
நாங்கள் அயோலியா தீவை அடைந்தபோது அங்கே அயோலாஸ் என்ற மன்னர் எங்களுக்கு வேண்டிய உதவிகளை செய்தார். மேற்கொண்டு எங்கள் பயணத்திற்குத் தேவையான எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார். புயல் காற்றையும் சுழல் காற்றையும் மற்ற எல்லா விதமான காற்றுகளையும் கட்டுப்படுத்தி விடுதலை செய்வதற்குமான அதிகாரத்தை கடவுளர்கள் அவருக்கு கொடுத்திருந்தார்கள். அதனால் புயல் காற்றுகளை ஒரு பைக்குள் திணித்து காற்று கொஞ்சம் கூட வெளியேறாதபடி வாயை கம்பியால் பிணைத்து இருந்தார். அதை நாங்கள் ஊருக்குச் சென்ற பிறகு பிரித்துவிட வேண்டும் என்று என்னிடம் ரகசியமாக கூறினார். கப்பலை சரியான திசையில் செலுத்துவதற்காக மேல் திசை காற்றை மட்டும் சுதந்திரமாக விட்டு வைத்தார்.
இப்படி ஒன்பது நாட்கள் நாங்கள் பயணித்து கிட்டத்தட்ட சொந்த ஊருக்கு வந்து விட்டோம். அப்பொழுது நான் கடலின் நடுவே ஒரு தீவைக் கண்டேன். சற்று சோர்வு அடைந்தத நான் கொஞ்சம் கண்ணயர்ந்து விட்டேன் அந்த நேரம் பார்த்து என்னுடைய மாலுமிகள் அந்தப் பையில் விலையுயர்ந்த கற்கள் தங்கம் வெள்ளி இருக்கும் என்று தவறாக நினைத்து அந்தப் பையைத் திறந்ததும் புயற்காற்று அதிலிருந்து விசையுடன் வெளியேறியது. அதனால் கப்பல்கள் எங்கள் கட்டுப்பாட்டிலிருந்து விலகிப் புயலின் வசத்தில் சென்றன. கடலுக்குள் வெகுதூரம் சென்றுவிதிடவோம். கப்பல்களை பிறகு நாங்கள் துடுப்பு போட்டுக் கொண்டு லாமோஸ் என்ற நகரை அடைந்தோம்.
அந்த நகரில் இருந்த மக்கள் மனிதர்களை சாப்பிடும் அரக்கர்கள். எங்களில் சிலரை அவர்கள் கண்ட துண்டமாக வெட்டி எங்கள் கண் முன்னாடியே சாப்பிட ஆரம்பித்தனர். பாறைகளை வீசி எங்கள் கப்பல்களை அழிக்கவும் தொடங்கினர். நாங்கள் அனைவரும் பயந்து பாய்மரக் கப்பல்களை விரித்துக் கொண்டு அங்கிருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று புறப்பட்டோம்.
பிறகு அங்கிருந்து ஏயியா என்ற தீவை அடைந்தோம் அங்கே அழகும் பயங்கரமும் நிறைந்த தேவதையான சார்சி வசித்துக் கொண்டிருந்தாள் . கொலை செய்வதைக் கலைத்தன்மை மிகுந்த ஒரு செயலாக ஏற்றுக் கொண்டிருந்தவள் அவள். நாங்கள் சத்தம் இல்லாமல் நாங்கள் கப்பலை துறைமுகத்திற்கு கொண்டு சென்றோம். எந்த விதமான உணவும் குடிநீரும் இல்லாததால் அவற்றை அந்த நகரிலிருந்து பெற்றுச் செல்லவே அங்கு சென்றோம். கடற்கரையில் இருந்த ஒரு மானைக் கொன்று அதை அதன் இறைச்சியைச் சாப்பிட்ட பிறகுதான் எங்களுக்கு சென்ற உயிர் திரும்ப வந்தது. பிறகு அந்த தீவுக்குள் சென்று மலையடிவாரத்தில் சார்சியின் வீட்டைக் கண்டுபிடித்தோம்
என்னுடைய ஆட்கள் சார்சியின் உபசரிப்பில் மயங்கி அவள் கொடுத்த ரொட்டி மது வகைகளை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது அவள் தனது மந்திரப் பிரம்பினால் அவர்களது தலையை தடவினாள் . கண்மூடி திறப்பதற்குள் அவர்கள் பன்றிகளாக மாறிவிட்டனர் உடனே அவர்களைத் தன் கூண்டுக்குள் போட்டு அடைத்து வைத்தாள். இதைப் பார்த்துப் பொங்கிய நான் என்னுடைய வாளையும் வில்லையும் எடுத்துக் கொண்டு சார்சியை அழித்து என் வீரர்களைக் காப்பற்ற சென்றேன்.
அப்போது எனது இஷ்ட தேவதை ஹெர்மிஸ் வழியில் என்னைச் சந்தித்து நான் சார்சியிடமிருந்து தப்பிப்பதற்காக எனக்கு ஒரு தாயத்து ஒன்றையும் தந்தார். பிறகு சார்சியின் மாயாஜால மந்திரங்கள் பற்றியும் என்னிடம் விவரமாக எடுத்துரைத்தார். சார்சியின் வீட்டுக்குள் சென்றதும் அவள் வழக்கம் போல புன் சிரிப்புடன் என்னை வரவேற்று சிம்மாசனம் ஒன்றில் உட்கார வைத்தாள். தேனில் விஷம் மருந்தைக் கலந்து கொடுத்து என்னை குடிக்கச் செய்தாள். ஆனால் என் கையில் இருந்து தாயத்தின் சக்தியால் அது எனக்கு எந்த விதமானப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. பிறகு அவள் தனது மந்திரம் பிரம்பால் என் உடலை வருடினாள் . உடனே நான் ஹெர்மிஸ் குறிப்பிட்டபடி வாளுடன் அவள் மீது பாய்ந்தேன். நான் அவளை மீறியவன் என்று தெரிந்ததும் அவள் என் காலில் விழுந்து மன்றாடத் தொடங்கினாள்
அவளுக்கு என் மீது மயக்கமும் ஆசையும் ஏற்பட்டது. நாம் இருவரும் இந்தத் தீவில் மகிழ்ச்சியுடன் இருப்போம் என்று என்னைத் தன் படுக்கை அறைக்கு அழைத்துச் சென்றாள். அவள் என் வலிமையை குன்றச் செய்து என்னையும் ஒரு மிருகமாக மாற்றி விடுவாளோ என்று பயந்தேன். ஆனால் அவள் என்னிடம் சத்தியம் செய்து என்னுடைய பழைய வீரர்களை யும் திரும்ப வரவழைத்துத் தந்தாள்.
அதன்பிறகு நானும் அவளது சல்லாபத்தில் மனதைப் பறிகொடுத்து சுமார் ஒரு வருட காலம் நான் அங்கேயிருந்தேன் என் வீரருடைய வேண்டுகோளை ஒட்டி நாங்கள் எங்கள் நாட்டிற்குப் பயணம் செய்ய திட்டமிட்டோம் . சார்சியும் எங்களுக்கு உதவ முன் வந்தாள் . ஆனால் நாங்கள் எங்கள் நாட்டிற்குச் செல்லுமுன் அருகில் உள்ள மற்றொரு தீவில் ஒரு கண் தெரியாத குறி சொல்லும் பெண் ஒருத்தியைச் சந்தித்த பின்னரே செல்லவேண்டும் என்று உறுதியாகக் கூறினாள் . அவளைச் சந்தித்தால் என் எதிர்காலத்தைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் என்றும் அதன் பின்னரே பயணத்தை தொடர வேண்டும் என்றாள். அங்கு போவதற்கான வழிமுறைகளையும் சொல்லித் தந்தாள். தேவையான ஆடுகளையும் எங்கள் கப்பலில் ஏற்றி விட்டாள். எங்கள் பயணத்திற்கு உதவியாக காற்றையும் அனுப்பி வைத்தாள்.
நாங்கள் சென்ற இடம் பாதாள உலகம் என்பதை அங்கு போனபின்புதான் புரிந்துகொண்டேன். அங்கே இறந்து போன ஆத்மாக்கள் ஒன்றன்பின் ஒன்றாக வரத் தொடங்கின அந்த ஆத்மாக்களுக்கு திருப்தி அளிக்க எங்களுடன் வந்த ஆடுகள் ஒவ்வொன்றாகப் பலி கொடுத்தோம்.
கடைசியாக சார்சி குறிப்பிட்டுச் சொன்ன அந்த குறி சொல்லும் ஆத்மா எங்கள் கண் முன் வந்து நின்றது. அதற்கு தேவையான பலிகளைக் கொடுத்தவுடன் அது திருப்தி அடைந்து என்னிடம் பேசத் தொடங்கிகினாள்.
பொசைடனின் மகனின் கண்ணை நான் சிதைத்து விட்டதால் பொசைடோன் என் மீது கடும் கோபத்துடன் இருக்கிறான் என்றும் பயணம் செல்லும் பாதை முழுக்க நாங்கள் கடுமையான துயரங்களை அனுபவிக்க வேண்டி இருக்கும் என்றும் முன்னறிவிப்பு செய்தாள் . மற்றும் ஹீலியூஸ் என்ற சூரிய தேவனின் ஆடு மாடுகளை பார்க்க நேரும்போது அவற்றுக்குத் தொல்லை கொடுக்காமல் இருந்தால் நாங்கள் பத்திரமாக தாய்நாடு போய் சேர்வோம் என்றும் கூறினாள் . மாறாக அந்த ஆடுகளுக்குத் தொல்லைப்படுத்தினால் மாலுமிகள் ஒட்டுமொத்தமாக அழிக்கப்படுவார்கள். நான் ஒருவன் மட்டும் மீதமானாலும் கூட ஏராளமான கஷ்டங்களை அனுபவித்த பிறகுதான் சொந்த நாட்டை அடைய முடியும் என்றாள் . என் சொந்த நாட்டிலும் ஏராளமான துன்பங்கள் காத்திருக்கின்றன என்றும் என் மனைவியை ஊர்க்கார பிரபுக்கள் தங்களை கணவனாக ஏற்றுக் கொள்ளுமாறு மிரட்டிக் கொண்டும் இருக்கின்றார்கள் என்றும் கூறினாள். இந்த அவமானத்திற்குரிய காட்சிகளைத் தான் நீ பார்க்க வேண்டி இருக்கும் என்றது அந்த ஆத்மா தேவதை. உன் நாட்டில் உள்ள தீய எண்ணம் கொண்ட பிரபுக்க்களை நீ அடக்கி ஒடுக்கிய பிறகு பொசைடன் தேவனுக்கு தேவையான பலிகளையும் கொடுத்து அவர் திருப்தி அடையும்படி செய்ய வேண்டும். அப்போதுதான் நீ நிம்மதியாக இருக்கமுடியும் என்று கூறினாள். அதற்குப் பிறகு என் மரணம் எப்பொழுது நிகழும் என்பதை பற்றித் தெரிவித்தாள். முதுமையின் போது மிகவும் இயல்பாக அமைதியாக மரணம் நிகழும் என்றும் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முன்னிலையில் கடலில் தான் மரண நிகழும் என்ற அந்த குரல் எனக்கு நிம்மதியை வரவழைத்தது.
அந்தப் பாதாள உலகத்தில் என் அன்னையின் ஆத்மாவையும் பார்த்தேன் நான் சொந்த நாட்டிற்கு திரும்பி வராததால் துயரத்திலேயே அவள் இறந்து விட்டதாக தெரிவித்தாள் . என் மகன் என்னை எதிர்பார்த்துக் கொண்டு நாட்டில் காத்துக் கொண்டிருப்பதாகக் கூறினாள் .
எனது நண்பர்கள் பவரை அங்கே ஆவி வடிவில் அந்த பாதாள உலகத்தில் சந்தித்தேன்.
எங்கள் கிரேக்கப்படையின் தலைவர் அகெம்ணன் தான் எப்படி வஞ்சனையால் தனது மனைவியின் மூலமாக கொலை செய்யப்பட்ட கதையை என்னிடம் விவரித்தார். அதற்குப் பிறகு அக்கிலிஸ் பெட்ரோகிலிஸ் போன்ற எனது படை நண்பர்கள் ஆவி வடிவத்தில் வந்தார்கள். அக்கிலிஸ் அந்த கூட்டத்திற்கும் தலைவராக இருந்தார். அவர் என்னை பார்த்துவிட்டுப் பெருமிதத்துடன் கடந்து சென்றார். இன்னும் எண்ணற்ற எனது பழைய நண்பர்களை அங்கு சந்தித்தேன் அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் செய்த பாவத்தின் அளவையொட்டி தண்டனை அனுபவித்துக் கொண்டிருப்பதையும் என்னால் பார்க்க முடிந்தது.
அதற்குப் பிறகு நான் அந்த பாதாள உலகத்தை விட்டு வெகு வேகமாக வந்துவிட்டேன்
திரும்பவும் நாங்கள் சார்சி இருந்த தீவிற்கு மறுபடியும் வந்தோம் . அவள் நான் சொந்த ஊருக்கு எப்படி செல்ல வேண்டும் என்பதைப் பற்றியும் அதில் வரும் ஆபத்துகளிலிருந்து நான் எப்படி தப்ப வேண்டும் எள் . பதையும் விளக்கமாக எடுத்துக் கூறினாள் .
போகும் வழியில் பாட்டுப் பாடும் தேவர்கள் வருவார்கள். தங்கள் பாட்டின் திறத்தால் மனிதர்களை மயக்கி தங்களுடன் இருக்கச் செய்து விடுவார்கள். காதுகளில் மெழுகை ஊற்றிக் கொண்டு , அந்தப் பாடல்களைக் கேட்காமல் நீங்கள் தப்பிக்க வேண்டும் .
அங்கிருந்து தப்பித்து விட்டால் பிறகு இரண்டு வழிகள் உள்ளன. அதில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பது உங்கள் புத்திசாலித்தனத்தை வைத்து நீங்களே தீர்மானிக்க வேண்டும் . அலைகளுக்கும் ஆபத்து நிறைந்த பாறைக் கூட்டங்களுக்கும் நடுவே பயணம் செய்யும்போது எப்படித் தப்பிக்கலாம் என்பதற்கான வழியையும் சார்சி சொல்லிக் கொடுத்தாள்.
அதன் பிறகு நீங்கள் அந்த ஹீலியுசின் கால்நடைகள் வைத்திருக்கும் தீவை அடைவீர்கள். அவற்றிற்கு எந்த விதமான தொல்லையும் செய்யாமல் இருந்தால் நீங்கள் சீக்கிரமாகவே உங்கள் சொந்த ஊரான இதாகாக்குப் போய்ச் சேர முடியும். மாறாக அவற்றுக்கு ஏதாவது தீங்கு விளைவித்தால் நீங்கள் உங்கள் கப்பலைகளையும் ஆட்களையும் இழந்து விடுவீர்கள் . அதன் பிறகு பல வருடங்களுக்கு பிறகு தான் நீங்கள் உங்கள் தாய் நாட்டை அடைய முடியும் என்றாள் .
இவ்வளவு உதவி செய்த அந்த அழகுத் தேவதை சார்சிக்கு மனமார நன்றி கூறிவிட்டு என் பயணத்தைத் தொடர்ந்தேன்.
(ஓடிஸியின் பயணங்கள் தொடரும்)
