
1.
இந்தியாவின் சுற்றுச்சூழல் சுற்றுலாத் தலைநகரம் என சிக்கிம் அறிவிக்கப்பட்டுள்ளது.
2.
சிக்கிம் , 1975 இல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.
3.
இணைய நூலகம் என்பது, மின்னியல் (Digital) முறையில் நூல்கள், படங்கள், ஆவணங்கள் போன்ற தகவல் தொகுப்புகளை இணையத்தில் அணுகக்கூடிய நூலகம் ஆகும்.
4.
உலகின் மிகப்பெரிய நூலகம் அமெரிக்காவின் வாஷிங்டன் DC-யில் உள்ள காங்கிரஸின் நூலகம் ஆகும். நான்கு கட்டிடங்களில் 30 மில்லியன் புத்தகங்களைக் கொண்டுள்ளது.
5.
புத்தகம் வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்த சார்லி சாப்ளின்,
படம் நடிக்க வாங்கும் முன் பணத்தில் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவாராம்.
6.
அமெரிக்க நூறு டாலர் நோட்டுகள் பொதுவாக “பெஞ்சமின்கள்”, “ஃபிராங்க்ளின்ஸ்” அல்லது “பென்ஸ்” என்று குறிப்பிடப்படுகின்றன.
7.
கார்ல் பென்ஸ் மற்றும் எர்ன்ஸ்ட் பென்ஸ் ஆகியோர் இணைந்து 1886 இல் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தை நிறுவினார்கள்.
8.
மெர்சிடிஸ்-பென்ஸ், என்ற அடையாளத் தொழிற்பெயர் இன்று டைம்லர் ஏஜி (Daimler AG) என்னும் தொழிலகத்திற்குச் சொந்தமானது.
9.
உலகின் பழமையான தொழிலாகக் கருதப்படுவது விபச்சாரம் ஆகும். பண்டைய பாபிலோனியாவில் கிமு 2400 க்கு முந்தையது .
10.
பாபிலோன் என்பது மெசபடோமியாவில் (இன்றைய ஈராக்) இருந்த ஒரு பழங்கால நகரமாகும்.
11.
ஈராக் – ஈரான் போர், ஈரானை ஈராக் செப்டம்பர் 1980 ல் ஆக்கிரமித்தபோது ஆரம்பமாகியது
12.
நவுரூஸ் (புதுநாள்) என்கிற ஈரானியப் புத்தாண்டு கிட்டத்தட்ட 3,000 ஆண்டுகளாகக் கொண்டாடப் பட்டிருக்கிறது.
13.
தமிழ் மூவாயிரம் என்று அழைக்கப்படும் நூல் திருமந்திரம் ஆகும்.
14.
மந்த்ர ராஜபத ஸ்தோத்திரம்,
ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை போற்றி ஈஸ்வரர் பாடியதாக கருதப்படுகிறது
15.
பாடி (சென்னை) திருவல்லீஸ்வரர் (சிவன்) திருக்கோயில் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தேவாரத்தலம் ஆகும்.
16.
தேவாரத்தலம் என்பது, திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகிய மூவரும் தேவாரம் பாடல்களைப் பாடிய சிவாலயங்கள் ஆகும்.
சங்கிலி தொடரும்….
