நாம் புதிதாக ஆரம்பிக்க இருக்கும் இலக்கிய அமைப்புக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது, ‘இலக்கியவாசல்’ என்று வைத்தால் எப்படியிருக்கும் என்று விஜயலக்ஷ்மி சுந்தரராஜன் கேட்க , கிருபாவும் நானும் ஆமோதித்த அந்த இலக்கிய வாசல் இன்று பத்து ஆண்டு முடிந்து 11 வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.
இதை ஒட்டி வருகிற 2025 ஏப்ரல் 20 ஆம் தேதி பத்தாண்டு நிறைவான மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள ஒரு அளவளாவல் நடத்த உள்ளோம். அனைவரும் வந்து வாழ்த்தியருள வேண்டிக்கொள்கிறோம்.
இலக்கிய வாசலின் முதல் நிகழ்வின் பதிவு 2015 மே மாதம் குவிகம் இதழில் வெளிவந்தது. அதை உங்கள் பார்வைக்கு மீண்டும் தருகிறோம். :
18.04.2015 அன்று சென்னை ஆழ்வார்பேட்டை ஸ்ரீனிவாச காந்தி நிலையத்தில் இலக்கிய சிந்தனையாளர் முனைவர் திருப்பூர் கிருஷ்ணன் தலைமையில் குவிகம் இலக்கியவாசல் தொடக்க விழா இனிதே நடைபெற்றது !
தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது !
குவிகம் இலக்கிய வாசலை முனைவர் திருப்பூர் கிருஷ்ணன் திறந்துவைத்தார் !
‘இலக்கியமும் நகைச்சுவையும்’ என்ற தனது முதல் நிகழ்ச்சியை “குவிகம் இலக்கிய வாசல்” முனைவர் திருப்பூர் கிருஷ்ணன் அவர்களின் சீரிய தலைமையின் கீழ் அரங்கேற்றியது !
தனிநபர் புகழ்ச்சியை புறந்தள்ளி தமிழ்இலக்கிய நிகழ்ச்சியை மட்டுமே முன்னிறுத்தி குவிகம் இலக்கியவாசல் செயல்படும் என நம்பிக்கைத் தெரிவித்தும் அமைப்பாளர்கள் .சுந்தரராசன், கிருபானந்தன் அவர்களின் முயற்சியை ஊக்குவித்தும் பேசிய திருப்பூர் கிருஷ்ணன் தமிழ் இலக்கியங்களிலே புதைந்துகிடக்கும் நகைச்சுவை நயங்களைப் பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொண்டார்

அடுத்துப் பேசிய முனைவர் வ வே சு அவர்கள் இலக்கியமும் நகைச்சுவையும் என்ற தலைப்பிலே தான் இயற்றிய கவிதைகளை மன்றத்தில் படித்து அனைவரையும் மகிழ்ச்சிவெள்ளத்தில் ஆழ்த்தினார் !
தனது பள்ளிப் பருவத்திலே நடந்த மறக்கவொண்ணா நகைச்சுவை நினைவுகளை அவர் கவிதையில் வடித்துப் படித்தது அரங்கத்தினரின் கரவொலியைப் பெற்றது !

மூன்றாவதாய் பேசிய கவிஞர் ஜெயபாஸ்கரன் தனது கவிதைப் படைப்புகளில் இடம்பெற்ற நகைச்சுவைக் கவிதைகளை அரங்கத்தார் ரசிக்கும் வண்ணம் பகிர்ந்துகொண்டார் !
வாழ்வியலை ஒட்டிய அவரது கவிதைகள் அனைவரையும் ரசிக்கவும், சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தன.

சுந்தரராசன் அனைவரையும்வரவேற்றார் !

இலக்கிய ஆர்வலர்களால் அரங்கம் நிறைந்து காணப்பட்டது

நிகழ்ச்சியில் பார்வையாளர்களின் கவிதைகள் படிக்கப்பெற்றுப் பாராட்டைப் பெற்றன !




கிருபானந்தன் நன்றி நவில தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது !



வாழ்த்துக்கள் பத்தாண்டு நிறைவடைவதற்கு
LikeLike
இலக்கியவாசலின் பத்தாண்டு நிறைவு!
குவிகம் ஆசிரியர் குழுவிற்கும், தொடர்ந்து ஆதரவு தரும் வாசகர்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்.
LikeLike