தேவகிக்கு மகன் குரல் ஃபோனில் கேட்டு ஒரே குஷி.
“சொல்லு கண்ணா.எப்ப வர்ரே?”
” எப்படி கண்டு பிடிச்சே,, பலே அம்மா.
நான் அர்ஜுன் அழைச்சிண்டு நாளைக்கு அங்கே வர்றேன் அம்மா.இன்னிலேந்து அவனுக்கு லீவு.ஒரு பத்து நாள் உன்னோடே யும் அப்பாவோடையும் இருப்பான்.
லதாவுக்கு கல்கத்தாவில் கச்சேரி இருக்கு”
“சரி டா. அவன் லீவு முழுசும் இங்கே இருக்கட்டுமே. எங்களுக்கு சந்தோஷம் தான்.
வரச்சே அவனுடைய கதைப் புத்தகங்கள்,hand writing நோட் எல்லாம் எடுத்துண்டு வா.
லீவு லே என்ஜாய் பண்ணட்டும்.”
“போச்சு போ.
பள்ளிக் கூடத்தில் ஹேன்ட் writing எல்லாம் கிடையாது அம்மா.
கதை புத்தகங்கள் நிறைய இருக்கு. லதாவும் நானும் வாங்கிக் கொடுக்கிறோம்.
அவன் தான் படிக்காமல் சுத்தரான் . எப்பவும் விளையாட்டு தான்.”
ரவி கொட்டி விட்டான்.
“சரி ரவி,விடு, நான் பார்த்துக்கிறேன்.
கவலைப் படாதே.”
“ஹாய்,பாட்டி!
தாத்தா எங்கே?”
பேரன் அர்ஜுன் வந்து பாட்டியைக் கட்டிக்கொண்டேன்.
ரவி ஒலாவுக்கு பணம் கொடுத்து அனுப்பி விட்டு வந்து அம்மாவை அணைத்துக்கொண்டு உள்ளே.நுழைய, அப்பா “வாப்பா ரவி,அம்மா சொன்னா நீயும் அர்ஜுனும் வரீங்க என்று. அதுதான் கடைக்குப் போய் இளநீர் வாங்கிண்டு வந்தேன்.
பயங்கர வெய்யில்.இளநீர் best.”
“தாத்தா,எனக்கு இளநீர் ரொம்ப பிடிக்கும்.”என்று சொல்லி வாங்கிக் குடித்தான்.தாகம் தீர்ந்தது.
பாட்டி பேரனுக்கும் ,பிள்ளைக்கும் பிடிக்கும் என்று வெண்டைக்காய் பொரியல், கீரை மசியல், சாம்பார், ரசம் என்று சமைத்து விட்டாள். அப்பளம்
திடீர் பாயசம் இத்யாதி.
பாட்டியுடன் அர்ஜூன் மதியம் சற்று உறங்கினான்.
இரவு படுக்கும் முன் பாட்டி ஒரு குட்டிக்கதை சொன்னாள்.
“அர்ஜுன்,நீ ஒரு கதை சொல்லேன்.
எனக்கும் கேக்கணும்.”
“சரி பாட்டி. அக்பர் பீர்பால் கதை சொல்றேன்”.என்றுஅழகாக , ஆனால் அவசர அவசரமாக கதை சொல்லி முடித்தான்.
“ரொம்ப அழகா சொல்றியே கண்ணா.”என்று பாட்டி மெச்சியபடியே முத்தம் ஒன்று கொடுத்தாள்.
“சரி தூங்கு.நாளைக்கு வேறு கதை.”
பாட்டியும் பேரனும் தினம் ஆளுக்கு ஒரு கதை சொல்லாமல்
தூங்குவதில்லை என்று வழக்கம் ஆகிவிட்டது.
அர்ஜூன் இப்பொழுது கதை சொல்வதில் தேர்ந்து விட்டான்.
தாத்தாவுடன் தனி விளையாட்டு
ஆக பொழுது அழகாக சென்றது.
ரவி திரும்பி ஊர் போய் அர்ஜுன் நலமாக இருக்கிறான் என்று தெரிந்து கவலை ஏதும் இல்லாமல் இருக்க முடிந்தது.
அன்று ரவியின் பெரியப்பாவும் பெரியம்மாவும் அர்ஜூனை பார்த்து விட்டு போகலாம் என்று வந்தனர்.
அவர்களுடைய பேரன் குமாரும் கூட வந்திருந்தான்.
அர்ஜுன் வயது ஒத்தவன். விளையாட நல்ல ஜோடி.
அன்று இரவும் அர்ஜூன் கதை சொன்னவுடன் பாட்டியும் ஒரு கதை சொன்னாள்.
ரவியின் பெரியப்பா பேரன் குமார் ரொம்ப குஷியாக “பாட்டி,நானுமொரு கதை சொல்லட்டா?”என்றான்.
“சொல்லுடா கண்ணா , தாராளமா “பாட்டி உற்சாகமா சொன்னாள்.
குமார் பஞ்சதந்திரம் கதை ஒன்றுத் தெளிவாக.சொன்னான்.
அர்ஜூனுக்கு ஒரே குஷி.
அடுத்த நாள் குமார் அவன் தாத்தா பாட்டியுடன் ஊருக்கு கிளம்பி விட்டான்.
லீவு முடியப் போகிறது.மாலை ரவியும் மனைவியும் வந்தார்கள்
இரவு வந்ததும் அர்ஜுன் கதை சொல்லும் அழகை கேட்டு வியந்தனர்.
“அம்மா, யூ ஆர் கிரேட்”என்றான் ரவி.
“ஆமாடா,குழந்தைகளுக்கு நாம தான் கூட இருந்து பொறுமையா சொல்லிகொடுக்கணம்.”
சனிக் கிழமை எல்லொரும் கிளம்பிச் சென்றார்கள்.
மீண்டும், தாத்தா பாட்டி தேன் நிலா.
அர்ஜுன் ஒரு நல்ல கதை சொல்லியாக ஊர் திரும்பினான்.

குழந்தைகளின் வளர்ப்பு முறைதான் அவர்களின் முன்னேற்றத்துக்கான ஆதாரம் என்பதை விளக்கும் கதை!
LikeLike