைந்துள்ளது. படித்து பூரிப்புடைந்தேன்! மிக்க நன்றி.
உங்கள் விமர்சனத்திலிருந்து நான் புத்தகம் எழுதியதின் குறிக்கோள் நிறைவேற்றியது என்ற மனநிறைவு அடைந்தேன்.
LikeLike
தாமின் புறுவ துலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.
என்றார் தெய்வப்புலவர்.
கற்றறிந்த நண்பரின் கருத்தான பகிர்வு
முற்றும் பயனுள்ள முத்தான பதிவு.
LikeLike