தேவவிரதன் எழுதிய ‘பேச்சுத் துணை’ (தினமணி கதிர் 30.03.2025) என்ற சிறுகதையை 2025- மார்ச் மாதத்தில் வந்த சிறுகதைகளில் சிறந்ததாகத் கருதுகிறேன்
- பேச்சுத்துணை – தேவ விரதன் – (தினமணி கதிர்03.2025)
தனக்குத் தானே பேச்சிக்கொள்ளும் ஒரு முதியவர். ஆனால் உண்மையில் இன்னொரு ந்ண்பர் அருகில் அமர்ந்து பேசுவதாக கற்பனை செய்கிறார். ஒரு நாள் அந்த நபர் வராமல் போகவே அருகில் இருந்த தள்ளு வண்டிக்காரனிடம் கேட்க “யாரும் உங்க பக்கத்துல இருக்கிறதில்லை. சில பெரியவர்கள் தனக்குத் தானே இங்கு அமர்ந்த் பேசுவார்கள். உங்களையும் அப்படீன்னு இல்ல நெனைச்சேன்” என்கிறான் – It is a type of soliloquy story. வயதானவர்கள் பெரும்பாலும் தனக்குத் தானே துணை என்றாகி விடுகிறார்கள்.
(2) கான்கிரீட் காட்டுக்குள் ஓர் ஒற்றைப் பனைமரம்! எம் ஆர் ஆனந்த் (கல்கி 12.03.25)
மகாபலிபுரம் சாலையில் பயணிக்கும்போதெல்லாம் தோப்பில் அமர்ந்து ரசித்து மகிழ்ந்து அனுபவிக்கும் ஒரு யுவன். எல்லாவற்றையும் வெட்டி வீழ்த்தி கான்கிரீட் கட்டிடம் கட்டியபிறகு அழகுக்கு ஒரே ஒரு பனைமரத்தை விட்டு வைத்திருக்கிறார்கள். அந்த மென்பொருள் நிறுவனத்துக்கு வந்த யுவன் பனைமரத்தருகே போய் நின்று அதைத் தொட்டுபழைய நினைவுகளில் மூழ்குகிறான். அந்தப் பனைமரம் எனது நண்பர்களையெல்லாம் வெட்டி வீழ்த்திய பிறகு நான் மட்டும் இருந்து என்ன பயன் . என்னையும் வெட்டிவிடும்படி இந்த கம்பெனி நிர்வாகியிடம் சொல்லுங்கள் என்று கூறுகிறது. அதன்படி கடிதம் எழுதி ‘கருணைக்கொலை’ செய்து அந்த மரத்தை வெட்டும்படி கடிதம் எழுத முடிவு செய்கிறாn
(3) பயணங்கள் தொடரும் ராகவன் மாணிக்கம்- தினமணி கதிர் 16.3.25
தனக்கு கேன்சர் நோய் வந்த ஒரு இளைஞன் அனாவசியமாக வீட்டில் உள்ளவர்களுக்குக் கஷ்டத்தையும் செலவையும் வைக்காமலிருக்க் ஊரை விட்டு ரயிலில் செல்லும்போது ஒரு முதியவர் ஆஸ்ரமம் நடத்துபவர் சொன்ன அறிவுரைகள் மன மாற்றத்தைத் தருகின்றன. மறுபடியும் போராட முடிவெடுக்கிறான்.. வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்கிறான்.
(4) சம்யுக்தா கணேசகுமரன்- ஆனந்த விகடன் 12.03.25
கேன்சராக இருக்குமோ என்ற சந்தேகத்தில் மருத்துவ மனை சிகிச்சையில் ஒரு பெண். பால்குடி மாறாத குழந்தை சம்யுக்தா. அந்தக் குடும்பத்தைப் பார்த்துக் கொள்ளும் தாத்தா. சொல்லொணாத் துயரம். அதே வார்டில் அட்மிட் ஆகியிருக்கும் தனது தம்பியைப் பார்த்துக் கொள்ளும் இன்னொரு வாலிபன் தாத்தாவுக்கு ஆறுதல் சொல்கிறான். இவ்வளவு துயரத்திலும் குழந்தைக்கு முதலாமாண்டு பிறந்த நாளை குழந்தையின் சித்தி கொண்டாடுகிறது. சிகிச்சைத் தொடரும் நிலையில் மூடியிருக்கும் கதவை வெறித்துப் பார்த்தபடி இருக்கிறது குழந்தை சம்யுக்தா
(5) குட்டியம்மா இயக்குநர் மணிபாரதி– குமுதம் 12.03.25
தெரு நாய்ப் பாசம். அதற்கு தினமும் உணவு வைக்கிறாள். அதை எடுத்துக் கொஞ்சி அன்பு காட்டுகிறாள். குட்டியம்மா என்று அழைத்தவுடன் ஓடி வருகிறது. ஆனா அவளது கணவனுக்கு இது பிடிக்கவில்லை. ஒரு காலகட்டத்தில் குவார்ட்டர்ஸ் கிடைக்கிறது. அங்கு செல்லும்போதும் அந்த நாயையும் அழைத்துச் செல்ல கணவனிடம் அனுமதி கேட்கிறாள். குவார்ட்டர்ஸில் இதற்கெல்லாம் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்று அவன் சொல்லவே வேறு வழியின்றி அந்த நாயிடம் விடை பெறுகிறாள். அந்த குட்டியம்மாவிடம் அன்பு காட்ட நல்ல பெண் எஜமானி கிடைப்பாள். இந்தப் பெண்ணுக்கும் இன்னொரு குட்டியம்மா
(6) தொலைந்து போன நிமிடங்கள் – சாயம் ராஜாராமன். (தினமணி கதிர் 02.03.2025)
அலுவலகத்திலிருந்து திரும்பிய மகன் வீட்டில் விளக்கெரியாதது கண்டு மெல்லியதாகப் பதறி வீட்டுக்குள் சென்றால் அப்பா காலில் கட்டுடன் படுத்திருக்கிறார். அவர் வெளியே சென்றபோது டூவீலரில் வந்த ஒருவன் அவர் மேல்மோதி அருகில் இருந்தவர்கள் செய்த முதலுதவியுடன் வீட்டில் வந்து படுத்திருக்கிறார். அடுத்த நாள் இவன் வொர்க் ஃப்ரம் ஹோமில் வீட்டிலேயே வேலை செய்ய அப்பாவின் நண்பர்கள் வீட்டுக்கே வந்து நலம் விசாரிக்கிறார்கள் .அதில் ஒருவர் ஸ்னாக்ஸ் கடை வைத்திருப்பவர். எல்லோரும் வீட்டிலிருந்தே ஆர்டர் கொடுக்கும் முறை வந்து விட்டது. அந்த மகனும் கூட அந்த ஸ்னாக்ஸ் கடையிலிருந்து வாங்கி சாப்பிட்டிருக்கிறார். இப்போதுதான் முதலாளியைப் பார்க்கிறார். எல்லா சர்வீஸ்களையும் பட்டம் அழுத்தியவுடன் கிடைப்பதனால் பர்சனல் டச்சும்,, நேரடி தொடர்பும் அற்றுப் போவதைச் சொல்லும் கதை. அடுத்த நாள் இவனை அலுவலகத்துக்குக் கட்டாயம் வரவேண்டும் என்று சொல்ல தாங்கள் பார்த்துக் கொள்வதாக அப்பாவின் நண்பர்கள் சொல்கிறார்கள்.
(7). உதிராத நட்சத்திரங்கள் வி உஷா – நல்ல கதை. (தினமலர் 02.03.2025)
கணவனுக்கு ஸ்ட்ரோக். படுத்த படுக்கை. அவனுக்கு உதவிகள். ஒரே மகன் . வெளி நாட்டில். தான் ஒரு அமெரிக்க பெண்ணை விரும்புவதாகவும், அவளைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் சொல்கிறான். மனம் வெறுப்பு. சலிப்பு. கடைத்தெருவில் தன் பழைய சினேகிதியைப் பார்க்கிறாள். அவள் கணவன் ஐந்து வருடங்கள் முன்பே இறந்து விட்டான். குழந்தைகள் இல்லை. இந்தப் பெண் அவளைப் பார்த்தபோது தான் பரவாயில்லை என்று தோன்றுகிறது. அந்த சினேகிதியும் தன்னிடமிருக்கும் நல்லவைகளை நினைத்து சந்தோஷப்படும்படி சொல்கிறாள்.
(8). ஆஹா இன்ப நிலாவினிலே! – மஞ்சுளா சுவாமிநாதன் வாசகசாலை 4.3.25
திருமணத்திற்கு முன்னர் நிறைய என் ஜாய்மெண்ட் பிளான்கள். கடைசியில் கல்யாணமான பிறகு டிபார்ட்மெண்டல் ஸ்டோர், கறிகாய் கடை, ஆபீஸ் அத்துடன் சரி. பல பேர்கள் ‘டபுள் இன்கம் நோ கிட்ஸ்’ என்றிருக்கிறார்களே. நாம் அவசரப்பட்டு விட்டோமோ என்று நினைக்கையில் ஒரு குழந்தை தனது பள்ளியில் சந்தித்த பிரச்சினைகளை சொல்லி பக்கத்தில் படுத்துக் கொள்ள வருகிறது. மனதில்’ஒரு தெய்வம் தந்த பூவே’ பாடல்வரி ஓடுகிறது.
(9) இயல்பு – உஷா தீபன் – குங்குமம் 7-3-25
பக்கத்து வீட்டுக்காரர் ஊருக்குச் செல்லும்போது இவர்கள் வீட்டில் கூரியர் வந்தால் வாங்கி வைக்கச் சொல்ல தபால்களை எடுத்துப் பிரிக்கையில் அவர்கள் வீட்டுத் தபால் ஒன்றைப்பிரித்து விடுகிறார். அடுத்து திரும்பவும் அதே போல் மறந்தார்ப்போல பிரித்து விட்டு ஆனால் இந்தத் தடவை அவரிடம் சொல்லிவிட்டுத் தரும்போது “ஆமாம். போனதடவை கூட இதே மாதிரி பிரிந்திருந்தது”. எனும்போது இவருக்குச் சுருக்கென்கிறது.
