சிறுவர்களுக்கு ஏற்ற கதைகள், நூல்கள்,கட்டுரைகள் , படங்கள், செய்திகள். விளையாட்டுகள் என்று நிரம்பி வழியும் சிறுவர் வனம் ‘ ஜனவரி 2024 காலாண்டு இதழ் நண்பர் சடகோபன் அவர்கள் முயற்சியில் ஒரு சிறந்த சிறுவர் இதழாக பரிமளிக்கிறது .
அவர் ‘ ஆசிரியர் உரை ‘ யில் குறிப்பிட்டுள்ளது போல ‘ குழந்தை இலக்கியங்கள் , குழந்தைகளின் அறிவுக்கு கண்களை மட்டும் திறக்காமல் அவர்களுடைய எதிர்காலத்துக்கு ஒரு சிறந்த உரத்தையும் விதைத்து , அவர்களை, அனைத்து சூழ்நிலைகளுக்கும் ஏற்றவாறு மாற்றி, ஒரு சிறந்த குருவாக இருந்து, புடம் போட்டு , அவர்களது அறிவுத்திறன்களை வளர்க்கின்றன ‘ . அதற்கு எடுத்துக்காட்டாக இந்த ‘சிறுவர் வனமும் ‘ திகழ்கிறது .
அதுவும் இந்த ‘ ஆட்ட வனம் ‘ பகுதி நம்மையும் குழந்தைகளாக மாற்றி ஆட வைக்கும் பகுதி. ஆங்கிலம், தமிழ், கணக்கு என்று அதில் இருக்கும் ஆட்டங்கள் எல்லாம் நம் அறிவுத் திறனை வளர்க்கும் ஆட்டங்கள். நானும் கொஞ்சம் ஆடி மகிழ்ந்தேன்.
– நாகேந்திர பாரதி
