(குறும் புதினத்திற்கென்று தமிழில் வெளிவரும் ஒரே மாத இதழ்)

 

 

 

குவிகம் குறும் புதினப் போட்டி (25-26 ஆம் ஆண்டு) தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள்                                 ( அகர வரிசையில் )

 குவிகம்  குறும் புதினப் போட்டி   2025-26 ஆம் ஆண்டு  
          போட்டிக்கு வந்த கதைகள்   135 
  பிரசுரிக்கத் தேர்ந்தெடுத்த  கதைகள்    24 
             குறும் புதினம்                 ஆசிரியர் 

 

1. அபுவின் விருந்தாளி சந்துரு மாணிக்கவாசகம்
2. அவளின் அப்பா கல்பனா சன்யாசி 
3. இரைச்சல் பென்னேசன்
4. உதிரத்தில் கலந்த உதிரம் ச. செந்தில்குமார்
5. உயிர்வலி ராம்குமார் சுந்தரம்
6. ஒரு மதியவேளை குற்றம் ஸாம்ஜி (சம்பத் குமார்)
 7. கடைசி வாய்ப்பு சங்கீதா சீனிவாசன் (சிவயாழினி)
8. கதிரேசன் என்கிற காதர் உசைன் வீரன்வயல் வீ.உதயக்குமாரன்
9. குள்ள வாத்தியார் அண்டனூர் சுரா  
10. கொலைதூரப் பயணம்…”  பூபதி பெரியசாமி
11. சம்மக்கா, சரக்கா ஜாதரா புவனா சந்திரசேகரன்
12. தீபகற்பமான தீவு ராஜாமணி
 13. துருவாதேவி யாரோ 
14. நியாயங்கள் ஜெயிக்கட்டும் கி.இலட்சுமி
15. நினைவுகள் புனிதமானவை… எம் சங்கர் 
16. பசி கே சிவகுமார் 
17. பறந்துபோன புத்தகங்கள் அழகியசிங்கர்
18. பெயரற்ற ஆற்றங்கரையோரம் ஹெச்.என்.ஹரிஹரன்
19. பொம்மைச் சிறகுகள்..! செல்லம் ஜரீனா 
20. பொன்னியும் வில்லும் இரா. சைலஜா சக்தி,
21. மிஸ் கூவாகம் துரை. அறிவழகன்
22. மீண்டும் ஒரு மழைநாள் –  பத்மநாபபுரம் அரவிந்தன்
23. மைவிழி மாயவன் மாலா மாதவன்
24. வீழ்வேனென நினைத்தாயோ…? குமரி உத்ரா – உமா மகேஸ்வரி 

குவிகம் குறும் போட்டிக்கு கதைகள் அனுப்பிய அத்தனை எழுத்தாள நண்பர்கள் அனைவருக்கும் உளமார்ந்த நன்றி. 

இந்த ஆண்டு மிகப் பெரிய சாதனையாக 135 கதைகள் வந்துள்ளன. 

வந்திருந்த 135 கதைகளையும்  ஆராய்ந்து மதிப்பீடு  அளித்த நடுவர்களுக்கு நன்றி.

அவற்றுள் மேலே குறிப்பிட்ட 24 கதைகளைப் பிரசுரத்திற்குத் தேர்ந்தெடுத்திருக்கிறோம். இவற்றிற்கு ரூபாய் ஆயிரம் சன்மானம் உண்டு.  

தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளை எழுதிய கதாசிரியர்களுக்குப் பாராட்டுதல்கள். 

இவற்றுள் முதல் பரிசு 10000 இரண்டாம் பரிசு 6000 மூன்றாம் பரிசு 4000 பெறப்போகும் கதைகள் எவை?  அதற்கான நடுவர் கதைகளை ஆராய்ந்து முடிவு தெரிவிக்க இன்னும் சில நாட்கள் ஆகும்.

அடுத்த மாதம் குவிகம் அளவளாவல் நிகழ்வில் பரிசு பெற்றவர் விவரம் அறிவிக்கப்படும். .

அதேசமயம் தேர்ந்தெடுக்கப்படாத மற்ற 111 கதைகளும் எந்த வகையிலும் இளைத்தவை அல்ல. மாதம் 2 குறும் புதினம் என்று வருடத்திற்கு 24 குறும் புதினங்கள் மட்டும் பிரசுரிக்க இயலும் என்ற ஒரே காரணத்தால்  மற்ற 111 கதைகளை நிராகரிக்க வேண்டி உள்ளது. அந்தக் கதைகளை மற்ற பத்திரிகைக்கு அனுப்பினால் அவற்றிற்குப்  பரிசுகளும் விருதுகளும் கிடைக்கும் என்பதில் எந்த வித சந்தேகமில்லை. அதனால் அந்த 111 கதைகள் எழுதிய நண்பர்கள் தொடர்ந்து குவிகத்திற்கு ஆதரவு  அளிக்கும்படி வேண்டிக் கொள்கிறோம். 

 மேலே தேர்ந்தெடுக்கப்பட்ட 24 குறும் புதினங்களும் குவிகம்குறும் புதினம் இதழ்களில் ஏப்ரல் 2025 முதல்  மார்ச் 2026 வரை மாதம் இரண்டாக வெளிவரும்.