
அது சிறிய ஊர்;
ஆனாலும் பெரிய மனம் உள்ள மக்கள் அதில் வாழ்ந்தார்கள். அவர்களுடைய பெருமையை உலகத்துக்குத் தெரிவிப்பதற்காகவே இருப்பவர்களைப் போலப் பல சிறியமனமுடையவர்களும் அங்கே இருந்தார்கள்.
ஒருவர் சில நிலங்களை வைத்துக் கொண்டு தம்மால் இயன்ற அளவுக்கு தர்மம்செய்து வந்தார்.
வேறு பலர் நாளுக்கு நாள் தம்முடைய செல்வத்தை பெருக்கிக்கொண்டுவாழ்ந்தார்கள். அந்தச் செல்வர்கள் வாழ்ந்ததனால் ஊருக்குப் புகழ் உண்டாகவில்லை.
சின்னக் குடித்தனக்காரராகிய வேளாளர் இருந்ததனால் வேறு ஊர்களிலிருந்துஏழைகள் வருவார்கள்; புலவர்கள் வருவார்கள்; அந்த அறச் செல்வரிடம் உதவிபெற்று செல்வார்கள்; தாம் போகும் இடங்களில் எல்லாம் அவருடைய புகழைப்பரப்பிக் கொண்டே போவார்கள். இதனால் அந்த ஊருக்குப் புகழ் உண்டாயிற்று. –
அந்த வேளாளருக்கு தமிழ் ஆர்வம் அதிகம். புலவர்களிடம் பாடல்களைக்கேட்டு இன்புறுவார். தமிழன்பும் அற நினைவும் ஒருங்கே இணைந்த அவரிடம்யாருக்குத்தான் அன்பு பிறக்காது?
ஒருநாள் ஒளவையார் காதில் அந்த நல்லவருடைய புகழ் விழுந்தது. நல்ல `மனிதர்கள் எங்கே இருந்தாலும் தேடிச் சென்று பார்த்து பாராட்டுவது `அந்தப் பெருமாட்டி க்கு இயல்பு. இந்த வேளாண்செல்வரையும்பார்க்க விரும்பி `ஒரு நாள் அவர் ஊருக்குச் சென்றார்.
ஊருக்குள்ளே நடந்து வரும்போது பல பெரிய மாளிகைகளைக் கண்டார். ‘இந்த `மாளிகைகளில் ஒன்றில் தானே அவர் வாழ்கிறார்?’ என்று உடன் வந்தவர்களை `ஒளவையார் கேட்டார்.
‘இல்லை; அவர் சிறிய வீட்டில் வாழ்கிறார். இந்த மாளிகைகளில் வாழ்கிறவர்கள் `அவரைக் காட்டிலும் பெரிய செல்வர்கள்’ என்றார்கள் அவர்கள் . `இந்த ஊரில் இவ்வளவு பெரிய செல்வர்கள் இருக்கிருர்கள் என்று யாரும் `சொல்லவில்லையே! என்றார் தமிழ் மூதாட்டியார். அதற்கு விடை ஒன்றும் யாரும் `கூறவில்லை.
ஒளவையார் வேளாண் செல்வர் வீட்டுக்குப் போனார். அவர் வருவதை அறிந்த அவர் `எதிர்கொண்ட அழைத்து உபசாரம் செய்தார். அவர் தனியாகவா வருவார்? அவருடன் வேறு `சில புலவர்களும் வந்திருந்தார்கள். ‘அவர் வாயிலிருந்து எந்தச் சமயத்தில் `என்ன முத்து உதிருமோ? அதை உடனே பொறுக்கிக் கொள்ளவேண்டும் என்று மிகுந்த `ஆவலோடு அவர்கள் காத்துக்கொண்டிருந்தார்கள்.
அந்த உபகாரி யாவரையும் அமரச் செய்து உபசாரம் செய்து விருந்து அளித்தார். `அவர் இட்ட விருந்தும் பேசிய பேச்சும் இனியனவாக இருந்தன. ஊரில் உள்ள பலர் `ஒளவையாரைப் பார்க்க வந்து விட்டார்கள்.
எல்லோரும் உணவு உண்டு அமர்ந்திருந்தார்கள். அப்போது அந்த ஊர்க்காரராகிய `பெரியவர் ஒருவர் ஒளவையாரை நோக்கி, “ஒரு விண்ணப்பம்’ என்றார்,
“என்ன, சொல்லுங்கள்?’ என்றார் ஒளவையார்.
“தாங்கள் இந்த ஊருக்கு எழுந்தருளியது, கலைமகளே எழுந்தருளியது போல `இருக்கிறது. தங்களைப் போன்ற பெரியவர்கள் இந்தச் சிறிய ஊருக்கு வருவதற்கு `இந்த ஊர் என்ன புண்ணியம் செய்ததோ, தெரியவில்லை. ஊரில் உள்ளவர்கள் `புண்ணியம் செய்ததனால் தாங்கள் வந்தீர்கள் என்று சொல்லுவது தவறு. இந்தப் `புண்ணியவான் இந்த ஊரில் இருக்கிற தால்தான் தங்களைப் போன்றவர்கள் இந்த `ஊரைத் தேடி வருகிறார்கள்.”
இதற்குள் அந்த உபகாரி, “தாத்தா, வேறு விஷயங்களைப் பற்றிப் பேசுங்கள்” என்றார்,
கிழவர் மேலே தொடர்ந்தார்: “நான் தங்களுக்குச் சொல்லவேண்டும் என்பதில்லை. `தாங்கள் தெய்வாம்சம் உடையவர்கள். தங்கள் திருவாக்கால் இந்தப் புண்ணியவானை `ஆசீர்வாதம் செய்ய வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன். எவ்வளவோ பேர்கள் `தங்கள் வாக்கால் புகழ் பெற்றிருக்கிறார்கள். இந்த வள்ளலையும் தாங்கள் `செந்தமிழ்ப் பாவால் வாழ்த்த வேண்டும்.’
வீட்டுக்கு உடையவர் ஒளவையாரைப் பார்த்து, “அந்தப் பெரியவர் என்னிடம் உள்ள `அபிமானத்தால் பேசுகிறார். இந்த ஊரில் பல பெரிய செல்வர்கள் `இருக்கிறார்கள். அவர்களைப் பார்க்க நான் மிகவும் சிறியவன். இறைவன் அவர்களுக்கு அளவற்ற செல்வத்தை கொடுத்திருக்கிறான். இந்த ஊரில் அவர்கள் `இருப்பதும் ஒரு பெருமைதான். பொதுவாக எல்லோரையும் வாழ்த்துவதுதான் முறை. `இந்த எளியேனைத் தனியே வாழ்த்துவதற்கு நான் என்ன செய்துவிட்டேன்!’ `என்றார், –
★
பிறரைக் கடலென்றும் அவரைக் கிணற்று நீரென்றும் பாடினார் ஒளவையார். வெறும் `அளவுக்கா அவ்வாறு அவர் சொன்னார்? கடல் அளவில் பெரியதுதான். ஆனால், `அதிலிருந்து ஒரு சொட்டுத் தண்ணிராவது தாகத்துக்கு உண்ணமுடியுமா? அதற்கு அருகிலேயே தோண்டிய கிணற்றில் சிறிய ஊற்றிலிருந்து வரும் நீரோ தாகத்தைப் `போக்கும். சிறிய ஊற்றாக இருந்தால் என்ன? கையில் அள்ளிக் குடிக்க போதாதா? வற்றாமல் நீர் வந்துகொண்டிருப்பதாயிற்றே! கடல் நீரை மேகம் வற்றச் செய்து உறிஞ்சிக் கொண்டு போய் எங்கோ பொழிகிறது. `அந்தச் செல்வர்களின் செல்வத்தையும் வேறு யாராவது வற்புறுத்தி அடித்துக் கொண்டு போய்ச் செலவழிப்பார்கள். ஒளவையார் இந்த எண்ணங்களையெல்லாம் புதைத்துப் பாடினர்.
‘உப்புக் கடலை போன்ற பெரிய `பணக்காரர்களும் இருக்கிறார்கள்; கிணற்றில் உள்ள ஊற்று நீரைப் போல நீயும் `இருக்கிறாய்’ என்று பாட்டைத் தொடங்கினார்
உவர்க்கடல் அன்ன செல்வரும் உளரே!
கிணற்றுஊற் றன்ன நீயுமார் உளையே!
பிறகு வாழ்த்தலானர். ‘அந்தப் பணக்காரர்களுக்கு மேலும் மேலும் பெருஞ் `செல்வம் உண்டாகட்டும் நீ…”
இப்போது அருகில் இருந்தவர்களின் ஆவல் `மிகுதியாயிற்று. ‘நீ பல காலம் நீண்ட ஆயுள் பெற்று வாழ வேண்டும்!”
செல்வர்தாம் பெருந்திரு வுறுக!பல்பகல்
நீவா ழியரோ! நெடிதே.
ஒளவையார் இதனோடு நிறுத்தவில்லை. இந்த உப காரியின் பெருமையைச் சொல்லாமல் `பாட்டு முடியாதல்லவா? பஞ்சகாலத்தில் அவர் புலவர்களைக் காப்பாற்றிய செய்தி `பெரிய சிறப்பாகத் தோன்றியது. யாரும் தம்மிடம் உள்ள பொருளைப் பிறருக்குக் `கொடுக்காமல் பதுக்கி வைத்துக்கொள்ளும் பஞ்ச காலத்திலும் உன்னிடத்தில் `உள்ள பொருளை எங்களைப் போன்றவர்களுக்கு வழங்கி, எங்கள் பாடலை `ஏற்றுக்கொள்பவன் நீ.”-இவ்வாறு பாடி முடித்தார்.
…ஈயாச் `சிறுவிலைக் காலத் தானும்
உறுபொருள் தந்துஎம் சொற்கொள் வோயே!
(சிறுவிலேக் காலம் – பஞ்சகாலம். சொல் – புகழும் வார்த்தைகள். கொள்வோயே – `கொள்பவனே; கொள்வாய் என்றும் பொருள் செய்யலாம்.)
அவர்களுக்கு எவ்வளவு பணம் சேர்ந்தாலும் கடைசியில் யாரேனும் `அடித்துக்கொண்டு போகப் போகிறார்கள். இவர் நீடுழி காலம் வாழ்ந்தால் `எப்படியும் அறம் புரிந்துகொண்டே இருப்பார். பணக்காரர் பணம் சேர்வதனால் `வரும் தீங்கை அறத்தால் போக்கிக்கொள்ளலாம். அது செய்யாதவர்களுக்குப் பணம் `சேரச் சேரத் துன்பமும் உடன்சேரும். பாட்டிக்கு இந்த உண்மைகள் நன்றாகத் `தெரியும். அதனல் அவர்களுக்குத் துன்பம் உண்டாகட்டும் என்று சபிக்க `வில்லை; இன்னும் பணம் சேரட்டும்’ என்று சொன்னார்.
உவர்க்கடல் அன்ன செல்வரும் உளரே!
கிணற்றுாற் றன்ன நீயும்ஆர் உளையே:
செல்வர்தாம் பெருந்திரு வுறுக! பல்பகல்
நீவாழியரோ நெடிதே! ஈயாச் சிறுவிலைக் காலத் தானும்
உறுபொருள் தந்துஎம் சொற்கொள் வோயே!
