பிரதாப முதலியார் சரித்திரம் 1857-இல் எழுதப்பட்டு 1879-இல் வெளியான தமிழ் மொழியின் முதல் புதினம் ஆகும். மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய இப்புதினம், தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு மைல் கல்லாகக் கருதப்படுகிறது.

 பிரதாப முதலியார் என்பவரைக் கதாநாயனாகக் கொண்டு இப்புதினம் எழுதப்பட்டுள்ளது. அவர்  ஞானாம்பாள் என்பவளைத் திருமணம் செய்வதும் பின்னர் அவர்கள் பிரிவதும் அதன் பின்னர் எப்படிச் சேர்ந்தார்கள் என்பதும் நாவலாக எழுதப்பட்டுள்ளது.

மாயூரம் நகரசபையின் தலைவராக வேதநாயகம் பிள்ளை பணியாற்றிய காலத்தில் 1876-இல் ஏற்பட்ட தாது வருடப் பஞ்சத்தின் போது கஞ்சித்தொட்டி திறந்து பொதுமக்களுக்குச் சேவை செய்த அநுபவங்கள் போன்றவை இப்புதினத்தில் இடம்பெற்றுள்ளன.

இப்புதின நூலில் ஆசிரியரின் முன்னுரை ஆங்கிலத்திலும் இடம்பெற்றுள்ளது. இந்நாவல் ஆங்கிலம் உட்பட பல மொழிகளுக்கும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அமர் சித்திரக் கதையாகவும் வெளிவந்துள்ளது. இப்போதும் இது பதிப்பிக்கப்படுகிறது.

(நன்றி விக்கிபீடியா)

பிரதாப முதலியார் சரித்திரம் என்னும் சுவாரசியமான நாவல் 140 ஆண்டுகளுக்கு முன்னால் மாயூரம் வேதநாயகம் பிள்ளையால் எழுதப்பட்டது. தமிழின் முதல் நாவல். கருத்து வளமும், வசீகரமான நடையும் கொண்டது. அது வெளியான காலத்தில் இருந்து தொடர்ந்து படிக்கப்பட்டு வருகிறது. பிரதாப முதலியார் சரித்திரத்தின் முக்கியமான கதாபாத்திரம் ஞானாம்பாள். அழகும் அறிவும் கொண்ட அவள் கல்வி, பண்பாடு ஆகியவற்றால் பெண்கள் அடையும் முன்னேற்றம் பற்றியதின் குறியீடாக வர்ணிக்கப்பட்டு இருக்கிறாள். பிரதாப முதலியார் சரித்திரம் சுமார் 400 பக்கங்கள் கொண்ட நாவல். அதனை சுவை குன்றாமல் 125 பக்கங்களுக்குச் சுருக்கி ஒரு வரிகூட மாற்றி எழுதாமல் பாரதி புத்தகாலயம் நூலாகக் கொண்டு வந்துள்ளது.

 

கீற்று மின் இதழில் பிரதாப முதலியார் சரித்திரம் புத்தகம் பற்றிய நீண்ட விமர்சனம் வந்துள்ளது. நூலைப்பற்றி இதன் மூலம் நன்கு புரிந்து கொள்ளமுடியும்.  அதன் லின்க்:

https://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-oct20/41136-2020-11-16-11-23-39

 

அறிஞர்களின் பாராட்டுரைகள்

 

  1. சுவை கருதி மட்டும் படிக்கும் பருவத்திலே நம்பமுடியாத நிகழ்ச்சிகள், சாதிக்க முடியாத செயல்கள் கொண்ட கதைகள் உள்ளத்தைக் கவருகின்றன. இந்த வரிசையில் மனதிலே எளிதாகவும் பதிந்துவிடும் கதைப்போக்கு கொண்டது விக்கிரமாதித்யன் கதை போன்றவைகள். . அந்தப் பருவத்தைக் கடந்த பிறகு பயன் தரும் ஏடுகளையே மனம் நாடுகிறது. பொழுது போக்குடன் பயனும் தந்து சுவையும் தந்த புத்தகங்களிலே பிரதாப முதலியார் சரித்திரத்தைக் குறிப்பிடுவேன். என் உள்ளத்தைக் கவர்ந்த ஏடுகளிலே அது ஒன்று.   தனி மனிதன் மட்டுமல்ல, உலகமே இந்த முறையிலேதான் அந்தந்தக் காலத்திற்கேற்ற நூல்களை ஏற்றுக் கொள்ளுகிறது. காலத்திற்கேற்ற முறையில் நூல்கள் மாறினாலும் இறந்த கால ஏடுகள் அனைத்தும் இறந்து விடுவதில்லை. –என்னைக் கவர்ந்த புத்தகம் –அறிஞர் அண்ணா

2.90 ஆண்டுகளுக்கு முன் வேதநாயகம் பிள்ளைவாள் இயற்றித் தமிழுலகத்திற்குத் தந்த பிரதாப முதலியார் சரித்திரம் நீதியோடு கலந்து தமிழ்ப் புதுயுகத்துக் கற்பனை எழுத்துக்கு நல்வித்தாயிற்று. இப்போதும் புது நூல்களோடு அது போட்டியிட்டு வெல்லும்.—முதறிஞர் ராஜாஜி, 1969

3. முனிசீப் வேதநாயகம் பிள்ளை அவர்கள் புத்தகங்களைப் படிப்பதால் உலக நடையையும், நல்ல குணங்களையும், நல்ல பழக்கத்தையும் யாவரும் அடையலாமென்று நான் சொல்வது மிகையாகாது—டாக்டர் உ.வே. சாமிநாதைய்யர்

4. சீர்திருத்தவாதிகளில் மிகப் பழைய தொண்டர், ஒரு சிறந்த நூவாசிரியர். உயர்ந்த கவிஞர், நல்ல நீதிபதி. ஒழுக்கமுடையவர்.

அவர்தம் உயரிய குணங்களை அவர் செய்த நூல்கள் இன்றும் மெய்ப்பித்துக் கொண்டிருக்கின்றன. சில நூலாசிரியர்களின் நூல்கள் அவ்வக் காலத்தில் மட்டுமே பயன்படுபவை. அறிஞர் வேதநாயகம் பிள்ளையின் நூல்கள். என்றும் உயிர் உள்ளவையாக நின்று பயன்படுபவை.

தமிழகம் அறிஞர் திரு. வேதநாயகம் பிள்ளையவர்களை மறக்காது; மறக்கவும் கூடாது; மறந்தாலும் வாழாது. இலக்கிய உலகத்திலேயே ஒரு புதிய வழியைக் காட்டி, நாட்டின் நலன் ஒன்றையே கருதி, உயர்ந்த குறிக்கோள்களுடன் சிறந்த தொண்டாற்றிய திரு. பிள்ளையவர்களின் மறைவு நாளை நிளைவு நாளாகக் கொண்டாடி, அவர் காட்டிய நெறியில் நின்று நல்வாழ்வு வாழ வேண்டியது. நம் ஒவ்வொருவரினுடையவும் கடமையாகும். —கி. ஆ. பெ. விசுவநாதம், திருச்சி.

 

நூலை முழுவதும் படிக்க, இந்த சுட்டியை கிளிக் செய்யவும்.

பிரதாபமுதலியார் சரித்திரம்

 

அத்தியாயங்கள்:


1. பிரதாப முதலியார் பிறப்பும், வளர்ப்பும், வித்தியாப்பியாசமும், கலாப்பிரசங்கமும்
⁠ 2. பால லீலை
3. சம்பந்தி முதலியார் சரித்திரம்; ஞானாம்பாளுடைய குணாதிசயங்களும், கல்வித் திறமையும்
4. பிரதாப முதலியின் தாயார் கன்னிப்பருவமாயிருக்கும்போது நடந்த வர்த்தமானம்; நல்ல மருமகள்
5. சிங்காரத் தோட்டம்; கனகசபை சரித்திரம்; ஜலகண்டம்
6. அனாதைப் பிள்ளைக்கு அன்னையும் பிதாவும் கிடைத்தல்; தேவராஜப் பிள்ளை சரித்திரம், ஒரு கெட்ட         சகோதரன்
7. சோதிடப் பைத்தியம்; அரண்டவள் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்; ஞாளும்பாளுக்குச்           சம்பவித்த பிராணாபாய நிவர்த்தி
8. கற்பலங்காரி சரித்திரம்
9. இம்மை மறுமையைப் பற்றிய விடுகதையும், அதன் பொருளும்; கருணாளந்தம் பிள்ளை தம் மகளையும் மருமகளையும் நம்பி மோசம் போன சரித்திரம்
10. கடவுளின் நித்தியத்துவம்; கல்வியின் பிரயோஜனம்பு கடவுளை அறிதல்; அரசனுக்கும் கடவுளுக்கும் உள்ள பேதம்
11. ஒன்பது விக்கிரகங்களின் கதை: நற்குணப் பெண்டிரே பெருஞ்செல்வம்
12. விவாகம் பேசல்; சம்பந்திகளின் சம்வாதம்; குலத்திலும் தனத்தினும் குணமே விசேடம்; காந்தர்வ விவாக கண்டனம்
13. நினையாக் கலியாணம்
14. ஞானாம்பாள் சிறையில் அகப்பட்டுத் தப்புதல்; சிறை எடுத்தவன் சீவனை இழந்தது.
15. ஞானாம்பாளைச் சிறை எடுத்தவன் வரலாறு
16. ஆண்டிச்சி அம்மாள் சரித்திரம்; மாமி நாத்திகளின் கொடுமை
17. போர் வீரர்களின் வரவு; குற்ற விசாரணை; ஆண்டிச்சி அம்மான் ஆர்வலனைக் காணுதல்
18. ஆண்டிச்சி அம்மாளுக்கு அதிர்ஷ்டத்தின்மேல் அதிர்ஷ்டம் சம்பவித்தல்
19. பிரதாப முதலியின் விவாக மகோற்சவம்; குணரத்தினம் என்னும் பெண்ணின் சரித்திரம்
20. இல்லறம்; குண அழகு அழகே யன்றி, முக அழகு அழகல்ல; கெட்ட ஸ்திரீகளும் நல்ல ஸ்திரீகளும்
21. துஷ்டப் புருஷனைத் திருத்தும் விதம்; அடங்காப் பாரியை அடக்கும் வகை
22. பிறவாக் குழந்தையைச் சுவீகாரம் கேட்டுப் பிரமாதம் விளைதல்
23. பிரதாப முதலியார் பிரயாணம்; பிரிந்தவர் கூடல்: இரண்டு தாரக்காரன் பட்டபாடு
24. சோரபயம்; களவருக்கும் உளவருக்கும் நடந்த சண்டை; புண்ணியகோடி செட்டி சரித்திரம்
25. புலி என்னும் கிலி; அழையா விருந்து; பிரயாண முடிவு
26. தாய் தந்தையர் செய்த வுபகாரம்; நல்ல பிள்ளைகளின் சரித்திரம்
27. எதிர்பாரா நல்வரவு
28. சகோதர பட்சம்; நல்ல சகோதரனும், கெட்ட சகோதரனும்
29. படித்துக் கெட்டவன்
30. தேவராஜ பிள்ளைக்குக் கனகசசை சொந்தப் புத்திரனா என்னும் விசாரணை; சிரித்தவர் அழுவார், அழுதவர் சிரிப்பார்
31. கனகசபையின் கலியாணம்; கலியாணச் சந்தடியில் தாலி கட்ட மறந்துவிட்டது
32. இராக் கொள்ளைக்காரன் பகற் கொள்ளைக்காரர்களை வெளிப்படுத்தியது.
33. குணபூஷணி சரித்திரம்; மூத்தாள் மகளை இளையாள் கொடுமை செய்தது; திருட்டுக் கலியாணம்
34. வேட்டை பார்க்கப் போய் வில்லங்கத்தில் மாட்டிக் கொண்டது; அநீத வழக்குகள்
35. காவற் சேவகர்களின் குமார்க்கம்; விக்கிரமபுரியின் விருத்தாந்தம்; குடியரசு என்னும் கொடிய அரசு
36. குடியரசை நீக்கி முடியரசை நியமித்தல்; ஞானாம்பாள் ஆண் வேஷம் பூண்டு அரசாண்டது
37. ஞானாம்பாள் தன்னுடைய வரலாறுகளைத் தெரிவித்தல்
38. அரசன் குடிகளுக்குச் செய்யவேண்டிய நன்மைகள்; உத்தியோகவிஷயம்; பரிதானகண்டனம்
39. உபராஜ நியமனம்; தேச பரிபாலனம், உத்தியோகச் சீர்திருத்தம்
40. குடிகள் இயல்பு; இராஜ பக்தி, அனியாய பஞ்சகம்
41. நியாய வாதிகள்
42. சுதேச பாஷாபி விருத்தி; தமிழின் அருமை
43. உத்தியோக மமதை: கர்விகளுக்கு நற்புத்தி
44. ஆண்பால் பெண்பால் மயக்கம்; பெண்ணைப் பெண் விரும்பல்; இராஜாங்க பாரம்பரைப் பாத்தியம்
45. இராஜாங்க பரித்தியாகம்; தாய் தந்தையரைச் சந்தித்தல்; ஆனந்தவல்லியின் மகுடாபிஷேகம்
46. ஊருக்குத் திரும்புதல்; துக்கப்படுகிறவர்கள் முடிவில் சுகம் அடைவார்கள்