இந்த இதழ் சிறுவர் சிறப்பிதழ் !

இதற்கு கௌரவ ஆசியராக இருந்த உதவிய ‘சிறுவர் வனம்’ சூடாமணி சடாகோபன் என்கிற கோபிநாத் அவர்களுக்கு இதய பூர்வமான நன்றி !!

இதைத் தயாரிக்கும் பணியில் ஈடுபடும் போதுதான் சிறுவர் இலக்கியத்திற்காக எல்லா எழுத்தாளர்களும்  பதிப்பகங்களும், துறைசார் நிறுவனங்களும், அரசும்  அதிகம் உழைக்கவேண்டும் என்ற எண்ணம் வலுப்பட்டது. 

சிறுவர்களுக்கென்று   அச்சு இதழ்கள், கதைப் புத்தகங்கள்,  காமிக்ஸ் புத்தகங்கள், சானல்கள், குறும்படங்கள், திரைப்படங்கள், கவிதைகள், கதைகள் ,பாடல்கள், நர்சரி பாடல்கள், ஓவியங்கள்,ஒலிப்புத்தகங்கள்,  நாடகங்கள், பேச்சுப் போட்டிகள், கணினி புலனங்கள்  என்று பலதரப்பட்ட     சாதனங்கள் தரப்படவேண்டும்!

அமெரிக்கா  போன்ற வளர்ந்த நாடுகளில் சிறுவர் தேவைக்காக இவை அனைத்தையும் அள்ளிக் கொட்டுகிறார்கள்! 

நம் நாட்டிலும் இந்த சிறுவர் இலக்கியம்   வளரவேண்டும். 

குவிகம் தன்னால் ஆன பணியை இந்த இதழ்  மூலம் துவக்கியிருக்கிறது.

தொடர்ந்து நாம் இதில் என்னென்ன செய்ய இயலுமோ அனைத்தையும் செய்வோம் என்று உறுதி எடுத்துக் கொள்வோம். 

சென்ற ஆண்டு என் நட்பு வட்டார  நண்பர்கள் பத்து பேர் இணைந்து ஒரு அரசினர் பள்ளிக்கு ஒரு லட்ச ரூபாய் செலவில் ஒரு நூலகம் கட்டிக் கொடுத்தோம். 

நம் குவிகம் நண்பர்கள் இணைந்து  சென்னை அரசினர் பள்ளி மாணவர்கள் சிலர் விண்வெளி பற்றி அறிந்துகொள்ள ரஷ்யா செல்லப்  பொருளதவி செய்தோம். 

சிறந்த சமுதாயம் வளர நாம் ஆற்ற  வேண்டிய கடமை இது! 

இன்னும் நிறையச் செய்யவேண்டும்! 

உங்கள் கருத்த்களைக் கூறுங்கள் !

  • குவிகம்