இலங்காபுரன்

கன்னி மாடம் | Buy Tamil & English Books Online | CommonFolksசினிமாவுக்குத் திரைக்கதை எழுத வேண்டும் என்ற நமது ஆசை இந்த இதழால் தீர்ந்தது. இந்த இரண்டாம் ராஜாதிராஜனின் ஆட்சியில், தமிழகத்தில் அப்படிப்பட்ட காட்சிகள் அரங்கேறின! சாண்டில்யன் இந்தக் களத்தை விடாமல், கன்னிமாடம் என்ற காவியத்தைப் படைத்துள்ளார்.

இந்தச் சரித்திரத்தில் தான், எத்தனை திருப்பங்கள்? எப்படிப்பட்ட கொள்கையற்ற அரசியல் கூட்டணிகள்?

கருணை விதைத்தால், துரோகம் அறுவடையானது!

பிறர்க்கு உதவி செய்தால், தமக்கு அழிவு தாமே வருகிறது!

கதைக்குள் இறங்கலாம்!

கி.பி.1169: இரண்டாம் ராஜாதிராஜன் அரசனான காலம். பாண்டியர்கள் நாட்டைப் பிரித்து ஆண்ட காலம்.

பாண்டியன் சீவல்லபனின் மகன் பராக்கிரம பாண்டியன்      கி பி. 1144 இல் மதுரையில் அரியணை ஏறினான். அப்போது, தென் பாண்டி நாட்டில் குலசேகர பாண்டியன் திருநெல்வேலியில் அரியணையில் ஆட்சி செய்தான்.

‘மதுரையை ஆளாமல் நான் என்ன பாண்டியன்?’ குலசேகரன் கொதித்தான். அவனுக்கு இரண்டாம் ராஜாதிராஜ சோழனின் நட்பும் இருந்தது. படை திரட்டினான். மதுரையை நோக்கிப் படையெடுத்தான்.

பழையாறை அரண்மனையில் ஒரு மந்திராலோசனைக் கூட்டம். சோழனும், சேனாபதி பல்லவராயனும் பாண்டிய நிலைமையை விவாதித்தனர். பல்லவராயன், “மன்னா. இது பாண்டியர்களுக்குள் ஏற்படும் தகராறு. நாம் வேடிக்கை பார்க்கலாம்” என்றார்.

வேடிக்கை விரைவிலேயே வினையானது!

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் (தொடர்) Archives - Page 2 of 3 - கிழக்கு டுடே

குலசேகரன் படைகள் மதுரையை நோக்கி வருவதை அறிந்த பராக்கிரம பாண்டியன் திகைத்துப்போனான். அவன் போருக்குத் தயார் நிலையில் இல்லை. ‘சோழனும் குலசேகரனின் நண்பன். நமக்கு உதவி செய்ய யார்’ என்று மந்திரிமார்களிடம் ஆலோசனை செய்து, சிங்கள மன்னன் உதவியை நாடினான். சிங்கள மன்னனின் பெயரும் பராக்கிரமன். அதாவது, பராக்கிரமபாகு. சிங்கள மன்னன், தனது பெரும்படையை ‘இலங்காபுரன்’ என்ற தளபதி தலைமையில் அனுப்பி வைக்கத் திட்டமிட்டான்.

அதற்குள் காரியங்கள் வெகு வேகமாக நடந்து முடிந்தது. மதுரையை முற்றுகையிட்ட குலசேகரனின் படைகள், திடீரென்று, மதுரையைக் கைப்பற்றியது. பராக்கிரம பாண்டியனும், அவன் மக்களும் மதுரையை விட்டு தப்பி வெளியேறினர். குலசேகரனின் படைகள், திரிமலக்கே என்ற ஊரில், பராக்கிரம பாண்டியன் இருப்பதை அறிந்தது. பராக்கிரம பாண்டியன், தனது மூத்த மகனைக் கூப்பிட்டு, “வீரபாண்டியா! நீ ஒரு குதிரையில் ஏறி சேரநாட்டு மலைப்பிரதேசத்தில் ஒளிந்து கொள். நான் இந்த குலசேகரனுக்குப் பாடம் கற்பித்து விட்டு உன்னை அழைக்கிறேன்” என்று அனுப்பி விட்டான். வீரபாண்டியன் பொதிகை மலைக் காடுகளில் ஒளிந்துகொண்டான்.

குலசேகர பாண்டியன் updated their... - குலசேகர பாண்டியன் | Facebookகுலசேகரன், படையுடன் பராக்கிரம பாண்டியனைச் சூழ்ந்து கொண்டான். “எலிப்பொறியில் சிக்குவது போல் குடும்பத்தோடு சிக்கிக் கொண்டாய். அந்தச் சுண்டெலி, உனது ‘வீரமகன்’ வீரபாண்டியன் எங்கே?” என்று கொக்கரிப்போடு கேட்டான். பராக்கிரமன் பதில் சொல்லவில்லை. குலசேகரன் கண்ணில் கொலைவெறி தெறித்தது. வாளை வீசி, பராக்கிரம பாண்டியன், அவனது ராணி, இளவரசர்கள் அனைவரையும் கொன்றான்.

‘இனி நானே ராஜா’ என்றி மதுரையில் முடிசூட்டிக்கொண்டான்.

செய்திகள் தமிழகம் மற்றுமல்லாது இலங்கையிலும் பரவியது. சோழன், ‘இது எங்கே போகிறதோ பார்க்கலாம்’ என்று வாளாவிருந்தான். ஆனால் சிங்கள மன்னன் பராக்கிரம பாகு கொதித்தெழுந்தான். இலங்காபுரனை அழைத்து சொன்னான்: “இலங்காபுரா!, என்னிடம் உதவி கோரிய பராக்கிரம பாண்டியனைக் குலசேகரன் குடும்பத்தோடு படுகொலை செய்திருக்கிறான். பராக்கிரம பாண்டியனின் மகன் வீரபாண்டியன், சேரநாட்டு மலைநாட்டில் இருக்கிறான். நீ இந்த குலசேகரனைப் போரில் வென்று, மதுரையை மீட்டு, வீரபாண்டியனை அரசனாக்கி விடு…” என்றான்.

 “அரசனாக்கி விட்டு..?” என்று கேட்டான் இலங்காபுரன். சிரித்த பராக்கிரம பாகு , “இலங்காபுரா! சரியான கேள்வி கேட்டாய்! வீரபாண்டியனை அரியணையில் வைத்து, அவனைச் செல்லாக்காசாக்கி, நமது ஈழ ராஜ்யத்தை நடத்த ஏற்பாடு செய்” என்றான். மகிழ்ச்சியில், இலங்காபுரனின் மீசை அளவுகடந்து துடித்தது. இடி இடியெனச் சிரித்த இலங்காபுரன், ‘வீரபாண்டியனை செல்லாக்காசாக்கிவிட்டால்?..” என்று தொக்கி நின்ற கேள்வியால் கொக்கி போட்டான். சிங்களமன்னனும் இடிச்சிரிப்பு சிரித்து விட்டு, “சரியாகச் சொன்னாய்! பாண்டியப் பணத்தையும் செல்லாக்காசாக்கிவிடு. நமது இலங்கையின் ‘காகபணத்தை’ பாண்டிய நாட்டில் மக்கள் செலாவணி செய்யும் பணமாக்கு. ஈழ ஆட்சியை அங்கு நடத்து. தமிழகச் செல்வங்களை இலங்கைக்குக் கொண்டு வா! தமிழகத்தை வரைபடத்தில் இரத்தச்சிவப்பாக்கு. அந்தச் சோழன், நமது ஆதிக்கத்தைப் பார்த்து நடுங்கட்டும். இவ்வளவு காலம் சோழர்கள் ஈழத்தை நாசம் செய்ததற்கு, பழி! பழி! பழி!” என்றான்.

இலங்காபுரன் ராமேஸ்வரத்துக்கு அருகே குண்டுக்கலா என்னுமிடத்தில் கோட்டை கட்டி, போர் முயற்சியில் ஈடுபட்டிருந்தான். குலசேகரனின் எல்லைப் படைகளுடன் போரிட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறினான். பயிர்களைக் கொளுத்தினான். குடிசைகளை எரித்தான். பிடிபட்ட தமிழகவீரர்களில் காயமுற்றவர்களைக் கழுவில் ஏத்தினான். மற்றவர்களை, இலங்கைக்குக் கூலி வேலைக்காக அனுப்பினான்.

குலசேகரனும் படைகளை பலப்படுத்தியிருந்தான். போர் கடுமையாகவே, மேலும் மேலும் படைகளை அனுப்ப பராக்கிரமபாகுவிடம் கேட்டுக்கொண்டிருந்தான் இலங்காபுரன். அருகிலிருந்த தமிழகச் சிற்றரசர்களுக்கு அன்பளிப்பு கொடுத்து, அவர்களது ஆதரவையும் பெற்றான். தனது படையின் உபசேனாபதியை அழைத்து:  “நீ போய் பொதிகை மலைப்பிரதேசத்தில் மறைந்து வாழும் வீரபாண்டியனைச் சந்தித்து, மதுரைக்கு அருகில் நாம் அவனைக் காண விரும்புவதாகக் கூறி அழைத்து வா! அவன் உயிர் காக்கப்படவேண்டும். அவனை வைத்துத்தானே நாம் அரசாள முடியும்” என்று சொல்லி அனுப்பினான். வீரபாண்டியனைச் சந்தித்த இலங்காபுரன், ”வீரபாண்டியா! இந்தப்போர் எனது போர். நான் பார்த்துக்கொள்கிறேன். நீ என்னுடைய பாதுகாப்பில் இரு“ என்று சொன்னான்.

குலசேகரன் பெரும்படை குவித்திருந்தான். அவனுக்கு கொங்குநாட்டில் தனது மாமன் வழியாகவும், மற்றும் நட்பு ரீதியாக சோழர்களின் ஆதரவும் இருந்தது. பாண்டியநாட்டு மக்கள் ஆதரவும் இருந்தது. தமிழகச்சிற்றரசர்களும், தங்கள் ஆதரவை இலங்காபுரனுக்கும், குலசேகரனுக்கும் மாறிமாறி வழங்கி, கட்சி மாறும் அரசியலை அமுலுக்குக் கொண்டுவந்தனர்.

சோழர்களின் சிறுபடைகள், பல்லவராயன் தலைமையில், தொண்டிக்கும், பாசிப்பட்டினத்துக்கும் அனுப்பப்பட்டது. தமிழகம் மீண்டும் ரத்தக்களரியானது. கடல்நீர் சிவப்பாக்கத் தேவையான ரத்தத்தைச் சிந்தச்செய்தான் இலங்காபுரன். முன்னேறினான். பொன்னமராவதியில் குலசேகரன் படைகளைத் தோற்கடித்து, மதுரைக்கு முன்னேறினான். மதுரையைக் கைப்பற்றினான். குலசேகரன் தப்பித்து ஓடினான். இலங்காபுரன், வீரபாண்டியனை அரியணையில் அமரவைத்தான். பாண்டிய நாட்டில் இலங்கையின் காகபணம் நாணயங்களை புழங்கவைத்தான். ஈழராஜ்யம் தமிழகத்தில் துவங்கியது.

இலங்காபுரன், சோழர்களை வென்றது மட்டுமல்ல, அவனது கொடூர ஆட்சி, சோழநாட்டு மக்களிடையே பீதியையும், நடுக்கத்தையும் பரப்பியது. இருநூறு ஆண்டுகளாக தோல்வியையே காணாத சோழமக்கள், இலங்காபுரனின் குரூரத்தால் நாசமான வாழ்க்கையைக் கண்டனர்.

தப்பித்து ஓடிய குலசேகரன், பழையாறை அரண்மனைக்குச் சென்று சோழ மன்னனைச் சந்தித்தான். சோழனின் உதவியைக் கோரினான். குலசேகரன், “சோழ மன்னரே! எனக்கு அடைக்கலம் தருவீர்களாக. இந்த இலங்கைப்படையும், இலங்காபுரனும், தமிழ்நாட்டைச் சுடுகாடாக்கி வருகின்றனர். இருநூறு வருடங்களாக சோழருக்குக் கட்டுப்பட்ட சிங்கள அரசு, இன்று தமிழகத்தை ஆளுகிறது. வீரபாண்டியன் ஒரு பொம்மை ராஜா. ஆட்சி இலங்காபுரனிடம்தான் உள்ளது. சிங்களப்பணம் ‘காக பணம்’ நாட்டில் பணமாக இருக்கிறது. இதை அழிக்காவிட்டால், மாமன்னர்கள் இராஜராஜரும், இராஜேந்திரரும் வளர்த்த உங்கள் நாடு விரைவில் ஈழ ஆதிக்கத்தில் போய்விடும். இன்றும், இராமேஸ்வரம் கோவிலில், பூஜைகள் நிறுத்தப்பட்டு, கருவூலம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் செல்வங்கள் கொள்ளையடிக்கப்பட்டு, இலங்கைக்கு அனுப்பப்படுகிறது. கொடியவன் இலங்காபுரனை அழித்து, பொம்மை அரசன் வீரபாண்டியனை அகற்றி, என்னை அரசனாக்க உதவ வேண்டும்” என்றான்.

அவன் கூறுவதிலிருந்த உண்மையை உணர்ந்த ராஜாதிராஜ சோழன், “குலசேகரா. நீ நட்புக்கரம் நீட்டி வந்துள்ளாய்! உனக்கு உதவுவது, எனக்கு உகந்தது” என்று சொல்லித் தளபதி பல்லவராயரைப் பார்த்து, “பல்லவராயரே! இந்த இலங்காபுரனை வெல்வது மட்டுமல்லாமல், அவன் தலையை மதுரைக் கோட்டையில் ஆணியடித்துத் தொங்கவிட்டு இலங்கைக்கு ஒரு பாடம் கற்பிக்கவேண்டும். குலசேகரனை பாண்டிய அரியணையில் அமர்விப்பாயாக” என்று ஆணையிட்டான்.

மிகக் கடுமையாக நடந்தது இந்த சிங்கள சோழர் போர். சோழமன்னன் உமாபாதிதேவர் என்ற சிவனருள் பெற்ற அடிகளிடம், இந்த இலங்கைப்பிரச்சினை பற்றி அருள் கேட்க, அவரும் 28 நாட்கள் பூஜை செய்து, இனி இலங்கைப்படையை சோழப்படை வெல்லும் என்று அருள் மொழிந்தார். அதே தினம், படையின் முன்னணியிலிருந்து செய்திகள் விரைந்து வந்தது.

சோழப்படை வென்றது! சிங்களப் படைத் தலைவர்களான இலங்காபுரித் தண்ட நாயகன், ஜகத் விஜய தண்டநாயகன் ஆகிய இருவரின் தலைகளையும் அண்ணன் பல்லவராயன் வெட்டி வீழ்த்தினான். போரின் இறுதியில் சோழர்கள் குலசேகரனைப் பாண்டிய மன்னனாக முடிசூட்டி வைத்தனர். அந்த சமயத்தில் சிங்கள தளபதிகள் இருவரின் தலைகளும் கோட்டையில் ஆணி அடிக்கப்பட்டு, மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

பழையாறையில் எங்கும் வெற்றிக்களிப்பு! பாண்டிய நாடு, ஈழ நாட்டு ஆதிக்கத்திற்கு ஆளாகாது தவிர்த்த பெருமை சோழனுக்கே உரியதானது. ஆனால், மதுரையில் சோழர் படைகளிடம் தோற்ற சிங்கள மன்னனின் வெறி அடங்கவில்லை. பராக்கிரமபாகு சோழ நாட்டின் மீது படையெடுத்து வந்தான்.

பழையாறை அரண்மனையில், அவசர மந்திராலோசனைக் கூட்டம் கூடியது. சோழன் தளபதியைக் கேட்டான்:

“பல்லவராயரே! இலங்கை மன்னன் மீண்டும் போருக்கு வருகிறானே! நமது திட்டம் என்ன?”.

பல்லவராயர், அரசனைப்பார்த்து, “அரசே! ஒரு நல்ல திட்டம் உள்ளது. அந்தத்திட்டப்படி, முதலில், ஒரு நண்பரை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்” என்றான்.

“யார் அந்த ரகசிய நண்பர்?” என்று சிரித்தான் மன்னன்.

“வெளியே தான் காத்திருக்கிறார்” என்றான் தளபதி.

“உத்தரவின்றி உள்ளே வா!” என்று பாடினான் சோழன்.

உள்ளே வந்தவனைப் பார்த்ததும் மன்னனுக்குப் பேயறைந்ததைப் போலாயிற்று. ஒரு கணம் உடைவாளை எடுக்க எண்ணினான். ஸ்தம்பித்து இருந்தான் சோழன்.
“என்ன.. சிங்கள மன்னன் பராக்கிரமனா?“ என்று இறைந்தே கூவினான்.

“இல்லை மன்னா! இவன் ஸ்ரீவல்லபன். பராக்கிரமபாகுவின் மருமகன். அசப்பில் அவன் போலவே இருப்பதால், தாங்கள் திடுக்கிட்டு விட்டீர்கள். இவன் ஈழநாட்டு அரியணைக்கு உரியவன். பராக்கிரமனுக்கு எதிராக இலங்கையில் படைதிரட்டி வருகிறான். உங்கள் நட்பை நாடி வந்துள்ளான்” என்றான்.

சோழனின் இதயத்துடிப்பு சீரானது. புன்முறுவல் மெல்ல முகத்தில் மலர்ந்தது. ஸ்ரீவல்லபன் சோழனை வணங்கினான்.

பல்லவராயன் தொடர்ந்தார்:

“மன்னா! ஸ்ரீவல்லபன் வருகை நமக்குப் பழம் நழுவிப் பாலில் விழுந்தாற்போல் ஆயிற்று. இனி, பராக்கிரமனின் படையெடுப்புக்கு நாம் அஞ்சவேண்டியதில்லை. நம்மை பாதுகாக்கவேண்டியதில்லை. படையெடுப்பே போதும். ஸ்ரீவல்லபனை இலங்கை அரசுக்கு உரிமை கோரி போராடும்படி செய்யலாம். இன்றே, ஈழத்துக்கு, ஸ்ரீவல்லபன் தலைமையில் நமது படைகளை அனுப்பலாம். பராக்கிரமனுக்கு அவன் ஊரிலேயே அழிவை ஏற்படுத்தலாம். சோழநாட்டுக்கு வருவது பற்றி அவன் கனவிலும் எண்ண முடியாது” என்றார்.

‘அபாரம். என்ன ராஜதந்திரம்?” என்றி சோழன் சிலாகித்தான்.

ஸ்ரீவல்லபன், சோழர்களின் படை உதவியுடன், ஒரு மிகப் பெரிய கப்பற்படையோடு இலங்கை சென்றான். அங்கு சிங்களர்களின் பல இடங்களை ஸ்ரீவல்லபன் தலைமையிலான சோழர்படை தூள் தூளாக்கியது. பாண்டியர்களின் பிரச்சனையில் தலையிட்டதன் பலனாக தன் நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பை நினைத்து வருந்தினான் இலங்கை அரசன் பராக்கிரமபாகு.

இந்தக் ராஜதந்திர வெற்றியால் சோழ அரண்மனை விழாக்கண்டது.

சுபம் என்று இந்தத் திரைக்கதையை முடிக்கமுடியவில்லை. திருப்பங்கள் – அது பரமபதம் போன்றது.. ஏணியில் ஏறி மகிழும் போது பாம்பு விழுங்குவது போல.

நொந்து போன பராக்கிரமபாகு யோசனை செய்தான். குலசேகரனை விரட்ட, தான் போட்ட திட்டங்கள், தனக்கு அழிவையே கொண்டு வந்தது கண்டு நலிந்தான். ‘போர் ஒன்று தானா வெற்றிக்கு ஒரே வழி’ என்று யோசித்தவன் மூளையில் மின்னலடித்தது.

‘ஒரு தேர்தலில் தோல்வியுற்ற கட்சி, வெற்றி பெற்ற கட்சி ஒன்றுடன் கூட்டுச் சேர்ந்து ஜெயிக்க முற்படுவது’ இந்தக் காலத்தில் மட்டுமல்ல, அந்நாளிலும் இருந்தது.

பராக்கிரமபாகு புதுத்திட்டம் போட்டான். பாண்டிய நாட்டுக்கு குலசேகரனை அரசனாக ஒப்புக் கொண்டான். அவனுக்குப் பல அன்பளிப்புகளை அனுப்பினான். குலசேகரனோடு நல்லுறவு கொண்டான். அது மட்டுமல்லாமல் சோழர்களுக்கு எதிராக, குலசேகரனோடு ஒரு ஒப்பந்தமும் செய்து கொண்டான்.

தாங்கள் பார்த்து, பாண்டிய நாட்டுக்கு அரசனாக குலசேகரனை உட்காரவைத்த நன்றியை மறந்து, அந்த குலசேகரன், பராக்கிரமபாகுவுடன் தங்களுக்கு எதிராக ஒப்பந்தம் செய்து கொண்டது சோழர்களுக்கு ஆத்திரம் வந்தது.

பழையாறை அரண்மனை அமைதியாக இருந்தது. ராஜாதிராஜன், தளபதி பல்லவராயனைத் தனியாக அழைத்துத் தனது சயன அறையிலேயே பேசினான்.

“தளபதி! நான் கேட்டதெல்லாம் நிஜம் தானா? இப்படியுமா ஒரு துரோகம் இருக்கும்? ஆயிரம் வருடமுன், ரோமாபுரியில் ஜூலியஸ் சீஸர் என்ற பேரரசனை, நண்பர்கள் துரோகத்தால் கத்தியால் குத்திய கதை கேள்விப்பட்டிருக்கிறேன். அது போல தான் எனக்கு இப்பொழுது இருக்கிறது.”

பல்லவராயனின் முகம் கறுத்துச் சிறுத்துப் போயிருந்தது.

“மன்னவா! அன்று குலசேகரன் உங்களிடம் அடைக்கலம் தேடி வந்தபோது, நான்தான் அவனை என் மாளிகையில் வைத்து, விருந்தோம்பினேன். அவனுக்காக, எத்தனை சோழ வீரர்களின் ரத்தத்தை சிந்தவிட்டு, வெற்றியைத் தேடிக்கொடுத்தேன். அவனை மீண்டும் மன்னனாக்கினேன். அவனது அரியணை நமது பிச்சை! இன்று நமது ஒற்றர்களிடம் பராக்கிரமபாகு, குலசேகரனின் தளபதிகளுக்குக் கொடுத்த அன்பளிப்புகளும், கடிதங்களும் சிக்கின. அதில் குலசேகரனின் கடிதமொன்றில், ‘இலங்கையின் கூட்டுறவுடன், சோழர்களுக்கு எதிரான திட்டங்கள் பல இருந்தது. சென்ற மாதம், நமது சோழ அரசுக்கு சேர்ந்த மறவ சாமந்தர்களை அவன் விரட்டிவிட்டான். மேலும், என்னால் மதுரைக்கோட்டை வாசலில் ஆணியடிக்கப்பட்ட சிங்களத் தளபதிகளின் தலைகளை எடுத்து, அதை நல்லடக்கம் செய்து, பள்ளிப்படை செய்வித்திருக்கிறான்” – இதைச் சொல்லும் போது, பல்லவராயனின் உடல் சற்றுக் குலுங்கியது. முகம், வேதனையை முழுமையாகக் கொட்டியது.

பல்லவராயன் இப்படித் தளர்ந்து பேசியதை சோழன் பார்த்ததேயில்லை. “தளபதி! எதிரிக்கு அடைக்கலம் கொடுக்கலாம். ஆனால் துரோகிக்கு மன்னிப்பே கிடயாது. உடனே, படையுடன் புறப்படுங்கள். குலசேகரனை மதுரையை விட்டு துரத்தி விட்டு, அந்த வீரபாண்டியனையே பாண்டிய மன்னனாக்குங்கள்” என்று ஆணையிட்டான்.

சரியான பாடம் கற்பிக்க வேண்டுமென்கிற வேகத்துடன் பாண்டியன் குலசேகரன் மீது படையெடுப்பு நடந்தது. பல்லவராயன் குலசேகரனைத் தோற்கடித்து விட்டு, முன்பு இலங்கை படையினரால் முடிசூட்டப்பட்ட வீரபாண்டியனை மீண்டும் பாண்டிய அரசனாக உட்கார வைத்தார்கள். நன்றி மறந்த குலசேகரன், காட்டுக்குள் ஒடி ஒளிந்து கொண்டான்.

ஒரு முடிவுக்கு வருவோம்.

வீரபாண்டியன், தனக்குப் பேருதவி செய்து, அரசனாக்கிய சோழர்களுடன் நன்றி பாராட்டி வாழ்ந்தான் என்று நீங்கள் எண்ணினால், ஏமாந்தே போவீர்கள்.

துரோகங்கள் அழிவதில்லை. வரும் துரோகத்தை ராஜாதிராஜன் காணப்போவதில்லை. ஆனால், நாம்?

விரைவில் காணுவோம்.