சுகன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு செல்லும் நால்வர் - முழு விபரம் - Tamil  News | Online Tamil News | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்  | ADMIN MEDIA TAMILசரவணன் சற்று உற்சாகமற்று இருப்பதாக பவானிக்குப் பட்டது. கண்களால் சஞ்சயைப் பார்த்து ‘என்ன’ என்று கேட்டாள். அவன் தோள்களைக் குலுக்கினான். இருவரின் சைகை மொழியையும் கீழ்க்கண்களால் பார்த்த சரூ தனக்குள் சிரித்துக் கொண்டான்.

“என்னடா ஆச்சு, ஏன் டல்லா இருக்க?”

‘ச் சு ஒன்னுமில்லடா’

“ஏதோ நடந்திருக்கு, மறைக்கற” என்றாள் பவானி.

‘நீ சொன்னா, நாம் மூணு பேரும் ஃபலூடா சாப்ட்லாம்.’

“நட்ஸ் உண்டா?”

‘நட்ஸ், க்ரீம், ஃப்ரூட்ஸ் டாப்பிங்கோட முழுசாடா.’

‘அவ்ளோ பணம் இருக்கா உங்கிட்ட?’

“பேச்ச மாத்தாதே. நேத்திக்கி மெட்ராஸ் வீக் கொண்டாட்டம்டா; அப்ப, திரும்பி வரச்சே, ‘அறிவியல் கேள்விகள்’ன்னு ஒரு பலகையை ஒரு ஸ்டால்ல பாத்தேன்’ ஸ்டாலுக்குள்ள ஒரு குட்டி ஹால். அதுல சில மேஜ, 15 நாக்காலி. அங்க ஒத்தர் கேள்விகள் கேட்டாரு. யாரு டக்டக்குன்னு சரியான பதில் சொன்னாங்களோ அவங்களுக்குப் பரிசு. புத்தகங்கள், சைன்ஸ் சம்பந்தமானது, எனக்கு நாலஞ்சு கெடச்சது.”

‘அடப் பாவி, அத வித்துட்டயா?’

“ஏன்டா, என்னப் பாத்தா எப்படியிருக்கு உனக்கு?”

‘சஞ்சய், ப்ளீஸ் கோச்சுக்காதடா, சும்மா வெளயாட்டுக்குச் சொன்னேன்டா.’

“அது சரி சஞ்சய், பணம் ஏதுடா?” என்றாள் பவானி.

‘அதுல நம்ம மாறி பசங்களுக்கான ஒரு போட்டி. அத சரியா விளக்கினா, பணமா ஆயிரம் ரூபா.’

“எங்கிட்ட சொல்லவேயில்லையே, சஞ்சய்?”

‘அது யதேச்சையா கலந்துண்ட போட்டி. உங்க ரண்டு பேர்கிட்டயும் சேத்துச் சொல்லணும்னு வைட் பண்னேன்.’

“என்னடா அந்த கேள்வி?”

‘ஓரு பலூன் வச்சிருந்தாங்க, ஆனா, அதோட வெளிப்புறத்ல குட்டி குட்டியா புள்ளிகள், ஸ்பைரல் (Spiral) வடிவங்கள். அதுல காத்த ஊதினாங்க. அப்றம் இது எதைக் காட்டுதுன்னு கேட்டாங்க.’

“ஐ, நல்லாயிருக்கே”

‘நீ என்ன பதில் சொன்ன?’

“கொஞ்சம் யோசனை பண்ணேன். அந்தப் புள்ளிகள்ல, ஸ்பைரல் வடிவங்கள்ல க்ளு இருக்குன்னு புரிஞ்சுண்டேன். அது யுனிவர்ஸ் விரிவடைஞ்சு வரதுன்னும், அந்த நெருக்கமான புள்ளிகளும், கேலக்சிகளும், வெளி விரிவடைய விரிவடைய, தமக்குள்ள இருக்கற இடைவெளியை அதிகமாக்கிக்கறது; அது அண்டத்த விரிவடைய வைக்கிறதுன்னும் சொன்னேன்.”

சரூவும், பவானியும் கை தட்டினார்கள்.

“வாடா, ஃப்லூடா பார்லருக்குப் போலாம்” என்றான் சரூ.

‘போலாம், போலாம், அதுக்கு முன்னாடி நீ ஏன் டல்லா இருந்தேன்னு சொல்லு’ என்றாள் பவானி.

‘எனக்கு, பானுமதி மேலயும், குவிகம் மேகஸின் மேலயும் கோவம்.’

“என்னது, ஏன்டா?” என்றனர் இருவரும் ஒரே குரலில்.

‘நீயே சொல்லு, பவானி. நாலஞ்சு மாசமா நம்மளப் பத்தியே எழுதல.’

“அதான் நம்ம சீனியர் பத்தி எழுதினாங்க இல்ல?”

‘ஆமா. அதுவும் வேற்றுக்கிரக வாசிகள் மண்ணுக்கு வரதும், இவங்களோட தங்கறதும்….’

“உனக்கே புடிச்சிருக்கில்ல. அப்றமென்ன? நாம கூடத்தான் வான்வெளிக்குப் போப் போப்போறம்.”

‘என்னது?’

‘நம்ம ‘ககன்யான்’ தெரியுமில்லையா?’

‘யெஸ், யெஸ், நம்ம விண்வெளி வீரர்கள் அதுக்காக தயாராகி வராங்க.’

‘அவங்க நம்ம வான்படையைச் சேர்ந்த  பைலட்கள். நாலு பேரு, சுபான்ஷு சுக்லா, ப்ரஷாந்த் பாலகிருஷ்ணன் நாயர், அஜித் க்ருஷ்ணன், ப்ரதாப்.’

“இதுல சுக்லா முதன்மை வீரராகவும், நாயர் தயார் நிலையிலும் இருப்பதற்காக ‘ஆக்ஸியம் ஸ்பேஸ்  எக்ஸ்’ல (Axiom SpaceX) தீவிர பயிற்சில இருக்காங்க. அவங்க ஐ எஸ் எஸ்ன்னு (International Space Station) நாம சொல்ற அகில உலக வான்வெளிக் கூடத்துக்குப் போவாங்க. ஃப்ளோரிடா கென்னடி மையத்துலேந்து ஐ எஸ் எஸ்க்கு பயணிப்பாங்க.”

‘இங்க ஐ எஸ் ஆர் ஓ, (ISRO) இந்திய வான்வெளிக் கழகம் நல்ல நடவடிக்க எடுத்திருக்கு. டி வி டி 1, (Test Vehicle1 Demonstration 1)அதாவது, பரிசோதன ஊர்திய வெற்றிகரமா இயக்கியிருக்கு.’

“அது எதுக்கு சரூ?”

‘இப்ப ஊர்திய விண்ணுல செலுத்தறச்சே, ஏதாவது கோளாறு ஏற்படக்கூடாது இல்லையா? அப்படியே ஏதாவது நடந்தாலும், விண்வெளி வீரர்கள் பாதுகாப்பா தப்பிக்கணுமில்லையா, அதுக்குத்தான் , இதை ‘அபார்ட் மிஷன்’ (Abort Mission) ன்னு சொல்றாங்க. அக் 21, 2023ல இத அழகா செஞ்சும் காம்பிச்சாங்க. அந்த பரிசோதன ஊர்திலேந்து, விண்வெளி வீரர்கள் பிரியறதுக்கான கேப்சூல் (Capsule) நன்னா செயல்பட்டது. அது மட்டுமில்ல, பிரிஞ்ச ‘மாட்யூல்’ (Module) கீழ இறங்கி வங்காள விரிகுடாவுல விழுந்தது. அந்த மாட்யூலையும் நம்ம கப்பல் படை ‘ஐ என் எஸ் சக்தி’ (INS Shakthi) பத்திரமா மீட்டெடுத்தது.’

 

கைகளைத் தட்டிய பவானி சொன்னாள் “இன்னொன்னும் செஞ்சிருக்காங்க. மனுஷங்கள அனுப்பறத்துக்கு முன்னாடி, ஒரு ரோபாட்ட அனுப்பிப் பரிசோதிக்கப் போறாங்க. அதுக்கு ‘வயோமித்ரா’ ன்னு பேரு.”

‘நம்ம வீரர்கள் பூமிலேந்து எத்தன உயரத்ல பறப்பாங்க?’

“400 கி மீ. இதக் (குறைந்த) பூமி சுற்றுப்பாதன்னு (Lower Earth Orbit) சொல்றாங்க. மூணு நாளக்கி அவங்க பயணிப்பாங்க. பத்திரமா இந்தியக் கடல்ல இறங்குவாங்க. வான் வெளில பயணிக்கறச்ச மன உடல் பாதுகாப்பு, பாதுகாப்பா கடல்ல இறங்கறது, கரைக்கு அவங்கள கொண்டு வரதுன்னு பக்கா ப்ளேன் வச்சிருக்காங்க.”

‘கேக்கவே சந்தோஷமா இருக்கு. மனிதன் இல்லாம அனுப்பற ட்ரையலை இந்த வருஷ முடிவுக்குள்ள செஞ்சிடுவாங்க.’

“எல்லாம் சரிடா, ஃபலூடா?”

‘இதுக்கு பதில் சொல்லு. உடனே போயிடலாம் இந்திய விண்வெளி தினம் எது?’

‘ஆகஸ்ட் 23’

‘கரெக்ட்’ என்ற பவானி பி ஏ எஸ் (BAS) என்றால் என்ன? என்று கேட்டாள்

இருவரும் முழித்தனர். பாரதீய அந்தரிக்ஷ் ஸ்டேஷன்- நம் வான்வெளி ஆய்வு மையம்- வரப் போகும் ஆண்டுகளில் விண்வெளியில் அமையும்.