
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
இம்மாதத்தின் மிகச் சிறந்த கதையாக நான் தேர்ந்தெடுத்தது இதுதான் – கலாவதி பாஸ்கரன்
ஓய்வு தினமலர் 07.04.2024 பர்வீன் பானு
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
கதைகள் பற்றிய சிறு குறிப்புகள்:
ஓய்வு தினமலர் 07.04.2024 பர்வீன் பானு
ஓய்வு பெற்ற அனைவரும் கண்டிப்பாக படித்து , உணர வேண்டிய கருவை கொண்ட கதை. மிக எளிமையான நடையில், ஆக்க பூர்வமான யதார்த்தத்தை வெளிபடுத்தும் களம். தற்போது உள்ள சூழலில், ஓய்விற்குப் பின் தனித்து வாழும் தம்பதிகளிடையே ஒரு பெரிய இடைவெளி பெரும்பாலும் வந்து விடுகிறது. கதாசிரியர் இந்தக் கதையில் வெளிப்படுத்தும் தீர்வு வித்தியாசமாகவும் , நடைமுறைக்கு எளிமையாகவும், எதிர்காலம் பற்றிய கவலைக்கு சரியான அணுகுமுறையாகவும் இருப்பது மிகவும் பாராட்டத் தக்கது.
கணங்கள் வாசகசாலை 16.04.24 ஹேமா ஜெய்
வேலைக்கு செல்லும் ஒவ்வொரு பெண்ணும் விடுமுறைக்காக ஏங்கி அதை நன்கு அனுபவிக்க வேண்டும் என எண்ணுவது இயல்பு. விடுப்பு முடிந்த உடன் நேரத்தை வீண் செய்து விட்டோம் என நினைப்பதும் உண்டு. இதை மிக அழகாக, நேர்த்தியாக கூறியுள்ளார் ஆசிரியர்.
ஆல்பம் வாசகசாலை 16.04.24 ரம்யா அருண்
கணவனிடம் ஆரம்பம் முதல் வெளிப்படையாக இருக்க நினைக்கும் பெண் பேசும் சொற்கள் அவளுக்கு எதிராக திரும்பி, விவாகரத்தில் முடிய, கடைசி வரை அந்த பெண்ணால் அப்படிப்பட்ட வெளிப்படை தன்மையுடன் இருக்க முடியவில்லை என்பதை நல்ல கதையோட்டத்துடன் எடுத்து காட்டுகிறார்.
வீண் சொல்வனம் 14.04.24 ஞான சேகர்
ஒரு பையனுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு பலர் மூலம் நிதி திரட்டி கொடுத்தவர், அந்த பையனின் அப்பா தன் சொந்தப் பணத்தில் வீடு கட்டுவதை பார்த்து, பணம் இருந்தும் தன் பிள்ளைக்கு மருத்துவ செலவுக்கு உதவாததால் மனம் உடைகிறார். ஆனால் அந்த பையன் விபத்தில், போதையில் இறந்து போவது, ஒரு எதிர் பாரா திருப்பமாக முடிவடைகிறது.
