முதல் இடம் என்னைப் பொறுத்தவரை கதிரில் 28.01.2024ல் வெளிவந்த எஸ். ஸ்ரீதுரை எழுதிய வக்கீல் வீட்டு தாம்பூலம் – சிறகு ரவி

—————————————————————————————————————————————-

1.     வாசகசாலை -06-01-24       பாட்டும் தாளமும்   கமலதேவி – 6/10 (வித்தியாசமான கதை. கொஞ்சம் தி.ஜா வாசனை. வர்ணனைகளும் அமர்க்களம். கதையோடு ஒன்றிப் போகக்கூடிய நடை. இன்னும் அந்த காலத்திற்கு இட்டுச் செல்லும் சம்பவ நேர்த்தி )

2.     வாசகசாலை-24-01-24 –மர பீரோ             ஆத்மார்த்தி – 6/10 ( சில கெட்ட வார்த்தைகளை தவிர்த்து விட்டால், இது ஒரு நாவலுக்கான அஸ்திவாரம். வாழ்தலும் வயோதிகத்தில் வாடி வதங்குவதுமான கதையை உயிர்ப்புடன் சொல்லி இருக்கிறார் ஆத்மார்த்தி. )

3.     குங்குமம் – 12.01.24-  சிலிர்ப்பு – ரிஷபன் – 6/10 – ஆகச் சிறந்த கதை. மிக எளிய முடிச்சு என்றாலும் சொன்ன விதத்தில் உண்மையிலேயே சிலிர்ப்பு!

4.     விகடன் – 03.01.24- அம்மா செய்த குற்றம் – வாஸந்தி -6/10 – ( ஃபீடோஃபீல் எனும் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்யும் முடிச்சு. வர வர பெண் எழுத்தாளர்கள் வேறு எதுவும் எழுத மாட்டார்களோ என்று கூட சலிப்பு வந்து விடுகிரது. ஆனாலும் சொன்ன விதத்தில் எழுத்தில் கரை கண்டவர் என்று நிருபிக்கிறார் )

5.     கதிர் – 28.01.24 – வக்கீல் வீட்டுத் தாம்பூலம் – எஸ் ஸ்ரீதுரை – 6/10 – ( க்ளாஸ். வித்தியாசமான முடிச்சு. ஒரு புடவையை வைத்து அலசும் தரித்திர நிலை.)

6.       உயிர்மை  ஜனவரி 2024 –   பிறைசூடி –  பூமா ஈஸ்வரமூர்த்தி – 6/10 – (ஒரு விளையாட்டு பயிற்சியாளரின் கதையை இவ்வளவு ரசிக்க ரசிக்க சொல்ல முடியுமா? ஆனாலும் முதல் பாரா விரசம் சற்று கசக்க வைக்கிறது )

முதல் இடம் என்னைப் பொறுத்தவரை கதிரில் 28.01.2024ல் வெளிவந்த எஸ். ஸ்ரீதுரை எழுதிய வக்கீல் வீட்டு தாம்பூலம்.

வீட்டில்  நான்கு பெண் பிள்ளைகள். நடுத்தர வர்க்கத்தின் தரித்தர இயலாமையும் திண்டாட்டமும். குயுக்தியாக திட்டம் போடும் கதை நாயகி ஜானு. வசதியான தங்கை பர்வதாவை அழைத்துப் போய் விட்டால், வக்கீல் வீட்டில் விசேஷத்துக்கு ,தாம்பூலத்தில் கொடுக்கப்பட்டும் புடவை இரண்டாகி விடும். பர்வதா வசதியானவள். இருக்கும் நிலையைச் சொல்லி விட்டால் அப்படியே கொடுத்து விடுவாள். நாலு மகள்களுக்கு புது தாவணிகள் கிடைக்கும். இப்படி திட்டம் போடும் ஜானுவுக்கு, எதிர்பாராமல் வக்கீல் மாமி சொன்னது: இன்னிக்கு சுமங்கலிகளுக்கு கொடுத்தாப்பல, நாளைக்கு கன்யா பொண்களுக்கும் பாவாடை தாவணி தாம்பூலம்னு கொடுக்கறோம். இப்ப வந்த ஐடியா. நாளைக்கு ஒங்க நாலு பொண்களையும் மறக்காம அனுப்பி வச்சிருங்கோ. கடைசியில் பர்வதா புடவையை நீட்டும்போது ஜானு : பொறந்த வீட்டு சீர்னு ஓனக்கு ஒண்ணும் இது நாள் வரைக்கு நான் கொடுத்ததில்லை. இதை நீயே வச்சுக்க பர்வதா. பர்வதாவோட கண் லேசா கலங்கினா மாதிரி இருந்தது.