நாவல் என்றால் என்ன? நாவலின் வரையறை யாது? » இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ்

https://www.keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/12233—-2000-2010–

( ஆ.பூமிச்செல்வம், கட்டுரையாளர், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழாசிரியர். கோட்பாட்டு அடிப்படையில் பிரதிகளை வாசிக்கும் ஆர்வத்தோடு செயல்படுகிறார். ‘தத்துவத் தேடல்’, ‘விளிம்பு நிலை மனிதர்கள்’, ‘பின்னை நவீனத்துவம்’ ஆகிய நூல்களின் ஆசிரியர். இவர் ‘தமிழ்ப் புனைகதைளில் பின்னை நவீனத்துவத்தின் தாக்கம்’ என்னும் தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு செய்துள்ளார்.)

மேலைக்கோட்பாடு சார்ந்து நாவலிலக்கியத்தை முன்னெடுத்த முதல்வராக எண்பதுகளில் காட்சிப்படுத்திக் கொண்ட தமிழவன், அவ்விடத்தைத் தக்க வைக்கும் முயற்சியாக, நடப்புப் பத்தாண்டுப் படைப்புக் களத்தில் தீட்சண்ய இயங்குதலுடன் இருப்பதை இவ்விடத்து நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும். இவ்வரிசையில் அணிவகுப்பவர்களாக, சாரு நிவேதிதா (‘ராஸ லீலா’ – அக்டோ பர் 2006, ‘காமரூபக் கதைகள்’, டிசம்பர் 2008), எம்.ஜி. சுரேஷ் (‘அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பைத் தேநீரும் -நவம்பர் 2001’, ‘யுரேகா என்றொரு நகரம்’, ‘சிலந்தி 2001’, ழு, 37), ரமேஷ்-பிரேம் (‘சொல் என்றொரு சொல்’ டிசம்பர்-2001), எஸ். இராமகிருஷ்ணன் (‘நெடுங்குருதி’ – டிசம்பர் – 2003, ‘உறுபசி’-டிசம்பர் -2005, ‘யாமம்’), கோணங்கி (‘பாழி’ – மே – 2000, ‘பிதிரா’ – ஜூலை – 2004), ஜெயமோகன் (‘காடு’ – அக். 2003, ‘ஏழாம் உலகம்’, ‘கொற்றவை’ – டிசம்பர் – 2005) ஆகியோரும், இவர்களை அடியொற்றுபவர்களாக யுவன் சந்திரசேகர் – (‘பகையாட்டம்’ ‘குள்ளச்சித்தன்சரித்திரம்’, கானல்நதி), வாமுகோமு, (கள்ளி டிச-2008) பா. வெங்கடேசன் (‘தாண்டவராயன் கதை’ – டிச-2008), சுதேசமித்திரன் – (‘காக்டெய்ல்’, டிசம் – 2004, ‘ஆஸ்பத்திரி’ – டிசம் – 2006), அருணன்(‘பூருவம்சம்’ – ஏப் -2003) போன்றோரும் நடையிடுகின்றனர்.

ரமேஷ் பிரேமின் ‘சொல் என்றொரு சொல்’எனும் நாவலினுள், வரலாறு/புனைவு; நடப்பு/கனவு; யாதார்த்தம்/புராணம்/படைப்பாளி;

எஸ். இராமகிருஷ்ணனின் ‘நெடுங்குறுதி’, ‘உறுபசி’, ‘யாமம்’ ஆகிய நாவல்களில் முன்னது, நடப்புக் காலத் தமிழகச் சூழலில் பொருள், பண்பாடு சார்ந்தியங்கும் சமூகப் புழங்குதளத்தில்,

ஜெயமோகனின் ‘ஏழாம் உலகமும்’, இயற்கையைத் தன்வயப்படுத்த முயன்று, கோரச் செய்கைகளை மேற்கொள்ளும் மானுடம், இறுதியில் நசிவுபெற்ற ழிவதைச் சித்திரிக்க முயன்றுள்ள ‘காடும்’ – சமகாலத்தில் எழுந்துள்ள காத்திரப் பிரதிகள். இவற்றிற்கு நேரெதிராக, எதார்த்தக் கதை கூறல் முறையைத் தவிர்த்த அவர்தம் ‘கொற்றவை’ எனும் நாவல்,

‘குள்ளச்சித்தன் சரித்திரம்’, ‘பகடையாட்டம்’, ‘கானல் நதி’, ‘வெளியேற்றம்’ என விரியும் யுவன் சந்திரசேகரின் நாவல்கள் யாவற்றையும் ‘மீபொருண்மை மாயயதார்த்த வகைமைக்குள்’ அடக்கிவிட வாய்ப்புண்டு.

பா.வெங்கடேசன் காணக்கிடைக்கிறார். இவருடைய ‘தாண்டவராயன் கதை’ என்னும் பிரதி, முறையே இங்கிலாந்து, பிரான்ஸ், தமிழகம் எனப் பிரயாணிக்கிறது

அ-நேர்கோட்டு எழுத்துப் (Non-Linearity) புனைகதையாளர்கள் வகைமைக்குள் அடங்கும் மற்றொரு பிரதியாளராக ‘சுதேசமித்திரன்’ விளங்குகிறார். குடிச்சாலை அனுபவங்களினூடே சமூக விமர்சனங்களை முன்வைக்க முயற்சித்துள்ள இவரது ‘காக்டெய்ல்’ என்னும் நாவல், குடியையும் கொண்டாட்டங்களையும் முன்னெடுப்பது போல முதலில் காட்சிப்பட்டு, ‘

ஜோசப் டி குரூஸின் ‘ஆழி கூழ் உலகு’ அமைகிறது. 1933இல் தொடங்கி 1985இல் முடிவுபெறும் நாவலின் கால ஓட்டத்தில், ஆமந்துறை (உவரி) எனும் தூத்துக் குடிக் கடல்புரத்து மக்கள், கடலின் பருவநிலை மாற்றங்களால் படும் அவஸ்தைகளானவை விரிவாகப் பதிவாக்கம் பெற்றுள்ளன.

சு. தமிழ்ச்செல்வி, ‘மாணிக்கம்’, ‘அளம்’, ‘கீதாரி’, ‘கற்றாழை’, ‘ஆறுகாட்டுத் துறை’ ‘கண்ணகி’ எனத் திணைசார் நாவல்களைத் தந்து வருகிறார். இவற்றில் குறிப்பாக, ‘கீதாரி’ மேய்ச்சல் தொழிலைக் கைக்கொண்ட ‘கோனார்’ இனமக்களை வரைவு செய்ய, ‘அளமோ’ மருதம், முல்லை, நெய்தல் ஆகிய மூன்று திணைசார் வெளிகளில் பயணிக்கிறது.. ‘ஆஸ்பத்திரி’ எனும் இவரது அடுத்த நாவல், நேர்மைக்கு மாற்றாகச் சமகாலத்தில் நடைபெறும் மருத்துவமனைச் செயல்பாடுகளை அங்கதம் செய்து விவரிப்பதோடு, கழிவிரக்கமற்ற தமிழ்ச்சமூக நடத்தை முறையைப் பகடிப்பதுடன் சுய எள்ளலையும் மேற்கொண்டிருக்கிறது.

ச. பாலமுருகனின் ‘சோளகர் தொட்டி’ எனும் நாவல் சுட்டிச் செல்கிறது.

ப.க.பொன்னுசாமியின் ‘படுகளம்’ என்பதையும், பெருமாள் முருகனின் ‘கங்கணத்தையும்’ (செம்மங் காடு), சோலை சுந்தர பெருமாளால் கீழைத் தஞ்சையின் வண்டல் மண்ணைச் சார்ந்தியங்கும் ‘நஞ்சை மனிதர்களையும், ஜெயமோகனின் காடு (குறிஞ்சி) எனும் நாவலையும் உள்ளடக்கிக் கூற வாய்ப்புள்ளது.

சோலை சுந்தரப்பெருமாளின் “குருமார்கள்’ எனும் நாவல்வழி,சோழ ராஜ்ய ஆதிக்க வரலாறு மறு உருவாக்கம் பெறுகிறது. ராஜராஜசோழனை வரலாற்றில் முன்னிறுத்த நேர்கையில், பெருவுடையார் கோயிலும் கலைகளின் மேன்மைத் திறமும் மட்டுமல்லாமல், தேவதாசிக் கொடுமைகளும், சனாதனச் சார்பும் உடன் பேசப்பட வேண்டும் என இப்பிரதி வலியுறுத்துகிறது. மேலும், நாயக்கர் ஆட்சி குறித்துப் பேச முற்படுகையில்,

“இந்தக் கல்யாண மகாலை நாயக்க மாமன்னர்கள் தங்கள் வைப்பாட்டிமார்களுக்கான அந்தப்புரமாக வைத்திருந்தனர். அரசவை மருத்துவச்சிகளால் பொறுக்கி எடுத்து, அழைத்து வரப்படும் அழகிய பெண்களின் கன்னித் தன்மை இங்குப் பரிசோதித்து அனுப்பப்படும். அதுக்குன்னே உளவுப்படையும் இராஜாங்கப் பிரதிநிதிகளும் உண்டு. அப்படித் தேர்ந்த பெண்கள் ஒரு மண்டலம் மட்டுமே மன்னர்களோடு தங்கி, கலந்து நெகிழ்ச்சி தந்த பின்னர், இந்தக் கல்யாண மகாலுக்கு அனுப்பப்படுவர். அப்படி அனுப்பப்பட்ட மக்களுக்குச் சிறைவாழ்க்கைதான். இப்படி சிறை வைக்கப்பட்ட சில பெண்களைத் தலைமை வேதியர்க்குத் தானமாகக் கொடுத் திருக்கிறார்கள். சில பெண்கள் தற்கொலை செய்துகொண் டும், பல பெண்கள் தப்பி ஓடுவதற்காகவே சவண்டிப் பார்ப்பார்களுக்கு இசைந்து படுத்தும் பயன் இல்லாமல், தப்பிக் கும் முன்னர் சிரச்சேதம் பண்ணப்பட்டவர்களும் உண்டு”

என, வரலாற்றில் மறைக்கப்பட்ட பக்கங்களை மீட்டெடுத்துக் கட்டமைப்பவையாகப் பல கதைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

சோலை சுந்தரபெருமாள் தம் ‘நஞ்சை மனிதர்களில் 1930-80 வரை கீழைத்தஞ்சை கொண்டிருந்த நிலஉடைமைச் சமூக அமைப்பின் இறுக்கம், அதன்வழி நிகழ்த்தப்பட்ட சிதைவு, பூர்ஷ்வாச் சீரழிவு போன்றவற்றை உள்ளடக்கிப் படைத்துள்ளார். இதில், அரசியல் ரீதியாக, காங்கிரஸ், ஜஸ்டிஸ், திராவிடக்கழகம், அ.தி.மு.க. ஆகிய வற்றின் சமூகச் செலுத்து நிலைகளையும் இழையோட விட்டுள்ளமை என்பது குறிப்பிடத்தக்க அம்சம்.

வரலாற்று வரைவியலாகத் தம்மை வெளிப்படுத்திக் கொண்ட தமிழ் நாவல்களில் சு.வெங்கடேசனின் ‘காவல் கோட்டம்’ மிக முக்கியமானது. 1310 இல் நிகழ்ந்த மாலிக்கபூரின் படையெடுப்பில் தொடங்கி, மதுரை ஆட்சியராக ‘பிளாக் பெர்ன்’ வந்து சேர்ந்து, மதுரையின் சுற்றுப் புறக் கோட்டைச் சுவரை இடிப்பது மற்றும் மதுரை அருகேயுள்ள தாதனூரைச் (கீழக்குயில்குடி) சேர்ந்த, காவல் தொழில் புரியும் இனத்தாரின் சரிவுகள், நசிவுகள் என நாவல் 1048 பக்கங்களில் விரிந்து முடிகிறது. ஒரு சமூகத்தின் துயர வரலாறு, ஒரு வரலாற்று நாவலாக உருப்படுத்தப்பட்டுள்ளமையை வாசிப்பு வழியில் கண்டுணரலாம்.

“வரலாற்றின் நினைவுகளைப் பருகத் தொடங்கிவிட்டால் அதற்குள் பெருமிதம் மட்டும் கடிந்து வருவதில்லை; வலியும் அதிர்ச்சியும் கூடச் சேர்ந்தேதான் வருகிறது” (ப. 447) என்ற நாவலாசிரியரின் கூற்று, இந்நாவலுக்கு மிகவும் பொருந்திப் போகிறது.

சமகாலத்தில் தன் வாழ்க்கைப் பார்வையையே மையமாகக் கொண்ட ராஜ்கௌதமனின் ‘சிலுவைராஜ் சரித்திரம்’, ‘லண்டனில் சிலுவைராஜ், காலச்சுமை’, பாரத தேவியின் ‘நிலாக்கள் தூர தூரமாக’, முத்தம்மாள் பழனிச்சாமியின் ‘நாடு விட்டு நாடு வந்து’, (90களில் வந்து கவனம் பெறாது தற்போது பேசப்படுவதாக), எஸ். சண்முகத்தின் ‘நிலம் மருகும் நாடோடி’, ‘பெரியவயல்’, முத்து மீனாளின் ‘முள்’ என விரியும் பட்டியலில், கே.ஏ. குணசேகரனின் ‘வடு’வும் சரவணனின் ‘நான் வித்யா’வும் இணைய முற்படினும் முன்னையது புனைவு கலந்த வரலாறாக இருக்க, பின்னது வெறும் வரலாறாகவே ஆகிப் போதல் கண்கூடு. ‘

குறிப்பாக, தமிழில் உமா மகேஸ்வரியின் ‘யாரும் யாருடனும் இல்லை’, சல்மாவின் ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’ சு. தமிழ்ச்செல்வியின் கண்ணகி – (பிம்பம் தகர்க்கப்படுதல்), கண்மணி குணசேகரனின் ‘அஞ்சலை’, பா. விசாலத்தின் ‘மெல்லக் கனவாய்ப் பழங்கதையாய்’ என்பன இவ்வகைமைக்குள் அடங்குவன.

அழகிய பெரியவனின் ‘தகப்பன் கொடி’, ராஜ் கௌதமனின் ‘சிலுவைராஜ்’, ‘லண்டனில் சிலுவைராஜ் சரித்திரம்’, சோ.தர்மனின் ‘கூகை’, கீரனூர் ஜாகீர்ராஜாவின் ‘மீன்காரத் தெரு’, க. பஞ்சாங்கத்தின் ‘ஒரு தலித் ஒரு அதிகாரி ஒரு மரணம்’, ப. ஸ்ரீதரகணேசனின் ‘மீசை’, பாமாவின் ‘வன்மம்’, பாண்டிக்கண்ணனின் ‘சலவான்’ (குறவர் இனம்) எனப் பிரயாணக்கின் றன தமிழில் தலித் நாவல்கள்.

பிரியா பாபுவின் ‘மூன்றாம் பாலின் முகம்’, ‘பாலபாரதியின் ‘அவன் – அது – அவள்’ குறிப்பிடத் தக்க பிரதிகள்

தோப்பில் முஹம்மது மீரானின் ‘அஞ்சு வண்ணம் தெரு’வும், தமிழ் முஸ்லிம் குடும்பப் பெண்களைக் களமாகக் கொண்டு, அப்பெண்கள் படும் வாதைகளைச் சல்மாவின் ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’யும், தம் சமுதாயத்தைக் கட்டிப் பிணைத் திருக்கும் அடிமைச் சங்கிலியை அறுத்திடச், சாதி ஏற்றத் தாழ்வு களைப் போக்கிட முனைகிற கீரனூர் ஜாகீர்ராஜாவின் ‘கருத்த லெப்பை’, ‘துருக்குத் தொப்பி’, அர்ஸியாவின் ‘ஏழைப்பங்காளி வகையறா’ போன்றனவும் குறிப்பிடத்தக்க ஆக்கங்களாகும்.

இடதுசாரிச் சிந்தனைப் புலத்தோடு வர்க்கமுரண்களை அடையாளங் காட்டும் முகத்தான் உருவாக்கம் பெற்ற ஸ்ரீதர கணேசனின் ‘அவுரி’, 1968 டிசம்பர் 25இல் 44 தலித் அப்பாவி மக்களின் உயிரைக் காவு வாங்கிய இருஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடுவை 1980களில் அழித்தொழித்த செய்திகளை, குறிப்பாக, கீழ வெண்மணி எரிப்புப் படுகொலைக்குப் பிந்தைய நிலையில், அதனை மையப்படுத்தி நடைபெற்ற போராட்டங்களை, எதிர் கொண்ட அரசியல் அடக்குமுறைகளை மையப்படுத்தி, பாட்டாளி யால் புனைவுபெற்றுள்ள ‘கீழைத்தீ’,

சுப்ரபாரதிமணியனின் ‘ஓடும் நதி’, கரும்பு விவசாயிகளின் பாடுகளை விவரிக்கும் கு. சின்னப்ப பாரதியின் ‘சர்க்கரை’, கூட்டுக் குடும்பச்சிதைவினால் எதிர்கொள்ளும் நசிவை விதந்து பேசிடும் தங்கர் பச்சானின் ‘அம்மாவின் கைபேசி’, பெருகி வரும் நகர்மயமாதலின் பசிக்கு, கிராமங்களும் இயற்கையும் யாங்ஙனம் பலிகொடுக்கப்படுகின்றன என்பதை விவரிக்கும் முகத்தான் அமைந்துள்ள வெ. இறையன்புவின் ‘ஆத்தங்கரை ஓரம்’, தனி மனித நசிவைச் சித்தரிக்கும் பிரான்ஸிஸ் கிருபாவின் ‘கன்னி’, தனிமனித, சமூகக் குழுமத்தின் மன அழுத்தம் கொண்டாடப்பட வேண்டும் என்று உளவியல்பூர்வமாக வலியுறுத்துகிற நிஜந்தனின் ‘மேகமூட்டம்’, முதலாளிகளின் பிடியில் சிக்கிப் பரிதவிக்கும் பாமரர் படுகிற பாடுகளைக் காட்சிப்படுத்தும் சி.ஆர். ரவீந்திரனின் ‘செந்தூரச் சாரல்’ போன்ற பிரதிகள் நடப்புக்காலத் தமிழ் நாவ லிலக்கியச் சூழலில் காத்திரமானவையாகத் தென்படுகின்றன.

மேலும், சமீபத்திய வரவான ஜோ.டி. குரூஸின் கொற்கையை யும், சிறார் புதினமாக வந்துள்ள வேலு சரவணனின் ஐராபாசியை யும், அறிவியல் புதினங்களாகத் தலைகாட்டியுள்ள இரா. நடராச னின் ‘நாகா’மற்றும் ‘பூஜ்யமாம் ஆண்டையும்’, சிறுபத்திரிகை களில் தொடராக வந்துகொண்டிருக்கும் கோணங்கியின் ‘தீ நீரையும்’, வாமு கோமுவின் ‘கீதா’வையும் தமிழ் நாவல் உலகம் ஏற்று உட்கிரகிக்க முயலும் என நம்பலாம்.

 

அந்திமழை பத்திரிகையில் வந்த கட்டுரை: 

andhimazhai

இரண்டாயிரத்துக்குப் பிறகான தமிழ் நாவல்கள்

https://www.andhimazhai.com/literature/column/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

வரலாறை எழுதுதல், நுண் வரலாறை எழுதுதல், மாற்று வரலாறை அல்லது இணை வரலாறை எழுதுதல், வரலாற்றை திருகுதல் என தமிழ் இலக்கியம் நான்குவிதமான உரையாடலை வரலாற்றுடன் நிகழ்த்த தொடங்கியது.

பிரபஞ்சனின் வானம் வசப்படும், ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பை அடிப்படையாக கொண்டு எழுதப்பட நாவல். வரலாற்று நாவலின் தொடக்கப்புள்ளி. தொண்ணூறுகளில் தான் சி.சு செல்லப்பா தனது வாழ்வின் இறுதி காலத்தில் ‘சுதந்திர தாகம்; நாவலை எழுதுகிறார்.

சு. வெங்கடேசனின் ‘காவல் கோட்டம்’ நாயக்கர் கால வரலாறை புனைவாக ஆக்கிய மிக முக்கியமான முயற்சி. அ.வெண்ணிலா, மு. ராஜேந்திரன் ஆகியோர் இத்தளத்தில் சில ஆக்கங்களை எழுதி வருகிறார்கள். சரவண கார்த்திகேயனின் ‘ஆப்பிளுக்கு முன்’ காந்தியின் பாலியல் சோதனையை பின்புலமாக கொண்டது. கடந்த ஆண்டு மிகவும் கவனிக்கப்பட்ட நாவல்களில் ஒன்றான சுளுந்தீயையும் இப்படி வகைப்படுத்தலாம். வரலாற்று நாவல்களின் சவால் என்பது தகவல்களையும் புனைவுகளையும் எந்த விகிதத்தில் கலந்து சமநிலையை அடைகிறோம் என்பதில் உள்ளது. தகவல் குவியலாக ஆக்காமல் படைப்பூக்கத்துடன் வரலாற்றை கையாள்வதில் உள்ளது சவால். பூமணியின் ‘அஞ்ஞாடி’ இவ்வகையில் மிக முக்கியமான முயற்சி. ஜெயமோகனின் ‘வெள்ளை யானையும்’ வரலாற்று புனைவாக கவனப்படுத்த வேண்டிய முக்கிய முயற்சி.

வரலாற்று கதை மாந்தர்களை தவிர்த்து வாழ்க்கைமுறை ஆவணம் என

சொல்லத்தக்க மானுடவியல் நோக்கில் முக்கியமான முதல் முயற்சிகள் பலவும் இந்த இருபது ஆண்டுகளில் நிகழ்ந்தன. கி.ராவின் கோபல்ல நாவல் தொடர்களை ஒரு இனக்குழு வரலாறாக கொள்ள முடியும். அதுவே இவ்வகை நாவல்களின் முன்னோடி.  தொண்ணூறுகளில் வெளிவந்த இமையத்தின் ‘கோவேறு கழுதைகள்’ இவ்வகை எழுத்துகளின் நவீன கால முக்கிய மைல்கல் முயற்சி. அவருடைய ‘செடல்’ குறிப்பிட்ட ஒரு வகையான ஆட்டக்காரர்களின் வாழ்வை சொல்கிறது. ஜோ டி குரூசின் ‘ஆழி சூழ் உலகு’, ‘கொற்கை’ ஆகியவை பரதர்களின் வாழ்வை சொல்பவை. கிறிஸ்தோபர் ஆண்டனியின் ‘துறைவன்’ முக்குவர் எனும் குறிப்பிட்ட மீனவக் குழுவை பற்றி பேசுகிறது. எஸ்.செந்தில்குமாரின் ‘காலகண்டம்’ பொற்கொல்லர் சமூகத்தின் சித்திரத்தை அளிப்பது. அவருடைய அண்மைய நாவலான ‘கழுதைபாதை’ போடி குரங்கணி பகுதியில் கழுதை மேய்ப்பவர்கள் மற்றும் முதுவான்குடி எனும் பழங்குடி மக்கள் பற்றிய முதல் சித்திரத்தை அளிக்கிறது. ச.பாலமுருகனின் ‘சோளகர் தொட்டி’, பழங்குடி வாழ்வை ஆவணப்படுத்துகிறது. லக்ஷ்மி சரவணகுமாரின் ‘கானகன்’ பளியர் வாழ்வை பேசியது. ஏக்நாத்தின் ‘கிடை காடு’ , ‘ஆங்காரம்’ போன்றவை மேய்ச்சல் தொழிலை பற்றிய நுண்மைகளை பேசுபவை. நக்கீரனின் ‘காடோடி’ காட்டை நுண்மையாக எழுத்தாக்கியது.  வேல ராமமூர்த்தி, சி.எம். முத்து போன்றோரை இவ்வகையில் புரிந்து கொள்ளலாம்‌.

வரலாற்று நாவல்களின் சட்டகங்கள் சற்றே இறுக்கமானவை. அத்தோடு ஒப்பிட நுண் வரலாற்று நாவல் எழுதுவது சற்றே சுலபம். வரலாற்று நாவல்கள் வரலாற்று பாத்திரங்களை, வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டவை. நுண் வரலாற்று நாவல்கள் வரலாற்று நிகழ்வுகளை சாமானியர்களின் தளத்திலிருந்து அணுகுபவை. இத்தளத்திலே பல நாவல்கள் தமிழில் எழுதப்பட்டுள்ளன. பி.ஏ. கிருஷ்ணனின் ‘புலி நகக் கொன்றை’ ஒரு வம்சத்தின் கதையைசொல்கிறது. மேற்சொன்ன நுண்வரலாற்று தன்மையை பயன்படுத்தி எழுதப்பட்ட சிறந்த நாவல்களில் ஒன்று. ஒரு தீப்பெட்டியில் வரையப்பட்ட ஓவியத்தின் வழியாக திராவிட அரசியலின் சமூக பரிணாமத்தை தமிழ்மகனின் வெட்டுப்புலி சொல்ல முயல்கிறது. இப்படி ஏதேனும் ஒரு பொருளின் வரலாறை எழுதத் தொடங்கி ஒரு காலகட்டத்தின் வரலாறை நாவலாக நம்மால் எழுதிவிட முடியும் என்பதற்கு இது ஓர் உதாரணம். ஒரு நகரத்தின் பரிணாமத்தை பாத்திரங்களின் ஊடாக சொல்லும்

எம்.கோபாலகிருஷ்ணனின் ‘மணல் கடிகை, கண்மணி குணசேகரனின் ‘வந்தாரங்குடி’ தமிழ் பிரபாவின் ‘பேட்டை’  போன்றவையும் நுண் வரலாற்று சித்திரத்தையே அளிக்கின்றன. சு.வேணுகோபாலின் ‘நிலம் எனும் நல்லாள்’ கிராமம் நீங்கி நகருக்கு இடம்பெயரும் வேளாண் குடியின் வாழ்வை சொல்கிறது. சோ. தர்மனின் ‘சூல்’ நீர்நிலை சார்ந்து சீரழிவின் வரலாறை பதிவு செய்கிறது. பெருமாள் முருகனின் மாதொருபாகன் தனி மனிதர்களின் வாழ்வை சமூக பண்பாட்டு தளத்தில் அணுகுகிறது. கடுமையாக எதிர்க்கபட்டு தமிழகத்திற்கு வெளியே மிக பரவலாக அறியப்பட்ட முதல் தமிழ் நாவல் எனும் இடத்தை அடைந்தது. தமிழ் எழுத்தின் சர்வதேச முகமாக இந்த இருபது ஆண்டுகளில் பெருமாள் முருகன் அறியப்படுகிறார்.

‘போர் எனும் வரலாற்று நிகழ்வை பின்புலமாக கொண்டு பல்வேறு ஈழ நாவல்கள் இந்த இருபது ஆண்டுகளில் வெளிவந்துள்ளன. ஷோபா சக்தியின் ‘ம்’, ‘கொரில்லா’, ‘பாக்ஸ் கதைகள்’ அண்மையில் வெளிவந்திருக்கும் ‘இச்சா’ வரை அனைத்துமே முக்கியமான நாவல்கள். குணா கவியழகனின், தமிழ்நதியின் நாவல்களும் இதே பின்புலத்தை பேசுபவை. சயந்தனின் ‘ஆறா வடு’ மற்றும் ‘ஆதிரை’ ஈழ பின்புலத்தில் எழுதப்பட்ட மிக முக்கியமான நாவல்கள். கடந்த ஆண்டு வெளிவந்த ம.நவீனின் ‘பேய்ச்சி’ மலேசிய தமிழர் வாழ்வை பற்றிய நுண் வரலாற்று சித்திரத்தை அளிக்கும் முக்கிய நாவல். சீ.முத்துசாமியின் ‘மண்புழுக்கள்’ மற்றும் ‘மழைக்காடு’ ஆகியவையும் இந்த இருபது ஆண்டுகளுக்குள் வெளிவந்த முக்கிய மலேசிய நாவல்கள்.

வெவ்வேறு தொழில் சார்ந்தும் நுண் வரலாற்று நாவல்கள் எழுதப்படலாம். சுப்ரபாரதி மணியன் நெசவு சாயப்பட்டறை சார்ந்து பல ஆக்கங்களை எழுதி வருகிறார். கணினி மற்றும் தகவல் தொடர்புத்துறை சார்ந்தும் சில நாவல்கள் தமிழில் எழுதப்பட்டுள்ளன. இரா.முருகன், செல்லமுத்து குப்புசாமி, வினாயகமுருகன் ஆகியோர் எழுதி இருக்கிறார்கள். கார்த்திக் பாலசுப்பிரமணியத்தின் ‘நட்சத்திரவாசிகளை’ குறிப்பிடத்தக்க முயற்சியாக சொல்லமுடியும்.

பெண் எழுத்துகள் கூர்மையான தன்னிலையில் வாழ்வனுபவ வெளியிலிருத்து உருவாகுபவை. தனித்த பேசுபொருள் மற்றும் கூறுமுறை காரணமாக தனித்தன்மையை  சிவகாமியின் ‘ஆனந்தாயி’ உமாமகேஷ்வரியின் ‘யாரும் யாருடனும் இல்லை’ பாமாவின் ‘கருக்கு’ சல்மாவின் ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’ போன்றவை இந்த காலகட்டத்தில் வெளியான குறிப்பிடத்தக்க பெண் எழுத்துகள். இஸ்லாமிய வாழ்வை எழுதிய முன்னோடி என தோப்பில் முகமதுமீரானை

சொல்லலாம். கீரனூர் ஜாகிர் ராஜாவின் துருக்கி தொப்பி, புனத்தில் குஞ்ஞப்துல்லாவின் மீசான் கற்களுடன் ஒப்பிடத்தக்க முக்கியமான ஆக்கம். அர்ஷியா, மீரான் மைதீனின் ஆக்கங்களும் இவ்வரிசையில் வருபவை‌.

இணை வரலாறு அல்லது மாற்று வரலாறை எழுதுவதில் ஜெயமோகனின் விஷ்ணுபுரம் மற்றும் பின் தொடரும் நிழலின் குரல் ஆகியவை முக்கிய முன்னோடி ஆக்கங்கள். பெருங்கதையாடல் இத்தகைய வடிவிற்கு தேவையாகிறது. வெவ்வேறு மெய்யியல் தரப்புகளின் மோதலை உருவாக்குகிறார். அரவிந்தின் ‘சீர்மை’ சிறிய அளவில் என்றாலும் தத்துவ மோதல்களை வரலாற்று ஆளுமையின் பின்புலத்தில் நகர்த்துகிறது. மாற்று வரலாற்று எழுத்துகள் நாட்டாரியல் மற்றும் தொன்மங்களை மீளுருவாக்கம் செய்தன. ஜெயமோகனின் ‘கொற்றவை’ மற்றும்  இப்போது எழுதிக்கொண்டிருக்கும் ‘வெண் முரசு’ தொடர் நாவல்கள் இவ்வகையை சேர்ந்தவை. பல தொகுதிகள், பல்லாயிரக்கணக்கான பக்கங்கள் நீளும் ஒரு அரிய முயற்சி. நவீன கால அறிதல்களை கொண்டு பாரதத்தை மீளுருவாக்கம் செய்கிறார். ஃபிராய்டு, யுங், கிராம்ஷி என பலருடைய அறிதல்கள் பாரத கதையாடலோடு இணைகிறது. முருகவேளின் ‘மிளிர் கல்’ கண்ணகியை நவீன தளத்தில் மீளுருவாக்கம் செய்ய முயல்கிறது. கோணங்கியின் நாவல்களையும் இவ்வரிசையிலேயே ஒருவர் வைக்கக் கூடும். பூமணியின் ‘கொம்மை’ மகாபாரதத்தை நாட்டாரியல் தளத்தில் மறு உருவாக்கம் செய்கிறது. எஸ். ராமகிருஷ்ணனின் உப பாண்டவம் பின் நவீனத்துவ பாணியில் பாரதத்தை சொல்கிறது. நெடுங்குருதி, யாமம், இடக்கை, சஞ்சாரம் என அவருடைய நாவல்கள் முக்கியமானவை. வரலாற்று இடைவெளிகளை பேசுபவை.

வரலாறை திருகுதல் ஒரு வகையில் மாற்று அல்லது இணை வரலாறை உருவாக்கும் முயற்சி மற்றொரு வகையில் வரலாற்றை நிராகரித்தல்‌. பா‌ வெங்கடேசனின் நாவல்களை முந்தைய பகுப்பிலும் யுவன் சந்திரசேகரின் நாவல்களை பிந்தைய பகுப்பிலும் வைக்கலாம். வரலாறை திருகி அதன் அபத்தத்தை சுட்டி அதை நிராகரிக்கும் ஆக்கம் தேவிபாரதியின் நட்ராஜ் மகராஜ். இரா. முருகனின் ‘அரசூர் வம்சம்’ தொடர் நாவல்கள் அடிப்படையில் ஒரு வம்சகதைதான். ஆனால் அதன் சொல்முறை காரணமாக வரலாறை திருகி அதை குறியீடுகளாக ஆக்கிக் கொள்கிறது. சாருவின் ஜீரோ டிகிரி சிதறல் வடிவத்தின் முன்னோடி முயற்சி. அவருடைய ராசலீலா, எக்சைல் ஆகிய நாவல்கள் இந்த ஆண்டுகளில் வெளியாயின.

தேவி பாரதியின் ‘நிழலின் தனிமை’ தனிமனிதனை மையமாக கொண்ட நாவல். ஆனால் அந்த நாவல் கொண்டாடப்பட்டது‌‌. அது எழுப்பிய ஆழ்ந்த கேள்விகள் மற்றும் வெறுமை அதை நாவலாக்கியது. லக்ஷ்மி சரவணகுமாரின் ‘உப்பு நாய்கள்’ வரலாறு தனிமனிதன் இடையீட்டில் நிகழும் நாவல். ஒரு வகையில் சுரேஷ் பிரதீப்பின் ‘ஒளிர் நிழல்’ குணா எனும் ஒரு தனி மனிதனின் கதைதான் ஆனால் குறிப்பிட்ட வரலாற்று தருணத்துக்கு எதிர்வினையாற்றுவது. சுனில் கிருஷ்ணனின் ‘நீலகண்டமும்’ வரலாற்று காலத்திற்கான தனி மனிதனின் எதிர்வினை என்றே வகைப்படுத்த முடியும்‌. இவை வரலாற்று நிகழ்வு என இல்லாமல் வரலாற்று போக்கின் மீதான எதிர்வினை என சொல்லலாம்.

நாவல்களில் எப்போதும் பேருரு கொள்வது காலம் தான். யதார்த்தவாத செவ்வியல் நாவல்கள் எதை எடுத்துக் கொண்டாலும்  ஒருவகையில் நாம் மீண்டும் மீண்டும் சென்று மோதுவது காலத்தின் பேருரு தோற்றத்தில் தான். அது தால்ஸ்தாயின் போரும் வாழ்வுமாக  இருந்தாலும் சரி பைரப்பாவின் குடும்பம் சிதைகிறது என்றாலும் சரி. தமிழ் நாவல்களின் கூறுமுறை பேசு பொருள் என்னவாக இருந்தாலும் அவை இந்த இலக்கை நெருங்குவதை பொருத்தே அதை மதிப்பிடுவது வழக்கமாகிவிட்டது.

ஒட்டுமொத்தமாக தமிழ்  இலக்கியத்தில் கடந்த இருபது ஆண்டுகளில் நாவல்களில் பெரும் பாய்ச்சல் நிகழ்ந்து வருவதை உணர முடிகிறது. வருங்காலத்திலும் தமிழ் நாவல்கள் தொடர்ந்து சரியான திசையில் புதிய சவால்களை கண்டடைந்தபடி முன்நகரும் எனும் நம்பிக்கை இருக்கிறது.  தற்கால தமிழ் நாவலில் உள்ள கதாபாத்திரம் பண்பாட்டு தொடர்ச்சியோ வரலாற்று பிரக்ஞையோ அற்றவர் அல்ல.  அவர்கள் சூழலின் காலத்தின் பிரதிநிதிகள். தற்கால தமிழ் நாவலின் சவால் என்பது தரவுகளை எந்த அளவில் புனைவாக்குவது என்பதே. கடந்த முப்பது ஆண்டுகளாக அது எதிர்கொண்டுவரும் சவால் என்பது அகத்துக்கும் புறத்துக்கும் இடையிலான சமநிலையை அடைய முற்படுவதுதான்

vallinam

2000-க்கு பிந்தைய தமிழ் நாவல்களின் உலகம்

ஜெயமோகன் எழுதிய ‘ஏழாம் உலகம்‘ (2003) நாவலில் வரக்கூடிய எல்லா மனிதர்களுமே சமூகத்தால் ஒதுக்கப்பட்டவர்கள்.

எஸ்.ராமகிருஷ்ணனுடைய ‘துயில்’ (2012) நாவலில் வரக்கூடிய மனிதர்கள் ஊர் சுற்றிகள். நாடோடிகள்

குறிப்பாக பாமாவின் ‘வன்மம்‘ (2002) சோ.தர்மனின் கூகை (2006), அழகிய பெரியவனின் ‘தகப்பன்கொடி‘ (2011) ஸ்ரீதர கணேசனின் ‘வாங்கல்‘(2001), சிவகாமியின் ‘உண்மைக்கு முன்னும் பின்னும் (2013), ராஜ் கௌதமனுடைய ‘சிலுவை ராஜ் சரித்திரம்’ (2002), ‘காலச்சுமை’ (2003), ‘லண்டனில் சிலுவை ராஜ்’ (2004) ஆகிய நாவல்கள் முற்றிலும் அவர்களுடைய வாழ்க்கையை, அவர்களுடைய மொழியின் வழியே – தாழ்த்தப்பட்டவர்களுடைய வாழ்வின் அறத்தை, அழகியலை – நாவலாக்கினார்கள், இலக்கியமானார்கள், கலையாக்கினார்கள்.

மன்னர்களுடைய கதைகளை மட்டுமே வரலாறுகளாக, வரலாற்று நாவல்களாக புனையப்பட்டதிலிருந்து முற்றிலுமாக விடுபட்டு – சமகால சம்பவங்களையும், வரலாற்று நாவல்களாக எழுத முடியும் என்று ச.பாலமுருகனுடைய சோளகர் தொட்டி நிரூபித்துள்ளது. சந்தனக் கடத்தல் வீரப்பனை தேடி வந்த கர்நாடக போலீசாரும், அதிரடிப் படையினரும் மலை வாழ் மக்களிடம் எப்படி நடந்து கொண்டனர்? எவ்வளவு வன்முறைகள், எவ்வளவு மனித உரிமை மீறல்கள், வன்புணர்ச்சிகள்,

ச.பாலமுருகன் அண்மைக்கால வரலாற்றை நாவலாக்கினார் என்றால் பா.வெங்கடேசன் நாயக்கர்கால வரலாற்றை ‘காவல் கோட்டம்‘(2008) என்று எழுதினார். நாயக்கர்கள் ஆட்சிக்காலத்தில் களவுத் தொழிலில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்தவும், களவுத் தொழிலை ஒழிக்கவும் நினைத்த நாயக்க மன்னர்கள், களவுத் தொழிலில் ஈடுபடுகிறவர்களையே காவலர்களாக நியமித்தனர். திருடர்களைக் கொண்டே திருடர்களைப் பிடிக்க முயன்றனர். ஒவ்வொரு ஊருக்கும், கோவிலுக்கும், மதுரையிலுள்ள நாயக்கர் மகாலை காப்பதற்கும் நியமிக்கப்பட்டவர்கள்தான் கள்ளர்கள்.

சிவகாசியில் நடந்த பெரும் சமூக கலவரத்தைப் பற்றி பேசுகிறது பூ மணியின் ‘அஞ்ஞாடி’ (2012), கேரளாவிலிருந்து விரட்டப்பட்ட, தப்பி ஓடிவந்த நாடார்கள் எப்படி தமிழகமெங்கும் நிலைபெற்றார்கள்? குறிப்பாக தென் தமிழகத்தில்? அதிகமாக சிவகாசி பகுதியில் கால் ஊன்றியதற்கான காரணம் என்ன?

வரவாறுகளைப் புனைவாக்கிய வரிசையில் ஜெயமோகனுடைய ‘வெள்ளை யானை’ (2013), கவனத்திற்குரிய நாவல். 1878 – காலத்தில் தமிழகத்தில் ஏற்பட்டப் பெரும் பஞ்சத்தைப்பற்றி இந்நாவல் பேசுகிறது. தாது வருச பஞ்சம் – என்று வர்ணிக்கப்பட்ட, மக்களின் மனங்களில் இன்றும் நினைவிலிருக்கும் சமூக நிகழ்வு.

வரலாற்று நாவல்களில் கூடுதல் கவனத்தை ஈர்ப்பதாக இருப்பது அசோகன் நாகமுத்து எழுதிய ‘போதியின் நிழல்’ (2012) என்ற நாவல். யுவான் சுவாங் இந்தியா வந்த பயணத்தை பேசுகிறது.

2000க்குப் பிறகுதான் இனவரைவியல் சார்ந்த நாவல்கள் எழுதப்பட்டன. அந்த வகையில் எஸ்.செந்தில்குமாரின் ‘காலகண்டமும்‘(2013), ஜோ.டி.குருஸின் ஆழி சூழ் உலகு‘ம் முக்கியமானவை.

சுகுமாரன் எழுதிய “வெல்லிங்டன்”(2013) என்ற நாவல். “வெல்லிங்டன்” என்பது பிரிட்டிஷ் நிர்வாகத்தில் அன்றைய மதராஸப்பட்டின கவர்னருடைய பெயர். அவருடைய பெயரை ஒரு ரயில்வே நிலையத்திற்கு வைக்கிறார்கள். அதை ஒட்டி ராணுவ பயிற்சி மையம் உருவாக்கப்படுகிறது. ராணுவ வீரர்கள், வெள்ளைக்கார துரைமார்கள் வந்து போவதற்கு வசதியாகத்தான் ரயில்வே நிலையம் அமைக்கப்பட்டது.

இதே வகையில் மற்றொரு கவனத்திற்குரிய நாவல் பி.ஏ.கிருஷ்ணன் எழுதிய ‘புலிநகக் கொன்றை’ (2004). சுதந்திர போராட்ட காலத்தில் தமிழ் சமூகத்தில் நடந்த அரசியல் மாற்றங்கள், காந்தி மீதான ஈடுபாடு, தேசபக்தி எப்படியிருந்தது என்பதை ஒரு பிராமண குடும்பத்தின் வழியே சொல்கிறது.

தோப்பில் முகமது மீரானின் ‘அஞ்சு வண்ணம் தெரு‘, (2008), சல்மாவின் ‘இரண்டாம் ஜாமங்களின் கதை (2004), கீரனூர் ஜாகிர் ராஜாவின் மீன்கார தெரு (2006), ‘துருக்கித் தொப்பி’ (2008) போன்ற நாவல்கள் படம் பிடித்துக்காட்டியுள்ளன. இஸ்லாமிய மக்களுடைய நம்பிக்கைகள், சடங்குகள், மொழி, தொழில் நிமித்தமாக வெளிநாடுகளில் வாழ்கிறவர்கள், அவர்களுடைய குடும்பங்கள், ஒரு இஸ்லாமியக் குடும்பம் ஆண் குழுந்தையை நடத்துகிற விதத்திற்கும் பெண் குழந்தையை நடத்துகிற விதத்திற்குமான வேறுபாடுகள், மசூதிகள், மசூதியைச் சுற்றியுள்ள அதிகார மையங்கள், சுரண்டல்கள் என்று சகலவிதமான விசயங்களும் இப்போதுதான் நாவலாகியிருக்கின்றன. ‘புர்கா’விற்குள் பெண்களை வைத்திருக்க விரும்பும் மத நம்பிக்கைகள் சார்ந்த கேள்விகள் அதிகமாக இப்போது எழுதப்படுகின்றன.

பெண் என்றால் ‘புனிதம்‘, பெருமை, கற்பு, அழகு, வீடு, அடங்கி நடத்தல், பணிந்து போதல், கேள்வியின்றி வாழ்தல் என்ற வகையில் எழுதாமல், பெண் உடல், பெண் மொழி, உரிமை, சமத்துவம், உடல் வேட்கை குறித்தெல்லாம் எழுதினார்கள். இது தமிழுக்கு புதியபோக்கு. உமா மகேஸ்வரியின் ‘யாரும் யாருடனும் இல்லை‘(2003), அஞ்சாங்கல் (2013), ஆகிய நாவல் பெண் இருப்பு குறித்து கேள்வி கேட்டவை. சல்மாவின் ‘இரண்டாம் ஜாமங்களின் கதை. இஸ்லாமிய சமூகத்தில் பெண் என்பவளின் நிலை என்ன? அவளுக்கென்று ஆசைகளோ, விருப்பங்களோ இருக்கக்கூடாது, சமையல் செய்ய வேண்டியது, பிள்ளை பெற வேண்டியது என்ற இஸ்லாமிய சமூகத்தின் கருத்தாக்கம் பற்றி சல்மா கேள்வி கேட்கிறார்.

ஹெப்சிபா ஏசுதாஸ் எழுதிய ‘புத்தம் வீடு‘, கிருத்திகா எழுதிய ‘வாசுவேச்வரம்‘ (1991) போன்ற நாவல்களில் வரக்கூடிய பெண்கள் குடும்ப அமைப்பை போற்றுகின்ற பெண்கள். புனிதப் பட்டம் பெறத் துடிப்பவர்கள்.

அந்த வகையில் தமிழவன் சர்யலிச பாணியில் ‘ஏற்னனவே சொல்லப்பட்ட மனிதர்கள்‘ (1985), ‘முசல் பனி‘ (2010), ‘வார்சாவில் ஒரு கடவுள்‘ (2008) ஆகிய நாவல்களை எழுதினார். சர்யலிச பாணி நாவல் என்பது முற்றிலும் கனவு நிலையில் நிகழ்பவை. யதார்த்தத்திற்கும் அதற்கும் தொடர்பில்லை. யதார்த்தத்தில் எழுதப்படுபவை நாவல் அல்ல, கனவு நிலையை எழுதுவதுதான் நாவல் என்று வரையறுத்தது சர்யலிச பாணி நாவல்.

மேஜிக்கல் ரியலிச பாணியைப் பின்பற்றி கோணங்கி ‘பிதுரா’, (1998) ‘பாழி’ (2008) போன்ற நாவல்களை எழுதினார்

ரமேஷ் பிரேம் – ‘சொல் என்றொரு சொல்‘(2001), கனவில் பெய்த மழையைப் பற்றிய குறிப்புகள் (2000) போன்ற நாவல்களை எழுதினார்கள். இதே பாணியில் எம்.ஜி.சுரேசும் பல நாவல்களை எழுதியுள்ளார். தமிழ் நாவல் – வழக்கமாக கொண்டிருந்த வடிவத்தை, கதை சொல்லல் முறை, கதை சொல்வதற்கான மொழியை முற்றிலுமாக குலைத்துப் போட்டவர்கள் தமிழவன், கோணங்கி, எம்.ஜி.சுரேஷ், ரமேஷ் பிரேம் போன்றவர்கள். இவர்களுடைய நாவல் பாணி – தமிழ் நாவலுக்கு புதிய முகத்தைக் கொடுத்தது என்பதை மறுக்க முடியாது.

‘ராஸ லீலா, காம ரூபக் கதைகள்’, போன்ற நாவல்களின் மூலம் புனிதமான, தூய்மையான, உன்னதமான, ஒழுக்கமான கதை சொல்லும் முறையையும், கதை சொன்னவர்களையும் முகம் சுளிக்க வைத்தவர் சாரு நிவேதிதா.

வெகுஜன இதழ்களில் சுஜாதா அறிவியல் புனைக்கதைகளை எழுதினார். தீவிர இலக்கியப் பரப்பில் எம்.ஜி.சுரேஷ் – சிலந்தி (2001), ‘யுரேகா என்றொரு நகரம்’ (2002), ‘37’ (2003) ஆகிய நாவல்களை எழுதியிருக்கிறார். 6174 (2012), என்ற நாவலை என்.சுதாகர் எழுதியிருக்கிறார். நிகழ்காலத்தை மட்டுமல்ல இனிவரும் காலங்களையும், வாழ்வையும் தீர்மானிக்கப்போவது அறிவியல்தான். அதனால் அறிவியல் புனைவுகளின் தேவை அதிகமாகிவிட்டது.

புலம் பெயர்ந்தோரின் துயரம். அந்த துயரத்தை நாவலாக்கியவர்களில் முக்கியமானவர் ஷோபா சக்தி. அவருடைய ‘கொரில்லா’ (2002), ‘ம்’, ஆகிய நாவல்கள்

தமிழ் நாவலுக்கு புதிய கணத்தை சேர்த்திருக்கிறது ஸர்மிளா ஸெய்யத்தின் ‘உம்மத்.’

அ.ரெங்கசாமியின் ‘இமையத் தியாகம்’ (2006) என்ற நாவல். ப.சிங்காரம் எழுதிய ‘புயலிலே ஒரு தோணி’ – நாவல் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு மதிப்பு வாய்ந்தது இமையத் தியாகம் நாவல். இரண்டாம் உலகப் போர் நடந்த காலத்தில் மலேசியாவில் என்ன நடந்தது,

மலேசியாவில் புதியவகை எழுத்து வேரூன்றி வளர்ந்து வருகிறது என்பதற்கு கே.பாலமுருகனுடைய “நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள் (2009)” என்ற நாவல் நல்ல உதாரணம்.

2000க்குப் பிறகு ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக இருபத்தி ஐந்து முதல் ஐம்பது நாவல்கள் வரக்கூடும். எண்ணிக்கையின் அடிப்படையில் பார்த்தால் தமிழ் நாவல் கலை செழிப்பாகவே இருக்கிறது. சிறுகதை தொகுப்புகளைவிட, கவிதைத் தொகுப்புகளைவிட நாவல்களே அதிகம் விற்பனையாகின்றன.

kieetru

 

இருபத்தியோராம் நூற்றாண்டில் யதார்த்தவாதப் போக்கு தமிழ் நாவல் இலக்கியத்தில் பல புதிய பரிமாணங்களுடன் எழுச்சி பெற்றுள்ளது. இரண்டாயிரத்திற்குப் பின் சோசலிசம், வர்க்கப் போராட்டம் எனப் பேரரசியலைப் பேசக்கூடிய படைப்பாளிகளும் தலித், சிறுபான்மையினர், மூன்றாம் பாலினத்தார் ஆகிய விளிம்புநிலை மக்களின் நுண்ணரசி யலைப் பேசும் படைப்பாளிகளும் யதார்த்தவாத எழுத்து முறையினை நுட்பமாகக் கையாண்டுள்ளனர். பேரரசியல் பேசும் முற்போக்கு நாவலாசிரியர்கள் இக்காலப் பகுதியில் மிகப் பெரிய ஆவண நாவல்களை உருவாக்கி யுள்ளனர். இவ்வகையில் பொன்னீலனின் ‘மறுபக்கம்’, டி.செல்வராஜின் ‘தோல்’, சு.வெங்கடேசனின் ‘காவல் கோட்டம்’ ஆகிய மூன்று நாவல்கள் குறிப்பிடத்தக்கன.

இருபத்தோராம் நூற்றாண்டில் மார்க்சியம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய சர்வதேசப் பிரச்சினைகளுள் ஒன்றான சூழலியலை அடிப்படையாக வைத்து சாயத்திரை முதலான நாவல்களை எழுதிய சுப்ரபாரதிமணியன் அண்மையில் ‘தறிநாடா’ எனும் நாவலை வெளியிட்டுள்ளார்.

வட்டார வாழ்வியலை அடிப்படையாக வைத்து கண்மணி குணசேகரன், தவசி ஆகியோர் சிறந்த நாவல்களை உருவாக்கியுள்ளனர். நடுநாட்டு (விழுப்புரம் மாவட்ட முந்திரிக்காடுகள்) வாழ்வியலைப் பின்னணியாகக் கொண்டு கண்மணி குணசேகரனின் ‘கோரை’, ‘அஞ்சலை’ ஆகிய நாவல்கள் எழுதப்பட்டுள்ளன. ம.தவசியின் ‘சேவல்கட்டு’ நாவல் இராமநாதபுரம் வட்டார சமூகப்பண்பாட்டு வாழ்வைப் பின்புலமாகக் கொண்டுள்ளது. ஜோ டி குரூஸின் நாவல்கள் (ஆழிகுழ் உலகு, கொற்கை) கடலோரப் பரதவரின மக்களின் இனவரைவியலை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளன. அண்மையில் வெளி வந்துள்ள பூமணியின் அஞ்ஞாடி நாவல் சங்கரன்கோயில் வட்டாரத்தில் நிகழ்ந்த கழுகுமலைக் கலவரத்தைப் பின்புலமாகக்கொண்டது. என்றாலும், அப்பகுதியில் வாழ்கின்ற பள்ளர்களின் இனப்பிரிவுகளுள் ஒன்றான ‘அஞ்ஞா’ பள்ளர்களின் இனவரைவியலை ஆதாரமாகக் கொண்டுள்ளது.

பெருமாள்முருகனின் அண்மைக்கால நாவல்களான கங்கணம், மாதொருபாகன் என்பன கொங்கு வட்டாரத்தின் ஒரு பண்பாட்டுப் பிரதேசத்தைப் படம் பிடித்துக் காட்டுகின்றன. கரன் கார்க்கியின் ‘கறுப்பர் நகரம்’ நாவல் சென்னை நகரின் புறஞ்சேரி வாழ்க்கையை மனிதநேயத்துடன் சித்திரிக்கின்றது. ஆர்.எஸ்.ஜேக்கப்பின் ‘பனையண்ணன்’ நாவலும் குமாரசெல்வாவின் ‘குன்னி முத்து’ நாவலும் பழைய தென்திருவிதாங்கூர் பகுதியில் வாழ்ந்த நாடார் இனத்த வரின் உள் முரண்களை (பனையேறி X வியாபாரி) அவ்வட்டாரப் பின்புலத்தோடு எடுத்துரைக்கின்றன. இவ்வாறே ஸ்ரீதரகணேசனின் ‘சடையன்குளம்’ நாவலும் தூத்துக்குடி வட்டார கிராமங்களில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பறையரின மக்கள் ஆதிக்கச்சாதி யினரை எதிர்த்துப் போராடுவதைக் காட்டுகின்றது.

21ஆம் நூற்றாண்டில் மீரான்மைதீன், தோப்பில் முகமதுமீரானைப் போன்றே குமரிமாவட்ட இஸ்லாமியரின் சமூகப்பண்பாட்டு வாழ்வைத் தமது நாவலுக்குரிய களமாகக் கொண் டிருந்தாலும் இஸ்லாமியத் தொன்மங்கள், பெண் மீதான ஒடுக்குதல் ஆகிய பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி யுள்ளார். ‘ஓதி எறியப்படாத முட்டைகள்’ எனும் இவரது முதல் நாவலைத் தொடர்ந்து அண்மையில் ‘அஜ்னபி’ எனும் நாவலை மீரான்மைதீன் வெளியிட்டுள்ளார். இந்நாவல், அராபிய நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த தமிழ்நாட்டு இஸ்லாமிய இளைஞர்களின் இன்னல்களை எடுத்துரைக்கின்றது. கீரனூர் ஜாகீர்ராஜாவின் கொங்கு வட்டார நாவல்கள் (துருக்கித்தொப்பி, கறுத்தலெப்பை, மீன்காரத்தெரு) அடித்தள இஸ்லாமிய மக்களின் – கறுத்த முஸ்லீம்களின் வாழ்வியலைச் சித்திரிக்கின்றது. இவரது ‘வடக்கே முறி அலீமா’ நாவல் இவரது வழக்கமான யதார்த்தவாத எழுத்துக்கு மாறாக பின்நவீனத்துவப் பிரதியாக உருவாக்கப்பட்டிருக்கின்றது. பெண்ணின் எல்லையற்ற காமத்தையும் பாலியல் விடுதலையையும் பேசும் இந்நாவலில் பின்நவீனத்துவ உத்திக்கூறுகள் இயைந்து செல்லாமல் துருத்தி நிற்கின்றன. அர்ஷியா தனது ஏழரைப் பங்காளி வகையறா, அப்பாஸ்பாய் தோப்பு ஆகிய நாவல்களில் மதுரையில் வாழும் உருது பேசும் இஸ்லாமிய மக்களின் சமூகப்பண்பாட்டு வாழ்வியலை ஆவணப்படுத்தியுள்ளார். அன்வர் ராஜாவின் ‘கறுப்பாயி என்ற நூர்ஜஹான்’ நெல்லை மாவட்ட மீனாட்சிபுரம் பகுதியில் நிகழ்ந்த இஸ்லாமிய மதமாற்றத்தையும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சமூக மாற்றங்களையும், பண்பாட்டுச் சிக்கல்களையும் விவரிக்கின்றது.

அவ்வகையில் பிரியா பாபுவின் ‘மூன்றாம் பாலினத்தின் முகம்’ குறிப்பிடத்தகுந்த நாவலாக விளங்குகின்றது. தலித் நாவல்களைப் போன்று இதுவும் தன் எடுத்துரைப்பியலாக ((Self Narrative) அமைந் துள்ளது. அண்மையில் வெளிவந்த சு.வேணுகோபாலின் ‘பால்கனி’ நாவல் திருநங்கையரின் வாழ்வியல் நெருக்கடி களை ஒரு பெண்ணின் (அக்காள்) நோக்குநிலையில் விவரிக்கின்றது.

யுவன் சந்திரசேகரின் நாவல்கள் மாந்திரிக யதார்த்தவாத பாணியில் அமைந்துள்ளன. இவரது பகடையாட்டம், குள்ளச்சித்தன் சரித்திரம், கானல் நிலவில் ஆகிய நாவல்கள் வாழ்வின் அபத்தத்தையும் நினைவுக்கும் இருப்புக்குமான ஊடாட்டத்தையும் எடுத்துரைக்கின்றன. பிரேம்ரமேஷின் ‘சொல் என்றொரு சொல்’ நாவல், பின்நவீனத்துவத்தின் பிறழ் எழுத்து முறைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது.

எம்.ஜி.சுரேஷின் யுரேகா என்றொரு நகரம், 37, சிலந்தி ஆகிய மூன்று நாவல்களும் மர்மமும் அறிவியலும் நிறைந்த கதையாடல்களாக அமைந் துள்ளன. இவரது ‘37’ எனும் நாவல் வேற்றுக்கிரக மனிதர்கள் பற்றிய புனைவாக அமைந் துள்ளது. இந்நாவல்களைப் போன்றே தமிழவனின் ‘ஜி.கே. எழுதிய மர்ம நாவலு’ம் துப்பறியும் நாவலுக்குரிய மர்மத்தன்மையுடனும் விறுவிறுப்புடனும் அமைந் துள்ளது.

பிறழ் எழுத்துமுறைக்கும் மொழிச் சிதறடிப்பிற்கும் புனைவுலகப் பயணத்திற்கும் காட்டாக தமிழவனின் ‘சரித்திரத்தில் படித்த நிழல்கள்’ நாவல் அமைந்துள்ளது. அண்மையில் வெளிவந்த தமிழவனின் ‘முஸல்பனி’ நாவலும் இத்தகையதே. இந்நாவல் சரித்திரத்தில் படிந்த நிழல்கள், நாவலின் இரண்டாம் பாகம் எனக் கருதத்தக்க வகையில் அமைந்துள்ளது.

பின்நவீனத்துவத் தமிழ் நாவலாசிரியர்களுள் நாவலை மொழியின் விளையாட்டுக் களமாகக் கையாளு கிறவர், கோணங்கி ஆவார். பாழி, பிதுரா என்கிற வரிசையில் அண்மையில் வெளிவந்துள்ள இவரது ‘த’ நாவலும் பின்நவீனத்துவப் பிரதியாக அமைந்துள்ளது

எஸ்.ராமகிருஷ்ணனின் உப பாண்டவம், உறுபசி, யாமம் ஆகிய நாவல்கள் புதிய எடுத்துரைப் பியல் தன்மைகளைப் பெற்றிருந்தாலும் தனிப்பட்ட வாழ்வின் சமூகத்தின் அறியப்படாத பகுதிகளை வெகு நேர்த்தியாக எடுத்துரைக்கின்றன சு.வேணுகோபாலின் அண்மையில் வெளிவந்த ஆட்டம், உயிர்நிலம் ஆகிய இருநாவல்களும் உலகமயமாக்கலும் பன்னாட்டு முதலாளித்துவமும் தமிழக விவசாயிகளின் வாழ்க்கை ஆதாரத்தை அடியோடு பெயர்த்தெறிந்ததை வாழ்வின் உக்கிரத்துடன் விவரிக்கின்றன.

விநாயக முருகனின் ‘ரா¦ஜீவ்காந்தி சாலை’ என்கிற நாவல் இதுவரை நாம் அறிந்திராத மென்பொருள் உலகின் உள்முரண்களை நாவலின் அடிப்படைப் பிரச்சினையாகக் கையாண்டுள்ளது

இது நாவல் அல்ல, வாழ்வியல் வரைபடம்’ என்ற அடைமொழியுடன் தொடக்கமுறும் ‘ஜனகப்பிரியா’வின் ‘சூரனைத் தேடும்/ தேடிய ஊர்’ எனும் பிரதி, முருகனால் தேடப்பட்டு ஒழிந்துபோன, கந்தபுராண எதிர்நிலை மாந்தன் சூரன் என்னும் தொன்மத்தை, நடப்புக்கால வாழ்வியலுக்குள் படரவிட்டு, அது சாதிய இருளாக, மதவெறியாக மூடநம்பிக்கைகளாக, சடங்கு சம்பிரதாயங்களாக, சுரண்டல்களாக, அதிகார மூர்க்கமாகக் கிளைத்துப் புரையோடிப் போய்விட, அதனை அணுகியழிக்க முடியாக் கையறுநிலையைக் காட்சிப்படுத்துவது

நடப்புக் காலப் புனைவு வரைவாளர்களுள் முக்கியஸ்தராக அடையாளப்பட்டுவரும் சு. தமிழ்ச்செல்வி, ‘மாணிக்கம்’, ‘அளம்’, ‘கீதாரி’, ‘கற்றாழை’, ‘ஆறுகாட்டுத் துறை’ ‘கண்ணகி’ எனத் திணைசார் நாவல்களைத் தந்து வருகிறார். இவற்றில் குறிப்பாக, ‘கீதாரி’ மேய்ச்சல் தொழிலைக் கைக்கொண்ட ‘கோனார்’ இனமக்களை வரைவு செய்ய, ‘அளமோ’ மருதம், முல்லை, நெய்தல் ஆகிய மூன்று திணைசார் வெளிகளில் பயணிக்கிறது. சான்றாக, அப்பிரதியில் இடம்பெறும் ‘கோயில்காவு’ எனும் சிற்றூர், மருத நிலத்தினதாகக் காட்சிப்படினும் ஊரின் கடைசிப் பகுதி கடலுடன் இணைவதையும், கம்பு, வரகு முதலான திணைப்பயிர்களுக்கான களத்தை அவ்வூரே பெற்றிருப்பதையும் வாசிப்பு வழியில் அறியலாம்.

கரிகாலனின் நிலாவை வரைபவன் நாவல் மொழி விளையாட்டு மூலம் அதிகார மையத்தைத் தகர்க்க முயல்கிறது

ஜனகப்ரியாவின் சூரனைத் தேடும் ஊர் புதிய வகைப்பட்ட நாவல். பிழையூர் என்ற ஊருக்குள் வந்த சூரனை ஊரார் தேடுகின்றனர்.

பூமா வாசுகியின் ரத்த உறவு நாவலை வாசிக்கும்போது இது சுய வரலாறா அல்லது புனைகதையா என்ற ஐயம் தோன்றுகின்றது.

https://thamaraithamil.blogspot.com/2015/08/blog-post_42.html

சாதாரணமாக இருந்த ‘திருப்பூர்’ என்ற ஊரில் நவீனத் தொழில்நுட்பமும் ஏற்றுமதி சார்ந்த வணிக உற்பத்தியும் ஏற்படுத்திய பிரமாண்டமான மாற்றத்தைப் புனைகதை வாயிலாக மணல் கடிகை என்னும் பெயரில் எம். கோபால கிருஷ்ணன் பதிவாக்கியுள்ளார்

தமிழ் மதிப்பீடுகளின் சரிவை வா. மு. கோமுவின் கள்ளி நாவல் அழுத்தமாகச் சித்தரித்துள்ளது.

திலகவதியின் கல் மரம், சுப்ரபாரதி மணியனின் ஓடும் நதி, எஸ். ராமகிருஷ்ணனின் உறுபசி, நாகரத்தினம் கிருஷ்ணாவின் நீலக் கடல், க. பஞ்சாங்கத்தின் ஒரு தலித் ஒரு அதிகாரி ஒரு மரணம் போன்ற நாவல்கள் யதார்த்தத் தளத்தில் குறிப்பிடத்தக்கவை.

பிறப்பால் தலித்துகளாக உள்ள கண்மணி குணசேகரன், இமையம், சோ. தர்மன், ஸ்ரீதர கணேசன் போன்றோர் எழுதியுள்ள நாவல்களில் தலித்தியப் பிரக்ஞை வெளிப்பட்டுள்ளது.

உமாமஹேஸ்வரியின் யாரும் யாருடனும் இல்லை நாவல் ஒரு குடும்பத்தின் கதையாக விரிந்துள்ளது.

வகாந்தன் ஈழப் பிரச்சினையைக் கருவாகக்கொண்டு கனவுச் சிறை நாவலை எழுதியுள்ளார். ஐந்து பாகங்களைக் கொண்ட அதன் ஒவ்வொரு பாகமும் தன்னளவில் தனித்து விளங்குகிறது. அக்னி திரவம், உதிர்வின் ஓசை, ஒரு புதிய காலம் ஆகிய மூன்று நாவல்களும் 1991-2001 வரையிலான காலகட்டத்தில் ஈழ மக்களின் துயர வாழ்க்கையைச் சித்தரிக்கின்றன

இமையம்

1 கூளமாதாரி – பெருமாள் முருகன் – 2000

*2 தகப்பன் கொடி – அழகியபெரியவன் – 2001

*3 சிலந்தி – எம்.ஜி.சுரேஷ்-2001

*4 வன்மம் – பாமா – 2002

*5 காடு – ஜெயமோகன் – 2003

*6 இரண்டாம் ஜாமங்களின் கதை -சல்மா – 2004

*7 கூகை-சோ.தருமன் – 2005

*8 கானல் நதி – யுவன் சந்திரசேகர் – 2006

*9 யாமம் – எஸ்.இராமகிருஷ்ணன்-2007

*10 மரம் – ஜி.முருகன் – 2007

*11 ராஸ லீலா-சாருநிவேதிதா – 2008?

*12 அஞ்சுவண்ணம் தெரு – தோப்பில் முகமது மீரான் – 2008

*13 கொற்கை – ஜே.டி.குரூஸ் – 2009

நவீன இலக்கியத்திற்குக் கல்விப்புல வழியாகப் பல பங்களிப்பை செய்திருப்பவர்கள் என்ற அடிப்படையில் தி.சு.நடராசன், க.பஞ்சாங்கம், ராஜ்கௌதமன், க.பூரணச்சந்திரன் போன்றோரையும் தமிழவனுடன் இணைத்துப் பார்க்கலாம்.

என் கவனத்துக்கு வந்த நல்ல நூல்களை பற்றி எழுதி அனுப்பும்படி சில நண்பர்கள் கோரியிருந்தனர். அவர்களுக்காக இப்பட்டியல். இவற்றில் தமிழினி , காலச்சுவடு நூல்கள் அதிகம். காரணம் இன்று இலக்கிய கவனத்தை அடைந்துள்ள பதிப்பகங்கள் இவையே. நான் படிக்காத நூல்களை சேர்க்கவில்லை. பல நூல்கள் முன்பே படித்தவை. அச்சுக்கோவையிலேயே சென்ற வருடம் படித்த நூல்களும் உள்ளன.பட்டியல் முழுமையல்ல. இது வாசகர் தகவலுக்காக மட்டும்தான் .

 

நாவல்கள்

========

 

1] குள்ளச்சித்தன் சரித்திரம் . எம் யுவன் [தமிழினி பதிப்பகம்]

 

[ மனிதர்கள் வாழும் கால இட எல்லைக்கு அப்பாற்பட்ட அதிமானுடர்கள் குறித்த கற்பனை எல்லா சமூகங்களிலும் ஏதோ ஒருவகையில் உள்ளது . கால இட எல்லைக்கு அப்பால் செல்ல உன்னும் மனித மனத்தின் கற்பனை என்றும் அதைக் கொள்ளலாம். எம் யுவன் அதை நாம் வாழும் கால இட வெளி பற்றிய ஒரு புரிதலுக்காக பயன்படுத்தியுள்ளார். மிகச் சுவாரஸியமான சித்தரிப்புகளும் சகஜமான நடையும் இந்நாவலின் பலம். இத்தகைய ஆர்வமூட்டும் நாவல் தமிழில் வந்து வெகுநாளாகிறது. உத்தி சோதனை ச்ன்றபேரில்போட்டு படுத்தும் நாவல்களை வாசித்து சலித்த தமிழ் வாசகர்களுக்கு இனிய விடுதலையாக அமையும் படைப்பு இது. கதைகளை பின்னி பின்னி முழுமையை உருவாக்குவதில் சிரத்தையுடன் செயல்பட்டிருக்கிறார் .]

 

2] சிலுவைராஜ் சரித்திரம் – ராஜ்கெளதமன் [தமிழினி பதிப்பகம்]

 

[விமரிச்கராக அறியப்பட்ட ராஜ்கெளதமன் எழுதிய முதல்நாவல். இது அவரது சுயசரிதையின் நாவல் வடிவம். தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் ஒரு தெருவின் உயிர்துடிப்பான வாழ்க்கைச்சித்திரம் இந்த அளவுக்கு துல்லியமான முறையில் தமிழில் எழுதப்பட்டது இல்லை . மிக உற்சாகமான வாசிப்பனுபவமாக அமையும் படைப்பு ]

 

3]கோரை – கண்மணி குணசேகரன் .[தமிழினி பதிப்பகம்]

[பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்க்கைச்சித்தரிப்பை அளிக்கும் யாதார்த்தமான் நாவல் .பூமணி முதல் இமையம் வரையிலான ஒரு மரபில் இணைகிறது]

 

4] தகப்பன் கொடி -அழகிய பெரியவன் [தமிழினி பதிப்பகம்]

 

[தலித்துக்கள் நிலமிழந்து ஒடுக்கப்பட்டவர்களாக மாறியதன் வர்லாற்றை சொல்லும் நாவல் ]

 

5] இருபதுவருடங்கள் எம் எஸ் கல்யாண சுந்தரம் [தமிழினி பதிப்பகம்]

 

[விசேஷமான ஒரு நகைச்சுவை கொண்ட சரளமான நடையில் எழுதப்பட்ட எம் எஸ் கல்யாண சுந்தரத்தின்நாவல்கள் அவை எழுதப்பட்டபோது கவனம் பெற்றது இல்லை . காரணம் அன்றைய பெரிய இதழ் போக்கு சிற்றிதழ்போக்கு இரண்டுக்கும் அப்பால் நிற்பவை அவை . காலத்துக்கு சவால்விடும் மகத்தான் படைப்புகளும் அல்ல. அவர்து நூற்றாண்டில் மறுபதிப்பாகும் இந்நாவல் பரவலாக படிக்கப்பட்டு மறக்கப்பட்ட நாவல். இத்தனை வருடங்களுக்குபிறகும் நடை பழகியதாக மாறாமலிருப்பது ஆச்சரியம்தான்.]

 

5]பகல் கனவு — எம் எஸ் கல்யாண சுந்தரம்[தமிழினி பதிப்பகம்]

 

[எம் எஸ் கல்யாணாசுந்தரத்தின் இந்நாவல் கைப்பிரதியாகவே நூல்சேகரிப்பாளர் கி.ஆ.சச்சிதானந்தம் அவர்களிடம் தேங்கி இப்போது நாற்பது வருடம் கழித்து அச்சாகியுள்ளது .உற்சாகமான வாசிப்பு அனுபவம் தரும் நடை. நுட்பமான சித்தரிப்புகள் கொண்டது. கதைசொல்லியின் மனைவி ஒரு அழகிய குணச்சித்திரம் ]

 

6]கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ்[தமிழினி பதிப்பகம்]

 

[ஆசிரியரின் முதல்நாவல். அப்பட்டமான நேர்மையான ஒரு சுய பதிவு சாத்தியமாகியுள்ளமையினால் முக்கியமான படைப்பாகிறது]

 

7] அம்மன் நெசவு — சூத்ரதாரி [தமிழினி பதிப்பகம்]

[சூத்ரதாரியின் இந்த முதல்நாவல் தமிழக நெசவாளர் சமூகத்தின் தொன்மங்களுக்குள்ளும் வாழ்க்கைக்குள்ளும் யதார்த்த வீச்சோடு ஊடுருவுகிறது]

 

8]சொல் என்றொரு சொல் -பிரேம் [புதுப்புனல் வெளியீடு]

 

[பின்நவீனத்துவ நாவல்.அங்கதம் கொண்ட நடை படிக்கத்தூண்டுகிறது.செவ்விலக்கியம் தொன்மங்கள்

என உலவும் ஆசிரியரின் பார்வை சிக்கலான ஒரு வரலாற்று சித்திரத்தை உருவாக்குகிறது]

 

9]கூளமாதாரி பெருமாள் முருகன் தமிழினி

 

[உணர்வுநெகிழ்ச்சிகளுக்கு இடம்தராத கறாரான யதார்த்த சித்தரிப்பு கொண்ட நாவல் இது.ஆடுமேய்க்கும் சிறுவர்களைப்பற்றியது]

 

10]சிலந்தி எம் ஜி சுரேஷ் புதுப்புனல் வெளியீடு

 

[பின் நவீன பணியில் எழுதப்பட்ட துப்பறியும் நாவல் இது. புனைவின் சாத்தியங்களை வைத்து விளையாடுகிறது]

 

11] புத்தம் வீடு ஹெப்சிபா ஜேசுதாசன் மருதா பதிப்பகம் வெளியீடு 102 பாரதிசாலை சென்னை 14 marutha1999@rediffmail.com

 

[தன் எளிமையான யதார்த்தம் காரணமாக புகழ்பெற்ற தமிழ்நாவலின் மறுபதிப்பு]

 

12] ‘மிதவை ‘ நாஞ்சில்நாடன் விஜயாபதிப்பகம் 20 ராஜவீதி கோவை 641001[ சுயசரிதைப்பாணியிலான நாஞ்சில்நாடனின் நாவல். விவசாய வாழ்க்கையிலிருந்து பம்பாய்க்கு சண்முகம் குடியேறி வேரூன்றுவதன் சித்திரம். மறுபதிப்பு ‘பெருவயிறை பிள்ளை என்று கணிப்பதைப்போலத்தான் சண்முகம் பெரியப்பா மீது வைத்த்ருந்த நம்பிக்கையும்… ‘ என்று முதல்வரியிலேயே நாஞ்சில்நாடனின் அழகிய நடை நம்மை பிடித்து செல்கிறது.

13] மாமிசப்படைப்பு .நாஞ்சில்நாடன் விஜயாபதிப்பகம் [ நாஞ்சில்நாட்டு வேளாண்மை சமூக சித்திரம். மறுபதிப்பு ]

 

14] இக்கரையில் காஞ்சனா தாமோதரன் கவிதா பதிப்பகம் [காஞ்சனா தாமோதரனின் முதல்நாவல்.கல்கியில் தொடர்கதையாக வெளிவந்தது. விரிவான களத்துடன் நுட்பமாக எழுத ஆரம்பித்து மெல்ல மெல்ல தேய்ந்து முடிகிறது . எனினும் ஆர்வமூட்டும் படைப்பு]

 

15]சந்தி ஸ்ரீதர கணேசன் பாலம் பதிப்பகம் 3 திருவள்ளுவர் தெரு காமராசர் புரம் சென்னை 600070

[உப்புவயல் நாவலின் மூலம் கவனத்துக்கு வந்த தலித் எழுத்தளர் ஸ்ரீதர கணேசனின் நாவல். கடைமட்ட குழந்தைகள் கல்வியறிவு பெற அடையும் பிரச்சினைகளை சொல்லும் நாவல்]

 

16]புலிநகக் கொன்றை. பி ஏ கிருஷ்ணன் காலச்சுவடு பதிப்பகம் [ஆங்கிலத்தில் வெளிவந்த தமிழ்நாவலின் தமிழ் வடிவம். அழகான பதிப்பு. மிக விரிவான காலப்பின்னணியில் அரசியல் சமூக மாற்றங்களை மனிதர்களின் வாழ்வின் அலைகளாக காட்டும் முக்கியமான படைப்பு ]

எஸ் ராமகிருஷ்னன்

சில மாதங்களுக்கு முன்பாக தமிழில் படிக்கபடவேண்டிய 100 புத்தகங்களின் பட்டியல் ஒன்றினை வாசகர்களுக்குச் சிபாரிசு செய்திருந்தேன்.

அதில் பெரும்பாலும் சிறுகதைகளே முக்கியமாக உள்ளன. அத்தோடு செவ்வியல் பிரதிகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. ஆகவே வாசிக்கப்பட வேண்டிய முக்கியமான 100 நாவல்களின் பட்டியல் ஒன்றினைத தர இயலுமா என்று பல்வேறு நண்பர்கள் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

நாவல்குறித்த கருத்தரங்கம் மற்றும் ஆய்வு அரங்கங்கள் இன்று பல்வேறு ஊர்களில், பல்வேறு தளங்களில் நடந்து வருகின்றன. அதற்கு உதவக்கூடும் என்றே இந்தப் பட்டியலை உருவாக்கினேன்.

நான் வாசித்த வரையில் இந்த நூறு நாவல்கள் முக்கியமானவை. இது தரவரிசையில்லை. வாசிக்கப்பட வேண்டிய முக்கியமான நாவல்கள் என்று நான் சிபாரிசு செய்கின்ற பட்டியல் மட்டுமே. என் நினைலிலிருந்து உருவாக்கபட்டதால் விடுபடுதல்கள் இருக்ககூடும்.

என் நண்பர் ஜெயமோகன் இது போன்ற பட்டியல் ஒன்றினை தனது நவீன தமிழ் இலக்கிய அறிமுகம் நூலில் முன்னதாகவே தந்திருக்கிறார். நாவல் குறித்து விரிவான புத்தகம் ஒன்றும் எழுதியிருக்கிறார். நாவல் குறித்து அறிய விரும்பும் வாசகர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகங்கள் அவை.

இவை என் விருப்பத்திற்குரிய நாவல்கள்.

1) பிரதாப முதலியார் சரித்திரம் – மாயூரம் வேதநாயகம் பிள்ளை

2) கமலாம்பாள் சரித்திரம் – பி.ஆர். ராஜம் அய்யர்

3) கிளாரிந்தா – மாதவையா

4) நாகம்மாள் – ஆர் சண்முக சுந்தரம்

5) தில்லான மோகனாம்பாள் – கொத்தமங்கலம் சுப்பு

6) பொன்னியின் செல்வன் – கல்கி

7) வீரபாண்டியன் மனைவி – அரு.ராமநாதன்

8) சயாம் மரண ரயில் – ரெ. சண்முகம்.

9) லங்காட் நதிக்கரை – அ.ரெங்கசாமி

10) தீ.– எஸ். பொன்னுதுரை.

11) பஞ்சமர் – டேனியல்

12) பொய்தேவு – க.நா.சுப்ரமணியம்.

13) வாடிவாசல் – சி.சு.செல்லப்பா

14) அபிதா – லா.ச.ராமாமிருதம்.

15) நித்யகன்னி – எம்.வி. வெங்கட்ராம்

16) பசித்த மானுடம் – கரிச்சான்குஞ்சு

17) அம்மா வந்தாள் – தி.ஜானகிராமன்

18) மோகமுள் – தி. ஜானகிராமன்

19) மரப்பசு – தி.ஜானகிராமன்

20) வாசவேஸ்வரம் – கிருத்திகா

21) ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் – ஜெயகாந்தன்

22) சில நேரங்களில் சில மனிதர்கள்– ஜெயகாந்தன்

23) பாரீஸிக்கு போ – ஜெயகாந்தன்

24) புயலிலே ஒரு தோணி – பா.சிங்காரம்

25) கடலுக்கு அப்பால் – பா.சிங்காரம்

26) நினைவுப்பாதை – நகுலன்

27) நாய்கள் – நகுலன்

28) ஒரு புளியமரத்தின் கதை – சுந்தர ராமசாமி

29) ஜே.ஜே. சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி

30) குழந்தைகள் பெண்கள் ஆண்கள்– சுந்தர ராமசாமி

31) கோபல்ல கிராமம் – கி.ராஜநாராயணன்

32) சாயாவனம் – சா. கந்தசாமி

33) தொலைந்து போனவர்கள் – சா. கந்தசாமி

34) நாளை மற்றுமொரு நாளே – ஜீ. நாகராஜன்

35) குருதிப்புனல் – இந்திரா பார்த்தசாரதி

36) கருக்கு -பாமா

37) கரிப்பு மணிகள் – ராஜம் கிருஷ்ணன்

38) வாடாமல்லி – சு.சமுத்திரம்.

39) கல்மரம் – திலகவதி.

40) போக்கிடம் – விட்டல்ராவ்

41) புத்தம் வீடு – ஹெப்சிபா ஜேசுதாசன்

42) கரைந்த நிழல்கள் – அசோகமித்ரன்

43) பதினெட்டாவது அட்சக்கோடு – அசோகமித்ரன்

44) ஒற்றன் – அசோகமித்ரன்

45) இடைவெளி – சம்பத்

46) பள்ளிகொண்டபுரம் – நீல பத்மநாபன்

47) தலைமுறைகள் – நீல.பத்மநாபன்

48) கிருஷ்ணபருந்து – ஆ.மாதவன்

49) அசடு – காசியபன்

50) வெக்கை – பூமணி

51) பிறகு – பூமணி

52) தலைகீழ் விகிதங்கள் – நாஞ்சில் நாடன்

53) எட்டுதிக்கும் மதயானை – நாஞ்சில் நாடன்

54) ஒரு கடலோர கிராமத்தின் கதை – தோப்பில் முகமது மீரான்

55) மானுடம் வெல்லும் – பிரபஞ்சன்

56) சந்தியா – பிரபஞ்சன்

57) காகிதமலர்கள் – ஆதவன்

58) என் பெயர் ராமசேஷன் – ஆதவன்

59) ரத்தம் ஒரே நிறம் – சுஜாதா

60) உடையார் – பாலகுமாரன்

61) கரிசல் – பொன்னிலன்

62) கம்பாநதி – வண்ணநிலவன்

63) கடல்புரத்தில் வண்ணநிலவன்

64) பழையன கழிதலும் – சிவகாமி

65) மௌனப்புயல் – வாசந்தி

66) ஈரம் கசிந்த நிலம் – சி. ஆர் ரவீந்திரன்

67) பாய்மரக்கப்பல் – பாவண்ணன்.

68) பாழி – கோணங்கி

69) ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் – தமிழவன்

70) வார்ஸாவில் ஒரு கடவுள் – தமிழவன்.

71) கோவேறு கழுதைகள் – இமையம்

72) செடல்– இமையம்

73) உள்ளிருந்து சில குரல்கள் – கோபி கிருஷ்ணன்.

74) வெள்ளாவி – விமல் குழந்தைவேல்

75) கரமுண்டார்வீடு – தஞ்சை பிரகாஷ்

76) விஷ்ணுபுரம் – ஜெயமோகன்

77) காடு- ஜெயமோகன்

78) கொற்றவை ஜெயமோகன்

79) உப பாண்டவம் – எஸ்.ராமகிருஷ்ணன்

80) நெடுங்குருதி – எஸ்.ராமகிருஷ்ணன்

81) யாமம் – எஸ்.ராமகிருஷ்ணன்,

82) கூகை சோ.தர்மன்

83) புலிநகக்கொன்றை – பி.ஏ.கிருஷ்ணன்.

84) ஸீரோ டிகிரி – சாரு நிவேதிதா

85) எக்ஸிஸ்டென்ஷியலிசயமும் பேன்சி பனியனும் – சாரு நிவேதிதா

86) சொல் என்றொரு சொல் – பிரேம் ரமேஷ்

87) சிலுவை ராஜ் சரித்திரம்– ராஜ்கௌதமன்

88) தகப்பன்கொடி – அழகிய பெரியவன்.

89) கொரில்லா – ஷோபா சக்தி

90) நிழல்முற்றம் – பெருமாள் முருகன்

91) கூளமாதாரி – பெருமாள் முருகன்

92) சாயத்திரை– சுப்ரபாரதிமணியன்

93) ரத்தஉறவு – யூமாவாசுகி

94) கனவுச்சிறை – தேவகாந்தன்

95) அளம் – தமிழ்செல்வி

96) அலெக்ஸ்சாண்டரும் ஒரு கோப்பை தேநீரும்.– எம்.ஜி.சுரேஷ்

97) அரசூர் வம்சம் – இரா.முருகன்

98) அஞ்சலை – கண்மணி குணசேகரன்

99) குள்ளச் சித்தன் சரித்திரம் – யுவன் சந்திரசேகர்

100) ஆழி சூழ் உலகு – ஜோ டி குரூஸ்

****

சகதேவன்

 

சுமதியின் கல்மண்டபம் 2001

ஜோ டி குரூஸ் தனது ஆழி சூழ் உலகு (2004), கொற்கை (2009)

இமையம் செடல் 2006

ஆவணப்படுத்துதல் என்கிற நோக்கத்திற்காக கவனிக்கப்பட வேண்டிய வேறு இரண்டு நாவல்கள் ப.க.பொன்னுசாமி எழுதிய படுகளம் (2008) மற்றும் திருமூர்த்தி மண் (2021) ஒரு முன்னாள் துணை வேந்தர்,  தேர்ந்த அறிவியல் ஆய்வாளர் தான் எழுதும் நாவலுக்கு நூற்றாண்டுப் பழமையான ஒரு  மொழி நடையைப் பயன்படுத்தியிருக்கிறார் என்பது ஆச்சரியம் தான்.

நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள், சங்கமாக இணைந்து எழுச்சியுற்ற கதைக் கருவைக் கொண்ட முதல் நாவல் சுரங்கம் ஆகும். சமீபத்தில் மறைந்த எழுத்தாளர் கு.சின்னப்ப பாரதி எழுதியது  இந்த நாவல்

தலித்துகள், ஆதிவாசிகள், பெண்கள் போன்ற விளிம்புநிலை மாந்தர்களில் முக்யமானவர்களான திருநங்கைகளின் வரலாறு எல்லாக் காலத்தை விடவும் கடந்த ஐந்து ஆண்டுகளில் “வித்யா என்ற சரவணன்” போன்ற தன் வரலாறுகளாக வும், “பிரியா” போன்றவர்களின் நாவல்களாலும் எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது. ஓரினப் புணர்ச்சி சார்ந்த கதாபாத்திரங்களும், தமிழ்த் திரைப்படப்பரப்பிலும், இலக்கியப் பரப்பிலும் குறிப்பிடத்தக்க அளவில் பதிவாகியிருக்கின்றன.

 

சாகித்ய அகாதமி 2001  முதல்

003 கள்ளிக்காட்டு இதிகாசம் (நாவல்) வைரமுத்து
2005 கல்மரம் (நாவல்) ஜி. திலகவதி
2007 இலையுதிர் காலம் (நாவல்) நீல. பத்மநாபன்
2011 காவல் கோட்டம் (புதினம்) சு. வெங்கடேசன்
2012 தோல் (புதினம்) டேனியல் செல்வராஜ்
2013 கொற்கை (புதினம்) ஜோ டி குரூஸ்
2014 அஞ்ஞாடி (புதினம்) பூமணி
2018 சஞ்சாரம் (புதினம்) எஸ். ராமகிருஷ்ணன்
2019 சூல் (புதினம்) சோ. தர்மன்
2020 செல்லாத பணம் (நாவல்) இமையம்
2023 நீர்வழிப் படூஉம் (புதினம்) [2] ராஜசேகரன் (தேவிபாரதி)
2022 காலா பாணி (புதினம்) மு. ராஜேந்திரன்

தமிழக அரசு

ரத்த உறவுயூமா வாசுகி 2000

தகப்பன் கொடிஅழகிய பெரியவன் 2001

மாணிக்கம்சு தமிழ்ச்செல்வி 2002

ஆழி சூழ் உலகு ஜோ டி குரூஸ் 2004

கூகைசோ தர்மன் 2005

நீர்வலை எஸ் ஷங்கரநாராயணன் 2006

நதியின் மடியில்ப ஜீவகாருண்யன் 2007

நெருப்புக்கு ஏது உறக்கம் எஸ்ஸார்சி (எஸ் ராமச்சந்திரன்) 2008

ஏழரைப் பங்காளி வகையறாஎஸ் அர்ஷியா 2009

தோல்டி செல்வராஜ் 2010

மூனுவேட்டிஅரு மருத்துரை 2011

 

திருப்பூர் தமிழ்ச் சங்கம்

பொழுதுக்கால் மின்னல்கா சு வேலாயுதம் 2000

தொட்ட அலை தொடாத அலைஎஸ் சங்கர நாராயணன் 2000

ரத்த உறவுயூமா வாசுகி 2000

பொட்டல்எஸ் கணேசராஜ் 2001

 

கஸ்தூரி ஶ்ரீனிவாசன் – ரங்கம்மாள் பரிசு

பிணங்களின் முகங்கள்சுப்ர பாரதி மணியன் 2001

போகிற வழிமுகிலை ராச பாண்டியன் 2005

இலையுதிர் காலம்நீல பத்மநாபன் 2007

மரக்கால் சோலை சுந்தர பெருமாள் 2009

வெட்டுப் புலிதமிழ் மகன் 2011

ஆளண்டா பட்சிபெருமாள் முருகன் 201

காரணங்களுக்கு அப்பால்ஐசக் அருமைராஜன் 2001

கனவு மெய்ப்படும்எஸ்ஸார்சி 2001

கோரை கண்மனி குணசேகரன் 2002

பொதுகோ தேவதைஜோசப் அதிரியின் ஆண்ட்டோ 2002

நாளைய மனிதர்கள்ராஜேஸ்வரி பாலசுப்ரமணியன் 2003

மின்சார வேர்கள் சி குழந்தைவேலு 2003

சோளகர் தொட்டிச பாலமுருகன் 2004

அரசூர் வம்சம் இரா முருகன் 2004

மெல்லினம்பா ராகவன் 2004

காதல் பூட்டுஎஸ்உதயசெல்வன் 2005

நஞ்சை மனிதர்கள்சோலை சுந்தர பெருமாள் 2006

வட்டத்துள்வத்ஸலா 2006

மெல்லக் கனவாய் பழங்கதையாய்பா விசாலம் 2007

கீழைத்தீபாட்டாளி 2007

படுகளம்முனைவர் ப க பொன்னுசாமி 2008

பனையண்ணன்ஆர் எஸ் ஜேக்கப் 2009

மலைசாமி வளவதுரையன் 2009

மறுபக்கம்பொன்னீலன் 2010

உருள் பெருந்தேர்கலாப்ரியா 2011

6174 க சுதாகர் 2012

 

தமிழ் இலக்கிய தோட்டம் (கனடா ) பரிசு பெற்ற நாவல்கள்.

 

 

கூகைசோ தர்மன் 2005

ஆழி சூழ் உலகுஜோ டி குரூஸ் 2006

யாமம்எஸ் ராமகிருஷ்ணன் 2007

வார்ஸாவில் ஒரு கடவுள்தமிழவன் 2008

கொற்றவைஜெயமோகன் 2009

காவல் கோட்டம்சு வெங்கடேசன் 2010

பயணக்கதையுவன் சந்திரசேகர் 2011

அஞ்சலைகண்மனி குணசேகரன் 2012

ஜின்னாவின் டைரிகீரனூர் ஜாகிர் ராஜா 2013.

 

ஆனந்த விகடன் விருதுகள் நாவல்

 

 

நாவல் எழுத்தாளர் ஆண்டு

 

கன்னிஜெ பிரான்சிஸ் கிருபா 2007

காவல்கோட்டம்சு வெங்கடேசன் 2008

துருக்கி தொப்பிகீரனூர் ஜாகிர் ராஜா 2009

மில் ம காமுத்துரை 2010

ஆண்பால் பெண்பால்தமிழ் மகன் 2011

அஞ்ஞாடிபூமணி 2012

குன்னிமுத்துகுமாரசெல்வா 2013

மிளிர்கல்இரா முருகவேள் 2014

 

 

சுஜாதா அறக்கட்டளையும் உயிர்மை மாத இதழும் இணைந்துவழங்கும் விருது. இதில் விருது பெற்ற நாவல்கள்.

 

நாவல் எழுத்தாளர் ஆண்டு

 

மில் ம காமுத்துரை 2010

கொற்கை ஜோ டி குரூஸ் 2011

உப்பு நாய்கள் லக்ஷ்மி சரவணக்குமார் 2012

வனசாட்சி தமிழ் மகன் 2013

விந்தைக் கலைஞனின் உருவச்சித்திரம் சி மோகன் 2014

2024 திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சியும் 1908 (ஆய்வு நூல்) ஆ.இரா.வேங்கடாசலபதி

 

உப்பு வயல் ஸ்ரீதர கணேசன் நியூ செஞ்சுரி பதிப்பகமும் கலை
இலக்கிய பெருமன்றமும் நடத்திய போட்டியில் முதல் பரிசு பெற்ற நாவல்.

 

2011 எம். தவசி சேவல்கட்டு புதினம்
2012 மலர்வதி தூப்புக்காரி புதினம்
2014 ஆர்.அபிலாசு கால்கள் புதினம்
2015 வீரபாண்டியன் பருக்கை புதினம்
2016 இலட்சுமி சரவணன் குமார் [2] கானகன் புதினம்
2021 கார்த்திக் பாலசுப்பிரமணியன்[7] நட்சத்திரவாசிகள் புதினம்

 

சிலிகான் செல்ப் சிறந்த நாவல்கள்: 

கேபிள் சங்கர் புத்தகம், நான் ஷர்மி வைரம் –  பெர்முடா

கிருத்திகாவின் “வாசவேஸ்வரம்”

செந்தூரம் ஜெகதீஷ் – கிடங்குத்தெரு

சாரு நிவேதிதா – எக்ஸைல் சாரு நிவேதிதா
பா. ராகவன் – இறவான்
நாஞ்சில் நாடன் – எட்டுத் திக்கும் மதயானை
நீல. பத்மனாபன் – பள்ளிகொண்டபுரம்
நீல. பத்மனாபன் – உறவுகள்
தமிழ்நதி – பார்த்தீனியம்
செ. கணேசலிங்கன் – அந்நிய மனிதர்கள்
சா. கந்தசாமி – சாயாவனம்
ஃபிரான்சிஸ் கிருபா – கன்னி
விட்டல் ராவ் – போக்கிடம்
ஆ. மாதவன் – கிருஷ்ணப்பருந்து
ந. சிதம்பர சுப்பிரமணியன் – மண்ணில் தெரியுது வானம்
இதயன் – நடைபாதை
சி.ஆர். ரவீந்திரன் – ஈரம் கசிந்த நிலம்
தோப்பில் முகமது மீரான் – துறைமுகம்
தோப்பில் முகமது மீரான் – ஒரு கடலோர கிராமத்தின் கதை
வண்ணநிலவன் – கடல்புரத்தில்
பா. வெங்கடேசன் – வாரணாசி
பட்டுக்கோட்டை பிரபாகர் – தொட்டால் தொடரும்
கிருத்திகா – வாசவேஸ்வரம்
ஹெப்சிபா ஜேசுதாசன் – புத்தம்வீடு
ராஜ சுந்தரராஜன் – நாடோடித் தடம்
இமையம் – கோவேறு கழுதைகள்
தொ.மு.சி. ரகுநாதன் – பஞ்சும் பசியும்
செந்தூரம் ஜெகதீஷ் – கிடங்குத் தெரு

வண்ணநிலவன்: கம்பாநதி

சி.ஆர். ரவீந்திரனின் “மணியபேரா”

 

அழியாச் சுடர்கள் ஆசிரியர் வரிசை :

அ. மாதவையா அ.முத்துலிங்கம் அ.ராமசாமி அசோகமித்திரன் அபி அம்பை அறிமுகம் அழகிய பெரியவன் ஆ. மாதவன் ஆதவன் ஆத்மாநாம் ஆர்.சூடாமணி ஆவணப்படம் இந்திரா பார்த்தசாரதி இமையம் உமா மகேஸ்வரி உமா வரதராஜன் எக்பர்ட் சச்சிதானந்தம் என். டி. ராஜ்குமார் எம். எஸ். கல்யாணசுந்தரம் எம்.ஏ.நுஃமான் எம்.டி.முத்துக்குமாரசாமி எம்.வி. வெங்கட்ராம் எஸ். வைத்தீஸ்வரன் எஸ்.ராமகிருஷ்ணன் க.நா.சு கடித இலக்கியம் கந்தர்வன் கரிச்சான் குஞ்சு கலாப்ரியா கலாமோகன் கல்யாண்ஜி கி ராஜநாராயணன் கி. அ. சச்சிதானந்தம் கிருஷ்ணன் நம்பி கு. அழகிரிசாமி கு.ப.ரா கோணங்கி கோபிகிருஷ்ணன் கௌதம சித்தார்த்தன் ச.தமிழ்ச்செல்வன் சமயவேல் சம்பத் சா.கந்தசாமி சாரு நிவேதிதா சார்வாகன் சி. மோகன் சி.சு. செல்லப்பா சி.மணி சிட்டி சு.வெங்கடேசன் சுகுமாரன் சுஜாதா சுந்தர ராமசாமி சுப்ரபாரதிமணியன் சுரேஷ்குமார இந்திரஜித் சூத்ரதாரி சோ.தர்மன் ஜி. நாகராஜன் ஜி.குப்புசாமி ஜெயகாந்தன் ஜெயந்தன் ஜெயமோகன் ஞானக்கூத்தன் தஞ்சை பிரகாஷ் தமிழவன் தமிழில் முதல் சிறுகதை தி. ஜானகிராமன் திசேரா திலீப் குமார் தேவதச்சன் தேவதேவன் தோப்பில் முஹம்மது மீரான் ந. முத்துசாமி ந.பிச்சமூர்த்தி நகுலன் நாஞ்சில் நாடன் நீல பத்மநாபன் நேர்காணல் ப.சிங்காரம் பசுவய்யா பவா செல்லதுரை பா. செயப்பிரகாசம் பாதசாரி பாமா பாரதி மணி பாவண்ணன் பி.எஸ்.ராமையா பிரபஞ்சன் பிரமிள் பிரம்மராஜன் புகைப்படங்கள் புதுமைப்பித்தன் பூமணி பெருமாள்முருகன் மகாகவி பாரதியார் மனுஷ்யபுத்திரன் மா. அரங்கநாதன் மாலன் மு.சுயம்புலிங்கம் மௌனி யுவன் சந்திரசேகர் யூமா வாசுகி ரமேஷ் : பிரேம் ரவிசுப்ரமணியன் ராஜ மார்த்தாண்டன் ராஜா சந்திரசேகர் ராஜேந்திர சோழன் லஷ்மி மணிவண்ணன் லா.ச. ராமாமிருதம் வ.வே.சு ஐயர் வண்ணதாசன் வண்ணநிலவன் வல்லிக்கண்ணன் விக்ரமாதித்யன் நம்பி வித்யாஷ‌ங்கர் விமலாதித்த மாமல்லன் விருதுகள் வெங்கட் சாமினாதன் வேதசகாய குமார் வேல.இராமமூர்த்தி வைக்கம் முஹம்மது பஷீர் ஷங்கர்ராமசுப்ரமணியன் ஸில்வியா ஹெப்சிபா ஜேசுதாசன்

 

கனடா, தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் 2024 ஆம் ஆண்டுக்கான விருதுகள் !
25 – வது வெள்ளி விழா ஆண்டு விருதுகள் :
1.இயல் விருது இருவர் பெறுகிறார்கள்.
A. இயல் விருது சச்சிதானந்தன் சுகிர்தராஜா (பேராசிரியர், விளக்கவியலாளர், எழுத்தாளர்)
B.இயல் விருது – யுவன் சந்திரசேகர் (எழுத்தாளர், கவிஞர்)
2. புனைவு – இரவி அருணாசலம்
நூல் – பம்பாய் சைக்கிள்- (காலச்சுவடு பதிப்பகம்)
3. அல்புனைவு – த.பிச்சாண்டி
நூல் – எனக்குள் மணக்கும் எம்.ஜி.ஆர் நினைவுகள் ( பி.வி.பதிப்பகம்)
Fantasy – தமிழ்ச்சொல் தருக.
நிகழாப் புனைவு
நீடூழி வாழ்க என்பது தான் சரி.
வணக்கம்.
எழுத்தாளர் சிவசங்கரி சந்திரசேகரன் அறக்கட்டளை இந்த ஆண்டு 2024 முதல் சூர்ய விருது ( 3 லட்சம் பரிசு) & அக்ஷரா விருது ( 2 லட்சம் பரிசு) ஆகிய 2 இலக்கியப் விருதுகளை வழங்குகிறது என்பதும், பரிசுக்குரிய எழுத்தாளர்களாக அம்பையையும், நாகரத்தினம் கிருஷ்ணாவையும் அறிவித்து இருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது. சோஷியல் மீடியாக்களிலும் இந்த விருதுகள் பரவலான கவனம் பெற்று இருப்பதில் கூடுதலான மகிழ்ச்சி.
கடந்த ஐந்து ஆண்டுகளில் வெளியான தமிழ் நூல்களில் சிறந்த படைப்பாக டிஸ்கவரி புக் பேலஸின் வெளியீடான எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணாவின் ‘சைகோன் பாண்டிச்சேரி’ என்ற நாவல் அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா இந்த நாவலுக்காக பெருமைக்குரிய அக்ஷரா விருதையும் பெறுகிறார்.
கலைச்செல்வி நாவல்கள்
சக்கை, புனிதம்,ஹரிலால், அற்றைத் திங்கள் ,ஆலகாலம்