
ட

எழுத்தாளர் பானு முஷ்டாக் எழுதிய இதய விளக்கு (ஹார்ட் லேம்ப்) என்ற புத்தகம் இந்தாண்டுக்கான புக்கர் பரிசை வென்றுள்ளது.
இதன் மூலம் சர்வதேச புக்கர் பரிசை வென்ற முதல் கன்னட எழுத்தாளர் என்ற பெருமை பானு முஷ்டாக் அவர்களுக்குச் சேர்ந்துள்ளது.
இதைபற்றி பிபிசி கூறுகிறது:
‘ஹசீனா மற்றும் அதர் ஸ்டோரிஸ்’ என்ற புத்தகத்தை, கன்னட மொழியில் எழுதினார். இதை பத்திரிகையாளர் தீபா பாஸ்தி என்பவர், ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து ‘ஹார்ட் லேம்ப்’ என பெயரிட்டார்.
இப்புத்தகம், இன்றைய உலகில் வாழும் மனிதர்களின் குணாதிசயங்களை விளக்கும் வகையில் எழுதப்பட்டு இருந்தது. மேலும். ஆங்கில மொழியில் வெளியாகி அதிகம் பேசப்படும் புத்தகங்களில் ஒன்றாக மாறியது.
இதையடுத்து, ‘தி இங்கிலிஷ் பெண் 2024’ என்ற விருதை பெற்றார். அதன் பின்னர், சர்வதேச அளவிலான ‘புக்கர் விருதுக்கு’ அவரது புத்தகம் தேர்வு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், நடப்பாண்டு புக்கர் பரிசு பட்டியலில் இவரின் ஹார்ட் லேம்ப் என்ற புத்தகத்துடன் சேர்த்து மொத்தம் 6 புத்தகங்கள் போட்டியில் இருந்தன. தற்போது அவரின் இந்த புத்தகம் புக்கர் பரிசுக்கு தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் எழுத்தாளருக்கு ரூ.56 லட்சம் பரிசுத்தொகை கிடைக்கும். சர்வதேச புக்கர் பரிசை வென்ற முதல் கன்னட எழுத்தாளர் என்ற பெருமையை பானு முஷ்டாக் பெற்றுள்ளார்!” (bbc )
இது 12 கதைகளைக் கொண்ட ஒரு தொகுப்பாகும், ஒவ்வொன்றும் கர்நாடகாவில் ஆணாதிக்கம் பற்றி விவரிக்கிறது. குறிப்பாகத் தென்னிந்தியாவில் வாழும் முஸ்லிம் பெண்களின் பிரச்சினைகளை விளக்கும் விதமாகவும் எழுதப்பட்டு இருக்கிறது என்று விமர்சகர் ஒருவர் கூறுகிறார். முஷ்டாக் பத்திரிகையாளர், ஆர்வலர் மற்றும் வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார்.
“விருதுபெற்ற இந்தக் கதைகளைக் கன்னட மொழியிலிருந்து மொழியாக்கம் செய்து வெளியிடும் உரிமையைக் காலச்சுவடு பெற்றுள்ளது. பானு முஷ்டாக்கின் விருதுபெற்ற கதைகள் அடங்கிய தொகுப்பு விரைவில் காலச்சுவடு வெளியீடாக வெளிவரும்.” என்று காலச்சுவடு அறிவிக்கிறது.
ஆசிரியர் பானு முஷ்டாக் அவர்களுக்கு பாராட்டுதல்கள்!
