1)    டிசம்பர் மாத சிறந்த சிறுகதை  ஓடக்காடு பெரியப்பா வீடு – கோபாலகிருஷ்ணன்            (அந்திமழை –   டிசம்பர் 2024) – SR தியாகராஜன்

2)    நவம்பர் மாதத்தில் வந்த கதைகளில் சிறந்த கதை :  பால் மன கணக்குகதாசிரியர்:    உஷா தீபன். தினமணி கதிர் – கே  விஸ்வநாத்

3)    அக்டோபர் – இங்கிவனை யான் பெறவே – ஆர் வி சுப்பிரமணியன் – சொல்வனம்  -ராமமூர்த்தி

4)    செப்டம்பர் : “சொர்க்கம்” – (ஜீஎஸ் – சொல்வனம்). – டாக்டர் பாஸ்கரன்

5)    2024 ஆகஸ்டு மாதத்தின் சிறந்த கதை பேச்சி க/பெ மாரியப்பன் [வயது 44] ஆசிரயர் : மதிகண்ணன்உயிர் எழுத்து-ஆகஸ்டு, 2024 – பென்னேசன்

6)    2024 ஜூலை மாதத்தின் சிறந்த கதை சாய்ந்தாடி  – ரகுராமன் – சொல்வனம் (28.07.2024) – ஹரிஹரன்

தேர்வு பெற்ற ஆறு கதாசிரியர்களும் , ஐந்து நடுவர்களும் , மற்றும் 3 கதைகளளைப் பிரசுரம்  செய்த சொல்வனம் பத்திரிகையின் ஆசிரியர் பாஸ்டன் பாலா அவர்களும் கலந்துகொண்டு உரையாடியது நிகழ்ச்சிக்குப் பெருமை சேர்த்தது.   

இந்த நிகழ்வுயின் காணொளியை முழுவதும் கேட்ட  சிவசங்கரி மேடம் அவர்கள் தன் பாராடுதல்களைத்  தன் குரலிலேயே பதிவு செய்து அனுப்பி வைத்தது மனதை  நெகிழச் செய்தது. அவர்களுக்குக்  குவிகம் நண்பர்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

1/2/25 டிஅன்று டிஸ்கவரி புக் ஹவுஸ் கே கே நகரில் நடந்த நிகழ்வு திருப்பாவை எனும் புத்தக வெளியிடு.

 பரோடா வங்கியில் பொது மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற சௌரிராஜன் அவர்கள் நயம் மற்றும் நுணுக்கங்களுடன் திருப்பாவை பாசுரங்களை மிக அழகாக அனுபவித்து எழுதியுள்ள புத்தகம். இந்த அருமையான புத்தகம் குவிகம் அமைப்பின் வெளியீடு. அந்த விழாவில் பங்கு கொள்ளும் வாய்ப்பு நேற்று கிடைத்தது.

புத்தக வெளியீடு ஒரு குடும்ப நிகழ்வாக அமைந்தது. ஆசிரியரின் உறவினர்கள் அவருடன் வங்கியில் பணியாற்றிய நண்பர்கள் மற்றும் குவிகம் உறுப்பினர்கள் இவர்களுடன் மிக எளிமையாக அருமையாக நடந்தது.

புத்தகத்தை வெளியிட்டவர்  சௌரிராஜன் அவர்களுடைய சித்தப்பா 90 வயதுகளில் இருப்பவர் . முதல் பிரதியை பெற்றுக் கொண்டவர் தென்காசி கணேசன் அவர்கள். அவர் உரை பாசுரங்களை மேற்கோள் காட்டிமிகச் சுவையாக இருந்தது.

சௌரிராஜன் அவர்களின் நண்பர் தொகுத்து வழங்க அவருடைய தங்கை மாலதி அவர்கள் பாசுரங்களை சிறப்பாக சீர் தூக்கி பேசினார் .அவர் உறவினர் மற்றும் நண்பர்கள் மிக அருமையாக பேசினார்கள்.

பாசுரங்களின் இசை வடிவத்தை பற்றிச் சுருக்கமாக சொல்லி அன்று கையாண்ட பாசுரங்களில் ஓரிரண்டு வரிகள் பாடும் பாக்கியம் அடியேனுக்கு கிடைத்தது.

சௌரிராஜன் அவர்களுடைய ஏற்புரை, நன்றியுரை திரு நாராயணன் அவர்கள் பாசுரம் பாடி அனைவரும் தேசிய கீதம் இசைக்கநிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது

ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஒரு புத்தகம் சௌரிராஜன்  அவர்கள் வழங்கினார்
சாந்தி ரசவாதி 
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

அழகியசிங்கர்

ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டி

புத்தகக் காட்சியில் உட்கார்ந்தபோதுதான் இந்த எண்ணம் தோன்றியது. தமிழில் குறிப்பிட வேண்டிய கவிஞராய் ஞானக்கூத்தனைக் கருதுகிறேன். 1988 ஆம் ஆண்டு விருட்சம் ஆரம்பித்தபோது ஒவ்வொரு இதழ் வரும்போதும் ஞானக்கூத்தன் கவிதை வரவேண்டுமென்று நினைப்பேன் . அதனால் மாம்பலத்திலிருந்து திருவல்லிக்கேணியில் உள்ள அவர் வீட்டிற்குச் சென்று ஒரு கவிதை வாங்கி அச்சுக்குக் கொடுப்பேன். ஞானக்கூத்தனின் பெரும்பாலான கவிதைகள் ஆத்மாநாமின் ழ பத்திரிகையில் வந்ததைவிட விருட்சத்தில் ஆதிகம் வந்திருக்கின்றன. அவருடைய மொத்தக் கவிதைத் தொகுதியையும் விருட்சம் மூலமாகக் கொண்டு வருவது பெரிய சவாலாக இருந்தது. அவர் வாழ்நாள் இறுதியில் இம்பர் உலகம் என்ற தொகுப்பைக் கொண்டு வந்தேன். ஒவ்வொரு கவிதையும் எந்தந்த ஆண்டில் வெளிவந்தது என்ற தகவல் என் தொகுப்பில் இருக்கும்.
வாழ்நாள் முழுவதும் கவிதையைப் பற்றி சிந்தனை கொண்ட ஞானக்கூத்தனுக்குச் சரியான கவனம் கிடைக்கவில்லை. அவருடைய நினைவாக இந்தப் போட்டியை
அறிவித்து வெற்றிகரமாக நடத்தி முடித்து விட்டேன்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

 

நாகேந்திர பாரதி: மரபுக் கவிதை பாணியிலும், புதுக் கவிதை பாணியிலும் , இசைக் கவிதை பாணியிலும் நமது உறுப்பினர்களின் நயமிக்க கவிதைகளுக்குள் ஒளிந்திருந்த கதைகள் ஒவ்வொன்றும் ஒருவிதம். அவை அனைத்திற்கும் ஆசான் வ வே சு அவர்களின் இலக்கிய நயம் மிக்க மதிப்புரை. நிகழ்வில் கலந்து கொள்ளாதோர் அவற்றை ரசிப்பதற்குக் காத்திருக்க வேண்டும் , காணொளி வரும் வரை. குவிகம் தொகுப்பாகவும் அவை வெளிவர இருக்கின்றன. நன்றி குவிகத்திற்கு.🙏

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

 

 

 

 

 

 

 

 

 

பல வருடங்களுக்குப் பிறகு, மறுபடியும் நமது நண்பர் , நவீன விருட்சம் அழகியசிங்கர் அவர்கள் பல சிறுபத்திரிகைகளில் இருந்து தேர்ந்தெடுத்துத் தொகுத்து வழங்கி இருக்கும் சிறப்பான சிறுகதைத்தொகுப்பு ‘விருட்சம் பரிசு பெற்ற கதைகள் – 2024’ .

அழகியசிங்கரின் தேர்வு மிகவும் தரமானது என்பதை, அவர் 36 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடத்தி வரும் ‘ நவீன விருட்சம் ‘ இலக்கியப் பத்திரிகையைத் தொடர்ந்து படித்து வரும் அனைவரும் அறிவார்கள்.

இந்த விருட்சம் வெளியீடு ஒரு சிறப்பான இலக்கியப் பணி . ‘இலக்கியச் சிந்தனை ‘ அமைப்பு நடத்தி வந்த இந்தப் பணியை அழகியசிங்கர் அவர்களும் தொடர்வது பாராட்டுக்கு உரியது. வாழ்த்துகள்.

இவற்றைத் தேர்ந்தெடுத்துத் தொகுத்த அழகியசிங்கர் அவர்களை பாராட்டலாம். இந்தக் கதைகளின் எழுத்தாளர்கள் சிலருக்கு அவர் ஆயிரம், ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கி உள்ள அவரது இலக்கியக் கொடைத் தன்மையையும் பாராட்டலாம்.

 

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

 

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

சொல்வனம் இதழ் பற்றிய குவிகம் அளவளாவல் பல ஆச்சர்யங்களைக் கொண்டதாக இருந்தது. இணைய இதழ்களைப் பற்றி அதுவும் அதற்கான ஆசிரியர் குழுவுடனான உரையாடல் என்பது நூதன முயற்சி.

குவிகம் சுந்தர்ராஜன்/கிருபானந்தன் அவர்களுக்கு நன்றிகளும் வணக்கங்களும்.

வரமே சில சமயங்களில் சாபமாகும் அபாயம் இருக்கிறது. அச்சு இதழ் காலங்களில் இருந்த கட்டுப்பாடு மற்றும் அளவு இப்போது தொழில் நுட்பம் வசதியால் காணாமல் போய்விட்டன.. யார்வேண்டுமானாலும் இதழோ வலைப்பூவோ குழுவோ நிறுவலாம்.. பக்கம் பக்கமாக எழுதலாம் பாடலாம் படிக்கலாம்..!

இந்தச்சூழலில் தரமான ஒரு இதழைக் கொண்டு வந்து இத்தனை ஆண்டுகள் நடத்துவது என்பது மாபெரும் சாதனை.. ஆசிரியர் குழுவினர் வெவ்வேறு நாடுகளில் இருந்து கொண்டு இதைச் செய்வது
வியப்பளிக்கிறது.. மொழியின் மீது அவர்களுக்கு இருக்கும் காதல், செயற்கரிய செய்தாலும் பவ்யம்.. வாழ்த்துகள் சொல்வனம் டீம்..

மிகவும் சுவாரசியமான நிகழ்ச்சி.. பாராட்டுகள்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

 

ஶ்ரீ பெரும்புதூர் அருகே முதியோர் இல்லத்தில் வசித்து வரும் மூத்த கவிஞர் எஸ்.வைத்தீஸ்வரன் அன்பர்களைச் சந்திக்க விரும்பி எங்கள் இல்லம் வருகிறார், பிப் 3 பிற்பகல் 3 – 5 மணி, வாருங்கள் என்று கே.கே நகரில் வசிக்கும் இலக்கிய வாசல் கிருபானந்தன் இரண்டு நாள் முன்பு ஃபோனில் அழைத்துச் சொல்லி இருந்தார், மதுரையில் ஒரு திருமண நிகழ்வில் சனி, ஞாயிறு கலந்து கொண்டுவிட்டு இன்று காலையில் திரும்பியது முதல் இதே நினைவு…

4 மணிக்குச் சென்றோம் ராஜியும் நானும்… போக்குவரத்து நெரிசல், பிறகு தான் வந்தனர் கவிஞர் குடும்பம். நல்லாசி பெற்றுக் கொண்டோம்…

இலக்கிய அன்பர்கள் அழகிய சிங்கர், இந்திரநீலன் சுரேஷ், டாக்டர் ஜெ.பாஸ்கரன் – கலாவதி, ஆர் கே, எஸ் எல் நாணு, ஹரிஹரன், ராஜாமணி…. எல்லோரையும் பார்த்துக் கொண்டே நுழைகையில் வியப்பிலும் பேரன்பின் பூரிப்பிலும் விரிந்த மூத்த மனிதரின் கண்களை அள்ளிப் பருகலாம் போலிருந்தது… – எஸ் வி வேணுகோபாலன்

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&