![]()
இந்த முறை மிக மிக வித்தியாசமான ஒரு கதை. கதை அல்ல உண்மை நிகழ்வு.
என் மிக நெருங்கிய உறவினர் சொன்னது. உண்மைக்கதை அல்லது உண்மை நிகழ்வு. இதில் வருபவர்கள் யார்? எந்த ஊர், என்ன பேர் ஒன்றும் தெரியாது
நம் கதாநாயகனுக்கு குப்பன் என்று பெயர் வைத்துக் கொள்ளுவோம். நிஜப் பெயர் தெரியாது, இப்போதைய (பொய்ப்) பேரும் தெரியாது.
குப்பன் ஊர் முழுக்க கடன் வாங்கியவன். ஊரில் மட்டும் இல்லை எங்கே முடியுமோ அங்கே எல்லாம். பல வங்கிகள் ஒரே டாகுமன்ட் (பாத்திரத்தைக்) கொடுத்து கடன் வாங்கியவன். பல லட்சம்… ஏன் கோடியில் கூட இருக்கலாம் கடன்.
ஒருநாள் அவனுக்கும் அவன் அப்பாவுக்கும் பெரிய சண்டை. “நீ ஊரெல்லாம் கடன் வாங்கி என் மானத்தை வாங்குகிறாய். நல்ல வேலை நான் சாட்சி, காரண்டி (guarantee) போடவில்லை. இந்த வீட்டை விட்டுப் போய்விடு. இனிமேல் உனக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நீ யாரோ, நான் யாரோ. ஒழிந்துபோ. எனக்கு மகனே பிறக்கவில்லை என்று நினைத்துக் கொள்கிறேன் ” என்று கத்துகிறார். பின்னர் வெளியே வந்து நிற்பவர்களைப் பார்த்து. ” இனிமேல் இந்த பாவி வாங்கிய கடனைப் பற்றி யாராவது என்னிடம் வந்து பேசினால்… அவ்வளவுதான். மரியாதை கெட்டுவிடும். ” என்று கத்தி விட்டு உள்ளே செல்கிறார். குப்பன் ஒரு பையை எடுத்துக் கொண்டு வெளியே வருகிறான். “உனக்கும் எனக்கும் எந்த ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. நான் எங்கே இருக்கிறேன் என்று தேடக்கூட முயற்சிக்காதே. ” என்று சொல்லி விட்டு போய் விடுகிறான்.
இப்போது குப்பனை தொடர்வோம். சென்னையில் ஒரு சேரியில், அவனை யாருக்குமே தெரியாத இடத்தில், ஒரு குடிசையில் தங்கிவிட்டான். ரொம்ப அதிகம் பழகாமல் வாழ்ந்து வந்தான். அப்போது தான் வரப்பிரசாதம் போல “கொரோனா” வந்தது.
ஏகப்பட்ட பேர் இறந்தார்கள். யார் என்றே தெரியாதவர்களும் அடக்கம் செய்யப்பட்டனர்
உறவினர்கள் கூட பார்க்க முடியாத, கிட்ட வர முடியாத நிலையில் குப்பனுக்கு ஒரு அபாரமான யோசனை தோன்றியது. அவன் இறந்துவிட்டதாக ஒரு சான்றிதழ் பெற்று விட்டான். ஊரெல்லாம் கடன் வாங்கி பாங்கில் கடன் வாங்கித் திரும்பக் கொடுக்காமல் லட்சக் கணக்கில் அவன் அக்கவுண்டில் பணம் . நிறைய பணம் அப்படியே வேறு வைத்திருந்தான்.கொரானாவில் இறந்ததற்கு அவன் அப்பா அம்மாவிற்குப் பணம் வேற வந்தது . வங்கிக் கணக்கில், அப்பா _ அம்மாவை நாமினேஷன் போட்டதால் எந்த கஷ்டமும் இல்லாமல், அவர்கள் பெயருக்கு மாற்றி விட்டான்.
அவன் அப்பா, அதைச் சொல்லி, “என்ன இருந்தாலும் என் பையன்” என்று சொல்லி பணத்தைப் பெற்றுக்கொண்டு இரண்டு நாள் சோகமாக இருந்தார். பின்னர் “நாங்களும் காசி, ராமேஸ்வரம்னு போகப் போகிறோம்” என்று சொல்லி அம்மாவையும் கூட்டிக் கொண்டு ஊரைவிட்டுப் போய்விட்டார். ரொம்ப நாள் கழித்துத்தான தெரிந்தது, அவர் அந்த வீட்டையும் யாருக்கோ விற்று விட்டார் என்று.
குப்பன், வேறு பெயரில் ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, ஏன் வாக்காளர் அட்டை கூட வாங்கி விட்டான். எப்படி என்று கேட்காதீர்கள். பர்மா, பங்களாதேஷ், பாக் ஆட்களுக்கே கிடைக்கும் போது, குப்பனுக்குக் கிடைக்காதா.
குப்பனும் அம்மா அப்பாவுடன் சேர்ந்து கொண்டான் .
மூன்று பேரும் வேறு மாநிலத்தில் வீடு வாங்கி வசிக்கத் துவங்கி விட்டார்கள். கல்யாணம் கூட ஆகிவிட்டது என்று கேள்வி.
அவன் உண்மைப் பெயர் என்ன? இப்போதைய பெயர் என்ன? எந்த ஊரில் இருக்கிறான் என்று எனக்குத் தெரியாது.
ஆனால் உண்மையில் நடந்தது என்று சொன்னவர் மிக நம்பிக்கையான நெருங்கிய உறவினர்.

பாத்திரம் – பத்திரம்
நல்லவேலை = நல்லவேளை
நடந்த கதையைச் சொல்ல நான் நடந்து வந்தேன் மெல்ல என்று கதை சொல்லி விட்டீர்கள். இதுமாதிரி ஃபிராடுகள் நிறைய உண்டுதானே?
எங்கள் பிளாக் ஸ்ரீராம்.
LikeLike