பாடித் திரிந்த பறவைகளே 

PASUMAI NIRAINTHA Song with lyrics | Sivaji Ganesan, T.M.Soundararajan, P.Susheela, Kannadasan

“பசுமை நிறைந்த நினைவுகளே பாடித் திரிந்த பறவைகளே பிரிந்து செல்கின்றோம் “என்ற இனிமையான பாடல்; படம் -இரத்தத் திலகம்; கல்லூரி ஃபேர்வெல் பார்ட்டி ஸீன் ; சிவாஜி ,சாவித்ரி ,நாகேஷ் நடிப்பு. அசத்தியிருப்பார்கள். நாற்காலியில் அமர்ந்திருக்கும் ஒரு நண்பனிடம் நாகேஷ் டைம் கேட்பார் . கையில் காபி கோப்பை இருப்பதை மறந்து  அந்த நண்பன் கைக்கடியாரம் பார்க்க கையைத் திருப்புவான். இதை எதிர்பார்த்தே டைம் கேட்ட நாகேஷ் கீழே சிந்தும் காபியை தன் கோப்பையில் பிடித்துக் கொள்வார். பாடலின் இடையே நிகழும் நகைச்சுவை இது.

எழுபதுகளில் கல்லூரி சென்ற அனைவருக்கும் பிடித்த பாடல். எண்பது தொண்ணூறு வரையிலும் கல்லூரிகளில் மாணவர் பிரிவுபசார விழாக்களில் நிச்சயம் இடம்பெறும் பாடலாக இது இருந்திருக்கிறது.

அண்மையில் இந்த பிளாக் அண்ட் ஒயிட் பாடல் சீனை யு ட்யூப்பில் பார்த்த போது நினைவுகள் பின்னோக்கி ஓடின. கல்விக் கூடங்களில் நிகழும் பிரிவுகள் மறக்க இயலாதவை . நிறைவு ஆண்டில் படித்த சீனியர் மாணவர்கள் விடைபெறுவதும், ஜூனியர்கள் சீனியர்களாக மாறுவதும் ஆண்டு தோறும் காணும் நிகழ்வல்லவா !

நினைவுகள் மேலும் பின்னோக்கிப் பறந்து கல்லூரி ஸ்டாப்பில் நிற்காமல் நான் படித்த பள்ளியின் ஐந்தாம் வகுப்பு வாசலில் நின்றது,

சென்னை தி. நகர் கிரிஃபித் ரோடில்(தற்போது  மகாராஜபுரம் சந்தானம் சாலை ) உள்ள ராமகிருஷ்ணா மிஷன் பிரைமரி பள்ளியின் வாயிலில் பெற்றோர்கள் கூட்டம்.

நீண்ட விடுமுறை முடிந்து புதிய கல்வி ஆண்டு தொடக்கம். பிரைமரி பள்ளியில் ஐந்து வரைதான் வகுப்புகள் உண்டு. அங்கிருந்து இப்பிள்ளைகள் பனகல் பார்க் எதிரில் உள்ள மெயின் பள்ளிக்கு  அனுப்பப்படுவார்கள். இங்கே ஐந்தாம் கிளாஸில் ஒரே செக்ஷனில் படித்த மாணவர்கள் மெயின் பள்ளியில் ஒரே செக்ஷனில் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை. உண்மையிலே வெவ்வேறு செக்ஷனில் போட வேண்டும் என்பதே விதி. இங்கிருந்து செல்லும் ஐம்பது மாணவர்களை ஐந்து பிரிவாகப் பிரித்துவிடுவார்கள். இது என்ன லாஜிக் என்று இப்போதும் புரியவில்லை.

சரி! கதைக்கு வருவோம். தங்கள் பிள்ளைகள் மெயின் ஸ்கூலில் “ஏ “ யில் ஆரம்பித்து “ஹெச்” வரை உள்ள ஆறாம் வகுப்புகளில் எந்த செக்ஷனில் போடப்பட்டுள்ளார்கள் என்பதை அறியவே அத்தனை கூட்டம். இந்தத் தகவல் காகிதத்தில் எழுதப்பட்டு ஒரு கரும்பலகையில் ஓட்டப்பட்டிருக்கும். எங்கள் அன்னையார் இந்த “ரிசல்ட்” பார்க்க வந்திருந்தார்.

பார்த்த போதுதான் தெரிந்தது, இரட்டையர்களான நானும் என் சகோதரன் கணேஷும் ஒரே செக்ஷனில் போடப்படவில்லை ஒருவன் “பி” இன்னொருவன் “சி”