குவிகம் அளவளாவல் : (ஞாயிற்றுக் கிழமைகளில்)
18.02.24 –
72 ஆண்டுகளாக சென்னை சைதாப்பேட்டையில் இயங்கி வரும் மகாத்மா காந்தி நூலகம் இயங்கி வருகிறது. அதைப் பராமரித்து வரும் நித்தியானந்தம் அதனை மேம்படுத்திப் புதிய வடிவில் கொண்டுவருவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார் . அதற்காக திரு ரமணன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு நட்பு வட்டத்தினரிடமும் புரவலரிடமும் நன்கொடை பெறும் முயற்சி நடை பெற்று வருகிறது. இந்த அளவளாவல் மூலம் குவிகம் நண்பர்களிடம் இந்தப் புனிதப் பணிக்கு உதவும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ( ஒரு மாதத்தில் 94000 ரூபாய் நம் நண்பர்கள் கொடுத்திருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறோம்) . இன்னும் பல நண்பர்கள் தரும் உதவியால் இந்த நூலகம் புதிய கட்டடத்தில் சிறப்பாக அமையும் என்ற நம்பிக்கை பிறக்கிறது
25.02.24
என் புத்தகங்கள் வரிசையில் அன்னபூரணி தண்டபாணி மற்றும் சுரேஷ் ராஜகோபால் இருவரும் தாங்கள் எழுதி வெளியிட்ட புத்தக்காகங்களைப் பற்றிக் கூறினார்கள்
03.03.24
தஞ்சாவூரக் கவிராயர் தன் வாழ்வில் சந்தித்த இலக்கிய ஆளுமைகளைப் பற்றிய நினைவுகளையும் தான் எழுதிய கவிதைகள் சிவற்றையும் நம்முடன் பகிர்ந்துகொண்டார்.
10.03.24
மொழிபெயர்ப்பில் தன் வரலாறு என்ற தலைப்பில் கௌரி கிருபாநந்தன் அவர்கள் மொழிபெயர்த்த நூலைப் பற்றி ராஜாமணி அவர்கள் பேசினார் .
நேரடி நிகழ்வு : 24.02.24
அழகியசிங்கர் தலைமையில் நமது ஆஸ்தான இடமான ஸ்ரீநிவாச காந்தி நிலையத்தில் 12 கவிஞர்கள் கலந்துகொண்டு தங்கள் கவிதைகளை மூன்று சுற்றாகப் படித்தனர். நேரடியாகவும் ஜும் அரங்கிலும் நிறைய நண்பர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை ரசித்தனர்.
கலந்து கொண்ட கவிஞர்கள்: அழகியசிங்கர், வத்சலா, லாவண்யா சத்யநாதன், செந்தூரம் ஜெகதீசன் , நாகேந்திரபாரதி, பானுமதி, சுரேஷ் ராஜகோபால், மீ விஸ்வநாதன் , எஸ் வி வேணுகோபால், ஆர் கே ராமநாதன், முபீன் சாதிக் , டாக்டர் பாஸ்கரன் ( வ வே சு அவர்களின் கவிதைகளைப் படித்தார் )
மகாகவியின் மந்திரச் சொற்கள் : (புதன் கிழமைகளில் )
ஞானப் பாடல் வரிசையில் அழகுத் தெய்வம் என்ற பாடலில் விளக்கத்தை வ வே சு அவர்களுடன் பிப்ரவரி 21, 28, மார்ச் 6, 13 ஆகிய நான்கு வாரங்கள் தொடர்ந்து பயணித்து வருகிறோம். குறிப்பாக மது நமக்கு என்ற பாரதியார் பாடலும், மழை பற்றிய பாரதியாரின் கதையும் கேட்போர் மனதில் ஆழப் பதிந்தன .
மகாத்மா காந்தி குறுந் தொடர் ( 5 வாரங்கள்)
திரு மோகன் , தலைவர் சென்னை காந்தி பயிலகம் ஜனவரியில் துவக்கிய காந்தி சிந்தனைகளுக்குப் பிறகு பிப்ரவரி 8, 15,22,29, மார்ச் 7 ஆகிய ஐந்து நாட்கள் காந்தியத்திற்குத் தங்களை அர்ப்பணித்துக்கொண்ட பெருமக்கள் ஐவர் தங்கள் காந்திய எண்ணங்களை நம்முடன் பகிர்ந்துகொண்டனர்.
- முனைவர் பிரேமா – கஸ்தூரி பாய்
- பாவண்ணன் – காந்தியம் மாணவர்களுக்கு
- கன்யூட்ராஜ் – இன்றைய காந்தியம்
- விப்ரநாராயணன் – கீதையும் காந்தியும்
- சரவணன் – கதை வழியே காந்தி
குவிகம் நண்பர்களும் காந்தியத்தில் தோய்ந்த பலரும் இந்த உரைகளை நெகிழ்ச்சியுடன் கேட்டு மகிழ்ச்சியடைந்தனர்
இதன் காணொளிகள் கீழே தரப்பட்டுள்ளன:
