அம்மாவை காப்பாற்ற மகனின் மாஸ்டர் ப்ளான்... தங்கைக்காக அண்ணன் கண்ணீர் : ஜீ தமிழ் சீரியலில் இன்றுஇரவு 7 மணி அளவில்;ரோஜா தனது அம்மாவை பார்த்து, “எம்மா இந்த அம்பானி மாதிரி பணக்காரக எல்லாம் ஒரு கல்யாணத்துக்கு ஐயாயிரம் கோடிய செலவு பண்றாக, ஆனா நம்மள மாதிரி ஆளுக ஒரு கல்யாணத்துக்கு அம்பதாயிரம் ரூவா பெரட்டவே ரொம்ப கஷ்டப்படுவாகள! அதுலயும் என்னோட கல்யாணத்த சொல்லவே வேணா என்னம்மா…”

அம்மாவான பார்வதி, “எதுக்குடி இந்த மாறி பேசுற, இங்க பாரு ரோஜா இப்பதான காலேசு சேந்திருக்க மொதல்ல நல்லா படி அதுக்கப்பறம் நம்மள மாதிரி கஷ்டப்பட்றவகளுக்கு உதவி செய்யு எதையுமே ஏத்துக்குற மனப்பக்குவம் வேணும் அது இருந்தாலே இந்த ஐயாயிரம் கோடி நம்ம காலு தூசிக்கு சமம். சரி உங்க அண்ணே வேல முடிஞ்சு வர்ற நேரமாச்சு போயி இட்லிக்கு சட்னி வை போ”

“ரோஜாம்மா அண்ணே வந்துட்டே  இங்க வா…”

“இந்தா வர்றே-ண்ணே” என்று  அடுப்படியிலிருந்து வருகிறாள்  ரோஜா.

“இந்தா ரோஜா ஒனக்கு புடிச்ச பால்கோவா வாங்கிக்கோ இந்தா!”பின் அண்ணன் வாங்கி கொடுத்த, பால்கோவாவை சாப்பிடுகிறாள் ரோஜா.

பார்வதி தனது மகனைப் பார்த்து,“ஏலே தம்பி ராஜா”

“என்னமா சொல்லு”

“இல்ல.. அப்பா தவறி நாளயோட ஒரு வருஷம் ஆகப்போது அதனால நாளக்கி ராமேசுவரத்துக்கு போய் தவசம் கொடுத்திட்டு வந்துருவோம்லே..!”என்று கண்கள் கலங்கியவாறு கூறுகிறார். இதைக் கேட்ட ரோஜாவுக்கும் கண்கள் கலங்குகின்றன. 

“சரிம்மா நாளைக்கே போவோம், அழாத”என்று அம்மாவையும் தங்கையையும் சமாதானப்படுத்துகிறான் ராஜா.

“அண்ணே நாளைக்கி எனக்கு பிராட்டிகல் இருக்கு நம்ம வர்ற சனிக்கிழம ராமேஸ்வரத்துக்கு போலாமாண்ணே”

அதற்குப் பார்வதி, “அதெல்லாம் வேணாம்லே நம்ம நாளைக்கே  போவோம் ரோஜா வேணும்னா  காலேசுக்கு போட்டோம்”

இறுதியில் ஒரு முடிவு எடுக்கப்பட்ட பின்; ஒன்றாக அமர்ந்து இட்டலியை சாப்பிடுகிறார்கள்.

“சரிம்மா நா படுக்குறேன்” என்று ராஜா தூங்க ஆரம்பிக்கிறான்.

மறுநாள் காலையில், ராஜாவும் அம்மாவும் ராமேஸ்வரத்திற்கு கிளம்புகிறார்கள். ரோஜா கல்லூரி செல்கிறாள்; ரோஜா, தனது அப்பாவுடன் இருந்த பழைய நினைவுகளை நினைத்துக் கொண்டே பிராட்டிக்கலில் கண்ணாடி குடுவையை கீழே தவற விடுகிறாள். 

“ஹேய் அறிவு இருக்கா இல்லையா..! கவனமெல்லாம் எங்க இருக்கு..?”என்று ஆசிரியர் திட்டுகிறார். 

காலேஜ் முடிந்ததும்; சோகமாக ரோஜா பேருந்தில் வீட்டிற்கு திரும்புகிறாள். 

பேருந்தை விட்டு கீழே இறங்கி வீட்டிற்கு செல்வதற்காக ஒத்தையடி பாதையில் தலையில் துப்பட்டாவை போர்த்தி கொண்டு, நடந்து செல்கிறாள்.

அப்போது எதிரே, “அக்கா ரொம்ப தாகமா இருக்கு..!  தண்ணீ இருக்கா…?”என்று ஒரு சிறுவன் கேட்கிறான். ரோஜா தனது பையில் இருந்த வாட்டர் பாட்டிலை எடுத்துக் கொடுக்கிறாள். தண்ணீரை குடித்துவிட்டு, வலிப்பு வந்தது போல் அந்த சிறுவன் தரையில் படுத்து புரளுகிறான். இதைப் பார்த்து ரோஜா பயந்து விடுகிறாள். அப்போது எதிரே ஒரு ஆட்டோ வருகிறது. 

ரோஜா ஆட்டோவை மறித்து,“அண்ணே ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போக கொஞ்சம் உதவி பண்ணுங்கண்ணே”

“சரிமா பண்றேன் ஆனா நீயும் கூடவே வாம்மா, இந்த பைய இடையிலேயே செத்துட்டான்னா ரொம்ப பிரச்சனையாயிருமா”என்கிறார் ஆட்டோக்காரர்.

“சரிண்ணே நா வாரேன்” 

இதியில், மூன்று பேரும் மருத்துவமனை நோக்கி ஆட்டோவில் செல்கிறார்கள்.

மாலை 4:30 மணி அளவில்,

“என்னடா தம்பி நாமளே வந்துட்டோம் இன்னுமா ரோஜா காலேசு விட்டு வரல”

“என்னன்னு தெரியலையேம்மா…?”

“ அடியே பார்வதி உம் மவ இன்னும் வீட்டுக்கு வரலடி..!” என்று சவக்கு சவக்கு வெத்தலையை போட்டுக்கொண்டு, பக்கத்து வீட்டு கிழவி கூறுகிறார்.

இதைக் கேட்ட ,ராஜா பதறி கொண்டு சைக்கிளில் காலேஜிற்கு செல்கிறான். காலேஜின் முன் கேட் பூட்டி இருக்கின்றது, வாட்ச்மேனிடம் விசாரிக்கிறான்.

“ஒரு சில கிளாசுக்கு பிராட்டிகல்னால இன்னைக்கு காலேஜ் 12 மணிக்கே விட்டாங்கயா”

 “அண்ணே கொஞ்சம் உதவி பண்ணுங்கண்ணே காலேஜுக்குள்ள போய் பாக்கலாமா”

அதற்குப் பின், வகுப்பறை,கழிவறை என்று தேடிப் பார்க்கிறார்கள். ரோஜாவை காணவில்லை.

மனக்கவலையோடு, ராஜா காவல் நிலையத்தில் புகார் கொடுத்து விட்டு;வீடு திரும்புகிறான். ஒத்தையடி பாதையில் செல்லும் போது ரோஜாவின் வாட்டர் பாட்டிலை பார்க்கிறான்.

“ரோஜா… ரோஜா.. எங்க இருக்க..?” என்று ராஜா கத்துகிறான்.

இந்த செய்தியானது, ஊர் மக்களுக்கு தெரிய ஆரம்பிக்கிறது. இருட்ட ஆரம்பித்தன. ஊர் மக்கள் கையில் டார்ச் லைட்டை வைத்துக்கொண்டு, ஒரு சில பேர்கள் ஒத்தையடி பாதைக்கு அருகில் உள்ள சோளத்தட்டை காட்டிலும். 

ஒரு சிலர் கருவேலங்காட்டிற்குள்ளும், ஊரின் ஒதுக்குப்புறத்திலும், ரோஜாவை தேட ஆரம்பிக்கிறார்கள். இதற்கிடையில் போலீசார்களும் அங்கு வருகிறார்கள்.

“சார்…. சார்… ஏ பாப்பா வாட்ரு பாட்லு அந்த ஒத்தையடி பாதையில கெடந்திச்சி, ஆனா..! சுத்தி முத்தி பாத்தா ஆள காணோ சார்” என்று பதற்றத்துடன் ராஜா.

“ஐயா என்னோட மகள எப்டியாவது கண்டுபிடிச்சுருங்கையா…, பசி தாங்க மாட்டாயா…!”

“சரிம்மா…சரிம்மா நாங்க கண்டுபிடிச்சிடுவோம் அழாதீங்க” என்று போலீஸ்.

மறுநாள் சனிக்கிழமையன்று,

“ஐயோ… ஐயோ…! நா மட்டும் ஒரு நாள் பொறுத்திருந்தா இந்நேரம் எங் கூட ரோஜா இருந்திருப்பாலே கடவுளே…!”

“இப்ப எதுக்கு ஒப்பாரி வைக்க பாப்பா செத்தா போய்ட்டா…..? நம்மள விட்டு பாப்பா எங்கையும் போ மாட்டா கெடச்சிருவா..! அழாதம்மா” என்று நம்பிக்கையோடு ராஜா கூறுகிறான்.

பிறகு சித்தப்பா இருசக்கர வாகனத்தில், சித்தப்பாவுடன் காவல் நிலையத்திற்கு செல்கிறான்.

“சார்.. சார்… எந்த தகவலும் கெடச்சதா சார்?”

“தம்பி நாங்களும் தேடி பாத்துட்டு தா இருக்கோம் கவலைப்படாத ஒ தங்கச்சி கெடச்சிருவா..!” என்று போலீஸ்.

ராஜா தன் சித்தப்பாவுடன்; திருநெல்வேலியில் உள்ள கோயில், பூங்கா, ரயில்வே ஸ்டேஷன் என்று பல இடங்களில் சல்லடை போட்டு, ரோஜாவை தேடி பார்க்கிறான். 

மாலை 3:30 மணியளவில்; ராஜாவிற்கு ஒரு அழைப்பு வருகிறது, “தம்பி கயத்தாறு போற வழியில காட்டுக்குள்ள ஒரு பாழடஞ்ச பில்டிங் இருக்குல அங்க ஒரு பொண்ணோட பாடி கெடச்சிருக்கு மொகம் சரியா அடையாளம் தெரியல கொஞ்சம் சீக்கிரம் வாரீகளா..!”

ராஜா, பதறி அடித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தனது சித்தப்பாவுடன் அந்த இடத்திற்கு செல்கிறான். ராஜா சாலையில் செல்லும்போது மனதிற்குள், ‘ அது என்னோட பாப்பாவா மட்டும் இருக்க கூடாது கடவுளே…!’ 

“ராஜா நீ ஒன்னும் பயப்படாத, அது நம்ம பாப்பாவா இருக்காது..!”என்று சித்தப்பா தைரியப்படுத்துகிறார்.

இறுதியில் சம்பவ இடத்திற்கு செல்கிறார்கள். கூட்டம் கூடி நின்றது.“சார் இங்க ஒரு பொண்ணு இறந்து கெடக்கிறதா தகவல் வந்துச்சு..!”என்று கலக்கத்தோடு ராஜா கேட்கிறான்.

“ஓ..! அதுவாப்பா அந்த பொண்ண மார்ச்சுருக்கி கொண்டு போய்ட்டாங்க”என்று, அங்கு தடயங்களை சேகரித்துக் கொண்டிருந்த ஒரு போலீஸ் கூறுகிறார்.

அப்போது, ராஜா வேலியில் ஒரு துப்பட்டா சிக்கி இருப்பதை பார்க்கிறான். ராஜாவிற்கும் சித்தப்பாவிற்கும் அடி வயிறு கலங்க ஆரம்பிக்கிறது. அதற்குப்பின்,பிணவறைக்கு இரண்டு பேரும் செல்கிறார்கள். ராஜா வெள்ளைத் துணியை விலக்கி முகத்தை பார்க்கிறான். மனது துடிதுடிக்கின்றன, கண்ணீர் குளமாகின்றன, “ரோஜா…. அம்மா ரோஜா இங்க பாரு அண்ணே  வந்திருக்கே..! கண்ண தொற ரோஜா…உனைய இப்படி பண்ணது யாரும்மா சொல்லு ரோஜா… ஐய்யோ…ஐய்யோ.. டாக்டர் என்னோட தங்கச்சிக்கு என்னாச்சு..! டாக்டர் சொல்லுங்க…!”என்று ராஜா தேம்பி தேம்பி கதறி அழுகிறான்.

“ இது ஒரு கேங் ரேப்(கூட்டு பலாத்காரம்) இரத்தம் ரொம்ப ப்ளீடிங் ஆய்யுருக்கு, ஒங்க தங்கச்சி இறக்குற வரைக்கும் நரக வேதனைய கொடுத்திருக்காங்க. அது இல்லாம மொகம் அடையாளம் தெரியகுடாதுண்ணு தலையில்ல

பாரங்கல்ல போட்டு செதச்சுருக்காங்க” என்று மருத்துவர் கூறுகிறார்.

“ஐயோ.. ஐயோ.. ஐயோ… இங்க பாருங்க சித்தப்பா எப்படி செதச்சி வச்சிருக்காய்ங்கன்னு..!”என்று தலையில் அடித்துக் கொண்டு ராஜா பிணவறைக்கு வெளியே பித்து படித்தது போல் வந்து உட்காருகிறான். சித்தப்பாவும் கூடவே அழுகிறார். பத்திரிக்கையாளர்கள் கூடுகிறார்கள். ஊர்மக்கள், ரோஜாவை பார்ப்பதற்காக பிணவறைக்கு வருகிறார்கள். 

அப்போது ராஜா பதறிக்கொண்டு, “அம்மாவ எங்க காணோம்”

அதில் ஒரு பெரியவர் கலக்கத்தோடு, “ஐயா.. ராஜா.. பாப்பாக்கு இப்படி ஆயிடுச்சுண்ணு தெரிஞ்ஜதுல நெஞ்சுவலி வந்து மவராசி உசுர விட்டாயா..!”என்கிறார்.

இதைக் கேட்டு, ராஜா மயக்கம் அடைந்து விடுகிறான். முகத்தில் தண்ணீரை தெளிக்கிறார்கள். ரோஜாவை தேடியதில் தண்ணீரை கூட குடிக்க மறந்து விடுகிறான். அப்போதுதான் தண்ணீரை குடிக்கிறான்.

இரவு 8:45 மணியளவில்; ராஜா, தனது தங்கையின் பிரேதத்தோடு சித்தப்பா உடன் ஆம்புலன்ஸில் வீட்டை நோக்கி செல்கிறான். ராஜாவிற்கு ஆம்புலன்ஸில் செல்லும் ஒவ்வொரு நிமிடமும் திக்… திக்… என்று இருந்தது. இறுதியில் ஆம்புலன்ஸ் வீட்டை அடைந்ததும், ஒப்பாரியம், கதறலும் மேலும் அதிகமாகின. அம்மாவின் பிரேதத்திற்கு அருகில் மகளின் பிரேதமும் வைக்கப்படுகிறது. இதைப் பார்த்து ராஜா மன வேதனையின் ஆழத்திற்கே செல்கிறான். 

‘கஷ்டமோ, பிரச்சனயோ வரும்போது கண்ண மூடி கொஞ்ச நேரம் யோசிச்சு பாரு எல்லாம் சரியாயிடும். பாதியில நின்ன வீட முழுசா நம்ம கட்டி முடிப்போம் பாரு..! நீ ஒன்னும் கவலப்படாதலே அம்மா நா இருக்கேன்’

‘அண்ணே, இதுக்கு போயா அழுவ நீ வேணா பாரு நா இந்த மொத வருஷம் முடிகிறதுக்குள்ளயுமே நம்ம புது வீட்டுல தான் இருப்போம்..! அழாதண்ணே’ என்று அம்மாவும் தங்கையும் கூறிய வார்த்தைகள் ராஜாவின் மனதிற்குள் ஓடுகிறது.

ஒரு சில உறவினர்கள் சமாதானப்படுத்துகிறார்கள்.

இறந்தவர்களுக்கு,அனைத்து மக்களும் அஞ்சலி செலுத்த வருகிறார்கள். 

“இப்படி பண்ணிட்டாய்ங்களே ஐயோ…!அவிங்க மட்டும் எங் கையில கெடச்சா அவிங்களோட இத உசுரோடையே அறுக்கணும்”என்று ஆதங்கத்தில் ஒரு சில கிழவிகள். 

மறுநாள் காலையில், 

“சனிக்கிழம ரெண்டு பேரும் இறந்திருக்கிறதனால சனி பெணம் தனி பெணம்மா போகாது அதனால ரெண்டு கோழியும் சேத்து அடக்கம் பண்ணனும்” என்று ஒருவர் கூறுகிறார்.

“அதான் ஒன்னுக்கு ஒன்னு துணையா போதே அப்பறம் என்ன?”என்று மற்றொருவர்.

“அண்ணே இப்படி எல்லாம் பேசாதீங்க..! அதெல்லாம் வேண்டாம்ண்ணே எங்க அம்மாவையும்  தங்கச்சியையும் புது வீடு கட்ற பக்கத்திலே  அடக்கம் செஞ்சிருவோம்” என்று அழுது கொண்டே ராஜா கூறுகிறான்.

இறுதியில், ராஜா கூறிய மாதிரியே அடக்கம் செய்கிறார்கள். 

கயத்தாறு, ரோஜா கற்பழிப்பு சம்பவத்தால் தமிழகமே கொந்தளித்து எழுந்தன.

“தூக்கிலிடு.. தூக்கிலிடு.. காம கொடூரர்களை தூக்கி விடு..” என்று போராட்டங்கள் வெடிக்க ஆரம்பித்தன.

ஒரு சில நாட்களுக்குப் பின், நீதிமன்றமானது,குற்றவாளிகளான நான்கு பேரையும் தூக்கில் போடுகிறது.

ஒரு நாள்,“அண்ணே என்னைய மன்னிச்சிடுங்க..! ரோஜா-க்கா இறந்ததுல நானும் ஒரு காரணம் தான்…!”

“என்ன தம்பி சொல்ற புரியல”என்று ராஜா கேட்கிறான். 

“அண்ணே…. அது வந்து அந்த நாலு பேரும் என்னைய மெரட்டி  வலிப்பு வர்ற மாதிரி நடிக்கணும்னு சொன்னாங்க…! அதாண்ணே வேற வழி தெரியாம நா அப்படி பண்ணிட்டேன். இதுல வேற என்னோட தங்கச்சிய கொன்றுவேன்னு சொன்னாங்கண்ணே..!” என்று அழுது கொண்டே அந்த சிறுவன்  கூறுகிறான். 

“வாழ்க்கையில தப்புங்கிறது எல்லாரும் பண்ணுவோம். ஆனா பொண்ணுங்க விஷயத்துல நா ஒனக்கு ஒன்னு சொல்றேன்,

ஒரு பொண்ண அடையணும்னு நெனைக்கிறவன் ஆம்பள கெடையாது. அந்த பொண்ண எந்த பொறுக்கி நாய்ங்களும் அடைய கூடாதுன்னு நினைக்கிறாம் பாரு அவன் தான் உண்மையான ஆம்பள..! இத என்னைக்கும் நீ மனசுல வச்சுக்கோ”என்று ராஜா கனத்த இதயத்தோடு அறிவுரை வழங்குகிறான்.

“எனக்கும் ஒரு பாப்பா இருக்குண்ணே நீங்க சொன்னத என்னைக்கும் நா மறக்க மாட்டேன்” என்று அந்த சிறுவன் கூறுகிறான்.

ஒரு வருடங்களுக்குப் பிறகு, ராஜா தனது அப்பா,அம்மா,தங்கை என்று மூன்று பேருக்கும் இராமேஸ்வரத்தில் திதி கொடுத்துவிட்டு, வீட்டிற்கு வருகிறான்.

“டேய் தம்பி ராஜா எந்திரி டா நேரம் ஆச்சு…ஏலே..!”

“அம்மா… அம்மா…”

“என்னலே ஆச்சு என்ன? எதுக்கு இப்படி வேர்த்து கொட்டுது..!”

“அம்மா….. கனவுல நீயும், பாப்பாவும் சாகுற மாதிரி வருதும்மா..! ஐயோ.. ஐயோ..!”

சிறிது நேரம் கழித்து, ராஜா தான் கண்ட கனவை அம்மாவிடமும் தங்கையிடமும் கூறுகிறான்.

“அட லூசு பயலே..! அம்மா சாகுற மாதிரி கனவு வந்தா மகனுக்கு கல்யாணம் நடக்க போதுன்னு அர்த்தம்..! அதே மாதிரி தங்கச்சி சாகுற மாதிரி கனவு வந்தா  தங்கச்சிக்கு நல்ல மாப்பிள்ள கெடைக்க போதுன்னு அர்த்தம்..! இந்த கனவ நெனச்சு மனச போட்டு கொழப்பிக்காத”என்று ராஜாவை அம்மா சமாதானப்படுத்துகிறார்.

“சரி.. அப்போ நம்ம சனிக்கிழமயே தவசம் கொடுக்க போவோம்”என்று ராஜா முடிவு எடுக்கிறான். 

சிறிது நேரம் கழித்து, “ஹே..! ரோஜா இந்தா இந்த மடக்கு கத்திய எப்பவுமே பேக்குள்ளயே போட்டுக்கோ, அப்புறம் பாசில ரெண்டு மூணு ஊக்கையும் மாட்டிக்கோ, கொஞ்ச நாள் பொறுத்துக்கோ அண்ணே உனக்கு ஒரு போன் வாங்கி தாரேன்”

“என்னண்ணே கனவு பலிச்சுரும்னு பயப்படுறியா”

“ஆமா…! பொம்பள புள்ள இருக்கிற வீட்ல எல்லாத்துக்கும் இருக்கிற தவிப்பு  தான இது”என்று ராஜா.

பிறகு, அண்ணன் கொடுத்த கத்தியை பைக்குள் போட்டுவிட்டு,“சரிண்ணே சரிம்மா நா  காலேஜுக்கு போயிட்டு வாரேன்”என்று ரோஜா கிளம்பி விடுகிறாள். 

மறுநாள் சனிக்கிழமையன்று, ராஜாவும் அவனுடைய அம்மாவும் தங்கையும்; அப்பாவிற்கு தவசம் கொடுக்க ராமேஸ்வரத்துக்கு செல்கிறார்கள்.

ஆறு மாதங்களுக்குப் பிறகு, ராஜா பாதியில் நின்ற வீட்டை கட்டி முடிக்கிறான். அதோடு ஓட்டு வீட்டிலிருந்து புது வீட்டிற்கு குடியேறுகிறார்கள். 

“ஒரு சில நேரங்களிலும் இடங்களிலும், இந்த கனவானது நிஜமாகியும் இருக்கின்றன”