6mm Plastic Chain - 5M (White)
1.
வாடிகன் சிட்டியின் மக்கள்தொகை 764. அதில் 5.5 சதவிகிதம் பெண்கள்
2.
இந்தியாவின் முதல் பெண்கள் பள்ளிக்கூடம் 1848ல் பூனேவில் சாவித்திரி பாய் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது
3.
நடிகையர் திலகம் சாவித்திரிக்கு இந்திய அரசாங்கம் 08-03-2009ல் தபால்தலை வெளியிட்டது
4.
உலகின் பெரிய தபால்தலை ‘ஃபாத்திமா பின்த் முபாரக் அல் கெத்பி’ அவர்களின் நினைவாக 2013ல் வெளியிடப்பட்டது. அவர் அமீரகத்தின் ‘தேசத்தின் தாய்’ என்று போற்றப்படுகிறார்.
5.
“தாய்” இதழுக்கு ஆசிரியராக இருந்த வலம்புரி ஜான், ஒரு சிறுவர் இதழுக்கும் ஆசிரியராக இருந்தார். அதன் பெயர் “பாப்பா மலர்”
6.
மலர் டீச்சர் என்கிற பாத்திரத்தில் அறிமுகமாகி பிரபலமானார் நடிகை சாய் பல்லவி
7.
பல்லவி, ஒரு பாடலின் கருத்தை முன் வைப்பதாலும், சரணங்களோடு இயைந்து வருவதாலும், மீண்டும் மீண்டும் பாடப்படும்.
8.
மீண்டும் ஜீனோ, திரு.சுஜாதா அவர்கள் எழுதிய ‘என் இனிய இயந்திரா’வின் இரண்டாம் பாகம் ஆகும்.
9.
இரண்டாம் உலகப் போரில் எட்டு கோடிக்கும் அதிகமானோர் நேரடியாகவும் மறைமுகமாகவும் கொல்லப்பட்டனர்.
10.
கொல்லாமை சமண சமயத்தவரின் தலையாய அறம்.
11.
அறம் செய்ய விரும்பு என்பது முதல் ஆத்திச்சூடி
12.
சூடிக் கொடுத்த சுடர்கொடி என்று, ஆண்டாள் தான் அணிந்து மகிழ்ந்த பூமாலையை சூட்டியதால் அழைக்கப்பெற்றார்.
13.
பூமாலா அணை இந்தியாவின் கேரளாவின் மத்தியில் உள்ள திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
14.
திருச்சூர் பூரம், திருவிழாக்களின் திருவிழா என்று கேரளாவில் அழைக்கப்படுகிறது.
15.
திருவிழாவை சுற்றி பார்ப்பது போல கனவு கண்டால், செல்வம் சேர்க்கும் யோகம் வருமாம்.
16.
யோகம் இந்துப் பஞ்சாங்கத்தின் ஐந்து (பஞ்ச) கூறுகளுள் ஒன்று.
17.
ஐந்து புள்ளிகளைக் கொண்ட ஒரு வடிவியல் வடிவத்திற்கு குயின்கன்க்ஸ் என்று பெயர்.
18.
குயின்கன்க்ஸ் முதலில் ரோமானிய குடியரசில் வெளியிடப்பட்ட நாணயமாகும்

*சங்கிலி நீளும்…..*