நான் என்னென்ன வாங்கினேன்? - யுகபாரதி, திரைப்படப் பாடலாசிரியர் | நான்  என்னென்ன வாங்கினேன்? - யுகபாரதி, திரைப்படப் பாடலாசிரியர் - hindutamil.inமுதலில் கவிஞர் யுகபாரதி என்பது இயற்பெயர்தானா என்று தெரியவில்லை. எத்தனை பாரதிகள் வந்தாலும், இந்த யுகத்துக்கு ஒரு பாரதி தான்.

பட்டப்படிப்பை முடித்துவிட்டு சிறிது காலம் பத்திரிக்கையாளராகப் பணியாற்றினார். பின்னர் தமிழ்த் திரையுலகில் பாடலாசிரியராக அறிமுகமானார். இவர் எழுதிய நேற்றைய காற்று என்ற தொடர் (கல்கியில் 20 வருடங்கள் முன் வந்தது) தமிழ்த் திரைக் கவிஞர்கள் பற்றியது. பலரும் படித்து ரசித்தது)

பல்லாங்குழியின்
வட்டம் பார்த்தேன் ஒற்றை
நாணயம் புல்லாங்குழலின்
துளைகள் பார்த்தேன் ஒற்றை நாணயம்

எழுதியவர்தான் கவிஞர் யுக பாரதி.

பார்த்திபன் கனவு படத்தில வரும்,

கனாக் கண்டேனடி தோழி
உன் விழி முதல் மொழி வரை
முழுவதும் கவிதைகள்

அகம் எது புறம் எது புரிந்தது போலே
கனாக் கண்டேனடி
முடி முதல் அடி வரை முழுவதும் இனிமைகள்
சுவை எது சுகம் எது
அறிந்தது போலே
கனாக் கண்டேனடி தோழி

இலக்கிய வரிகளாக இருக்கும்.

சந்திரமுகி படத்தில் இடம் பெற்ற
‘கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்
கொஞ்சிப்பேச கூடாதோ ‘

போன்று பல பாடல்கள் தந்திருக்கிறார். இந்தப் பாடலில்,

கண்ணதாசன் பாடல் வரி போல
கொண்ட காதல் வாழும் நிலையாக

என்று எழுதி இருப்பார்.

ஜில்லா படத்தில் ,

உயிரென்று உன்னை ஒரு நாளும்
சொல்லமாட்டேன்
உயிர் என்றால் என்றோ ஒருநாள்
பிரிவாயே

கில்லி படத்தில

கொக்கரக்கோ கொக்கொரக்கோ
எண்ணம் இருந்தால் எதுவும் நடக்கும் தன்னாலே
நீ குனிஞ்சா உலகம் உனக்குப் பின்னாலே .

சண்டைக்கோழி படத்தில்

தாவணி போட்ட தீபாவளி

சிவப்பதிகாரம் படத்தில்,

அற்றைத் திங்கள் சித்திரையில் என்ன வரும்

தீபாவளி என்ற படத்தில்

கண்ணன் வரும் வேளை பாடலில்,

தாய்ப்பாசம் பத்து மாதம்
பாரம் தாங்குமே
வாழ்நாளில் மிச்ச பாரம்
காதல் ஏந்துமே

பிரிவோம் சந்திப்போம் படத்தில்

கண்டேன் கண்டேன் காதலை

குருவி படத்தில்,

தேன் தேன் தேன்
முட்டவரும் பொய்யை ரசித்தேன்
மோத வரும் மெய்யை ரசித்தேன்
உறங்காமல் ஏங்கும்
உந்தன் உள்ளம் ரசித்தேன்

 

‘ எள்ளு வய பூக்கலியே’ என்ற பாடலும் ஹிட் ஆனது.

கல்லாக நின்னாயோ
கால் நோக நின்னாயோ
கண்ணே நீ திரும்பி வரணும் வீட்டுக்கு
மல்லாந்து போனாலும்
மண்ணோடு சாஞ்சாலும்
அய்யா நீ பெருமை சாதி சனத்துக்கு
தலைச்சம் புள்ளை இல்லாம
சரிஞ்சது எத்தன ஆட்சி
நீயே எங்க ராசா வா வா களத்துக்கு
தாயோட பாரம் மாசம் பத்தய்யா
தாங்காம நீயும் போனா தப்பய்யா
மனிதம் தாண்டி புனிதம் இல்லை
இதயம் தாண்டி இறைவன் இல்லை வா வெண்புறா

என்று ஜிப்சி என்ற படத்தில சந்தோஷ் நாராயண் கூட TM கிருஷ்ணா பாடியுள்ள பாடல் அதிகம் கேட்கப்படாத பாடல் ஆனது.

காதல் பிசாசு – காதல் பிசாசு என்று யுக பாரதி எழுதி உதித் நாராயணன் பாடிய பாடல் பலரால் முணுமுணுக்கப்பட்டது.மனசுல சூரக்காத்து அடிக்குது
காதல் பூத்து நிலவே சோறூட்டுதே
நிலவே சோறூட்டுதே கனவே தாலாட்டுதே
மின்னல் ஓசையும் காதிலே கேட்குதே
உந்தன் வாசனை வானவில் காட்டுதே

என்று குக்கூ வுக்கு எழுதிய வரிகள் விருது பெற்றது.

செம்பருத்தி பூவப்போல ஸ்நேகமான வாய்மொழி
செல்லங்கொஞ்சக் கோடை கூட ஆகிடாதோ மார்கழி
பால் நிலா உன் கையிலே
சோறாகிப் போகுதே
வானவில் நீ சூடிட மேலாடையாகுதே
கண்ணம்மா… கண்ணம்மா… நில்லம்மா…
உன்னை உள்ளம் எண்ணுதம்மா
கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை
என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன் மழை
சுட சுட தூறல் பொழிவதும் நீதான்
தொட தொட தீயாய் குளிரவதும் நீ தான்

ஊரு கண்ணே படும் படி
உறவாடும் கனவே தொடருதே
நெனவாகும் கனவே அருகிலே
உன்ன தூக்கி சுமப்பேன் கருவிலே
மடி வாசம் போதும் உறங்கவே
நீ தானே சாகா வரங்களே
தமிழே தமிழே வருவேனே ஒன கரமாய்
கோடியே கோடியே அழுரேனே ஆனந்தமாய்

கூட மேலே கூட வெச்சி கூடலூரு போறவளே..யில் வரும்

சல்லி வேர
ஆணி வேராக்குற….
சட்ட பூவ
வாசமா மாத்துற…..
நீ போகாத ஊருக்கு
பொய்யான வழி சொல்லுறே

போன்ற வரிகளும் இவருடையதுதான்.
இலக்கியம் எல்லாம் பெரிதாக எதுவும் வேணாம், கேட்கிறவர்கள் புரியும்படி இருந்தால் அதே போதும் என்று சொல்ல வைக்கும். திரைப்படப் பாடல்களில் அதுவே சாத்தியம்.
சசிகுமார் நாடோடிகளுக்காக ‘சம்போ சிவ சம்போ ‘ என்ற பாடலும்,
பசங்க படத்தில்,

அன்பாலே அழகாகும் வீடு
மாறாமல் வாழ்வும் இல்லை
தேடமல் ஏதும் இல்லை
நம்பிக்கை விதை ஆகுமே

கும்கி படத்தில் எல்லாப் பாடல்களும் இவர் எழுதினார். முட்டுக்கட்டைகள் நடுவில் முடிந்தவரை நல்ல பாடல்கள் தந்தவர் கவிஞர் விவேகா.

அடுத்த மாதம் இன்னொரு கவிஞருடன் சந்திப்போம்.