குருவாயூர் என்றாலே கூடவே நினைவுக்கு வருபவர் ‘நாராயணீயம்’ எழுதிய மேல்பத்தூர் நாராயண பட்டதிரி ஆவார். குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணனை முன்னிறுத்தி, பாகவதத்தின் சாரமாக, வட மொழியில் பக்தி சொட்டச்சொட்ட எழுதப்பட்ட கிருஷ்ண காவியமே ‘நாராயணீயம்.
பட்டதிரி அவர்கள் தனக்கு வந்த வாத நோய் நீங்கும்பொருட்டு ஸ்ரீ குருவாயூர் தலத்திற்கு வந்து ஸ்ரீ குருவாயூரப்பன் சந்நிதியில் ஸ்ரீமத் பாகவத சரித்திரத்தை வடமொழி சுலோகங்கள் மூலம் விளக்கிக் கூறி வழிபட்டுத் துதி செய்தார்.
1034 வடமொழி சுலோகங்களால் ஆனது ஸ்ரீமந்நாராயணீயம் குருவாயூரப்பன் சந்நிதியில் தினமும் பத்து சுலோகங்கள் வீதம் (ஒரு தசகம்) 100 தசகங்களில் நாராயணீயத்தை பாடி முடித்தார் நாராயண பட்டதிரி. அவ்வாறு பாடி பூர்த்தி செய்து குருவாயூர் கிருஷ்ண பகவான் பாதத்தில் சமர்ப்பித்தார். அவரது பக்திக்கு கட்டுண்ட ஸ்ரீகுருவாயூரப்பன் அவ்வப்போது தன் தலை அசைப்பின் மூலம் அவரது தோத்திரங்களை அங்கீகாரம் செய்தாராம். அதுவும் பிரகலாத சரித்திரத்தை, பட்டதிரி வர்ணிக்கும்போது மூலஸ்தானத்திலிருந்து சிங்கத்தின் கர்ஜனைக் கேட்டது – நரசிம்மனாகவும் காட்சியளித்ததார் .
1586ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 28ஆம் நாளில் ஸ்ரீ பட்டதிரி அவர்கள் ஸ்ரீமந்நாராயணீய காவியத்தை கிருஷ்ணன் பாதங்களில் சமர்ப்பித்து அனைவருக்கும் பெருமை கொடுத்த நாள் இது. ஸ்ரீகுருவாயூரப்பன் ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் ஸ்ரீமந் நாராயணீய தினம் என்று விசேஷமாக கொண்டாடப்படுகின்றது.
இந்த நாராயணீயத்தை குவிகம் சுந்தரராஜன் ஆகிய நான் 100 தமிழ்ப்பாடல்களில் எழுதி ஸ்ரீமந் நாராயணீயாம்ருதம் என்று வெளிட்டது நண்பர்களுக்குத் தெரியும்.
அதன் 100 பாடல்களுக்கும் அமெரிக்காவில் நியூஜெர்சியில் இருக்கும் பிரபல இசைப் பாடகி திருமதி அனிதா கிருஷ்ணா அவர்கள் இசை அமைத்து அவற்றைத் தன் தேனினும் இனிய குரலால் உள்ளத்தை உருக்கும் வண்ணம் பாடியுள்ளார். இந்த பிராஜக்டை நியூ ஜெர்சியில் இருக்கும் உஷா கிருஷ்ணகுமார், சாந்தி முத்தையா மற்றும் சிலர் முன்னின்று நடத்தினார்கள்.
2024 இல் டிசம்பர் 13, 2024 (கார்த்திகை 28 ஆம் நாள் ) நாராயணீய தினத்தன்று அதனை யூ டியூபில் வெளியிட்டு ஆன்மீக அன்பர்கள் அனைவரும் கேட்டு மகிழும் வண்ணம் செய்துள்ளார்கள்.
அதன் துவக்கத்தையும் அறிமுக உரைகளையும் , 1,2,3,4 பாடல்களையும் வீடியோவாக இந்த யூடியூப் லிங்க்கில் பார்க்கலாம் /கேட்கலாம்.
- உஷா கிருஷ்ணகுமாரின் அறிமுக வீடியோ
- குவிகம் சுந்தரராஜனின் முன்னுரை
- அனிதா கிருஷ்ணா – தெய்வீக பாடகரின் உரை
- சாந்தி முத்தையாவின் அனுபவ உரை
- ஸ்ரீமந் நாராயணீயாம்ருதம் 1,2,3,4 பாடல்கள் (இன்னும் 100 வரை வரும்)
