பாவாடை, தாவணியில் அப்படி வெட்கம்.. வேற லெவல் எக்ஸ்பிரஷனில் ஹீரோயின்.. வைரல் போட்டோஸ்! | Poorna's latest photoshoot pictures goes viral - Tamil Filmibeat     ‘இந்த வீட்டில் நிறைய பணமும், வைரங்களும் இருக்கின்றன, இவள் ஒரு நடிகை, நிறைய பணம் சேர்த்து விட்டாள், நமக்கு சரியான வேட்டை தான்’

‘ஓகே, நாளைக்கு இரவு அந்த வீட்டில நாம கொள்ளையடிக்கலாம்’

இரண்டு திருடர்களும் பேசி வைத்துக் கொண்டு மறுநாள் நடிகை  குமுதாவின் வீட்டை அடைந்தனர். மாற்று சாவியைப் போட்டு உள்ளே செல்வது ஒன்றும் அவ்வளவு கடினமாக இல்லை. அடேங்கப்பா, பெரிய வீடு, ஒரு கீழ்வர்க்கத்து குடும்பம் தங்கும் அளவு பெரிய முன்னறை, பெரிய பெரிய அழகான குழல் விளக்குகள், திரைச் சீலைகள், சோபாக்கள், குஷன்கள், அடேங்கப்பா நாட்டின் பொருளாதாரம் எவ்வளவு முன்னேறியிருக்கிறது!  

ஷோகேஸில் வைத்திருந்த வெள்ளித்தட்டு, குத்து விளக்கு கண்களைப் பறிக்க இவைகளை சேகர் சேகரித்தான். எடுக்கவோ, விடுக்கவோ என்று வியந்து நின்றான்! ஒவ்வொரு அறையாக சென்று கையில் கிடைக்கும் விலை உயர்ந்த கடிகாரங்கள் (எல்லா கடிகாரங்களும் ஒரே நேரம் தானே காட்டும்?!), மடிக்கணினி என்று எல்லாவற்றையும் பையில் போட்டுக் கொண்டே வந்தான். அவனுக்கு ஆச்சரியம் இவள் தனியாக இருக்கிறாளா அல்லது ஒரு கூட்டமே இருக்கிறதா! உலகத்தில் இத்தனை பொருட்களா!

அங்கே ஒரு சின்ன சேப்டி லாக்கரைப் பார்த்து விட்டு சேகர் அதனைத் திறக்க முயற்சி செய்ய ஆரம்பித்தான், திறக்க முடியவில்லை. என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த போது திடீரென்று மாடியில் இருந்து குமுதா தூக்கக் கலக்கத்தில் எழுந்து வந்தாள். இவர்கள்  திடுக்கிட்டனர். ஆனால் அவள் அங்கிருந்த பொருட்களை ஒவ்வொன்றாக தொட்டுத் தொட்டு மெது மெதுவே அடி எடுத்து வைத்து, சோபாவில்  உட்கார்ந்து தன் கைகளால் துழாவி அருகில் இருந்த சீப்பை எடுத்தாள்.

‘ஒ  இவள் குருடு, நமது வேலை எளிது தான்’

போனை எடுத்து நம்பரை டயல் செய்தவுடன் இவர்களுக்கு பயம் வந்துவிட்டது, எங்கேயாவது போலீசுக்கு போன் பண்ணுவாளோ என்று!

ஆனால் அவள் ‘எனக்கு பீட்சா வேண்டும்’

‘எத்தனை’

‘இரண்டு’

       ‘முகவரி?’

      ‘வீட்டு முகவரி கொடுத்து விட்டு, ‘கொஞ்சம் சீக்கிரமாக வேண்டும், மிகவும் பசிக்கிறது’

      இதற்குள் சேப்டி லாக்கரை திறக்க முயற்சித்தவன், திறக்க முடியாமல் திணற, சேகர் ஃபோனால்தான் திறக்க முடியும் என்று ஃபோனை எடுக்க, திறக்க வராததால், முகம் தான் திறவுகோல் என்று அவள் முகத்துக்கு எதிரே ஃபோனை கொண்டு போக, அதற்குள் அவள் தெரிந்தோ தெரியாமலோ தன்னுடைய முடியை சீவிக் கொண்டு முன்பக்கம் விரித்து விட்டதால், முகம் சரியாகத் தெரியவில்லை. இப்பொழுது என்ன செய்வது என்று சேகர் யோசித்த போது, சுரேஷ் ஃபோனை பிடுங்கி அங்கே அலமாரியில் இருந்த குமுதாவின் போட்டோ எதிரில் வைத்து விட்டு, பிறகு சேப்டி லாக்கர் அருகில் வைத்தவுடன் அது திறந்து கொண்டு விட்டது.

     உள்ளே பார்த்தால் நிறைய பணம், நகை, இரண்டு பேரும் ஆசை ஆசையாக எடுக்க ஆரம்பித்தனர்.

    அப்போது குமுதா ‘கசகச என்று இருக்கிறது, நான் போய் ஒரு குளியல் போட்டு விட்டு வருகிறேன்’ என்று சொல்லிக் கொண்டே தனது மேலங்கியை கழட்டி குளியலறைக்குச் செல்ல,

    இதைப் பார்த்த சேகர் ‘உம், கண்ணுக்கும் நல்ல விருந்து, இதையும்  நாம் அனுபவிக்கலாம்’ என்று அவள் பின்னாடியே சென்றான்.

    அதைப் பார்த்த சுரேஷ் ‘வேண்டாம் ஏதாவது பிரச்சினை வரும், நாம் இங்கே திருட வந்திருக்கிறோம், நல்ல சாமான்களை எடுத்துக்கொண்டு சீக்கிரமாக சென்றுவிடலாம்’ என்றான்.

    ஆனால் அதை காதில் வாங்காத சுரேஷ் அவள் பின்னாடியே குளியலறைக்குச் சென்றான். அதற்குள் குளியலறையில் மறைந்திருந்த குமுதா இவன் வந்தவுடன் இவனைத் தாக்கி அங்கேயே கட்டிப் போட்டு விட்டாள்.

    வெகு நேரமாக திரும்பாத சேகரை எதிர்பார்த்து சுரேஷ் மேலே வந்து அவன் கட்டுண்டு கிடப்பதைப் பார்த்தான். மெதுவே திரும்ப எத்தனிக்க குமுதா ஒரு சிறிய துப்பாக்கியை அவன் முதுகில் வைத்து அவனை பயமுறுத்தலானாள்.

    அதற்குள் போலீஸ் வரவும் இருவரும் பிடிப்பட்டனர். அப்பொழுது தான் சேகர் பார்த்தான் சுரேஷின் முதுகுக்குப் பின்னால் குமுதா ஒரு சிறிய வாழைப்பழத்தைத்தான் வைத்துக் கொண்டிருந்தாள், மேலும் அவள் பிட்சா ஆர்டர் செய்யவில்லை, போலீசுக்குத் தான் போன் பண்ணி இருக்கிறாள், தெரிந்தேதான் தன் முடியை முன்னால் விட்டு மறைத்தாள், எல்லாவற்றிற்கும் மேல் அவள் குருடும் இல்லை!

    என்ன ஒரு சமயோசிதம்! என்ன ஒரு சாகசம்! என்னே வீர நங்கை!