தர்ம யுத்தம் – 45 ஆண்டுகளுக்கு முன் பார்த்த நாடகம்.
பையன் வந்ததும் கேட்கிறார். பையன் “அப்பா நான் அப்படிச் செய்வில்லை யப்பா. இது அபாண்டமான பழி” என்று கண் கலங்குவான். “நீ செய்யல்ல இல்ல, கவலைப் படாதே, நான் பாத்துக்தறேன்”
நீ பொய் சொல்ல மாட்டாய் என்று எனக்குத் தெரியும். இரண்டு வருஷம் முன்ன ஒரு தேர்வில் நீயும் இன்னொரு பையனும் ஒரே மாதிரி விடை எழுதி இருந்தீர்கள். நீ நன்றாய் படிப்பாய் என்பதால், ஆசிரியர் அந்த பையனை கூப்பிட்டு, காப்பி அடித்ததற்காக தண்டிக்கப் போனபோது, ஆசிரியரிடம் சென்று ” சார், நான்தான் அவனைப்பாத்து காப்பி அடித்தேன். அவன் என்னைப் பார்த்து காப்பி அடிக்கவில்லை” என்று தண்டனையை ஏற்க தயாராய் நின்றாய். அப்போ நான் உன் நேர்மையை பாராட்டினேன். காப்பி அடித்ததுக்காகக்கூட திட்டாம, நீ உண்மை சொன்னதுக்கு பாராட்டினேன். நீ பொய் சொல்ல மாட்டாய். நான் நம்பறேன், நாளைக்கு உங்க தலைமை ஆசிரியரைப் பாக்கறேன்” என்று சொல்வார்.
பள்ளிக்குச் செல்கிறார். “என் பையன் பொய் சொல்ல மாட்டான். அவன் இந்த தப்பும் செய்யவில்லை” என்று வாதாடுகிறார். இவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை. அந்த போஸ்ட் மேன், “இந்தப் பையன்தான்” என்கிறார். “அந்த சமயத்தில் நான் அந்த இடத்திலேயே இல்லை” என்கிறான் பையன். வேறு எங்கே இருந்தான், யாரோடு இருந்தான் என்ன செய்து கொண்டு இருந்தான் என்று சொல்லத் தெரியவில்லை.
ஒத்துக்கொண்டு மன்னிப்புக் கேட்டால் பைன் (fine) மட்டும் போட்டு விட்டு விடுகிறோம். இல்லை என்றால் சஸ்பெண்ட் செய்து விடுவோம் என்கிறார்கள். நேரமாகி விட்டதால் மறுநாள் வரச் சொல்கிறார்கள்.
வீட்டில் வந்த உடன் மறுபடியும் கேட்கிறார் “நீ சொல்வது உண்மைதானே, கவலைப்படாதே நான் ஒரு கை பார்க்கிறேன். வக்கீலைப் போய்ப் பார்த்து என்ன செய்கிறேன்” பார் என்கிறார்
ஸ்ரீகாந்த்துக்கு கோபம் வருகிறது. “அப்பா, இது என்ன முட்டாள்தனம். ஸ்கூல்ல போய்… தன்மையாய் பேசி முடிக்காமல். இது என்ன பிரச்சனை பண்ணிட்டு… ” என்று கேட்கிறான். “என் பையன் திருடன் என்று சொன்னதை விட இவன் பொய் சொல்கிறான் என்று சொன்னது, என்னால் பொருத்துக் கொள்ள முடியவில்லை. அதிகாரம் இருக்கிறது என்பதால் என்ன வேண்டுமானாலும் செய்வார்களா? ஒரு கை பார்க்காமல் விடமாட்டேன் ” என்று சொல்கிறார். ஸ்ரீகாந்த் கோபமாக வெளியே போய் விடுகிறார்.
பையனைக் கூட்டிக் கொண்டு வக்கீல் வீட்டுக்குப்போய் விபரமாகச் சொல்கிறார். எப்படி பையன் காப்பியடித்ததைக்கூட ஒத்துக்கொண்டு உண்மை பேசினான்.. அவன் செய்யவில்லை என்கிறான். பள்ளியில் இப்படி நடத்துகிறார்கள்.. என்றும் விளக்குகிறார்.
வக்கீல் பையனிடம் மீண்டும் கேட்கிறார் இவன் திடமாகச் சொல்கிறான்…. நான் அந்த தப்பை செய்யவில்லை.
வக்கீலுக்கும் நம்பிக்கை வருகிறது. ” சரி அப்போ.. அந்த சமயம் எங்கிருந்தாய் என்ன செய்தாய் ” என்று கேட்கிறார். “பள்ளி இடைவேளை என்பதால் வெளியே நடந்து விட்டு வந்தேன்” என்கிறான்.
யாராவதுகூட இருந்தார்கள் என்று கேட்டதற்கு ‘இல்லை” என்கிறான்.
“உனக்கு ஏதாவது கெட்ட பழக்கம் உண்டா.. சிகரட்.. இதுமாதிரி ” என்று கேட்டதற்கும் “இல்லை” என்கிறான்.
வக்கீல், அப்பா ராகவனின்.. “நாளைக்கே வக்கீல் நோட்டீஸ் தயார் செய்து அனுப்புவோம் ஒரு காப்பி உங்களிடம் தருகிறேன். நீங்கள் அவர்கள் அழைத்த படி, பள்ளியில் இவர்களை சந்தியுங்கள்” என்கிறார்.
பின்னர் வாக்குவாதம், கேஸ், வீட்டில் அப்பாவுக்கும் ஸ்ரீகாந்துக்கும் முட்டல் மோதல்….
கேஸ் என்பதால் செலவு வேறு. ஶ்ரீகாந்த் “கொஞ்சம் போனால் இந்த சோபா, நாற்காலி ஏன் இந்த வீட்டைக் கூட விற்று கேஸ் நடத்துவீர்கள் போல இருக்கிறதே” என்று கோபமாகக் கேட்கிறான். “ஆமாம் செய்வேன் இது நான் நடத்தும் தர்ம யுத்தம்.. ஜெயித்துக் காட்டுவேன்” என்கிறார். கௌரவப் பிரச்சினை ஆகிவிடுகிறது.
நிறைய காட்சிகள் வாதம், பேச்சு….
முடிவில் ராமு அந்த மணி ஆர்டர் பார்மில் கையெழுத்திட வில்லை. எல்லா பையன் களும் ஒரே மாதிரி யூனிபார்ம் போட்டு ஒரே மாதிரி இருந்ததால் போஸ்ட் மேன் தப்பாகச் சொல்லிவிட்டார். ராமு தன் இரண்டு மூன்று நண்பர்களுடன் பக்கத்தில் இருந்த பொட்டிக் கடைக்குப் பின்னால் மறைந்து இருந்து சிகரெட் பிடித்ததையும் ராமு தங்களோடுதான் இருந்தான் என்பதையும் அந்த நண்பர்கள் சாட்சி சொன்னார்கள். அந்த பணத்தை எந்த மாணவன் வாங்கினான் என்பதும் நிரூபணம் ஆனது. பள்ளி, ராமுவை பள்ளியில் மீட்டும் சேர்த்துக் கொண்டதோடு, கேசுக்கான செலவையும் கொடுத்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் மனமார மன்னிப்புக் கேட்டார். “உங்கள் பையன் மேல் உங்களுக்கு இருந்த நம்பிக்கையும், இதற்காக இவ்வளவு தூரம் போராடியதும்…. பெரிய விஷயம்.. உங்கள் வெற்றிக்கு என் பாராட்டுக்கள் என்றார்.
நீதி மன்றத்திலேயே பலபேர் வந்து ” உங்கள் வெற்றி பெரிய விஷயம். மகனின் மீது வைத்த நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி” என்றார்கள்.
பலரும், அக்கம் பக்கத்தில் கேலி பேசியவர் களும், “சார் நீங்க உங்க பையன் மீது வைத்த நம்பிக்கைக்குக் கிடைத்த வெற்றியாகும் இது என்றார்கள் பாராட்டுக்கள் என்றார்கள்.
வீட்டில் ஸ்ரீகாந்த் ” அப்பா congrats . ராமு மேல வைத்த நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி யப்பா” என்று சொல்லிவிட்டு உள்ளே போகிறான்.
எல்லோரும் போனபின் அப்பா தனியாக ஸ்டேஜின் ஒரு ஓரத்துக்கு வருவார். தனக்குத்தானே சப்தமாகப் பேசுவார்
“இது அந்த வக்கீலுக்கு வெற்றி, என் பையனுக்கு வெற்றி… இது எனக்கு வெற்றி என்று எல்லோரும் சொல்கிறார்கள். என் பையன்மேல் நான் வைத்த நம்பிக்கைக்கு வெற்று என்று சொல்கிறார்கள். ஆனால் எனக்கு இது பெரிய தோல்வி… நான் நிரூபிக்க நினைத்தது, கேஸ் போட்ட தெல்லாம் எல்லாவற்றையும் விட, என் பையன் பொய் சொல்ல மாட்டான் என்பதற்காகத்தான். அவன் பொய் சொல்கிறான் என்று சொன்னதை எதிர்த்துத் தான். ஆனால் அவன் பொய் சொல்லி இருக்கிறானே… நண்பர்களோடு இருந்ததைப் பற்றி கேட்கும் போதும்… சிகரெட் பிடிக்கும் பழக்கம் உண்டா என்று கேட்டதற்கும் “இல்லை” என்று பொய் தானே சொன்னான். என் நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி என்று எல்லோரும் சொல்றாங்க.. ஆனால் என் நம்பிக்கேக்கு கிடைத்த பெரிய தோல்வி என்று சொல்லி விட்டு நாற்காலியில் உட்கார்ந்து முகத்தை மூடிக்கொண்டு அழுவார்…. அவரை மட்டும் போகஸ் செய்து கொண்டிருக்கும் போகஸ் லைட் மெல்ல மங்கி பின் அணையும். அரங்கத்தில் சில நிமிடங்கள் அமைதியும் பின்னர் மெல்லத் துவங்கிய கைத்தட்டல் பலத்த கரகோஷமாக மாறியது….
V S R, ஸ்ரீகாந்த் முதல் எல்லோரும் அபாரமாக நடித்திருப்பார்கள். அருமையான வசனங்கள். 👏👏
