1. வானிலையியல் தோற்றமும் வளர்ச்சியும்Milky Way Leh

           ஏனைய அறிவியல் துறைகளைப் போலவே வானிலையியல் துறையும் அறிவியற் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னரே குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்தது. அதற்கு முன்னர் வானிலை பற்றி மக்கள் அறிந்திருந்தனர். எனினும் இத்துறை இன்றுள்ளது போல முறைமைப்படுத்தப்பட்ட அறிவியலாக வளரவில்லை. உலகம் முழுவதும் நிலவி வந்த வானிலை பற்றிய செய்திகளைக் காணும்போது அதன் வளர்ச்சியை மூன்று கட்டங்களாகப் பிரிக்கலாம்

  • முதல் கட்டம் – கருத்துருவாக்கமும் மத அடிப்படை நம்பிக்கைகளும்
  • இரண்டாம் கட்டம் – வானிலை பற்றிய ஊகங்கள்
  • மூன்றாம் கட்டம் – இன்றைய நிலை – தொழிற் புரட்சிக்குப் பிந்தைய சிந்தனைகள்

கருத்துருவாக்கமும் மத அடிப்படை நம்பிக்கைகளும்

           கிமு 9000 முதல் கிமு 4000 வரையிலான காலகட்டத்தில் மனிதன் குழுக்களாக. உழவுத் தொழிலை மேகொண்டு. ஆற்றுப் படுகைகளில் குடியிருந்ததாக வரலாற்று ஆசிரியர்;கள் கருதுகின்றனர். இவ்வாறு வாழ்ந்த மனிதர்களின் உழவுத் தொழில் பருவமழைப் பொழிவு அல்லது மழையின்மை ஆகிய வானிலைக் காரணிகளால் பாதிக்கப்பட்டது.  நைல். டைகிரிஸ்-யூப்ரிடிஸ்@ நதிக்கரையோரங்களில் வசித்த மக்கள் இந்நதிகளில் ஏற்பட்ட திடீர்வெள்ளப் பெருக்கால் அவதியுற்றனர். இத்தகைய இயற்கை இன்னல்களிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள. தேவதைகளை வழிபடுதல். பலியிடுதல் பொன்றவற்றைச் செய்தனார். கிமு 4000த்தைச் சொ;ந்த. மின்னல் தெவதை உருவம் பொறிக்கப்பட்டுள்ள மண்வில்லை (clay tablets) ஓன்று மெசபடொமியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

         கிமு 3500இல் எகிப்தில் மழையை உருவாக்கச் சில சமயச் சடங்குகள் நடத்தப்பட்டன. கிமு 3000 முதல் கிமு 300 வரையான காலகட்டத்தில் பாபிலோனியாவில் கோள்களின் நிலை அடிப்படையில் வானிலை பற்றிய முன்னெச்சரிக்கைகள் வழங்கும் சோதிட வானிலையியல் வழக்கில் இருந்தது. இவர்கள் காற்று வரும் திசைகளைக் குறிக்கும் சொற்களை உருவாக்கினார்கள். கிமு 3000இல் சுமேரியா நாட்டில் ஏற்பட்ட ஆழிப்பெருவெள்ளம் பற்றிய குறிப்பு ஓன்றும் உள்ளது. இது கிறித்துவ வேதமான பைபிளில் சொல்லப்பட்டுள்ள பெருவெள்ளம் பற்றிய குறிப்பினை  ஓத்துச்செல்லும் செய்தியாகும்.

         கிமு 1200இல் சீனாவில் வானிலைத் தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கரிக்கட்டிகளைத் திறந்தவெளியில் வைத்திருந்து அதன் எடை அதிகரித்துள்ளதா, எனக் கண்டுபிடித்து அதன் மூலம் காற்றின் ஈரப்பதத்தினைக் கண்டறியும் முறையைச் சீனர்கள் அறிந்திருந்தனர்.

வானிலை பற்றிய ஊகங்கள்

         வானிலையியல் வளர்ச்சியில் அடுத்த கட்டம் கிமு 600 முதல் கிபி 1500 வரையிலான காலமாகும். இக்காலகட்டத்தில் வானிலை பற்றிய அறிவியற் சிந்தனைகள் தத்துவஞானிகளால், குறிப்பாக கிரேக்க தத்துவஞானிகளால் அவர்கள் அறிந்த தகவல்களின் அழப்படையில் ஊகங்களாகவும் கொள்கைகளாகவும் உருவாக்கப்பட்டன.

         கிரெக்க நாட்டின் மிலிஸ்டசைச் சேர்ந்த தாலஸ் (கிமு 624 – 547) என்பவர் முதன் முதலில் நீர் சுழற்சியைப் பற்றி எழுதினார். கிமு 610–545இல் வாழ்ந்ததாகக் கருதப்படும் அனாக்சிமேண்டர் முதன் முதலில் நகரும் வாயுக்களின் தொகுதியே காற்று எனக் கண்டறிந்தார். இவரின் இந்தக் கண்டுபிடிப்பைக் கிபி 1500 வரை அறிஞர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. கிமு 499–427இல் வாழ்ந்ததாகக் கருதப்படும் ‘அனக்சகோரஸ்’ என்ற கிரெக்க அறிஞர்,

  • ஆலங்கட்டி மழை ஏற்படக்காரணம்
  • தரையிலிருந்து மேலே செல்லச்செல்ல வெப்பநிலை குறைகிறது
  • கோடையிலும் அதிக உயரத்தில் நீர் உறைந்து பனிக்கட்டியாகும்

முதலிய பல அறிவியல் உண்மைகளை உரைத்தார். இவ்வுண்மைகளின் விளக்கங்களாக இவர் தந்துள்ள கருத்துக்கள் தற்பொது அறிவியல் அழப்படையில் தவறானவை என்று மெய்ப்பிக்கப்பட்டுள்ளன. ஆனால் கிபி 1800 வரை இவரின் கருத்துக்களுக்கானச் சரியான விளக்கங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.

         கிமு 492 முதல் 432 வரையிலான காலகட்டத்தில் வாழ்ந்ததாகக் கருதப்படும் சிசிலியைச் சேர்ந்த எம்பிடோகிள்ஸ் என்பவர் இவ்வுலகின் நான்கு அடிப்படைத் தனிமங்கள் காற்று. மண். தீ. நீர் என்று கூறினார். மேலும் வெப்பம், குளிர்ச்சி, உலர்ந்த தன்மை, ஈரப்பதமுள்ள தன்மை ஆகிய நான்குமே இயற்கையின் அடிப்படைக் குணங்கள் என்று கூறினார். இவரின் இந்தக் கருத்துகள் இவருக்குப் பின்னால் வந்த அரிஸ்டாடிலின் கருத்துகளுக்கு அடிப்படையாய் அமைந்தன. காஸ் நகரத்தில் வாழ்ந்த ஹிப்போகிரெட்டஸ் (கிமு 460 முதல் 370) காலநிலை மனிதனின் உடல்நிலையில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளைப் பற்றி எழுதினார்.

         கிமு 384 முதல் 322 வரையிலான காலத்தில் வாழ்ந்த கிரேக்க அறிஞர் அரிஸ்டாடில், மெடிரியாலாஜிகா என்ற நூலை எழுதினார். வானிலையியல் என்பதனைக் குறிக்கும் மெடியராலாஜி என்ற ஆங்கிலச் சொல் இந்த நூலின் தலைப்பிலிருந்தே பெறப்பட்டது. வானிலையியல் பற்றிய இவரது கருத்துக்கள் மேலைநாடுகளில் மறுமலர்ச்சிக் காலம் வரை அப்படியே ஏற்றுகொள்ளப்பட்டன. இவரின் கருத்துக்களாவன:

  • காற்றிற்கு எடை உண்டு
  • வானிலை காற்று. நிலம். தீ. நெருப்பு ஆகியவற்றால் ஏற்படுகிறது.
  • வெப்பம், குளிர், ஈர நிலை, உலர் நிலை இவை நான்கும் வானிலையின் குணங்கள். (இவை இரண்டும் எம்பிடொகிள்ஸின் கருத்துக்கள் ஆகும்)
  • நிலத்தின் சுவாசமே காற்று.
  • நிலத்தின் வடிவம் பற்றிய ஓரு தீர்வான முடிவிற்கு வர இயலவில்லை.

         அரிஸ்டாடிலின் கருத்துக்களில் பெரும்பான்மை தவறானவை என்று பிற்காலத்தில் முடிவுசெய்யப்பட்டன. ஆனால் ஆய்வு அடிப்படையில் இவர் தம் கருத்துக்களைச் சொன்ன முறை வானிலையியல் என்ற அறிவியல் தோன்றக் காரணமாயிற்று.

தியோப்ரஸ்டஸ் (கிமு 327 முதல் 287 வரை) என்ற கிரேக்க அறிஞர் சிக்னிஸ் டெம்பஸ்டேடம் என்ற நூலை எழுதினார். இந்நூல் வானிலையியல் பற்றிய குறியீடுகளைத் தந்தது. இந்நூலினுள் மழை பற்றிய எண்பது குறியீடுகளும். காற்றின் திசை மற்றும் வேகம் பற்றிய நாற்பத்து ஐந்து குறியீடுகளும். நல்ல வானிலை பற்றிய இருபத்திநான்கு குறியீடுகளும். ஒராண்டிற்குச் சற்று குறைவாக நிலவக்கூடிய வானிலை பற்றிய ஏழு குறியீடுகளும் தரப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக ஈக்கள் பறந்தால் மழை பெய்யும் என்பது இதனுள் தரப்பட்டுள்ள மழை பற்றிய குறியீடாகும்.

( இன்னும் புதிய தகவல்களுடன் அடுத்த மாதம் வரும்)