இம்மாதக் கவிஞர் கு.சா. கிருஷ்ணமூர்த்தி

(முனைவர் தென்காசி கணேசன் 94447 94010 )

கவிஞர் கு.சா. கிருஷ்ணமூர்த்தி, 1914 ஆம் வருடம் கும்பகோணத்தில் பிறந்தவர். குடும்பச் சூழலால் மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே கல்வி கற்றவர். புதுக்கோட்டையில் தமிழகம் என்னும் ஒரு பதிப்பகத்தையும் படக் கடையும் தொடங்கியவர். திரைப்படப் பாடல்கள் தவிர, கதை வசனம், நாடகங்கள் என எழுதியவர். 

ரத்க்கண்ணீர் படத்தில் கருணாநிதி, கண்ணதாசன், உடுமலை நாராயண கவி, மருதகாசி, இவர்கள் பாடல்கள் எழுதித் தந்தும், பொருந்தவில்லை, அப்புறம், கு சா கி அவர்கள் 1953 ல், ரூபாய் 5000 வாதாடிப் பெற்று, குற்றம் புரிந்தவன் என்ற பாடலைத் தந்தார். அப்போதே இப்பாடல் 2000 ரெகார்ட்கள் விற்கப்பட்டன. 

காதல் கனிரசமே    (பி யூ சின்னப்பா பாடிய மிகப் பிரபல பாடல்) 

குற்றம் புரிந்தவன்  (இரத்தக் கண்ணீர் படம்)   

நிலவோடு வான் முகில் விளையாட்டுதே  (ராஜராஜன் படம்)

எளியோரைத் தாழ்த்தி வலியோரை வாழ்த்தும்  (தை பிறந்தால் வழி பிறக்கும்) 

அகில பாரத பெண்கள் திலகமாய் 

ஐந்து ரூபாய் நோட்டை கொஞ்சம் முன்னே மாத்தி  (அந்தமான் கைதி படம்) 

பாங்கியே பைங்கிளியே  (தக்ஷயக்ஞம் படம்) 

அந்தி சாயும் நேரத்திலே – ஆசை மச்சான் ஓரத்திலே (திருடாதே) 

சொல்லாலே விளக்கத் தெரியல – அதை சொல்லாமலும் இருக்க முடியல 

ஓ வண்டு புதுமலரைத் தேடி தேனுண்டு காதல் உறவாடி (தங்கமலை ரகசியம்) 

அந்தோ பரிதாபம் (அம்பிகாபதி)  

கிழவியைக் காதலியடா 

அவ்வைக் கிலவியைக் காதலியடா 

என்ற இவரின் பாடல் அன்றைய நாட்களில் மிகப் பிரபலமானது, 

ராஜாம்பாள், பெண், மேனகா, எது நிஜம், வாழ்விலே ஒரு நாள், அம்பிகாபதி, சக்ரவர்த்தி திருமகள், தங்கமலை ரகசியம், அவன் அமரன், சதி அனுசூயா, பூலோக ரம்பை, பாஞ்சாலி, ராஜ நந்தினி, திருடாதே, மாயா மசீந்திரா, ஆளப் பிறந்தவன், தேவ ரகசியம், கன்னியின் சபதம்,  போன்ற பல படங்களில் இவரின் பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

அந்தக் கால விலைவாசி பற்றி இவரின் திரைப்படப் பாடல் – 

ஐந்து ரூபாய் நோட்டை கொஞ்சம் முன்னே மாத்தி

மிச்சமில்லே மிச்சமில்லே 

கத்தரிக்காய் விலை கூட கட்டு மீறல் ஆச்சு 

காலம் கெட்டுப் போச்சு 

காலணா வித்தது இப்போ நாலனாவாப் போச்சுது 

கருப்பட்டி வெல்லத்துக்கும் கடும்பஞ்சம் ஆச்சுது 

எப்படிப் பிழைப்பது இந்த நாட்டிலே 

அவரின் பிரபலமான சில தமிழிசைப் பாடல்களில் சில – 

கருணை முகம் காட்டும் காந்திமதித் தாயே – எம்; எல். வசந்தகுமாரி பாடியது 

வரவேண்டும் வடிவேலனே – எஸ் ராஜம் பாடியது 

பி யூ சின்னப்பா அவர்களை ஜூபிடர் சோமு அவர்களிடம் அறிமுகப் படுத்தியவர். டைரக்டர் கே.சுப்பிரமணியத்தின் மருமகன், ஒன்றே குலம் என்ற படத்தைத் தயாரித்தபோது கு.சா. கிருஷ்ணமூர்த்தி, அதற்குக் கதை வசனம் எழுதியதுடன்  அப்படத்தில் அவரால் செவிலிப் பெண் வேடத்தில் அறிமுகப்படுத்தப்பட்டவர்தான் பிற்காலத்தில் இந்தியாவின் புகழ் பெற்ற நடிகையாக உயர்ந்த வஹீதா ரஹ்மான். உவமைக்கவிஞர்  சுரதா, கு மா பாலசுப்ரமணியம், கவிஞர் அவினாசி மணி, நடிகர் ஏ வி எம் ராஜன் எனப் பலரை தமிழ்த்திரையுலகில் அறிமுகம் செய்து வைத்தார்

இவரது கலைவாணன் நாடகத்தில் நடித்த பிறகே, என் எஸ் கே, கலைவாணர் ஆனார். இது இவருக்குப் பெருமை. 

இளம் வயதிலேயே கந்தசாமி முதலியார்  தலைமைப் பொறுப்பில் இருந்த நாடகக் குழுவில் சேர்ந்து   நடிப்பு, பாடல்கள் எழுதுவது, வசனம் எழுதுவது, நாடக, திரைக்கதை ஆக்கம், இசை என நாடகக் கலையின் அனைத்துக் கூறுகளையும் கற்று, எஸ் ஜி கிட்டப்பா, கே பி சுந்தராம்பாள், நாடகக் குழுவினருடன் இணைந்து மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, பர்மா முதலிய நாடுகளுக்குச் சென்றவர். .

இவர் எழுதி டி கே எஸ் சகோதரர்கள் நடித்த  அந்தமான் கைதி நாடகம் கு.சா. கிருஷ்ணமூர்த்திக்கு மிகுந்த புகழைத் தேடிக் கொடுத்தது.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் நாடக வரலாறு  என்னும் தலைப்பில்இவர் ஆற்றிய  உரை நூலாக வெளியானது. அந்நூலில் நாடகக் கலையின் தோற்றம், அது படிப்படியாக அடைந்த மாற்றம் என்பதில் தொடங்கி புராண, வரலாற்றுக் கால நாடகங்கள், சமூக சீர்த்திருத்த காலங்கள் வரையிலான நாடகங்கள், அதன் தன்மைகள், உத்திகள், தெலுங்கு, மலையாள, கன்னட உலகில் நிகழ்ந்த நாடக வளர்ச்சி, அதற்கு உழைத்த நடிகர்கள் பற்றிய செய்திகள் ஆவணமாகிஉள்ளன. 

கு.சா. கிருஷ்ணமூர்த்தியின் நாடகமான அந்தமான் கைதி திரைப்படம் ஆனபோது,  கதை-வசனம், பாடல்களை கிருஷ்ணமூர்த்தி எழுதினார். எம் ஜி ஆர் கதாநாயகன். தொடர்ந்து ஜூபிடர் நிறுவனத்தின் படங்களுக்கு பாடல்கள், வசனங்கள் எழுதினார்.

டைரக்டர் கே.சுப்பிரமணியத்தின் மருமகன், ஒன்றே குலம் என்ற படத்தைத் தயாரித்தபோது கு.சா. கிருஷ்ணமூர்த்தி, அதற்குக் கதை வசனம் எழுதியதுடன்  அப்படத்தில் அவரால் செவிலிப் பெண் வேடத்தில் அறிமுகப்படுத்தப்பட்டவர்தான் பிற்காலத்தில் இந்தியாவின் புகழ் பெற்ற நடிகையாக உயர்ந்த வஹீதா ரஹ்மான். உவமைக்கவிஞர்  சுரதா, கு மா பாலசுப்ரமணியம், கவிஞர் அவினாசி மணி, நடிகர் ஏ வி எம் ராஜன் எனப் பலரை தமிழ்த்திரையுலகில் அறிமுகம் செய்து வைத்தார்

கு.சா. கிருஷ்ணமூர்த்தி,  உமா,  ‘இந்திரா’, ‘சண்டமாருதம்’, ‘கலைவாணி’, நவமணி, செங்கோல், தமிழ்நாடு  போன்ற பல இதழ்களில் கவிதைகள் எழுதினார். தமிழிசைப் பாடல்கள் பலவற்றை இயற்றினார். இவரது பாடல்களை  தண்டபாணி தேசிகர், கே பீ சுந்தராம்பாள், மதுரை சோமு, சி எஸ் ஜெயராமன் , சீர்காழி கோவிந்தராஜன் உள்ளிட்ட பலர் பாடினர். இராமலிங்க வள்ளலாரின் 101 பாடல்களை ராக – தாள – சுரக் குறிப்புடன் அருட்பா இசையமுதம் என்னும் பெயரிலும் 100 பாடல்களை இராக – தாள – சுரக் குறிப்புடன் அமுதத் தமிழிசை என்னும் பெயரிலும் குருவாயூர் பொன்னம்மாளுடன் இணைந்து வெளியிட்டார்.

இலக்கியம் தவிர, அரசியலிலும் முக்கியப் பங்கு வகித்தார். புதுக்கோட்டை நகர காங்கிரஸ் செயலாளராக இருந்ததுடன், தனி சமஸ்தானமாக இருந்த புதுக்கோட்டையை இந்திய அரசுடன் இணைக்க மக்கள் நடத்தியப் போராட்டத்தில் இணைந்தது, சிலம்புச் செல்வர்            ம பொ சி யின் தமிழரசுக் கழகத்தில் இணைந்தது,  தமிழகத்துடன் திருத்தணி, நாகர்கோவில், கன்னியாகுமரி பகுதிகள் இணைக்கப்பட வேண்டும் என்று நடத்தப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றது எனப் பல நிகழ்வுகள். .

கு.சா. கிருஷ்ணமூர்த்தி இயல், இசை, நாடகம் என முத்தமிழிலும் இயங்கினார். திரைப்பாடல்களில் மெட்டுக்குப் பாடல் எழுதுவதில் வல்லவராக இருந்தார். புராண நாடகங்கள் அதிகம் வெளிவந்து கொண்டிருந்த காலத்தில், நாடகத்தின் போக்கை சமூக நாடகங்கள் பக்கம் மடை மாற்றினார். தமிழிசைப் பாடல்கள் பலவற்றை எழுதி தமிழிசை வளர்ச்சிக்குப் பங்களித்தார்.  அவரின் பிரபலமான சில தமிழிசைப் பாடல்களில் சில – 

இவரைப் போன்ற பல கவிஞர்கள் அதிகம் வெளியில் தெரியாமலேயே வாழ்ந்து, மறைந்து விட்டார்கள். 

அடுத்த மாதம் மற்றொரு கவிஞருடன் சந்திப்போம்.