
| விருட்சம் நடத்தும் அசோகமித்திரன் நினைவு சிறுகதைப் போட்டி அசோகமித்திரன் பெயரில் ஒரு சிறுகதைப் போட்டி நடத்த வேண்டுமென்று என் நெடுநாள் விருப்பம். அவர் நினைவு நாளை (23.03.2025) ஞாபகப்படுத்தும் விதமாய் இத்திட்டத்தைச் செயல் படுத்த விரும்புகிறேன். போட்டிக்கு ஒரே ஒரு கதையை மட்டும் அனுப்ப வேண்டும். கதை 800 வார்த்தைகளிலிருந்து 1000 வார்த்தைகள் வரை இருக்க வேண்டும். சரித்திர கதைகள், மர்மக் கதைகள் அனுப்ப வேண்டாம் யூனிக்கோடில்தான் கதை அனுப்ப வேண்டும். Azhagiyasingar.virutcham@gmail.com என்ற இ மெயிலில் அனுப்ப வேண்டும். ஏற்கனவே பிரசுரமான கதையை அனுப்பக் கூடாது. தேர்ந்தெடுக்கும் கதைகளுக்கு முதல் 3 பரிசுகளும், 10 ஆறுதல் பரிசுகளும் உண்டு. தேர்ந்தெடுக்கும் கதைகளுக்கு முதல் 3 பரிசுகளும், 10 ஆறுதல் பரிசுகளும் ரூ10000 வரை வழங்கப்படும். கதைகளைக் குறித்து கடிதத் தொடர்போ தொலைப் பேசித் தொடர்போ கூடாது தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் எல்லாம் புத்தகமாக வரும். கதைகள் அனுப்ப வேண்டிய கடைசித் தேதி : 30.04.2025 கதையுடன் உங்கள் முகவரி, உங்கள் இ மெயில் முகவரி, தொலைப்பேசி எண் அனுப்ப வேண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் தேர்ந்தெடுக்க முடியாத கதைகள் என்ற இரண்டு பிரிவுகளில் கதைகள் எடுக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளில் 13 கதைகள் தனியாகப் புத்தகமாக வரும். மற்ற கதைகள் daily.navinavirutcham.in என்ற மின் இதழில் பிரசுரம் ஆகும். அன்பன், அழகியசிங்கர் |


