1.தென்றலில் மிதக்கும் குவிகம்
தென்றல் பத்திரிகையில் வந்த முழுக் கட்டுரையையும் படிக்க இந்த சுட்டியைத் தட்டுங்கள்.
https://drive.google.com/file/d/12qX_MzmzKncrTnB5J2JJV62gZB85DeJm/view
2.
12/01/2025 ஞாயிறு மாலை 6.30 மணி வழக்காடு மன்றம்

“தற்காலத் தமிழ் இலக்கியப் படைப்புகளின்
தரம் குறைவதற்கு முக்கிய காரணமான
பத்திரிகை ஆசிரியர்கள் குற்றவாளிகளே”
நா பாரதி
கல்கி அவர்கள் குற்றவாளியா ‘ என்ற முதல் வழக்காடு மன்றத்தைத் தொடர்ந்து இன்று குவிகத்தின் இரண்டாவது வழக்காடு மன்றம் , ‘பத்திரிகாசிரியர்கள் குற்றவாளியா ‘ என்ற தலைப்பில் ஆசான் வ வே சு ஐயா அவர்கள் நீதிபதியாக இருந்து நடத்தி வைத்த நிகழ்வு .
இதில் குற்றம், தொடுப்பவர், மறுப்பவர், சாட்சிகள், , ஜூரர்கள், குற்றவாளி என்று வழக்கின் அத்தனை பகுதிகளும் சிறப்பாக வெளிவந்த விதமும், நீதிபதி அவர்கள் இடை இடையே நாசுக்காகக் குறுக்கிட்டு, குட்டிட்டு, நடத்திச் சென்ற விதமும் நயம். இறுதியில் பார்வையாளர்கள் கருத்து சொல்லவும் வாய்ப்பு வழங்கப்பட்டதும் சிறப்பு.
தலைப்பைப் பற்றிக் கருத்துச் சொல்லும் அளவு அதிகம் இலக்கியம் படித்தவன் இல்லை என்பதால், என் முறை வந்தபோது ‘ தரம் ‘ என்ற வார்த்தைக்குக் காலம் மாறும்போது சமுதாயத்தில் ஏற்படும் அர்த்த மாற்றங்களையும் கணக்கில் எடுத்திருக்கலாம் என்ற கருத்தை மட்டும் பதிவு செய்தேன்.
உதாரணத்திற்கு ‘ இலக்கிய மொழி நடை’ என்பது மணிப்பிரவாளத் தமிழ், தனித்தமிழ், நடைமுறைத் தமிழ், ஆங்கிலம் கலந்த தமிழ் என்று இலக்கியத்தில் மாறி வரும் போக்கைத் தரத்தில் எங்கே வைப்பது என்ற கருத்தையும் எடுத்து விவாதித்து இருக்கலாமோ என்று தோன்றியது . இதன் ஒரு பக்கக் கருத்தை நீதிபதி அவர்கள் தனது உரையில் இறுதியில் சுட்டிக் காட்டினார்.
சமுதாயப் பழக்கங்கள் உலக மயமாகி விட்ட இன்றைய காலத்தில் இதுபோன்று இன்னும் பலவும் பத்திரிக்கைத் துறையில் பல மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கலாம். அவற்றின் தரம் பற்றியும் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.
இறுதியில் ஐயா வ வே சு அவர்கள் கொடுத்த தீர்ப்பு , வாதப் பிரதிவாதங்கள், ஜூரிகளின் தீர்ப்பு, குற்றவாளியின் தன்னிலை விளக்கம் இவற்றைக் கணக்கில் கொண்டு, கால அளவையும் கருத்தில் கொண்டு , அமைந்த விதமும் மிகச் சிறப்பு. காலத்திற்கேற்ற கருத்துக்களைத் தொடர்ந்து விதவிதமாக வழங்கி வரும் குவிகத்திற்கு வழக்கம் போல் நன்றி கலந்த வாழ்த்துகள்
வ.வே.சு. சார் அழகாக வழி நடத்தினார். ராஜாமணி சார், கணேசன் சார் இருவருமே சிறப்பாக தங்கள் வாதங்களை வைத்தார்கள். சுந்தர்ராஜன் அவர்களின் உணர்ச்சிப்பூர்வமான உரை அற்புதம்!
மன நிறைவைத் தந்தது இன்றைய வழக்காடு மன்றம்! நீதிபதி அவர்கள் நடத்திச் சென்ற விதம் நிகழ்விற்குப் பெருமை சேர்க்கும் வண்ணம் இருந்தது !
PP and DA – ராஜாமணி & தென்காசி கணேசன் இருவரும் கலக்கிவிட்டார்கள் !
ஜூரிகள் ரத்தினச் சுருக்கமாக தெளிவாக விவாதித்தது அருமையிலும் அருமை! பானுமதி, கிரிஜா, ரேவதி, பானுமதி வெங்கடேஸ்வரன் அனைவருக்கும் பாராட்டுதல்கள்!
இந்த நிகழ்விற்கு மொத்த rating 4.75 out of 5 கொடுத்த மக்கள் அனைவருக்கும் நன்றி!
3.
தமிழக அரசின் கனவு இல்லம் திட்டத்தில் சாகித்ய அகாதமி விருது பெற்றவர்களுக்கு வீடு வழங்கப்பட்டது. அதில் மொழிபெயர்ப்பாளர்களுக்கான விருது பெற்றவர்களில் கௌரி கிருபாநந்தன், இந்திரன் ஆகியோருக்கு சென்னையில் அடுக்குமாடி வீடு வழங்கப்பட்டுள்ளது.
அது பற்றிய காணொளி
4.
தமிழ் வளர்ச்சித் துறை பெருமையுடன் வழங்கும் மொழிபெயர்ப்பாளர் விருது இந்த ஆண்டு 10 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. விருது பெற்ற கௌரி கிருபாநந்தன் மற்றும் இந்திரன் ஆகிய இருவர் நமக்கு நன்கு அறிமுகமானவர்கள்.
அவர்களுக்கு நமது இதயம் கனிந்த நல் வாழ்த்துகள்.
5.
குவிகம் சுந்தரராஜன் எழுதி குவிகத்தில் தொடராக வந்த குமார சம்பவம் என்ற காளிதாசரின் தமிழ் கவிதை வடிவத்தை கிரி டிரேடிங் நிறுவத்தினர் புத்தகமாக வெளியீட்டுள்ளனர். அதன் அழகான அட்டைப் படங்கள் உங்கள் பார்வைக்கு இங்கே:
6.
ராய செல்லப்பா அவர்கள் அன்னையின் நினைவாக ஸ்வர்ணாம்பாள் சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்ற கதைகளை இரு புத்தகங்களாக குவிகம் வெளியிடுகிறது. அதன் வெளியீட்டு விழா பற்றிய அறிக்கை இதோ:
7.
குவிகம் சொலவடை
8.
விருட்சம் 5 புத்தகங்கள் வெளியீடு
விருட்சம் , குவிகம் இணைந்து நடத்திய விழா. அழகியசிங்கரின் கதை, கவிதை, கட்டுரைப் புத்தகங்கள் நான்கும் லாவண்யா சார் அவர்களின் சிறுகதைப் புத்தகம் ஒன்றும் சேர்த்து ஐந்து புத்தகங்களின் வெளியீட்டு விழா. அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நேற்று மாலை 6 மணிக்கு ஆரம்பம் ஆனது . சென்றவுடன் விழா அரங்கின் வாசலிலேயே வரவேற்றது ‘ஸ்ரீ மிட்டாய்’ யின் உயர்தர இனிப்பு , காரம் , காபி . உள்ளே வரவேற்றவர்கள் அழகியசிங்கரும் அவர் குடும்பத்தினரும்.
அழகியசிங்கரின் இசை புதிது குழுவின் சாந்தி மேடம், லதா மேடம். உஷா பாரதி மேடம் ஆகியோரின் சேர்ந்திசையில் கடவுள் வாழ்த்து. தமிழ்த்தாய் வாழ்த்து . நண்பர் ஆர்கே அவர்களின் கவிச்சுவையும், நகைச்சுவையும் கலந்த தொகுப்புரைகளோடு தொடர்ந்தது நிகழ்வு .
புத்தகங்கள் வெளியிட்டோர்க்கும், பெற்றுக்கொண்டோருக்கும் பயனாடைகள், பரிசுகள் மேடையில் அழகியசிங்கர் குடும்பத்தினரால் வழங்கப்பட்டன. மேடையில் பங்கேற்றவர்க்கு மட்டும் அல்ல, மேடைக்காகப் பங்காற்றிய ( ஒளி, ஒலி அமைப்பு ) அனைவர்க்கும் அதேபோன்று பயனாடைகளும் . பரிசுகளும் வழங்கிச் சிறப்பித்தது அழகியசிங்கரின் அன்பு .
சிறப்புப் பேச்சாளர் ஐயா திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் தனது சிறப்புரையில் குறிப்பிட்டது போல் எல்லாப் பேச்சாளர்களும், எல்லாப் புத்தகங்களையும் முழுவதும் படித்து உணர்ந்து உரையாற்றியது நிகழ்வின் தனிச் சிறப்பு.
நிகழ்வின் முடிவில் லாவண்யா அவர்களின் நன்றியுரையைத் தொடர்ந்து , அழகியசிங்கரின் நெகிழ்வான நன்றியுரையோடு விழா இனிது நிறைவுற்றது . தொடர்ந்து புகைப்படங்கள், அளவளாவுதல் என்று ‘உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிந்த ‘ ‘ அது ஒரு பொன்மாலைப் பொழுது ‘ . நன்றி அழகியசிங்கர் .
—————நாகேந்திர பாரதி
9.
5 புத்தகங்கள் வெளியீடு
குவிகம் பதிப்பக நூல்கள் வெளியீட்டில் முத்தமிழும் இணைந்து இருந்தது தனிச்சிறப்பு. கதை, கவிதை, நாடகம் என்று முத்தமிழும் இணைந்த புத்தகங்களின் ஆசிரியர்கள் மட்டும் அல்ல , வெளியிட்டவர்களும் பெற்றுக்கொண்டவர்களும் கூட அந்த முத்தமிழின் முதிர்ந்த அனுபவம் பெற்றவர்களாய் இருந்தது கூடுதல் சிறப்பு. விபரங்கள் வெள்ளித்திரையில் காண்க. sorry , மேலே நேற்றைய நிகழ்ச்சி நிரலில் காண்க.
கலா பாஸ்கரன் அவர்களின் கடவுள் வாழ்த்தும் , தமிழ்த்தாய் வாழ்த்தும் இறுதியில் அனைவரும் இணைந்து பாடிய தேசீய கீதமும், இந்த முத்தமிழ் விழாவின் இசைப் பகுதிக்கு மற்றும் ஒரு எடுத்துக் காட்டு .
கடைசி நிகழ்ச்சியாக ‘ டாக்டர் பாஸ்கரன்’ அவர்களின் ‘ கடைசிப் பக்கம் ‘ கட்டுரைப் புத்தக வெளியீட்டை வைத்திருந்ததும் சிறப்பு . அதைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பளித்த நண்பர் டாக்டர் பாஸ்கரன் அவர்களுக்கு நன்றி.
‘மாரல் பீரியடில்’ துவங்கி ‘ மஹாத்மா காந்தி ‘ யில் முடியும் அந்த முப்பது கட்டுரைகளையும் ,அன்று காலை, மற்றும் ஒருமுறை முழுதாகப் படித்து விட்டு வந்திருந்தேன். எனவே அதைப் பற்றி ‘விக்ரமன் கண்ணன்’ அவர்கள் விவரித்தபோது முழுமையாக அனுபவித்துக் கேட்க முடிந்தது .
பள்ளி, பயணம், கதை, கவிதை , இன்னும் , இன்னும் என்று கதம்ப மணம் வீசும் கட்டுரைகளில் , இசையைப் பற்றி அவர் எழுதியுள்ள கட்டுரையில் வெளிப்படும் அவரது சிறப்பான இசை ரசனை நமக்கு இசை உலகின் பற்பல கதவுகளைத் திறந்து காண்பிக்கிறது . இதே போல் தான் அந்த முப்பது கட்டுரைகளிலும் அவர் பார்த்தது, படித்தது, பட்டது எல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்து பளிச்சென்று புலப்பட்டது .படித்தபின் நமது பொது அறிவும் பலப்பட்டது.
நமது அழகியசிங்கரின் இசை புதிது குழுமம் பற்றியும் ‘நானும் இசையும்
‘ பக்கத்தில் அவர் சிறப்பாகக் குறிப்பிட்டதற்கு மிக்க நன்றி . அந்தக் கட்டுரையின் முடிவில் அவரது ‘இசைப் பயிற்சி ‘ பாதியில் நின்று விட்டதாக வருத்தத்துடன் குறிப்பிடுகிறார்.
‘கவலை வேண்டாம் பாஸ்கரன் சார் , மீதியை நமது இசை புதிது குழுவில் தொடரலாம் நீங்கள். அத்துடன் உங்கள் பாதியை ,இசை நயத்தோடு கடவுள் வாழ்த்தும் தமிழ்த் தாய் வாழ்த்தும் பாடிய உங்கள் பாதியையும், கலா பாஸ்கரன் அவர்களையும் அந்தக் குழுவில் சேர்த்து விடலாம் ‘ என்று கேட்டுக் கொள்கிறேன்.
நான் குவிகம் மின்னிதழில் ,’ முதல் பக்கமாகப்’ படிக்கும் இந்தக் ‘கடைசிப் பக்கத்தின் ‘ பல பக்கங்களைப் பற்றி முன்பே குவிகம் , கலை புதிது வாட்சப் குழுக்களில் எழுதிவிட்டதால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.
நிகழ்வின் ஆரம்பத்தில் கிடைத்த மைசூர் பாகு இனித்தது போல், இந்த முத்தமிழ் நிகழ்வும் முழுமையாக இனித்தது. ‘கடைசிப் பக்கம் ‘ பெற்றுக்கொண்டதற்காகப் போர்த்தப் பட்ட பயனாடையும் , அரங்கின் ஏசி குளிருக்கு இதமாக, பதமாக , பேருக்கு ஏற்றாற்போல் பயனாக இருந்தது. குவிகத்திற்கு நன்றி .













குவிகம் செய்யும் அட்டகாசம் ! இலக்கிய அட்டகாசம்! எத்தனை முகங்கள்! எத்தனை விரல்கள். தொட்டதெல்லாம் பொன்னாகிறது.. வாழ்த்துக்கள்.
LikeLike