1
பூடான் தலைநகர் திம்புவில் எங்கும் போக்குவரத்து விளக்குகள் பொருத்தப்படவில்லை.
2
போக்குவரத்து விளக்கு உலகில் முதல் முதலாக டிசம்பர் 1868ல் லண்டனில் பொருத்தப்பட்டது.
3
லண்டன் மற்றும் நியூயார்க் ஆகிய நகரங்களின், நிதி, வணிக மற்றும் கலாச்சார தலைநகரங்கள் நைலான் (NyLon) என்ற கருத்தாக்கம் ஆகும்.
4.
நைலான் கயிறு, சுஜாதா அவர்களின் முதல் நாவல்.
5.
நாவல் மரம் நூறு ஆண்டுகள் வரையும் வாழும்.
6.
நூறு சதங்களை சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் அடித்த முதல் கிரிக்கெட் வீரர் சச்சின்.
7. சச்சின் என்ற தமிழ் திரைப்படத்தை இயக்கிய ஜான் மகேந்திரனின் தந்தை இயக்குனர் மகேந்திரன் என்கிற அலெக்சாண்டர்.
8.
மகா அலெக்சாண்டர், தன் இருபதாவது வயதில் அரியணை ஏறி, கிரேக்கம் முதல் வடமேற்கு இந்தியா வரை தன் பேரரசை நிறுவி தனது 32ம் வயதில் காலமானார்.
9.
வயது வந்த மனிதனுக்கு வாயில் 32 பற்கள் இருக்கும்.
10.
பல்லின் குறுக்கு வெட்டு பகுதியின் பெயர் ஈறு
11.
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் என்பது எதிர்மறையான பொருளில் வரும் ஒரு வினைச்சொல்.
12.
சொல்லின் செல்வர்’ என்று போற்றப்பட்டவர் பேராசிரியர் இரா.பி. சேதுப்பிள்ளை.
13.
பிள்ளைத் தமிழ் ஆண்பால், பெண்பால் என இரண்டு பால்களிலும் பாடப்படுவதுண்டு.
14.
பால்வெளி, கோடிக்கணக்கான நட்சத்திரங்களின் தொகுப்பாகும்.
15.
கடல் நட்சத்திரங்களுக்கு இரத்தம் இல்லை
16. ரத்தசரித்திரம், இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் இதே பெயரில் வெளியான ராம் கோபால் வர்மாவின் திரைப்படம் ஆகும்.
17. வர்மக் கலையில் வர்ம முனைகள், மொத்தம் 108 முனைகள்.
18. 108 என்பது இந்தியாவில் அவசர கால அழைப்புக்கான கட்டணம் இல்லாத இலவசத் தொலைபேசி எண்.
சங்கிலி நீளும்…


