வட்டமாக அமர்ந்திருந்தார்கள் பத்துக் கல்லூரி மாணவிகள்.
நடுவில் நம் நாயகி!
நாயகி கேட்டாள் – நீலம் என்றால் என்னடி ?
ஒவ்வொருத்தியா சட்டுன்னு சொல்லுங்கடி!
சரியா நான் நினச்சதைச் சொன்னா 100 ரூபாய் பரிசு!
குளத்தில் செதுக்கிய செதில்கல் போல கேள்வி
தட்டாமாலை சுற்றலை பதில்கள்
காதலின் உடை – நீலம்
இல்லை காமத்தின் நிழல் -நீலம்
சே சே வானத்தின் ஒளி -நீலம்
ஏன் கடலின் முகமாக இருக்கக்கூடாது?ஓ நீல வானம்
உறிஞ்சி உண்ணும் மாம்பழம்? – நீலம் மாம்பழம்
மார்பில் சங்கிலியில் இழையும் கல் ? நீலக்கல்
நம்ம நாட்டு விளையாட்டு? ப்ளூ வேல்
ரகசிய சினிமா – நீலப் படம்
லல்லா? – ராமர் நீல நிறம்?
கீதா நாயகன்? – ராமர்
முதல் சுற்றில் ஒன்று கூட சரியில்லை ! அடுத்த சுற்று போகலாம்!
ஆணின் குறியீடு ? – நீலம்
ஏய் ! கண்டத்தில் சிக்கிய விஷம்? – நீல கண்டம்
நம்ம ஜாதிப் பேய் ? நீலி
பாம்பின் விஷம் – உடம்பில் நீலம்
யவனன் கண் – நீலக் கண்
மழையில் மின்னும் மின்னல்? – நீல மின்னல்
சவக்களை ? – நீலம் பாய்ந்தது
குவளைப் பூ – நீலம்
ஊட்டி மலை – நீலமலை
புதுசா வந்த டிவிடி ப்ளேயர்? – ப்ளூ ரே
அடுத்த சுற்றும் தோல்வி .. மூன்றாவது சுத்து ?
காலர்? ப்ளூ காலர்
எப்போதாவது வரும் நிலவு – ப்ளூ மூன்
விலங்கு ஆஸ்பத்திரி – ப்ளூ கிராஸ்
சட்டை மாறன் திரை விமர்சனம் – ப்ளூ காலர்
சமஸ்கிருத மலர் – நீலோத்பலம்
காலையில் தெறிக்கும் வெறுப்பு – மார்னிங் ப்ளூ
இந்திராகாந்தியின் மரணம் காரணம் – ப்ளூ ஸ்டார்
சேது கட்டிய வானரன் – நீலன்
கட்டட வரைபடம் புளூ பிரிண்ட் ?
பேனாவின் விந்து – நீல மை
ஊகும் .எல்லாம் தப்பு . நான்காவது சுற்று?
X இல் டிக் ? நீலம்
நரி மாறிய கலர் – நீல நரி
விரிந்த மயிலின் கழுத்து – நீலம்
துணி வெளுக்கும் – சொட்டு நீலம் டோய்
குழந்தையின் சின்றோம் – blue baby
ஜால்ரா மாணவன் – Blue eyed boy
இந்தியா கிரிக்கெட் – ப்ளூ பாய்ஸ்
எங்கிருந்தோ குதிப்பது? Bolt from blue
மலையாளத் தமிழ் இலக்கியவாதி ? நீல பத்மநாபன்
சஞ்சீவரெட்டி – நீலம்
இதுவும் இல்லையா? அவ்வளவுதாண்டி ! எல்லா நீலத்தையும் கொட்டிவிட்டோம்!
நீ நினைச்ச நீலம் என்ன?
அம்மாடி இத்தனை நீலமா , செல்லங்களா?ஆனா எனக்குத் தெரிஞ்ச நீலம் யாரும் சொல்லல!
அது என்னடி?
நீலம்! என் நாய்க்குட்டியின் பேரு !
எல்லோரும் சேர்ந்து நீல சாயத்தை அவள் மேல் கொட்டி மொத்தினார்கள் !


வானுக்கும் கடலுக்கும் மட்டும் அல்ல, இந்தக் கவிதையின் கதைக்குள்ளும் எத்தனையோ நீல நிறங்கள்
LikeLike