புத்தகம் : The Gitanjali Album ( English)
எழுதியவர் : Gitanjalai
Edited by : Parmananda R Divakar
Published by : X.Diaz del Rio, Gujarat sahitya Prakash
திருச்சியிலுள்ள என் உடன்பிறவா சகோதரி பூங்குழலியின் வீட்டுக்கு சென்ற முறை சென்றபோது என் கண்ணில் பட்டதுதான் இந்த அபூர்வமான, பழைய புத்தகம். பொக்கிஷம் என்றால் இதுதான் பொக்கிஷம். 1992 இல் குஜராத் சாஹித்ய பிரகாஷ் என்ற பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது.
இது ஒரு ஆங்கிலக் கவிதைகள் அடங்கிய அருமையான நூல். கீதாஞ்சலி என்ற பதின்பருவச் சிறுமியால் புனையப்பட்ட மிகச் சிறப்பான கவிதைக் கொத்து இது.
விஷயம் அது மட்டுமல்ல.
கீதாஞ்சலி மீரட் நகரத்தில் 1961இல் ஜூன் மாதம் 12ஆம் தேதி ஒரு சீக்கிய குடும்பத்தில் பிறந்தவள். அவள் மும்பை நகரத்தில்தான் தன் குறுகிய வாழ்வின் சொற்ப நாட்களைக் கழித்தாள். 1977-ல் ஆகஸ்ட் 11 அன்று மரணம் அடைந்து விட்டாள் அவள்.
இந்தக் குறுகிய காலத்திற்குள் அவளை கேன்சர் நோய் வாட்டி வதைத்தது. சாவு நிச்சயம் என்று தெரிந்தும் சாக விரும்பவில்லை அவள். அன்பான அவளுடைய குடும்பம், அவள் மிகவும் விரும்பிய அவள் பள்ளி, அவளுடைய வீட்டுப் பூனை, நாய் முதலியன, அவளுடைய நட்புகள், அவள் நேசித்த பல விஷயங்கள் – எதையும் விட்டுப் போக விரும்பவில்லை அவள்.
சாவு அவளை நெருங்கிக் கொண்டிருக்கும்போதே கீதாஞ்சலி எழுதித் தள்ளினாள் கவிதைகளை. அவை ஒவ்வொன்றும் முத்துக்கள். சாகா வரம் பெற்றவை. உயிரோட்டம் உள்ளவை. உயிருள்ள கடைசி நொடி வரை வாழத் துடித்தவை. இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறாள் அவள் அந்த ஜீவனுள்ள கவிதை வரிகளினூடே.
The aching void
Within my soul
Whispers to me
Calmly
Peace be upon you
Gitanjali
இன்னும் ஒன்று இதோ.
Life
Life
I know not
When
Thou and I
Shall part
I know not
When,
Where and how
We shall bid
Goodbye
It’s hard to part
When we have been
Good friends
Perhaps
You will miss me
And sorry be
Life,
Do bring
Old times to mind
All the warmth
All the love
And all the tender thoughts
That we shared
And if perchance
We do meet again
Will you rekindle
My love again?
இறப்பின் தறுவாயில் என்ன ஒரு உயிரோட்டம் ? வாய்ப்பு கிடைத்தால், வாங்கிப் படியுங்கள்.
நான் சகோதரி பூங்குழலியிடமிருந்து படித்துவிட்டுத் தருகிறேன் என்று இந்த நூலை வாங்கி வந்தேன்.
இன்னும் தரவில்லை !


அடடா.. ரசனையற்ற மரணம் ஒரு சிறந்த இளம் கலைஞரை (கவிதை, ஓவியம்) மொட்டுப் பருவத்திலேயே விழுங்கித் தொலைத்து விட்டதே..
LikeLike