இது ஒரு கட்டுரைப் போட்டி !

சங்க இலக்கியம் காப்பியம் போன்றவற்றின் சிறப்பை – பெருமையை – கவிதையின் அழகை- அதன் பொருளை மற்றவர் படித்து மகிழ ஒரு சிறு கட்டுரையாக 300 வார்த்தைகளில் எழுதவேண்டும்.
இப்படி பத்துபாட்டு , எட்டுத்தொகை , ஐம்பெரும் காப்பியங்கள், ஐஞ்சிறும் காப்பியங்கள், பிரபந்தங்கள், கம்பராமாயணம், நளவெண்பா போன்ற வற்றை ஒவ்வொன்றாக அலசி எழுதவேண்டும்.
அந்தக் கட்டுரை தமிழராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் படித்து மூல நூலைப் படிக்க வேண்டும் என்ற உத்வேகத்தைத் தரக் கூடியதாக இருக்கவேண்டும். குறிப்பாக நாளைய இளைஞர்கள் அதனைப் படிக்கும்படி எழுதவேண்டும்.
அதில் கண்டிப்பாக இருக்கவேண்டியவை
நூலின் ஆசிரியர் பற்றிய தகவல் – அதிக பட்சம் 50 வார்த்தைகள்
மூல நூலில் நீங்கள் ரசித்த வரிகளை மற்றவர் படித்து இன்புறக்கூடிய 15-20 வரிகளை எடுத்துரைத்து அதன அழகையும் அதன் நயத்தையும் அதன் பொருளையும் விளக்கவேண்டும். உதாரணமாக கம்பராமாயணத்தில் 4-5 பாடல்கள் வெவ்வேறு இடத்திலிருந்து எடுத்து அதன் சிறப்பை சுருக்கமாக எடுத்துரைக்கவேண்டும். ஒவ்வொருவரும் கம்பராமயாணத்தில் குறைந்தது இந்த 4-5 பாடல்களையாவது தெரிந்திருக்கவேண்டும் என்று நீங்கள் கருதும் பாடல்களையே தேர்ந்தெடுக்கவேண்டும்.
அப்படி வரும் கட்டுரைகளில் சிறந்த கட்டுரை ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதற்கு 250 ரூபாய் பரிசு வழங்கப்படும்.
அந்தக் கட்டுரை குவிகத்தில் வரும். பின்னர் அந்த இலக்கிய இன்பத்தை புத்தகமாகவும் கொண்டு வருவோம்.
சரி! இந்த மாதக் கட்டுரைப் போட்டிக்குத் தலைப்பு
நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்!
சிலப்பதிகாரம் பற்றி 300 வார்த்தைகளில் 31.03.25 க்குள் எழுதி அனுப்புங்கள்!
editor@kuvikam.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
(ஐயம் இருந்தால் 9442525191 எண்ணிற்கு வாட்ஸ் அப் அனுப்பவும். அல்லது குவிகம் இலக்கியத் தகவலில் கேள்வி எழுப்பலாம்)
