நல்லூர்..

மதுபானக்கடை தகராறில் இளைஞா் வெட்டிக் கொலைகாத்தாயிக்கும் கலியனுக்கும்  பிறந்த ஒரே திருமகன்!  அவன்தான் இன்னிக்கு பி டி மாஸ்டர்! நம்ம இலக்கிய வாத்தி !

கலியன்  என்று பெயர் வைத்ததற்குப் பதிலாக கலய மூர்த்தி என்று வைத்திருக்கலாம். அப்படி ஒரு குடிகாரன். வேலை வெட்டி எதுவும் கிடையாது. ஏதாவது அடாவடி செஞ்சு காசு சம்பாதிப்பான்.

காத்தாயிக்கு இவனோட வாக்கப் பட்டதே ஒரு பெரிய கதை.! அன்னிக்கக்கே  அவளுக்குத் தெரிஞ்சுபோச்சு!  நம்ம வாழ்க்கையை நாம தான் பாத்துக்கணும். சும்மா சொல்லக்கூடாது. ஊரில எந்த வேலை யார் சொன்னாலும் தப்பாம செய்வா! ஆனா அவ பேரு காத்தாயின்னு யாருக்கும் தெரியாது.. அவளுக்கு ஊரில பேரு கலியன் பொண்டாட்டி !

கலியன்  நல்லூர்க்காரன்!. எம்பளது வயசானாலும் நல்லூர் காத்தவராயன் ஊருக்குப் பெரிய காவக்காரர்! வெளியூர்க்காரன் எவனும் நல்லூர் கோயிலை எதுவும் செய்யாம பாத்துக்கறது அவர் வேலை. நல்லூர் கோயிலுக்கு மெய்க்காப்பு மாதிரி அவர். கட்டப் பஞ்சாயத்து அடிதடி எல்லாம் அவர் தலைமையிலதான் நடக்கும்.  அவரோட அடியாள் கும்பல்ல கலியன்தான் தலையாரி!  இளநீர் சீவுற மாதிரி தலையையும் சீவுவான். அதனால மத்த பசங்க எல்லாம் அவனை தலையாரின்னு கூப்பிடுவானுக! அப்பப்ப போலீஸ் பிடிச்சுகிட்டுப் போகும். காத்தவராயன் எப்படியாவது வெளியே கொண்டு வந்திடுவார்.

காத்தவராயனோட பரம்பரைப் பகையாளி ரோசா மிராசுதார்.

திருக்களாவூர் பக்கத்தில நாகலூரில ரோசா மிராசுதாருக்கு அம்பது வேலி நிலம். மூணு பொண்டாட்டி ஏழெட்டு வப்பாட்டி! எந்த ஊர்ல அடிதடின்னா அவரோட ஆளுங்கதான் போவானுக..கள்ளு இறக்கறது அவரோட கும்பலதான். சாராயம் காயச்சறதும் அவர் ஆளுங்கதான்.  அவரை எதிர்த்து எவனும் ஒரு வார்த்தை பேசமுடியாது. போலீஸ், ஜில்லா கலெக்டர் எம் எல் ஏ எல்லாரும் அவர் பாக்கெட்டில! அவரும் கட்சியில ஒரு பெரிய புள்ளியா கொஞ்ச காலம் இருந்தார். அப்பறம் கட்சிக்கும் அவர் கொள்கைக்கும் ஒத்து வரல. கட்சி கள்ளுக்கடை எதிர்ப்புன்னு ஆரம்பிச்சதும்  பதவியாவது பருத்திக்கொட்டையாவதுன்னு ஐயா உதறி விட்டுட்டு  தொழில்ல முழுசா இறங்கிட்டார். .

அவர் வீட்டில கொத்தடிமையா இருந்தவதான் காத்தாயி. அப்பா அம்மா இல்லாத அநாதை. நல்ல களையா இருப்பா ! சின்னப் பெண்ணா இருந்தவரைக்கும் பிரச்சினை இல்லை. வயசுக்கு வந்ததும். ராசா மிராசுதார் அவளைப் பாத்தார். இத்தனை நாளும் வேலைக்காரக்   குட்டின்னு பாத்திக்கிட்டிருந்தவர் அவ வயசுக்கு வந்து பத்து நாளாச்சுன்னு தெரிஞ்சதும் பார்வை வேற மாதிரி இருந்தது. இத்தனைக்கு அவரோட பேத்தி வயசு அவளுக்கு. அவரோட லீலைகளை எல்லாம் பாத்து குமைஞ்சுகிட்டிருந்தவளுக்கு இப்ப அவர் கண்ணு தன் மேல பட்டிடுச்சேன்னு துடிச்சா! பண்ணையை விட்டு ஒடலாம்னு ராத்திரி ராகசியமா கிளம்பினா.! ஆனா மிராசுதார் உத்தரவுப்படி அவரோட வப்பாட்டி ஒருத்தியே காத்தாயியை பிடிச்சு இழுத்துக்கிட்டுப் போனா..  சீவி சிங்காரிச்சு அவளை மிராசுதாரோட  தென்னந்தோப்பில கிழ எருமை கிட்டே குருத்து வாழையை  மேய விட்டுட்டு அதுக்குக் கூலி வாங்கிட்டுப்போனா!

‘பெரிய சாமி விட்டுடுங்க பெரிய சாமி விட்டுடுங்கன்னு’ காலில விழுந்து கெஞ்சினா காத்தாயி. கிழமா இருந்தாலும் மொடாய்க் கள்ளைக் குடிச்சிருந்தாலும் ஆசை மட்டும் நரைக்காத காட்டெருமை மிராசுதார்! தன்னைக் காப்பாத்திக்க ஏதாவது வழி இருக்கா இல்லே  யாராவது வர மாட்டாங்களான்னு! சுத்தி சுத்தி ஓடினா காத்தாயி.

இரண்டும் வந்தது.

கூரையில இளநீ வெட்டற  அருவா கண்ணுல பட்டது. அந்த சமயம்  அவரைப் போட்டுத் தள்ள தனி ஆளா நல்லூர் கலியனும் வந்தான்.  

சத்தமில்லாம தலையை சீவிட்டுவான்னு  அவனை அனுப்பிச்சு வைச்சவர் நல்லூர் காத்தவாராயன்.

ஆனா தனக்கு முன்னாடி மிராசுதார் கழுத்தில அருவாளைப் போட்டு சாவடிச்சு  ரத்த வெள்ளத்தில பிரமை பிடிச்சா மாதிரி ஒரு பொண்ணு நிப்பான்னு கலியன் கனவில கூட நினச்சுப் பாக்கலை.

“ஏ பொண்ணு! நல்ல காரியம் பண்ணியிருக்கே! இந்தக் கிழ எருமையைக் கொல்ல அவன் புள்ளைங்க, பங்காளி அப்படின்னு எத்தனையோ பேரு இருக்காங்க. நானே போடணும்னு தான் வந்தேன்!  என் வேலையை சுளுவாக்கிட்ட!. நீயும் நானும் இப்ப ஒரே சாதியாயிட்டோம். என் கூட வா! நல்லூருக்குப் போயிடலாம். நானே உன்னைக் கட்டிக்கறேன். காத்தவராயன் ஐயா நம்மளைக் காப்பத்துவாரு.!

ரத்தம் படிஞ்ச அந்த அருவாளை மிராசுதார் வேட்டியிலேயே தொடைச்சான். எந்தத் தடயத்தையும் விட்டு வைக்காம அந்த குடிசையில நெருப்ப வேறு வெச்சுட்டு காத்தாயியையும் இழுத்துகிட்டு ஓடினான்.   

பிரமை பிடிச்சவன் மாதிரி அவன் கூட நல்லூருக்கு வந்தா காத்தாயி!.

போலீஸ் துப்புத் துலக்கி கலியனைப் பிடித்துக் கொண்டு போனது.

போறதுக்கு முன்னாடி காத்தவராயன் ஐயா முன்னிலையில காத்தாயி கழுத்தில ஒரு மஞ்சக் கிழங்கைக் கட்டி “ ஐயா ! இது என் பொஞ்சாதி ! இதுக்கு சோறு தண்ணி கொடுங்கண்ணு  காலில விழுந்து சொல்லிட்டு ஜெயிலுக்குப் போனான். காத்தவராயனுக்கு அவளைப் பாத்ததும் ரோசா மிராசுதாருக்குக் கட்டிக் கொடுத்து மூணே  நாளில தூக்குப் போட்டுச் செத்துப்போன மகளைப் பாக்கற மாதிரி இருந்தது! அப்படி ஒரு களை இவ முகத்தில. .இன்னிக்குத் தேதிக்கு அவ நல்லபடியா இருந்தா அவளுக்கும் இந்த வயசில பொண்ணு இருந்திருக்கும்.

“கவலைப்படாதே கலியா! இவளுக்கு எந்த கஷ்டமும் வராம நான் பாத்துக்கறேன்! நீயும் சீக்கிரம் வந்து குடியும் குடித்தனுமா இவ கூட ஒழுங்கா இருக்கணும் ” என்று வாக்குக் கொடுத்தார் காத்தவராயன்.

“பெரிய ஐயா! நான் குடிசை கட்டிட்டு குடியானனவங்க தெருவில  தனியா இருக்கேன்.அவரை எப்பிடியாவது சீக்கிரம் வெளியே கூட்டிட்டு  வந்துடுங்க! .அவரு ஒண்ணும் பண்ணலை! நான்தான்.. “ வெடித்து அழுதாள் கலியன் பொண்டாட்டி!

அன்னேயிலிருந்து நல்லூரில எல்லாரும் அவளைக் கலியன் பொண்டாட்டி அப்படீன்னுதான் கூப்பிட ஆரம்பிச்சாங்க!.   .

ஆனா இந்தத் தடவை கலியன் வெளியே வர அஞ்சுவருஷம் ஆச்சு!

தனிமரமா வயக்காட்டு வேலை ! சாணி தட்டறதுன்னு எல்லா வேலையும் செஞ்சா! கூடை முடையரது!  தென்னை ஒலை பின்னறதுன்னு! அவ கிட்டே எப்பவவும் அந்த அருவாள் இருக்கும்.

அவன் ஜெயிலுக்குப்  போன ஆறு மாசத்தில நல்லூர் காத்தவராயர் சிவலோக பிராப்தி அடைந்தார். அவரோட பையன் காளிமுத்து  இப்போ மெய்க்காப்பு. ஆனா அவரு அடிதடி எதுக்கும் போறதில்லே ! கலியனை ஜெயில்லேர்ந்து வெளிய எடுக்க அவருக்கு பெரிய இஷ்டம் இல்லை. ‘கம்மானாட்டிப்பய! வெளியே வந்த நாலு பெரு தலையை எடுக்கறதுக்குப் பதிலா அங்கேயே கிடக்கட்டும்!’ என்று விட்டு விட்டார்.   

அஞ்சு வருஷத்தில வெளியே  வந்தான்  கலியன் ! ஆளே மாறிப் போயிருந்தான்.  காத்தாயி அவனுக்காகக்  காத்திருந்தா. ஒரு வருஷம் அவங்க வாழ்க்கை சொர்க்கமா போச்சு ! அடுத்த வருஷம் அவ நல்ல கருப்புக் களையோட நம்ம வாத்தியைப் பெத்தெடுத்தா!  

அதுக்கப்பறம்தான் வந்தது சோதனை காத்தாயிக்கு ! தான் பெத்தெடுத்தது புள்ளை இல்லை ஊருக்கே எமன் என்று!

அது பின்னாடி வரும்