( புகைப்படம் நன்றி: தினமலர்)
இந்த ஆண்டு ‘திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சி.,யும்- 1908‘ என்ற ஆய்வு நூலை எழுதிய பேராசிரியர் ஆ . இரா வெங்கடாசலபதிக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
மிக மிக மகிழ்ச்சியுடன் நண்பர் ஆ இரா வெங்கடாசலபதிக்கு குவிகத்தின் சார்பாக மனம் நிறைந்த வாழ்த்துதல்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவருடை பாரதி பற்றிய நூல் வெளியீட் டு விழாவிற்குச் சென்று அவருடைய உரையை நேரில் கேட்டு மகிழ்ந்தது இன்றைக்கு நினைவில் வருகிறது.
நமது குவிகம் இலக்கியவாசல் நிகழ்விலும் ஒரு முறை பேசியிருக்கிறார்.
மிகச் சிறந்த ஆராய்ச்சியாளர். தமிழ் அறிஞர்
இவர் புதுதில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் முனைவர் பட்டம் பெற்றார்.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், சிக்காகோ பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கற்பித்தல் பணியில் ஈடுபட்டார்.
பாரிஸ் , கேம்பிரிட்ஜ் , இலண்டன், ஹார்வர்டு ஆகிய இடங்களில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளார்.
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் இந்தியப் படிப்பில் கலாச்சார உறவுகளுக்கான இந்தியப் பேரவைத் தலைவராக இருந்துள்ளார்.
விருதுகள்
2021ஆம் ஆண்டுக்கான கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது[10]
2021-2022ஆம் ஆண்டுகளில் பாரதியார் விருது [11][12]
கோயம்புத்தூர், உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையம் இவருக்கு 2023 ஆண்டிற்கான டாக்டர் நல்ல பழனிசாமி பிற துறைத் தமிழ்த் தொண்டர் விருது
சாகித்திய அகாதமி விருது, 2024 – (திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சி.யும் 1908)
இவரது நூல்கள்
பின்னி ஆலை வேலை நிறுத்தம்
அந்தக் காலத்தில் காப்பி இல்லை
நாவலும் வாசிப்பும்
புதுமைப்பித்தன் கதைகள் (தொகுப்பாளர்)
புதுமைப்பித்தன் கட்டுரைகள் (தொகுப்பாளர்)
In Those Days There Was No Coffee
பாரதியின் சுயசரிதைகள்
பாரதி; கவிஞனும் காப்புரிமையும் – பாரதி படைப்புகள் நாட்டுடைமையான வரலாறு
சென்றுபோன நாட்கள் – பதிப்பாசிரியர்
Province of the Book
இன்று துயர்மிகு வரிகளை நான் எழுதலாம் பாப்லோ நெருடா கவிதைகள் (மொழிபெயர்ப்பாளர்)
Chennai not Madras
திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சி.யும் 1908
(விக்கிபீடியாவிலிருந்து)

