குழந்தைப் பாடல்கள் Archives | குருவிரொட்டி இணைய இதழ்

மாம்பூவும்
வேப்பம்பூவும்

மாம்பூவும்
வேப்பம்பூவும்
சிரித்துக் கொண்டே அழைத்தது

பறந்து செல்லும்
கிளியின் கூட்டம்
இதைப்
பார்த்துப் பார்த்து மகிழ்ந்தது!

வண்டுகளின் ரீங்காரம்
உல்லாசத்தைச் சேர்த்தது
காற்றின் இதமான
பதில் பேச்சும்
உணர்த்தியது!!

உலாவியது யாழ் இசை
மலர்கள் யாவும்
மரத்தின் கிளைகளும்
நடனமாடிக் கொண்டிருந்தன!!
********************

வானம்

வானத்தின் எல்லை வரை
கனவுகள் நிரம்பியது

பூமியின் விரிப்பில்
ஊக்கம் விரிந்தது

செய்யத் துணிச்சல்
இருக்கையில்
வெல்ல முடிந்தது
யாவற்றையும்!
*

*******************

சொல்லும் செய்தி
என்னவோ?

மாலைப் பொழுதும்
வந்து விட்டதே.

பறவைகள்
கூட்டம் கூட்டமாக
இரைந்து கொண்டு
செல்கின்றனவே!

சொல்லும் செய்தி
என்னவோ?

இதைத் தென்றல்
சுமந்து
இலைகள் மீது
வைத்துச் செல்கின்றதே!

இலை உதிரும்
நேரம்
செய்தியை அறிவோம்!
பதில் கூறத்
தேவையோ?

கோலங்கள் தீட்டி
பதில் கூறுவோமா?
*****************

மேகங்கள்

வெண் மேகங்கள்
ஓடோடி வர,
கார்மேகங்கள்
கலைந்து செல்ல

கடலின் தாகம்
தணியாமல் இருக்க
உருண்டோடியது
காற்றலைகள்!

கொட்டியது மழை!
நனைந்த கடல் அலைகள்
கொப்பளித்துக் கொண்டாடியது!!
வானம் பூமி கீதத்தில்
நனைந்தனவே!!
******************************