பிள்ளைத்தமிழ்

தமிழில் பிள்ளைத்தமிழ் என்பது  மிகவும் சுவை ததும்பும் பாடல் வகை!! 

பிள்ளைத்தமிழ்  தமிழ் இலக்கியத்தில் வழங்கும் பிரபந்த நூல் வகைகளுள் ஒன்று.

புலவர்கள் தாம் விரும்பிய தெய்வங்கள், மற்றும் அவர்கள் போற்றும் பெருமக்கள்  ஆகியோரைக் குழந்தையாகப் பாவித்துப் பாடல் பாடுவது  பிள்ளைத்தமிழாகும்.

குழந்தை பிறந்து 3 மாதம் முதல் 21 மாதம் வரை அது காட்டும் அழகு ஒழுகும் எழிலினை அப்படியே சொற்சித்திரமாக வடிக்கின்றனர் புலவர் பெருமக்கள்.

அந்தப் பத்துப் பருவங்கள் இதோ!

Tamil Virtual University

1. 3-ஆம் மாதம்: காப்புப் பருவம்
2. 5-ஆம் மாதம்: செங்கீரைப் பருவம்
3. 7-ஆம் மாதம்: தாலாட்டுப் பருவம்
4. 9-ஆம் மாதம்: சப்பாணிப் பருவம்
5. 11-ஆம் மாதம்: முத்தப் பருவம்
6. 13-ஆம் மாதம்: வருகைப் பருவம்
7. 15-ஆம் மாதம்: அம்புலிப் பருவம்
8. 17-ஆம் மாதம்: சிற்றில் பருவம் (ஆண்குழந்தைகளுக்கு உரியது ) / நீராடல் பருவம் (பெண்குழந்தைகளுக்கு உரியது )
9. 19-ஆம் மாதம்: சிறுபறை பருவம் (ஆண்குழந்தைகளுக்கு உரியது ) / அம்மானைப் பருவம் (பெண்குழந்தைகளுக்கு உரியது )
10. 21-ஆம் மாதம்: சிறுதேர் பருவம் (ஆண்குழந்தைகளுக்கு உரியது) / ஊசல் பருவம் (பெண்குழந்தைகளுக்கு உரியது )

ஒட்டக்கூத்தர் எழுதிய குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ் இந்த வரிசையில் முதல் நூல். 

குமரகுருபரர் பாடிய மீனாக்ஷி பிள்ளைத்தமிழ் ,முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ் மிகவும் பிரபலம்.  

பெரியார் பிள்ளைத்தமிழ், அண்ணா பிள்ளைத்தமிழ், காமராஜர் பிள்ளைத்தமிழ், எம் ஜி ஆர் பிள்ளைத்தமிழ் , சிவாஜி கணேசன் பிள்ளைத்தமிழ்  போன்ற இக்காலத்தைய பிள்ளைத் தமிழ்ப் பாடல்களும் உண்டு !!

 பத்துப் பருவங்களில்தெய்வக்  குழந்தை வளரும் அழகை தேர்ந்தெடுத்த பாடல்கள் மூலம் பாடி விளக்குகிறார் மீனாக்ஷி பாலகணேஷ் ! 

அவற்றின் காணொளி இங்கே ! கேட்டு மகிழுங்கள்!!