‘கிரேஸி மோகன்’ புத்தக வெளியீட்டு விழா

(நன்றி மைலாப்பூர் டைம்ஸ் )

மே 1, வியாழக்கிழமையன்று சென்னை பாரதிய வித்யா பவன் அரங்கில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

காரணம் , 125 ஆண்டுகள் கொண்டாடிய மயிலாப்பூர் அல்லயன்ஸ் பதிப்பகத்தார் கிரேஸி மோகன் அவர்களின் 25 புத்தகங்களை வெளிட்டதுதான்.

இவ்விழாவில் நடிகர் கமல்ஹாசன் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார். இயக்குனர் ரவிக்குமார், நடிகர் ஜெயராம் , மாது பாலாஜி , அல்லயன்ஸ் ஸ்ரீநிவாசன் மற்றும் பல பிரபலங்கள் காலந்துகொண்டார்கள்.

கிரேசி மோகன் ஒரு அற்புதமான நகைச்சுவை எழுத்தாளர், நாடக ஆசிரியர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் கார்டூனிஸ்ட் ஆவார். அவரது படைப்புகள் தமிழ்நாட்டு நகைச்சுவை கலையின் அழிவில்லாத சொத்து எனலாம்.

அனைவரும் சிரித்து ரசித்து படிக்கவேண்டிய புத்தகங்கள்.

அந்த இருபத்தைந்து புத்தகங்களின் விவரம் இதோ: ( நன்றி அல்லயன்ஸ்)

Here are the titles written only in Tamil script:

  1. அல்லாவுதீனும் 100 வாட்ஸ் பல்பும
  2. அன்புள்ள மாதுவிற்கு
  3. ஐயா…! அம்மா…! அம்மம்மா…!
  4. பிவேர் ஆஃப் மாது
  5. சாக்லேட் கிருஷ்ணா
  6. கிரேசி கோஸ்ட்
  7. கிரேசி கிஷ்கிந்தா
  8. கிரேசியை கேளுங்கள், தொகுதி 1
  9. கிரேசியை கேளுங்கள், தொகுதி 2
  10. கிரேசியுடன் சிரியுங்கள், தொகுதி 1
  11. கிரேசியுடன் சிரியுங்கள், தொகுதி 2
  12. கீதா உபதேசம்
  13. கூகுள் கதோத்கஜன்
  14. ஹியர் ஈஸ் காசி
  15. ஹனிமூன் கப்பிள்ஸ்
  16. ஜுராசிக் பேபி
  17. மாது பிளஸ் 2
  18. மாது மிரண்டால்
  19. மதில் மேல் மாது
  20. மேரேஜ் மேட் இன் சலூன்
  21. மீசை ஆனாலும் மனைவி
  22. மிடில் கிளாஸ் மர்டர்
  23. ஒரு பேபியின் டைரி குறிப்பு
  24. ரிடர்ன் ஆஃப் கிரேஸி தீவ்ஸ்
  25. சாடிலைட் சாமியார்