பங்களூர் பிரிகேட் சாலைக்கு அருகே உள்ள பாரம்பரியம் மிக்க  பழைய புத்தகங்கள்  விற்கும் இடம்.  செலக்ட் புத்தக சாலை 

அதன் உரிமையாளர்  மூர்த்தி !

புத்தக சாலைக்கு வரும் நண்பர்களை ஞாபகம் வைத்துக் கொண்டு அவர்களுக்குத் தேவையான புத்தகங்களை தேடி எடுத்துத் தரும் நண்பர். அவரது ஞாபகம்  அவரது ஸ்பெஷாலிடி! அவரது பெயரில் ஒரு ஆவணப்படமே எடுக்கப்பட்டுள்ளது. அவர் தந்தை ஆரம்பித்ததை அவர் தொடர்ந்து செய்து வந்தார். சென்ற மாதம் , தனது 95 வது  வயதில் புத்தகங்களுக்காக வாழ்ந்த மாபெரும் மனிதர் இந்தப் பூவுலகை விட்டு மறைந்தார். அவருக்குப் பின் அவரது மகன் புத்தக சாலையைத் தொடர்ந்து நடத்துகிறார். 

மூர்த்தி அவர்களின்  பெயர் புத்தக உலகில்  பொன்னேட்டில்  பொறித்து வைக்கப்படும். 

அவருக்குப் புத்தகாஞ்சலி செலுத்துவோம்.