குவிகம் ஆகஸ்ட் மாதம்  புத்தகச்  சிறப்பிதழ்

( புத்தக விமர்சனங்கள் மட்டும் வெளியாகும் – மற்ற தொடர்கள் அடுத்த மாதம் வெளிவரும்)

புத்தக விமர்சனப் போட்டி

பங்கெடுக்க விருப்பமா? நீங்கள்  வாசித்த சிறந்த தமிழ்ப்புத்தகத்தைப் பற்றி வாசகர்களை ஈர்க்கும் ஒரு விமர்சனம் எழுத முடியுமா?

குவிகம் இதழின் ஆகஸ்ட் மாத சிறப்பிதழுக்காக, நீங்கள் வாசித்த மிகச் சிறந்த தமிழ்ப்புத்தகம் (புனைவு அல்லது புனைவிலி) குறித்து 300 வார்த்தைகளில் ஒரு சுவாரஸ்யமான, கருத்துமிக்க விமர்சனம் எழுதுமாறு அழைக்கப்படுகிறீர்கள்.

விமர்சனத்தில் பின்வரும் அம்சங்களைச் சேர்க்கவும்:

கதைச்சுருக்கம்

கருத்தின் ஆழம்

நடையின் தனிச்சிறப்பு

முக்கிய சிறப்பம்சங்கள்

விமர்சனங்கள் வாசகர்களைப் புத்தகத்தை வாசிக்கத் தூண்டும் வகையிலும், படிப்புக்கு வழிகாட்டும் நோக்கத்திலும் அமைந்திருக்க வேண்டும்.

பிற விவரங்கள்:

  • விமர்சிக்கப்படும் புத்தகம் முதன்முதலில் 2001 முதல் 2025 வரை முதலில் வெளியானதாக இருக்க வேண்டும்.
  • மொழிபெயர்ப்பு நூல்கள், சிறுகதைத் தொகுப்பு, கவிதைத் தொகுப்பு  ஆகியவை இந்தப் போட்டிக்குத் தகுதி பெறாது.
  • ஒருவர் 3  விமர்சனங்களுக்கு மேல் அனுப்பவேண்டாம்.
  • ஆசிரியர் பெயர், பதிப்பகம், பக்கங்கள், விலை, பதிப்பு ஆண்டு மற்றும் அட்டைப்படப் புகைப்படம் ஆகிய விவரங்களுடன் விமர்சனத்தை வேர்ட் டாக்குமெண்டாக (WORD DOCUMENT)  தயார் செய்து கீழ்காணும் மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்:
    📧 editor@kuvikam.com

வெற்றி மற்றும் விருதுகள்:

சிறந்த 3 விமர்சனங்களுக்கு தலா ரூ. 1000/- பரிசு வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும்  விமர்சனங்கள் குவிகம் சார்பில் அச்சுப் புத்தகமாக வெளியிடப்படும்.