சிறுவர் இலக்கியம் Archives - Nadukal

சிறுவர் இலக்கியம் என்பது சிறுவர்களுக்காக எழுதப்படும் வரையப்படும் இலக்கியம் ஆகும். பொதுவாக 12 வயதுக்கு உட்பட்டோருக்காக இது எழுதப்படுகிறது. விடலைப் பருவத்தினராக எழுதப்படும் நூல்களும் சிறுவர் இலக்கியம் என்று சில வேளைகளில் வகைப்படுத்தப்படுவதுண்டு. சிறுவர் கல்வியில் மட்டுமல்லாமல், அன்றாட வாழ்விலும் சிறுவர் இலக்கியம் ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறது.

 

 

 

படக்கதை
வரைகதை
ஆத்திசூடி வடிவம்
கதைகள்
பாட்டி கதைகள்
தொன்மங்கள்
அறிவுரை
அறிபுனை
பஞ்சதந்திரக் கதை
வாழ்க்கை வரலாறு
குழந்தை பாடல்கள்

===========================

சிறுவர் இதழ்கள் பட்டியல் (March 2022)

இன்றைய பெரும்பாலான வாசகர்களும் எழுத்தாளர்களும் சிறுவர்கள் இதழ்கள் வழியே தான் வாசிப்பினை துவங்கினர். தற்சமயம் வந்துகொண்டிருக்கும் இதழ்களின் தொகுப்பு. உங்கள் குழந்தைகளுக்கு/மாணவர்களுக்கு இயன்ற அளவு இந்த இதழ்களை அறிமுக செய்யுங்கள்.

சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான இதழ்கள் & விவரங்கள்

  1. துளிர் – சிறுவர்களுக்கான அறிவியல் மாத இதழ்
    தொடர்புக்கு – 044 28113630
  2. பெரியார் பிஞ்சு – மாத இதழ் – விடுதலை
    To subscribe – http://www.periyarpinju.com/new/
  3. குட்டி ஆகாயம் – காலாண்டிதழ் – சிறார் இதழ்
    தொடர்புக்கு – +919843472092
  4. தும்பி – சிறார் இதழ்
    தொடர்புக்கு-9843870059
  5. பஞ்சுமிட்டாய் – காலாண்டிதழ்- குழந்தைகளுக்கான இதழ்
    தொடர்புக்கு – +91 97317 36363
  6. மாயாபஜார் – தி இந்து – பிரதி புதன்
  7. சுட்டி யானை – மாத இதழ் -தொடர்புக்கு – 095001 25126

8.பூஞ்சிட்டு – இணைய சிறார் இதழ்
https://www.poonchittu.com/

 

  1. பொம்மி – மாத இதழ்
    தொடர்புக்கு – 9750697943
  2. பட்டம் – (மாணவர்களுக்கான இதழ்) தினமலர்
    http://www.dinamalar.com/supply.asp?ncat=1360
  3. இளம்பிறை – மாத சிறார் இதழ்
    தொடர்புக்கு – 90422 13453, 7845925638
  4. தேன்சிட்டு (சிறுவர்களே நடத்தும் சிறார் இதழ்)
  5. மகிழ் – மாத இதழ் (தொடர்புக்கு – 7397222767)
  6. தங்கமலர் – தினத்தந்தியின் வாராந்திர இணைப்பு இதழ் –
  7. சிறுவர்மணி – தினமணி – வாராந்திர இணைப்பு இதழ்
  8. அறிந்திரன் (இலங்கையில் இருந்து சிறார் இதழ்)
    டிசம்பர் 2020 முதல்
  9. Kids புன்னகை
    தொடர்புக்கு – 9940090596
  10. சிறுவர் மலர் – தினமலர் – பிரதி வெள்ளி
  11. சம்பக் (தமிழ் & ஆங்கிலம்)

(தொகுப்பு – விழியன்)

சிறுவர் இலக்கியம் என்பது சிறுவர்களுக்காக எழுதப்படும் வரையப்படும் இலக்கியம் ஆகும். பொதுவாக 12 வயதுக்கு உட்பட்டோருக்காக இது எழுதப்படுகிறது. விடலைப் பருவத்தினராக எழுதப்படும் நூல்களும் சிறுவர் இலக்கியம் என்று சில வேளைகளில் வகைப்படுத்தப் படுவதுண்டு. சிறுவர் கல்வியில் மட்டுமல்லாமல், அன்றாட வாழ்விலும் சிறுவர் இலக்கியம் ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறது.

 

வகைகள்

படக்கதை
வரைகதை
ஆத்திசூடி வடிவம்
கதைகள்
பாட்டி கதைகள்
தொன்மங்கள்
அறிவுரை
அறிபுனை
பஞ்சதந்திரக் கதை
வாழ்க்கை வரலாறு
குழந்தை பாடல்கள்

 

தமிழ் சிறுவர் கதைகள்
பாட்டி வடை சுட்ட கதை
முயலும் ஆமையும் கதை
காகம் கல் போட்ட கதை
குரங்கு அப்பம் பகிர்ந்த கதை
பொன்முட்டை இட்ட வாத்தின் கதை
சட்டி குட்டி போட்ட கதை
தங்கக் கோடாரியின் கதை

 

முக்கிய படைப்புகள்
தமிழ் நாட்டார் பாடல்கள்
தாலாட்டுப் பாடல்
விளையாட்டுப் பாடல்
தமிழ் சிறுவர் விடுகதைகள்
ஔவையார்
ஆத்திசூடி
கொன்றை வேந்தன்
பாரதி
ஓடி விளையாடு பாப்பா
இதழ்கள்
அம்புலிமாமா
கோகுலம்
பாலமித்திரா
ரத்தினபாலா
தமிழ் சித்திரக்கதைகள்
வாண்டுமாமா சித்திரக் கதைகள்
பூந்தளிர் (வரைகதை)
தமிழ்வாணன் சித்திரக் கதைகள்
கதைகள்
பரமார்த்த குருவும் சீடர்களும்
பீர்பால் கதைகள்
தெனாலி இராமன் கதைகள்
பஞ்சதந்திரக் கதைகள்
பௌத்த ஜாதகக் கதைகள்
பாடல்கள்
நிலா நிலா ஓடி வா
ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே!
தத்தாங்கி தத்தாங்கி தட்டும் பிள்ளை
கைவீசம்மா கைவீசு
சின்ன சின்ன எறும்பே சிங்கார எறும்பே
இடதுசாரித் தமிழ் சிறுவர் இலக்கியம்
சிறுவர் இலக்கிய எழுத்தாளர்கள்
நவாலியூர் சோமசுந்தரப்புலவர்
கா. நமச்சிவாய முதலியார்
வி. கிருஷ்ணமூர்த்தி
மணி திருநாவுக்கரசு முதலியார்
மயிலை சிவமுத்து
அழ. வள்ளியப்பா
கொ. மா. கோதண்டம்
சுதாராஜ்
சுகுமாரன் – [1] பரணிடப்பட்டது 2011-04-13 at the வந்தவழி இயந்திரம்
விழியன்
ஆயிஷா நடராசன்
விஷ்ணுபுரம் சரவணன்
உதயசங்கர்[2]
பாலபாரதி
கன்னிக்கோவில் ராஜா
யூமா வாசுகி
மதுரை சரவணன்
கொ. மா. கோ. இளங்கோ
ஆதி வள்ளியப்பன்[3]
இதையும் காண்க
குழந்தை எழுத்தாளர் சங்கம்
மேற்கோள்கள்
“தமிழில் சிறுவர் இலக்கியம் – ஒரு பார்வை”. தினமணி. பார்த்த நாள்: 30 June 2021.
வெ.நீலகண்டன். “சிறுவர்கள் வாசிக்க வேண்டிய 20 நூல்கள்

நன்றி: #WorldBookDay”. http://www.vikatan.com/. பார்க்கப்பட்ட நாள் 2021-06-30.
“ஆதி வள்ளியப்பன்”. Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-06-30.
இணையத்தில் சிறுவர் இலக்கியம்

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

 

(அறிஞர் கருத்துகள்: தொகுப்பு ஆர்.வி.பதி)

 

“குழந்தைகளுக்கான கதைகளை எழுத நல்ல எழுத்தாளர்கள் முன் வர வேண்டும். பெரியவர்களுக்கு எழுதுவது கஷ்டம். குழந்தைகளுக்கு எழுதுவது சுலபம் என்று சிலர் நினைக்கலாம். ஏனென்றால், பிழைகளைக் கண்டு பிடிக்க மாட்டார்கள் என்ற அபிப்ராயமோ என்னவோ? ஆனால் குழந்தைகளுக்கு எழுதுவது தான் கஷ்டம். பெரியவர்களுக்காக நன்றாக எழுதி பழகிய பிறகு, குழந்தைகளுக்கு எழுத வாருங்கள்”.

மூதறிஞர் ராஜாஜி.

 

“குழந்தைகளை வயது வந்தோரின் சிறிய உருவங்களாக பாவித்து எழுத கூடாது. என்பதை மனத்தில் நன்கு வைத்துக் கொள்ள வேண்டும்”.

பெ. தூரன்.

“இன்று உலகம் முழுவதும் என்ன நடக்கிறது. என கூர்ந்து கவனியுங்கள். உலகின் எதிர்காலம், இன்றைய குழந்தைகளிடம் தான் உள்ளது.  கேரளாவில் ஒரு பழமொழி உண்டு. எருவை மரத்தின் உச்சியில் வைக்காதே, மரத்திற்கு அடியில் போடு என்று..  அதனால் இன்றைய குழந்தைகளுக்கு,, நல்ல விஷயங்களை போதித்தால், நாளைய உலகம் இன்பமயமானதாய் இருக்கும்”

காயம் குளம் சங்கரப் பிள்ளை.

“ஓரு குழந்தை எழுத்தாளன், தன் எழுத்து மூலமாகத் தானும் ஒரு குழந்தையாகி விடுகிறான். காலம் முழுவதும் குழந்தையாகி இருப்பது எவ்வளவு பெரிய பாக்கியம்”

வாண்டு மாமா

“எழுத்தின் மூலம் குழந்திகளுக்கு அறிவூட்டுவதென்பது, தாய் ஒருத்தி, தன் குழந்தையின் வயதிற்கேற்ப உணவு கொடுப்பது போலிருக்க வேண்டும்”.

அழ. வள்ளியப்பா.

“மனித வாழ்க்கைக்குப் பயன்படும் அஸ்திவார இலக்கியம் என்றே குழந்தை இலக்கியத்தை பாவிக்க வேண்டும்”.

தி.ஜ.ர.

 

” குழந்தைகளையும் தின் பண்டத்தையும் பிரித்து விடலாம். குழந்தைகளையும் விளையாட்டையும் பிரித்து விடலாம். ஆனால் குழந்தைகளையும் கதைகளையும் பிரிக்கவே முடியாது”.

டாக்டர் பூவண்ணன்.

 

“குழந்தைகளுக்கு எழுதும்போது ஓர் எழுத்தாளர் நானும் ஒரு குழந்தையாகி விடுகிறான் என்றால், அதில் மிகை இல்லை. குழந்தைகளுக்கே உரிய நியாய உணர்வுகளும் அவனை தொற்றுகின்றன என்பது பொய்யில்லை”.

ஜோதிர்லதா கிரிஜா.

“குழந்தைகளின் மனத்தை கவர்வதற்காக பாட்டிமார்கள், பலப்பல தந்திரங்களை கண்டு பிடித்து வைத்திருக்கிறார்கள். குழந்தைகளுக்குத் தெரிந்த பிராணிகளைப் பற்றி எல்லாம் கதை சொல்லி, ஒரே விஷயத்தை திருப்பி திருப்பிப் பாட்டாக சொல்லும் போது,, அது குழந்தையின் மனத்தில் நன்றாக பதிந்து விடுகிறது’.

குதிரை, ஈ, எலி, பூனை முதலிய கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு கெட்டிக்கார பாட்டி அழகான கதைகளைப் பின்னி குழந்தைகளுக்குச் சொல்லும் போது, அதில் சொக்கிப் போய் விடுகிறது. குழந்தை அந்தக் கதையை ஆவலோடு கேட்டு கற்றுக் கொண்டு விடுகிறது.  பிறகு தானும் அபிநயங்களோடு கதை சொல்லப் புறப்பட்டு விடுகிறது”.

 

கி.வா. ஜகந்நாதன்

 

 

வறுமைதான் வாழ்க்கையைக் கத்துக்கொடுத்துச்சு: வாண்டுமாமா

https://writersamas.blogspot.com/2012/06/blog-post_27.html

   வாண்டுமாமா.

இந்தப் பெயரைப் படித்ததும் மூளையில் என்ன மின்னல் அடிக்கிறது உங்களுக்கு? ஏழு கடல் ஏழு மலை தாண்டியிருக்கும் மந்திரவாதியின் உயிரும்… பேசும் கிளியும்… பலே பாலுவும்… உங்கள் நினைவில் மின்னினால்… சபாஷ்… உங்கள் குழந்தைப் பருவம் அலாதியாக இருந்திருக்கும்!
கிட்டத்தட்ட மூன்று தலைமுறை தமிழ்க் குழந்தைகளின் உலகை கதைகளால் நிரப்பியவர் வாண்டுமாமா. கடந்த நூற்றாண்டில் குழந்தைகளால் அதிகம் நேசிக்கப்பட்ட ‘கோகுலம்’, ‘பூந்தளிர்’ புத்தகங்கள் அவற்றின் உச்சத்தில் இருந்தபோது வாண்டுமாமாதான் அதற்குப் பொறுப்பாசிரியர். கௌசிகன் என்ற பெயரில் பெரியவர்களுக்கும் வாண்டுமாமா என்ற பெயரில் குழந்தைகளுக்குமாக இதுவரை 218 புத்தகங்களை எழுதி இருக்கும் வி. கிருஷ்ணமூர்த்தி. 

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

சிறார் இலக்கியம் கடந்து வந்த பாதை – சுகுமாரன்

1840-இல் சிறுவர்களுக்கான முதல் இதழாக வெளிவந்த பால தீபிகை, 1901-இல் கவிமணி சிறுவர் பாடல், 1915-இல் பாரதியின் பாப்பாப் பாட்டு, 1950-இல் குழந்தை எழுத்தாளர் சங்கம் உதயம், 1950-இல் முதன்முதலாகச் சிறுவர் நூல் கண்காட்சி, 1957-இல் குழந்தை எழுத்தாளர் சங்கம் நடத்திய நாடகப் போட்டி, 1957-இல் வை.கோவிந்தன் நடத்திய சிறுவர்களுக்கான முதல் தினசரி, 1972-இல்‘குழந்தை எழுத்தாளர்கள் யார்? எவர்?’ நூல் வெளியீடு எனப் பல தொடர் நிகழ்வுகள் நடந்துள்ளன.

‘குழந்தை எழுத்தாளர்கள் யார்? எவர்?’ நூலில் குறிப்பிட்டிருந்த எழுத்தாளர்களின் எண்ணிக்கை 370. 2019-இல் ஆர். வி. பதி அவர்கள் தொகுத்த நூலில் எழுத்தாளர்களின் எண்ணிக்கை 102. எவ்வளவு சரிவு!

பூவண்ணனின் சிறுவர் புதினமான ‘காவேரியின் அன்பு‘ நூல் 1980-இல் ‘அன்பின் அலைகள்‘ என்ற பெயரில் திரைப்படமாயிற்று. 1985-இல் பெ.தூரனின் ‘குழந்தைகள் கலைக்களஞ்சியம்‘ சிறார் இலக்கியத்தின் ஒரு மைல் கல். 1972-இல் ஷண்முக சுப்பையாவின் சிறுவர்களுக்கான முதல் புதுக் கவிதை நூல் ‘கண்ணன் என் தம்பி‘. (அதன் பிறகு குழந்தைகளுக்கான புதுக்கவிதை வெளிவந்ததாக நினைவில் இல்லை.) ‘கதை சொன்னவர் கதை‘ என அழ.வள்ளியப்பா 25 சிறுவர் எழுத்தாளர்கள் பற்றி எழுதியுள்ளார். தம்பி ஸ்ரீனிவாசன் அவர்கள் ‘சிறுவர்களுக்கு எழுதும் பெரியோர்கள்‘ எனச் சிறுவர் எழுத்தாளர்களைப் பேட்டி கண்டு எழுதியுள்ளார். இவையெல்லாம் தமிழ் சிறார் இலக்கியத்தில் மைல் கற்கள் என்றே சொல்வேன்.

சிறார் இலக்கிய வரலாறு சங்க இலக்கியத்தில் இருந்து தொடங்குவதாக பூவண்ணன் தனது நூலில் கூறுகிறார். ஒரு அகநானூற்றுப் பாடலில் ஒரு தாய் நிலவைக் காட்டி குழந்தைக்கு உணவு ஊட்டுகிறாள். ‘நிலாவே வா..வா…உனக்குப் பால் தருகிறேன்‘ என்ற பாடலை மேற்கோள் காட்டுகிறார். மேலும் ‘பிசி‘ என்ற ஒரு வகையைத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது அது சிறார் இலக்கியத்தைச் சார்ந்தது என்று சொல்கிறார். பிசி என்றால் விடுகதை என்று பொருள். விடுகதை குழந்தைகளுக்குப் பிடித்தமானது. அதனால் அதை வைத்து சிறார் இலக்கியம் சங்க காலத்திலிருந்து தொடங்குவதாகச் சொல்கிறார். சங்க காலத்திற்குப் பின்பு இடைப்பட்ட காலத்தில் ஔவையார் எழுதிய ஆத்திச் சூடி, கொன்றை வேந்தன், உலக நாதர் எழுதிய உலக நீதி, அதிவீரராம பாண்டியன் எழுதிய நீதி நூல் ஆகியவற்றைக் குழந்தை இலக்கியமாக ஏற்பதாகப் பூவண்ணன் அவர்கள் குறிப்பிடுகிறார். ஆனால் அழ. வள்ளியப்பா, பெ. தூரன் இவற்றைக் குழந்தை இலக்கிய நூல்களாக ஏற்காததையும் குறிப்பிட்டு அப்பொழுது இருந்த சர்ச்சையையும் தனது நூலில் குறிப்பிடுகிறார்.

உண்மையில் 20-ஆம் நூற்றாண்டில் சிறுவர் இலக்கியம் கவிமணி தேசியம் விநாயகம் பிள்ளையோடு தான் தொடங்குகிறது. சிறார் இலக்கியத்தின் தந்தை கவிமணி தான் என்பது என் கருத்து. தாத்தா பாட்டிகளிடம் கதை கேட்க முடியாத குடும்பச் சூழலில் நடந்த மாற்றமும், அச்சுக் கலை உருவானதும் தான் சிறுவர் இலக்கியம் உருவாக முதன்மைக் காரணங்கள். அந்தச் சமயத்தில் பாரதி, பாரதிதாசன், சுத்தானந்த பாரதி, மின்னூர் ஸ்ரீனிவாசன் ஆகியோர் குழந்தைகளுக்கும் படைப்புகளைக் கொடுக்கத் தொடங்கினர். 1915-இல் வெளியான பாரதியின் பாப்பாப் பாடல் அன்றிலிருந்து இன்றுவரை சிறார் இலக்கியத்தின் முன்னோடியாக இருக்கிறது. அடுத்து தமிழ்ப் பாட நூல்களுக்குப் பாடல் எழுதுபவர்களாக நமச்சிவாயம் முதலியார், மயிலை சிவமுத்து, மணி. திருநாவுக்கரசு, டாக்டர் மு. வரதராசன் ஆகியோர் செயல்பட்டார்கள். ஆனால் முழு வீச்சாகக் குழந்தைகளுக்காக மட்டுமே எழுதியவராக அழ. வள்ளியப்பா திகழ்ந்தார். 1950-இல் குழந்தை எழுத்தாளர் சங்கத்தை நிறுவினார். சிறார் இலக்கியத்தில் இயங்குவதற்கான தளமாக இந்தச் சங்கம் தமிழ்ச் சிறார் உலகில் திகழ்ந்தது. கூத்தபிரான், வாண்டு மாமா, ந. தெய்வசிகாமணி, சவுந்தர், மாயூரன் என ஏகப்பட்ட எழுத்தாளர்கள் குழந்தை இலக்கியம் படைக்கின்றனர். ‘சிரிக்கும் பூக்கள்‘ உள்ளிட்ட நூறுக்கும் மேற்பட்ட சிறார் பாடல்களை படைத்தார் அழ. வள்ளியப்பா. அவரைத் தொடர்ந்து அழ.வள்ளியப்பா பரம்பரை என்றே பலரும் பின்தொடரும் அளவிற்கும் அவர் உருவாக்கிய தாக்கம் இருந்தது.

1947 முதல் 1955 வரை 50-க்கும் மேற்பட்ட இதழ்கள் தமிழில் வந்தன. கண்ணன், அணில், கரும்பு, அம்புலிமாமா, கோகுலம் இவைகள் எல்லாம் 50000-க்கும் மேற்பட்ட பிரதிகள் விற்பனையாகின. இதை இன்று நம்புவது கடினந் தான். இன்று இதழ்களின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணும் அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. தனிச் சுற்று இதழாகவும், இலவச இணைப்பாகவும் மட்டுமே இன்றைக்குச் சிறுவர் இதழ்கள் இருக்கின்றன. நாம் கடந்து வந்த பாதை செழிப்பாக இருந்தது என்பதையே வரலாறு சுட்டுகிறது. அறிவியல், வரலாறு, சமூகம் சார்ந்த படைப்புகள், பாடல், சிறுகதை, நாவல், வாழ்க்கை வரலாறு, பொது அறிவு, துப்பறியும் கதைகள் என எல்லாத் துறைகளிலும் நூற்றுக்கணக்கான படைப்பாளர்கள் படைத்துள்ளனர். பெரியவர்களுக்கும் எழுதியவர்களான ராஜாஜி, கா.அப்பாதுரையார், நாரண துரைக்கண்ணன், அகிலன், ஆர்.வி, ரா.கி.ரங்கராஜன், எல்லார்வி, கு.அழகிரிசாமி, அரு.ராமநாதன், துமிலன், ஜே.எம்.சாலி, ஜெயகாந்தன் ஆகியோரும் குழந்தைகளுக்கு எழுதினர். மேலும் ரா.பொன்ராசன், வி.ரா.வசந்தன், புவி வேந்தன், புவனை கலைச் செழியன், ரத்னம், தமிழ்வாணன், ஜெ.எத்திராஜன், தங்கமணி, கே.பி.நீலமணி, மாயூரன், பூரம், மாயன், வை.கோவிந்தன், நீலம், பூவை அமுதன், வெ.நல்லதம்பி, நாரா நாச்சியப்பன், பி.புலேந்திரன், லூர்து சங்கீதராஜ், மெர்வின், வானதி திருநாவுக்கரசு, எஸ்.வஜ்ரவேலு, ஆலந்தூர் மோகனரங்கன், நாகை தருமன், பெ.நா.அப்புஸ்வாமி, லெமன், எஸ்.ஆர்.ஜி, சுந்தரம், ராஜி, குழ.கதிரேசன், பி.வி.வெங்கடராமன், ஜோதிர்லதா கிரிஜா, கே.ஜெயலட்சுமி, பொன்னம்மாள், விமலா ரமணி, எஸ்.லீலா, சாந்தலட்சுமி ஆகியோரும் தமிழ்க் குழந்தை இலக்கியத்திற்கு பங்களிப்பு செய்தவர்களில் முக்கியமானவர்களாகும். இவர்களே கடந்து வந்த பாதையை செழுமைப் படுத்தியவர்கள்.

குழந்தைகளை மிகவும் கவரும் நாடகங்கள் அன்று செழிப்பாக இருந்தன. நாடகத்திற்காக அன்று குழந்தை எழுத்தாளர் சங்கங்கள் போட்டிகளை நடத்தின. தம்பி சீனிவாசனின் ‘தங்கக் குழந்தைகள்’, கூத்தபிரானின் ‘அன்னை சொல் அமிர்தம்‘ – இவையெல்லாம் நாடகப் போட்டிகளில் பரிசு பெற்றன. எஸ். வி. சகஸ்ரநாமம், தி. க. சண்முகம் போன்ற பிரபல நாடக ஆளுமைகள் எல்லாம் அன்றைய காலத்தில் குழந்தைகளுக்காக நாடகங்களை நடத்தியுள்ளனர். இவையெல்லாம் பாலர் அரங்கத்தில் நடந்தன. இப்போதைய கலைவாணர் அரங்கம் அன்று பாலர் அரங்கமாக இருந்தது. குழந்தைகளுக்கான நாடகங்கள், திரைப்படங்கள் அங்கு காட்சிப்படுத்தப்பட்டன. அங்கு சிறுவர் இலக்கிய மாநாடும் நடைபெற்றது. பாலர் அரங்கம் குழந்தைகளின் கொண்டாட்ட அரங்கமாகவே அன்று இருந்தது. அந்த அரங்கத்தை சிறுவர் இலக்கிய செயல்பாடுகளுக்கு கொடுக்கும் படி சங்கம் சார்பாக கோரிக்கைகள் வைக்கப்பட்டன. ஆனால் அது நிறைவேறவில்லை. சங்கம் அந்த நேரத்தில் ஏற்பாடு செய்த மாநாடுகள், புத்தக கண்காட்சி அரங்குகள் ஆகியவற்றில் ஆகியவற்றில் நாடகங்களுக்கும் முக்கியத்துவம் இருந்தது. இவை அனைத்துமே செழிமையான பாதையை நினைவூட்டுகின்றன.

நா. வானமாமலை, தோதாத்திரி, கல்வி. கோபாலகிருஷ்ணன், வைத்தண்ணா என மிகப்பெரிய ஆராய்ச்சியாளர்கள் எல்லாம் குழந்தைகளுக்காக எழுதியிருக்கிறார்கள். 2000-ஆம் ஆண்டில் குழந்தை எழுத்தாளர் சங்கம் பொன்விழாவை நடத்தாமலேயே அதன் இறுதி மூச்சை நிறுத்தியது சோகம். 2000–ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை குழந்தை எழுத்தாளர் சங்கம் இல்லை. தாய் இல்லாமல் சேய் வாழும் சூழலாகவே இதை நான் உணர்கிறேன். அந்தக் காலத்தில் மூத்த எழுத்தாளர்கள் இளையோரைப் பயிற்றுவித்தார்கள். அழ. வள்ளியப்பாவால் பயிற்றுவிக்கப்பட்ட ரேவதி, தெய்வசிகாமணி, கொ.மா.கோதண்டம், தேவி.நாச்சியப்பன் இவர்களெல்லாம் தங்கள் பங்கைத் தொடர்ந்து செய்தார்கள். செல்லகணபதி கோவையில் அழ. வள்ளியப்பா இலக்கிய வட்டம் என்ற ஒன்றை ஏற்படுத்தி குழந்தை எழுத்தாளர்கள் மற்றும் சிறுவர், சிறுமிகளுக்கு போட்டிகள் நடத்தினார். ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதம் குழந்தைகள் நாள் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடினார்கள்.

2000-க்குப் பிறகு குழந்தை இலக்கியத்திற்குப் பரிசளிக்கிற அமைப்புகள் நிறையத் தோன்றின. கலை இலக்கியப் பெருமன்றம், தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், கவிதை உறவு, தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை (சிறந்த சிறுவர் நூல்களுக்குப் பரிசளிப்பது, குழந்தை எழுத்தாளர்களுக்குப் பரிசளிப்பது), 2010-இலிருந்து பால புரஸ்க்கார் விருது எனப் பல ஊக்குவிப்பு முயற்சிகள் தொடங்கின. இவைகள் எல்லாம் குழந்தை எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் விதமாக இருந்ததால் இன்று நிறைய புதிய எழுத்தாளர்கள், குறிப்பாக இளைஞர்கள் அதிகம் வந்துள்ளனர். சாகித்ய அகாடமி வெளியிட்ட தொகுப்புகள் முதன்மையான நகர்வுகளாக இருக்கின்றன. குறிப்பாக, முனைவர் பூவண்ணன் 2012-இல் தொகுத்த குழந்தைப் பாடல்கள், 2017-இல் இரா. காமராசும் கிருங்கை சேதுபதியும் தொகுத்த சிறுவர் கதைகள், 2019-இல் கிருங்கை சேதுபதி தொகுத்த சிறுவர் கதைப் பாடல்கள் ஆகியவற்றைக் கூறலாம். சாகித்ய அகாதமியின் இந்தத் தொகுப்புகள் எல்லாமே புதிய எழுத்தாளர்களுக்கு வழிகாட்டியாகவும் ஆவணமாகவும் இருக்கின்றன.

அடுத்து, 2010-இலிருந்து புதிய எழுத்தாளர்கள் நிறைய உருவாகினர். பாடல்களில் உதயசங்கரின்,’கேளு பாப்பா கேளு‘ பாடல் தொகுப்பு, தேவி நாச்சியப்பனின் பாடல் தொகுப்பு, கிருங்கை சேதுபதியின் “சிறகு முளைத்த யானை“, தங்கப்பாவின் “பொய்க்கால் குதிரை“, “சோளக் கொல்லைப் பொம்மை” போன்ற பாடல் தொகுப்புகள் 2000-க்குப் பிறகு தான் வந்தன. சிறுகதை, புதினத்தில் உதயசங்கரின் மாயக்கண்ணாடி, அண்டாமழை, விஷ்ணுபுரம் சரவணனின் வித்தைக்காரச் சிறுமி, வானத்துடன் டூ, பஞ்சுமிட்டாய் பிரபுவின் எனக்கு பிடிச்ச கலரு இப்படி நிறைய புதிய படைப்புகள் 2010-க்கு பிறகு வந்துள்ளன. சமூக பிரச்சனைகளைச் சொல்லும் படைப்புகள் கூட 2010-க்கு பிறகு வந்து நம்பிக்கை ஊட்டுகின்றன. யெஸ்.பாலபாரதியின் ‘மரப்பாச்சி சொன்ன இரகசியம்‘ ஓர் எடுத்துக்காட்டு. கொ.மா.கோ.இளங்கோவின் ‘சஞ்சீவி மாமா‘ சமூகச் சிக்கல்களைப் பேசிற்று. இவையெல்லாம் பெரும் நம்பிக்கையைத் தருகின்றன.

பதிப்பகங்களின் பங்கும் முதன்மையானது. 2010-க்குப் பிறகான காலத்தில் பதிப்பகங்கள் மிகவும் அக்கறையுடனும் கவனத்தடனும் இயங்குவதைப் பார்க்கிறேன். எடுத்துக்காட்டாக, NCBH-Nestling, பாரதி பதிப்பகத்தின் ‘Book for children’, வானம் பதிப்பகம், நிவேதிதா பதிப்பகம்ஆகியன. பழைய பதிப்பகங்கள் சிறார் இலக்கியத்தைக் கைவிட்ட நிலையில் இந்தப் புதிய பதிப்பகங்கள் பெரும் நம்பிக்கையை தருகின்றன. ஆனாலும் இன்று இருக்கும் 100+ சிறார் இலக்கிய எழுத்தாளர்கள் எழுதும் அளவுக்கு இதழ்கள் இல்லை என்பது கசப்பான உண்மை. இந்த நிலையைத் தளர்ச்சியாக தான் நான் பார்க்கிறேன். 1950-களில் கடந்த வந்த செழிமை தற்போது இல்லை. இந்தத் தளர்ச்சிக்குக் காரணம் என்ன? நடுத்தர வகுப்புக் குழந்தைகள் தான் சிறார் இலக்கிய வாசகர்களாக இருக்கிறார்கள். இவர்கள் தமிழ் வழிக் கல்வியை இழந்தது முக்கிய காரணம். குழந்தை இலக்கியம் அடித்தட்டு மக்களுக்குச் சென்றடைய முடியாதது இன்னொரு காரணம். இந்தத் தளர்ச்சியிலிருந்து நாம் விடுபட வேண்டும். இங்குள்ள நூலகங்கள் குழந்தைகளுக்கானதாக மாற வேண்டும். வாசிப்பு முகாம்கள், கதை சொல்லல் போன்ற நிகழ்வுகள் அதிமாக நடக்க நாம் திட்டமிட்ட வேண்டும். குழந்தைகள் தங்களுக்கான இலக்கியத்தை படைக்க வேண்டும். அதற்குச் ‘சிறார் எழுத்தாளர் கலைஞர் சங்கம்‘ முயற்சி செய்தால் சிறார் இலக்கியம் மீண்டும் புத்துயிர் பெறும் என்பதில் ஐயமில்லை.