Boy Gold Chain Models 2025 | www.au-jaroslaw.pl
1. மனசே ரிலாக்ஸ் ப்லீஸ் என்ற சிந்தனை தொடரை எழுதிய ஸ்வாமி சுகபோதானந்தாவின் இயற் பெயர் துவாரக்நாத்
2.
துவாரகை அல்லது துவாராவதி என்பதற்கு பல நுழைவாயில் கொண்ட நகரம் என்று பொருள்
3.
வாயில் புடவை, வாயில் (Voile) என்பது பிரஞ்சு மொழியில் குறைந்த எடையுள்ள லேசான ஆடை
4.
ஆடையை முதலில் கிமு 200,00 முதல் கிமு 30,000 வரை உயிர் பிழைத்த நியண்டர்தால் மனிதர்கள் கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது
5.
நியண்டர்தால் மனிதர்கள் ஹோமோ சேபியன்களுடன் சில காலங்கள் இணையாக வாழ்ந்ததாகக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது
6.
புதிய கண்டுபிடிப்புகளில் உலகளாவிய முதல் நிலையில் உள்ள நாடு சுவிட்சர்லாந்து.
7.
இந்தியாவின் சுவிட்சர்லாந்து என்று குறிப்பிடப்படும் மாநிலம் இமாச்சலப் பிரதேசம்.
8.
இமாம் பசந்த் அல்லது ஹிமாயத் அதிகம் அறியப்படாத பிரத்தியேகமான மாம்பழ வகை தமிழ்நாடு, ஆந்திரா, மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் விளைகிறது
9.
தெலுங்கானா மாநிலம் 2014ல் இந்தியாவின் 29வது மாநிலமாக அறிவிக்கப்பட்டது.
10.
29 பிப்ரவரி அன்று பிறந்தவர் முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய்
11.
சாய்ரா பானு, 1982 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் படமான “கடவுளுக்கு ஒரு கடிதம்” திரைப்படத்தில் நடிகர் ராஜிவுக்கு இணையாக கதாநாயகியாக நடித்தார்
12.
ராஜிவ் காந்தி பிறந்த நாளை இந்தியாவில் சமய நல்லிணக்க நாளாக கொண்டாடப்படுகிறது.
13.
நல்லி சில்க்ஸ் நிறுவனம், இரண்டாம் எலிசபெத் ராணியின் முடிசூட்டு விழாவிற்குப் பரிசாக 1954-ல் பட்டுப் புடவை பரிசளித்தது
14.
புடவை பொதுவாக 5.5 மீட்டர் நீளமுடையதாக இருக்கும்
15.
நீள அகலம் எத்தனை அடி ஒரு வீட்டிற்கு இருக்கவேண்டும் என்பதை கூறும் சாஸ்திரம் மனையடி சாஸ்திரம்
16.
லால் பகதூர் சாஸ்திரி மேரி கியூரியின் வரலாற்றை இந்தியில் மொழிபெயர்த்துள்ளார்
17.
இந்தி மொழியில், உருது, பாரசீக, மற்றும் அரேபிய மொழிகளின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.
18.
பாரசீகம் தற்போது ஈரான் என்று அழைக்கப்படுகிரதுசங்கிலி நீளும்