

இதைப் போல இன்னொரு வினோதமான வழக்கு!
அமெரிக்காவில் ரொனால்ட் என்பவர் தலையில் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தாக பிரேதப் பரிசோதனையில் தெரிய வந்தது.
அந்த ரொனால்ட் தற்கொலை செய்து கொள்வதற்காகப் பத்தாவது மாடியிலிருந்து கீழே குதித்திருக்கிறார். ( தற்கொலைக் கடிதம் எழுதிவிட்டுத்தான் குதித்திருக்கிறார்) . ஆனால் அவர் 9 வது மாடி வழியாக விழும்போது அங்கே ஒரு அறையில் இருந்த ஒருவர் ஜன்னல் வழியாகத் துப்பாக்கியால் சுட்டதால் ரொனால்ட் தலையில் குண்டு பாய்ந்து அவர் உடனே இறந்திருக்கிறார்.
இன்னொரு திருப்பம் என்ன வென்றால் 8 வது மாடியில் தவறி விழுபவர்களைத் தாங்கிக் கொள்ள பாதுகாப்பு வலை இருந்தது. அது ரொனாலடுக்கும் சுட்டவருக்கும் தெரியாது.
வலை இல்லையென்றால் அவன் எப்படியும் இறந்துபோவான். அதனால் குண்டு பட்டாலும் தற்கொலை என்றே கொள்ள வேண்டும் என்று முதல் ஆர்கியூமெண்ட் எழுந்தது.
ஆனால் வலை இருந்ததால் இந்தத் தற்கொலை , கொலைக் குற்றமாக மாறியது.
அந்த 9 வது மாடியில் ஒரு பெரியவரும் அவர் மனைவியும் இருந்தனர். அந்தப் பெரியவர் மனைவி மீது கோபம் கொண்டு துப்பாக்கியால் சுட்ட போது அது குறி தவறி ஜன்னல் வழியாகச் சென்று ரொனால்டைத் தாக்கியது.
அதனால் பெரியவர் மீது கொலைக் குற்றம் சாட்டினார்கள். பெரியவரோ, தன் மனைவியைப் பயமுறுத்த குண்டு போடாத துப்பாக்கியால் அவளை அடிக்கடி சுடுவது போல நடிப்பது வழக்கம் என்றும் இப்போதும் அப்படியே செய்த போது அதில் தவறுதலாக குண்டு இடப்பட்டிருந்தது. அதனால் இது ஒரு விபத்து என்றே கருதவேண்டும் என்ற ஆர்கியூமெண்ட் வந்தது.
இன்னும் தீவிர விசாரணையின் போது அந்தத் தம்பதிகளின் மகன், தனது தாய் தனக்குப் பணம் தராததால் அவளைக் கொல்வதற்காக தந்தையின் வெற்றுத் துப்பாக்கியில் குண்டு போட்டான் என்பது நிரூபணமாயிற்று. அதனால் அவர்கள் மகன் மீது ரொனால்ட் கொலைக் குற்றம் விழுந்தது.
இன்னொரு முக்கிய திருப்பம் இந்த வழக்கில் !
அவர்கள் மகன்தான் செத்துப்போன ரொனால்ட்! அம்மாவைக் கொல்ல வைத்திருந்த துப்பாக்கியை அப்பா சில வாரங்களாக உபயோகிக்கவேயில்லை என்பதால் வெறுத்துப் போய் தற்கொலை செய்து கொள்ள பத்தாவது மாடிக்குச் சென்று குதித்தான் அவன். அந்த நேரம் பார்த்து அவன் லோட் பண்ணின துப்பாக்கியால் அவன் அப்பா அவன் அம்மாவைச் சுடுவதாக நடித்த போது உண்மையில் குண்டு வெடித்து ஜன்னல் வழியாகச் சென்று ரொனால்டைத் தாக்கிக் கொன்றது.
ஆகிய அவனே அவன் சாவுக்குக் காரணம் . ஆகையால் இந்த வழக்கைத் தற்கொலை என்று முடிவு கட்டி அனைவரும் பெருமூச்சு விட்டார்கள்!
இது எப்படி இருக்கு?

‘நீதிமன்றம் பல வினோதமான வழக்குகளைச் சந்தித்து இருக்கிறது’ . அவற்றில் இவை இரண்டு
LikeLike