பீஷியன் அரசர் அரசி ஆகியோரிடம் ஓடிசியஸ் தனது கதையைத் தொடர்ந்து கூறினான்.

நான் எனது சொந்த ஊரான இதாக்காவிற்குப் போகும் வழியில் உள்ள தடைகளை நீக்குவதற்கு சார்சி கூறிய அறிவுரைகளையெல்லாம் மனதிலே வாங்கிக்கொண்டேன். அவளுக்கு எப்படி நன்றி கூறுவது என்றே எனக்குத் தெரியவில்லை. சொந்த நாடு திரும்ப வேண்டும் என்ற ஆசையினால் அவளுக்கு விரைவில் விடை கொடுத்து விட்டு அங்கிருந்து என் மாலுமிகளுடன் புறப்பட்டேன்
சார்சி தீர்க்கதரிசனமாகச் சொன்னதெல்லாம் என் மாலுமிகளிடம் கூறினேன்.
அங்கிருந்து கப்பலில் புறப்பட்டு , தேவர்கள் பாடும் பகுதியை நெருங்கினோம். அங்கே ஒரு பயங்கரமான அமைதி நிலவியது . எனது மாலுமிகள் ஒவ்வொருவரும் மிக வேகமாகத் துடுப்புப் போட்டு அந்த இடத்தில் இருந்து விரைந்து செல்ல முயற்சிசெய்தோம்.

நான் ஒரு பெரிய மெழுகு கட்டியை எடுத்துக் குறுக்கி கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு வீரரின் காதுகளையும் மூடிவிட்டேன். பிறகு ப் நான் கேட்டுக் கொண்டபடி என் மாலுமிகள் என்னைப் பாய் மரத்துடன் சேர்த்து பிணைத்தனர். கரையிலிருந்து பாடும் தேவர்கள் எங்களைப் பார்த்துத் தங்கள் பாடலைப் பாடத் துவங்கினர். ‘இந்தப் பாடல் உங்களுக்கு வெற்றியைத் தரும். இங்கே வாருங்கள்! இங்கே வாருங்கள்!’ என்று எங்கள் அனைவரையும் வரவேற்கவும் செய்தனர். அதைக் கேட்டு அவர்களுடைய பாடலைக் கேட்க வேண்டுமென்ற வேட்கை எனக்குள் அதிகமாக எழுந்தது. நான் என் கட்டுக்களை அவிழ்த்து விடுமாறு என் மாலுமிகளிடம் கெஞ்சினேன். ஆனால் என் முதல் உத்தரவுப்படி அவர்கள் என்னை அவிழ்த்து விடவில்லை. பாடல் கேட்காத வெகுதூரம் சென்ற பிறகுதான் அனைவரும் காதில் இருந்த மெழுகுத் துண்டுகளை எடுத்தும் என் கட்டுகளையும் அவிழ்த்து விட்டனர். இப்படி நாங்கள் சைரன்கலின் மயக்கும் பாடல்களிலிருந்து ஒருவாறு தப்பினோம்.
பிறகு எங்கள் கப்பல்கள் சில்லாவின் குகையை நெருங்கியது. முழுவதும் கும்மிருட்டாக இருந்தது. நான் என் வீரர்களுக்குத் தைரியத்தை ஊட்டினேன். ஆனால் நான் எதிர்பார்க்காத வகையில் என் வீரர்களில் ஆறு பேரைத் தூக்கிக் கடலில் தள்ளினாள் அந்த சில்லா. நாங்கள் மிக ஜாக்கிரதையாக உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அவர்களின் பார்வையிலிருந்து தப்பி ஹீரோசின் தீவை அடைந்தோம்.
அந்தத் தீவுதான் தேவர்களுக்குச் சொந்தமான கால்நடைகள் இருக்கும் அழகிய தீவு.
ஆனால் அங்கே கரை இறங்கி சற்று ஓய்வெடுத்துவிட்டு பிறகு செல்லலாம் என்று வீரர்கள் கெஞ்சினார்கள் வேறு வழி இல்லாமல் நானும் அதற்குச் சம்மதித்தேன் கண்டிப்பாக அங்குள்ள கால்நடைகளைத் தொல்லைப்படுத்தக் கூடாது என்றும் எக்காரணம் கொண்டும் தீவுக்குள் செல்லக் கூடாது என்று என் வீரர்களை எச்சரித்தேன். எல்லோரிடம் சத்தியம் வாங்கியே நாங்கள் அந்தத் தீவுக்குள் இறங்கினோம்.
கப்பலில் உள்ள உணவுப் பொருள்கள் இருக்கும்வரை அவர்கள் கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றினார்கள். காற்று அனுகூலமாக இல்லாததால் நாங்கள் அங்கே கிட்டத்தட்ட ஒரு மாத.காலம் தங்க வேண்டியிருந்தது. நான் கடவுளிடம் உதவி கேட்பதற்காகக் கடற்கரைக்கு வந்த சமயத்தில் என் மாலுமிகள் அங்கிருந்த கால்நடைகளை வேட்டையாடிச் சமைக்கத் துவங்கினர். மேற்கொண்டு என்ன ஆபத்து வருமோ என்று பயந்து உடனே அந்த இடத்தை விட்டுக் கிளம்பும்படி உத்தரவிட்டேன். கடலில் நாங்கள் வெகுதூரம் சென்றபோதிலும் வழி எங்கும் தென்படவில்லை சுற்றிச் சுற்றி வருவதாகவே உணர்ந்தோம். இருட்டு எங்கள் கப்பலை மேலே செல்ல இயலாமல் அப்படியே நிறுத்திவிட்டது. சூறைக் காற்று வேறு கப்பலைக் கடுமையாகத் தாக்கியது
தங்கள் கால்நடைகளை உண்டதால் கோபம் கொண்ட தேவர்கள் எங்கள்மீது வேல்களை வீசினார்கள். பல மாலுமிகள் கப்பலிலிருந்து வீசப்பட்டு கடலில் விழுந்து இறந்தனர். கப்பலின் பக்கவாட்டு பலகைகளும் பிளந்து கொண்டன. நான் பாய்மரத்தை இருக்க பற்றிக் கொண்டு சூறாவளியுடன் போராடினேன். வேறு வழி தெரியாமல் மீண்டும் சில்லா இருந்த தீவுக்கு வந்து சேர்ந்தோம்.
நான் ஒரு உயரமான மரத்தில் வவ்வால் போலத் தூங்கிக்கொண்டு கீழே இருப்பவற்றை பார்த்துக் கொண்டிருந்தேன். பிறகு அந்தக் கொடுமையான ராட்சசத் தீலிருந்து நீந்தியே ஒரு பலகைமீது அமர்ந்துகொண்டு வாழ்வா சாவா என்ற போராட்டத்துடன் கடலில் மிதக்க ஆரம்பித்தேன் பத்தாவது நாள் நான் ஒஜீஜியா தீவு போய்ச் சேர்ந்தேன். அங்கேதான் கலிப்சோ என்ற தேவி வசிக்கிறாள் அவள் என்னைக் காப்பாற்றிப் பராமரித்தாள். என்மீது அன்பு காட்டினாள். நானும் அவளும் அந்தத் தீவிலேயே ஒரு வருடம் கணவன் மனைவிபோல் இருந்தோம். அந்தக் கதையைத்தான் நான் உங்களிடம் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். அவளிடமிருந்து விடை பெற்றுத்தான் நான் இங்கே வந்திருக்கிறேன். “
என்று சொல்லி ஒடிசியஸ் தனது கதையை முடித்துக்கொண்டபோது அந்தப் பகுதி மொத்தமும் அமைதியாக இருந்தது.
அரசரும் அரசியும் என் கதையைக் கேட்டு மிகவும் உருகிவிட்டனர். “உங்கள் துயரங்கள் நீங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. நீங்கள் உங்கள் தாய் நாட்டுக்கு விரைவில் செல்வீர்கள். உங்களுக்காக எங்கள் நாட்டிலிருந்து விலை உயர்ந்த பொருட்களைப் பரிசுகளாகத் தரத் திட்டமிட்டு இருக்கிறோம்.” என்று கூறி அந்த நாட்டு அரசரும் அரசியும் இளவரசியும் மற்ற குடிமக்களும் ஓடிசியசிற்கு விடை கொடுத்தனர். அவர்கள் அனைவரது ஆசிகளுடன் அவர்கள் அன்போடு தந்த எண்ணற்ற பரிசு பொருட்களையும் பெற்றுக்கொண்டு ஓடிசீசஸ் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியைக் கூறிவிட்டுக் கப்பலில் ஏறினான்.
அங்கிருந்து அவனது சொந்த நாடான இத்தாக்கா அருகில் இருந்ததால் விரைவில் நாட்டை அடைந்துவிடலாம் என்ற மட்டற்ற மகிழ்ச்சியுடன் இருந்தான் ஓடிசியஸ். அந்த மகிழ்ச்சியுடன் நன் நாட்டுத் துறைமுகத்தை அடைந்தான் ஓடிசியஸ்.
ஆனால் ஓடிசியஸ் இவ்வளவு சௌகரியமாக இத்தாக்கா போய்ச் சேர்ந்ததைப் பொசைடன் கொஞ்சமும் கூட விரும்பவில்லை. அதனால் அவர்களது சொந்தத் துறைமுகத்தை நெருங்கும்போது ஒரு பெரிய பாறாங்கல்போலத் தன்னை மாற்றிக்கொண்டு கடலில் நின்றான். அதுமட்டுமல்லாமல் அவன் ஊரே அவன் கண்ணுக்குத் தெரியாத அளவிற்கு பனி மூட்டத்தால் மறைத்தான்.
தாய் நாட்டிற்கு திரும்பி வந்த ஓடிசியஸ் தன் நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் ஆசையோடு பார்த்தான். ஆனால் அவனுக்கு எதுவும் விளங்காததால் அவன் மனம் நிம்மதி இன்றித் தவித்தது. சொந்த நாடு வந்தும் அந்த நாடு தனக்கு அன்னிய நாடுபோல் தோன்றுகிறதே என்று பெருந் துயருடன் வேதனைப்பட்டான் .
அப்போது அதீனா அங்கு வந்து அவனது துயரினைப் போக்கும்படி பனித் திரையை விளக்கினால். அவன் நாட்டை அவனுக்குக் காட்சி கொடுத்தாள். அதுமட்டுமல்லாமல் அவன் சொந்த அரண்மனையில் மோசமான விதி அவனுக்கு வழங்குவதற்காக ஏராளமான துயரங்களைத் தயாராக வைத்திருக்கிறது என்பதை முன்னெச்சரிக்கையாகச் சொன்னாள். அவனுக்கு மிகவும் பொறுமை வேண்டும் எதையும் தாங்கும் சக்தி வேண்டும் யார் அவமானப்படுத்தினாலும் சகித்துக்கொள்ளும் திறமை வேண்டும் என்று உபதேசித்தாள் .
ஆதினாவின் அன்பும் ஆசியும் இருந்தால் எல்லாவற்றையும் வெற்றி கொள்ள முடியும் என்ற நம்பிக்கை ஓடிசியசுக்கு வந்தது. முதலில் இந்தப் பரிசுப் பொருட்களை எல்லாம் ஒரு குகையில் பத்திரப்படுத்த வேண்டும் என்று கூறி வற்றை ஒரு இருண்ட குகையில் வைத்து ஒரு பாறாங்கலலால் அதை மூடவும் செய்தாள் அதினாதேவி.
“ ஓடிசீசஸ்! இதுவரை நீ வெற்றிக்கு மேல் வெற்றியைப் பெற்று வந்திருக்கிறாய்! எந்த ஆபத்தையும் தாங்கும் சக்தி இருந்ததால்தான் உன்னால் மீண்டும் இங்கே வர முடிந்தது. இப்பொழுது உன் அரண்மனையிலிருந்து கொண்டு உன் குடும்பத்துக்குத் தீங்கு செய்யும் அந்தப் பிரபுக்களை எப்படி துரத்த வேண்டும் என்பதைப் பற்றித்தான் யோசிக்க வேண்டும். அவர்கள் செய்யும் அட்டகாசங்களையும் ஓடிசியசுக்கு விளக்கமாகக் கூறினாள்.
அவர்களை முறியடிக்க முதலில் ஓடிசியசை அங்குள்ள யாரும் அடையாளம் தெரிந்து கொள்ள முடியாத அளவிற்கு ஒரு புது உருவத்தை வழங்கினாள். பார்ப்பதற்கு அலங்கோலமாகவும் அசிங்கமாகவும் அவன் மாறிவிட்டான். அவன் மனைவி மக்கள் குழந்தைகள் கூட அவனை அடையாளம் கண்டுகொள்ள முடியாத அளவிற்கு மாறியிருந்தான். அவனை ஒரு கிழவனாக மாற்றிக் கையில் ஒரு நீண்ட தடியையும் கொடுத்துக் கிட்டத்தட்ட ஒரு காட்டுமிராண்டி பிச்சைக்காரனைப் போல் இருக்கும் படிச் செய்தாள் .
நீ உன் அரண்மனைக்குச் சென்று உன் முயற்சியால் அந்தப் பிரபுக்களை வெற்றிகொள். உன்னைத் தேடிச் சென்ற உன் மகனை அழைத்துக் கொண்டு நான் விரைவில் வருகிறேன் என்று கூறி ஆதினாதேவி அங்கிருந்துச் சென்றாள்.
சொந்த நாட்டிலும் அவனது வீர பராக்கிரமங்கள் அவனுக்காகக் காத்துக் கொண்டிருந்தன.
